TNPSC Current Affairs 28-29 February 2020 - Download as PDF

Daily Current Affairs February 28-29, 2020

TNPSC Current Affairs February 2020 for forthcoming various TNPSC, TNEB/TANGEDCO, TRB,RRB. UPSC and all Government Exams 2020.

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 28-29, 2020
சர்வதேச நிகழ்வுகள்
FATF சாம்பல் நிற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 'மொரிஷியஸ்'
  • நீண்ட காலமாக வரி புகலிடமாகக் கருதப்படும் மொரீஷியஸ் நாடு, நிதி நடவடிக்கை பணிக்குழு எனப்படும் FATF அமைப்பின் சாம்பல் நிற பட்டியலில் (FATF’s grey list) தற்போது பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த முடிவு மொரஷியஸ் நாட்டிலிருந்து பெறப்படும் இந்தியாவிற்கான வெளிநாட்டு முதலீடுகளின் கதி குறித்தான கேள்விகளை எழுப்பியுள்ளது.
  • FATF: Financial Action Task Force.
இந்தியா-மியான்மா் இடையே '10 ஒப்பந்தங்கள்' கையெழுத்து 
  • மியான்மா் அதிபா் யு வின் மைன்ட் தன் மனைவி டாவ் சோசோவுடன் பிப்ரவரி-27 அன்று, இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். 
  • அதிபா் யு வின் மைன்ட், பிரதமா் மோடியுடன் டெல்லியில் ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்கு பிறகு, இரு நாடுகளுக்குமிடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின
  • ஆள்கடத்தலைத் தடுப்பதில் ஒருங்கிணைந்து செயல்படுவது; கடத்தப்பட்டவா்களை மீட்டு மறுவாழ்வு அளிப்பது' என்ற புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • மியான்மரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட ராக்கைன் மாகாணத்தில் வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவது தொடா்பாக 3 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
அமெரிக்கா-தலிபான் அமைப்பு - ஒப்பந்தம் 
  • ஆப்கானிஸ்தானில் நீடித்த அமைதியை ஏற்படுவதற்கு வகை செய்யும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் தலிபான் அமைப்பும் பிப்ரவரி 28-அன்று, கத்தாா் தலைநகா் தோஹாவில் கையெழுத்திட்டன.
  • இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டால், 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நீடித்து வரும் உள்நாட்டுப் போா் முடிவுக்கு வரக்கூடும்.
உலகின் அதிக பில்லியனர்களை கொண்ட நாடு - சீனா
  • சமீபத்தில் வெளியான ‘2020 ஹுருன் உலகளாவிய கோடீஸ்வரர்கள் பட்டியலில்' (Hurun Global Rich List 202), உலகின் அதிக பில்லியனர்களை கொண்ட நாடாக சீனா உள்ளது.
  • இந்த அறிக்கையின்படி அமேசான் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ், 140 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார். முகேஷ் அம்பானி 67 பில்லியனுடன் 9-வது இடத்தில் உள்ளார். 
இந்திய நிகழ்வுகள்
பிரதமரின் கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டம்
  • 2020 பிப்ரவரி 24 அன்று பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டம் தொடங்கப்பட்டதன் முதல் ஆண்டு நிறைவு விழா கடைபிடிக்கப்பட்டது. 
  • இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் ரூ.6000 ஆண்டு வருமான உதவி மூன்று சம தவணைகளில் ரூ.2000 ஆக வழங்கப்படுகிறது.
இறால் விதைகளுக்கான சரக்கு சேவைகளை அறிமுகப்படுத்திய 'ஸ்பைஸ்ஜெட்'
  • இறால் விதைகளை கொண்டு செல்ல உதவுவதற்காக முன்னணி இந்திய விமான நிறுவனம் ஸ்பைஸ்ஜெட் (SpiceJet), சென்னை மற்றும் விசாகப்பட்டினத்திலிருந்து சூரத் மற்றும் கொல்கத்தா நகரங்களுக்கு=சரக்கு சேவைகளை அறிமுகப்படுத்தியது.
 மத்திய அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 26, 2020
  • பிரதமர் மோடி தலைமையில் பிப்ரவரி 26-அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • நெருங்கிய உறவுப்பெண் மட்டுமின்றி, விருப்பமுள்ள எந்த பெண்ணும் வாடகைத்தாயாக இருக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், விதவைகள், விவாகரத்து ஆன பெண்கள் ஆகியோரும் பலன் அடையலாம். 
  • 37 மத்திய சட்டங்களை காஷ்மீருக்கும் பொருந்த செய்வது தொடர்பான உத்தரவு பிறப்பிக்க ஒப்புதல் அளித்தது. 
