GK Tamil Current Affairs March 25-26, 2020 (Tamil) - Download as PDF

GK Tamil/TNPSC Link Current Affairs March 25-26, 2020 (Tamil) PDF

GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge  15 and 26th March 2020, which have updates of Latest Current Affairs 2020 events.

Our Current Affairs March 2020 events will help you to get more marks in TNPSC, TRB, TNEB/TANGEDCO, Banking, Insurance, SSC, RRB Railways, UPSC, CLAT and all State Government Exams 2020 2021.
சர்வதேச நிகழ்வுகள்
சார்க் கொரோனா அவசர நிதி: இலங்கை $5 million பங்களிப்பு 
  • மார்ச் 23, 2020 அன்று, சார்க் கொரோனா