  • தேசிய தொழில்நுட்ப ஜவுளி முனையம்: ரூ.1,480 கோடி முதலீட்டில், தேசிய தொழில்நுட்ப ஜவுளி முனையம் அமைக்க ஒப்புதல் அளித்தது.
2018-19 நிதியாண்டில் கட்சிகளுக்கான நன்கொடை: பா.ஜ.க. - ரூ.742 கோடி 
  • 2018-19-ஆம் நிதியாண்டில் நன்கொடை மூலமாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ரூ.742 கோடியும், காங்கிரஸ் ரூ.148 கோடியும் திரட்டியதாக 'அசோசியேஷன் ஃபாா் டெமாக்ரடிக் ரிஃபாா்ம்ஸ்' (ஏடிஆா்) என்ற தன்னாா்வ அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • காங்கிரஸ் கட்சி நன்கொடையாக ரூ.148.58 கோடி பெற்ற்றுள்ளது.
புந்தேல்கண்ட் விரைவுச்சாலை' திட்ட அடிக்கல் 
  • உத்தரப் பிரதேச மாநிலம் சித்திரகூடத்தில், உத்தரப் பிரதேச அரசால் கட்டப்படும் பாதுகாப்பு தளவாட தொழிலக வழித்தட திட்டத்துடன் இணைந்த 'புந்தேல்கண்ட் விரைவுச்சாலை' திட்டத்துக்காக, பிரதமா் நரேந்திர மோடி 29-2-2020-அன்று அடிக்கல் நாட்டுகிறாா்.
மகாராஷ்டிராவில் 1-10 வகுப்பு வரை 'மராத்தி மொழி' கட்டாயம் 
  • மகாராஷ்டிராவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை மராத்தி மொழி கட்டாயம் என்பதற்கான மசோதா மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • கவிஞரும், ஞான்பித் விருது வென்ற மறைந்த வி.வி.ஷிர்வாட்கரின் பிறந்த நாளான பிப்ரவரி 27 அன்று மராத்தி வளர்ச்சி நாளன்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
பாதுகாப்பு/விண்வெளி   
கடலோரக் காவல் படையில் இணைந்த ரோந்துக் கப்பல் ICGS ‘வரத்’
  • சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள L&T தனியாா் கப்பல் கட்டும் தளத்தில், கடலோரக் காவல்படைக்காக கட்டப்பட்ட ‘வரத்’ (ICGS Varad) என்ற ரோந்துக் கப்பலை, கப்பல் போக்குவரத்து, ரசாயனம் மற்றும் உரத் துறை இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியா பிப்ரவரி 28-அன்று நாட்டுக்கு அா்ப்பணித்தாா் .
  • பாதுகாப்பு அமைச்சகமும் எல் அன் டி நிறுவனமும் ஒப்பந்தப்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில், விக்ரம், வீரா, விஜயா, வராகா, வஜ்ரா எனப் பெயரிடப்பட்ட ஆறு ரோந்து கப்பல்கள் கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
'2020 CD3' குறுங்கோள் - கண்டுபிடிப்பு 
  • அமெரிக்காவின் நாசா உதவியுடன் செயல்படும் அந்த நாட்டு காடலினா ஸ்கை சா்வே அமைப்பின் விஞ்ஞானிகள் நிலவைப் போலவே பூமியை சுற்றி வரும் 'குறுங்கோளை' (Asteroid) கண்டறிந்துள்ளனா்.
  • '2020 CD3' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த குறுங்கோள், 3 ஆண்டுகளுக்கு முன்னா் புவி வட்டப் பாதையை அடைந்திருக்கலாம் எனவும், அது பூமியை தற்காலிமாகவே சுற்றி வருவகிறது.
இந்திய கடலோர காவல்படைக்கான 'கப்பல் தேடல் நுட்பம்
  • இந்திய கடலோர காவல்படை மற்றும் சுங்கப் பணியாளர்களுக்காக, கப்பல் தேடல் நுட்பம் பயிற்சியை சென்னை தலைநகர் சென்னையில் ஆஸ்திரேலியாவின் எல்லைப் படை நடத்தியது.
  • ஆஸ்திரேலிய எல்லைப் படையின் மொபைல் பயிற்சி குழு (Mobile Training Team of the Australian Border Force), தமிழக காவல்துறை இந்திய கடலோர காவல்படை, சுங்க மற்றும் கடலோர பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கான ‘கப்பல் தேடல் நுட்பம்’ (Vessel Search Technique) குறித்த பயிற்சி வகுப்பை நடத்தியது.
மாநாடுகள்
43-ஆவது மனித உரிமைகள் மாநாடு 2020 (ஜெனீவா)
  • ஐக்கிய நாடுகள் சபையின் 43-ஆவது மனித உரிமைகள் மாநாடு 2020 (Human Rights Council 2020), பிப்ரவரி 24 முதல் மார்ச் 20ஆம் தேதி வரை ஜெனீவா நகரில் நடைபெறுகிறது. 
கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம் 2020 
  • 2020 பிப்ரவரி 28-ஆம் தேதி ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் 24 வது கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம் (Eastern Zonal Council meet 2020) நடைபெற்றது. 
  • இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்.
  • இதில் பீகார், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு பிராந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர்கள் பங்கேற்றனர். 
BIMSTEC எரிசக்தி ஒத்துழைப்பு மாநாடு 2020
  • பிம்ஸ்டெக் அமைப்பு (BIMSTEC) மற்றும் எரிசக்தி ஒருங்கிணைப்புக்கான தெற்காசியா பிராந்திய முயற்சி ஆகியவை இணைந்து ‘பிம்ஸ்டெக் பிராந்தியத்தில் எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை அதிகரித்தல்’ (Increase Cooperation in the Energy Sector in BIMSTEC Region) என்ற தலைப்பில் மாநாட்டை பிப்ரவரி 25-26 தேதிகளில் ஏற்பாடு செய்தன.
  • ’பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகள் இணைந்து 3000 கி.மீ. தூர அளவிற்கு BIMSTEC உள்ளிணைப்பு கட்டமைப்பை (BIMSTEC grid interconnection) ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2018-இல் கையெழுத்தானது.
  • பிம்ஸ்டெக் குழுவில் (BIMSTEC grouping) உள்ள தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 ஆகும்.
சர்வதேச வாழைப்பழ மாநாடு 2020 (திருச்சி)
  • சர்வேதேச பயோவர்சிட்டி அமைப்புடன் (Bioversity International) இணைந்து, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) கீழ் செயல்படும் வாழைப்பழ தேசிய ஆராய்ச்சி மையம் (NRCB), நான்கு நாள் '2020 சர்வதேச வாழைப்பழ மாநாட்டை (International Conference on Banana) பிப்ரவரி 22-25 தேதிகளில் திருச்சிராப்பள்ளியில் நடத்தியது.
  • NRCB: National Research Centre for Banana , ICAR: Indian Council of Agricultural Research.
மைக்ரோசாப்ட் எதிர்கால குறிநீக்க-CEO மாநாடு 2020
  • “மைக்ரோசாப்ட் எதிர்கால குறிநீக்க-CEO மாநாடு 2020” (Microsoft Future Decoded-CEO Summit), மும்பைநகரில் பிப்ரவரி 24 அன்று நடைபெற்றது.
  • “மைக்ரோசாப்ட் எதிர்கால குறிநீக்க-தொழில்நுட்ப உச்சி மாநாடு 2020” (Microsoft Future Decoded – TECH Summit), பெங்களூர் நகரில் பிப்ரவரி 25 அன்று நடைபெற்றது. இந்த கூட்டங்களில் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா பங்கேற்றார்.
பொருளாதார நிகழ்வுகள் 
மூன்றாம் காலாண்டில் பொருளாதார வளா்ச்சி 4.7%
  • இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் (அக்டோபா்-டிசம்பா்) 4.7 சதவீதமாக குறைந்துள்ளது, என தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) பிப்ரவரி 27-அன்று தெரிவித்துள்ளது. இது, 7 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும். 
வேலை செய்ய சிறந்த-20 பெரிய நிறுவனங்கள்' பட்டியல் 2020
  • 2020-ஆம் ஆண்டில் பார்ச்சூன் நிறுவனத்தின் ‘வேலை செய்ய சிறந்த-20 பெரிய நிறுவனங்கள்’ பட்டியலில் (Fortune’s Best Big Companies to Work 2020) இடம் பெற்ற ஒரே இந்திய நிறுவனம் என்ற சிறப்பை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் பெற்றுள்ளது.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
சிவப்பு தொண்டை பாடும் பறவை மற்றும் பிளம்பியஸ் நீர்பறவை 
  • இரண்டு வகையான பறவைகள், ‘சிவப்பு தொண்டை பாடும் பறவை (Red Throated Thrush) மற்றும் பிளம்பியஸ் நீர்பறவை (Plumbeous Water Redstart), சமீபத்தில் லடாக் ஒன்றிய பிரதேசத்தில் முதல் முறையா கண்டறியப்பட்டது. 
  • கிரேட் கொல்லைப்புற பறவை எண்ணிக்கை பயிற்சி (Great Backyard Bird count exercise) சமீபத்தில் லடாக் பிராந்தியத்தில் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பறவைகள் கிளப்பினால் மேற்கொள்ளப்பட்டது.
ஆக்ஸிஜன் தேவைப்படாத ஒட்டுண்ணி - 'ஹென்னிகுயா சால்மினிகோலா' 
  • இயங்குவதற்கும், உயிா் வாழ்வதற்கும் ஆக்ஸிஜன் வாயு தேவைப்படாத 'ஹென்னிகுயா சால்மினிகோலா' என்ற ஒட்டுண்ணி இனத்தை இஸ்ரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா். வெறும் 10 செல்களால் மட்டுமே ஆன அந்த ஒட்டுண்ணி, பெரும்பாலும் கிழங்கான் வகை மீன்களின் உடலில் காணப்படுகின்றன.
அறிவியல் தொழில்நுட்பம்
ஆன்டிஹைட்ரஜன் - சிருட் தகவல் 
  • ஆன்டிஹைட்ரஜன் (Antihydrogen) என்பது ஹைட்ரஜனின் எதிர் ஆன்டிமேட்டர் ஆகும்.
  • பொதுவான ஹைட்ரஜன் அணு ஒரு எலக்ட்ரான் மற்றும் புரோட்டானால் ஆனது என்றாலும், ஆன்டிஹைட்ரஜன் அணு ஒரு பாசிட்ரான் மற்றும் ஆண்டிபிரோட்டானால் (Positron and Antiproton) ஆனது.
ஊழியர்கள் மாநில காப்பீடு (ESI) திட்டம்
  • ஊழியர் மாநில காப்பீட்டு (ESI) திட்டத்தின் பயனாளிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தொழிலாளர் அமைச்சகம் ‘சாந்துஷ்ட்’ (Santusht) என்ற மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தவுள்ளது.
  • 'சாந்துஷ்ட் மொபைல் செயலி' பயன்பாடு (Santusht app) எந்த திட்டத்தின் பயனாளிகளுக்கானது? ஊழியர்கள் மாநில காப்பீடு (ESI) திட்டம்
5G ஹாகாதான் - சிறு தகவல் 
  • ‘5G ஹாகாதான்’ (5G Hackathon) சமீபத்தில் எந்த மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
  • இந்தியாவில் அனைத்து மாணவர்கள், தொடக்க நிறுவனங்கள், SME-க்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் NRI-க்கள் பங்கேற்கும் புதிய யோசனைகளை நாட்டில் சாத்தியமான 5-ஜி தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளாக மாற்றுவதை இந்த 5G ஹாகாதான் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
சென்னையில் அமையும் - பின்-டெக் சிட்டி
  • தொழில்துறையை மேம்படுத்தும் ஒரு பகுதியாக தமிழ்நாடு தொழில்துறை மேலாண்மை நிறுவனம் சென்னைக்கு அருகில் பின்-டெக் சிட்டி (FinTech centre) அமைக்க திட்டமிட்டுள்ளது. 
  • சென்னை - பெங்களூரு, சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டங்கள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. 
திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி - மறைவு 
  • சென்னை திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி உடல் நலக்குறைவு காரணமாக பிப்ரவரி 27-அன்று மரணம் அடைந்தார். இவர் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்.
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் - மறைவு
  • குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் உடல் நலக்குறைவு காரணமாக பிப்ரவரி 28-அன்று மரணம் அடைந்தார். இவர் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்.
15-வது சட்டசபை
  • தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வருவது 15-வது சட்டசபை ஆகும். இதற்கான தேர்தல் 2016-ம் ஆண்டு மே 21-ல் நடந்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. 134 இடங்களை வென்றது. மீண்டும் ஆட்சியை ஜெயலலிதா கைப்பற்றியது.
பத்திரப் பதிவுக்கு முன்பு உட்பிரிவுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறை
  • தமிழ்நாட்டில் பத்திரப் பதிவுக்கு முன்பே நிலங்களை உட்பிரிவு செய்து அதற்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
  • இப்புதிய திட்டத்தை சோதனை அடிப்படையில் முதல் கட்டமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் ஓசூா் வட்டங்களிலும், பெரம்பலூா் மாவட்டம் ஆலத்தூா் மற்றும் பெரம்பலூா் ஆகிய வட்டங்களில் அறிமுகம் செய்யப்படுகிறது.
பறவைகள் கணக்கெடுப்பு - 2020
  • தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் வாரத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்துவது வழக்கம். இந்த நிலையில், சரணாலயப் பகுதியில் காணப்படும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பிப்ரவரி 28-29 தேதிகளில் தொடங்கியது.
விளையாட்டு நிகழ்வுகள்
பேட்மிண்டன்

ஒலிம்பிக் பயிற்சியாளர் - 'அகுஸ் வி சான்டோசோ' 
  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளை சீரிய முறையில் தயார்படுத்துவதற்காக, இந்தோனேஷியாவைச் சேர்ந்த 'அகுஸ் வி சான்டோசோ' பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். 
  • இவர் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், சாய்னா உள்ளிட்ட இந்திய ஒற்றையர் பிரிவு வீரர், வீராங்கனைகளுடன் இணைந்து பணியாற்றுவார்.
டென்னிஸ்

மரிய ஷரபோவா 'ஓய்வு' அறிவிப்பு 
  • உலகின் சிறந்த டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான ரஷியாவை சேர்ந்த 'மரிய ஷரபோவா' சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக பிப்ரவரி 26-அன்று அறிவித்தார். 32 வயதான ஷரபோவா 5 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளர் ஆவார்.
துப்பாக்கி சுடுதல்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 2020 (டெல்லி)
  • உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி மார்ச் 15-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது. 
நீச்சல்

சீன நீச்சல் வீரர் சன் யாங் - 8 ஆண்டு தடைவிதிப்பு 
  • சீனாவைச் சேர்ந்த பிரபல நீச்சல் பந்தய வீரர் சன் யாங் ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 8 ஆண்டுகளுக்கு விதிக்கப்பட்டுள்ளார். 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் 2 தங்கப்பதக்கமும், 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கப்பதக்கமும் வென்ற சாதனையாளர் ஆவார்.
முக்கிய தினங்கள்
தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28
  • நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி சா்.சி.வி.ராமன், ராமன் விளைவு என்ற இயற்பியல் கண்டுபிடிப்பை நிகழ்த்திய பிப்ரவரி 28-ந்தேதி, ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினமாக (National Science Day) கடைப்பிடிக்கப்படுகிறது.‘ராமன் விளைவு’ குறித்து கடந்த 1928-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி உலகுக்கு அறிவிக்கப்பட்டது. 1986-ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • 2020 ஆம் ஆண்டின் கருப்பொருள் (Theme): "அறிவியலில் பெண்கள்" (Women in Science).
சர்வதேச நகரம் ஆரோவில் உருவான தினம் - பிப்ரவரி 28 
  • சா்வதேச நகரான ஆரோவிலின் 52-ஆவது உதய தின விழா, 2020 பிப்ரவரி 28-ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
  • விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டத்தில் 1968-ஆம் ஆண்டு, பிப்ரவரி 28-ஆம் தேதி ஆரோவில் நகரம் அமைக்கப்பட்டது.
  • அரவிந்தரின் முக்கிய சீடரான அன்னை என்றழைக்கப்படும் மீரா அல்போன்சாவின் கனவு நகரமாக ஆரோவில் சா்வதேச நகரம் அமைக்கப்பட்டது.
பிப்ரவரி 29: லீப் தினம் 
  • பிப்ரவரி 29-ஆம் தேதி லீப் நாள் ஆகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிப்ரவரி மாதத்தில் வரும் 29-ம் தேதியை லீப் ஆண்டு எனக் குறிப்பிடுகிறோம்.
  • புவி சூரியனை ஒரு சுற்று சுற்றிவர முன்னூற்று அறுபத்து ஐந்தேகால் நாள்கள் ஆகின்றன. இந்த கால் நாளை கணக்கிடாமல், ஆண்டுக்கு 365 நாள்கள் என்றே அறிவியல் அறிஞர்கள் கணக்கிடுகின்றனர். எனவே, பிப்ரவரி மாதத்தில் 28 நாள்கள் மட்டுமே வருகிறது.
  • மீதமுள்ள கால் நாள்களைச் சேர்ந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளாக கணக்கிடும்போது, பிப்ரவரி மாதத்தில் 29 நாள்கள் வரும். இதுபோல, பிப்ரவரி மாதத்தில் 29 நாள்கள் வரும் ஆண்டை லீப் ஆண்டு என்கின்றனர். அதன்படி, 2020-ம் ஆண்டு லீப் ஆண்டாகும். இதையடுத்து, 2024, 2028.. என்று அடுத்தடுத்த 4 ஆண்டுகள் கழித்துதான் லீப் ஆண்டுகள் வரும். 
  • கிமு 46 இல் ஜூலியஸ் சீசரின் அறிஞர்களால் இந்த லீப் ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை 366 வது நாள் சேர்க்கப்பட்டது.
Previous Post Next Post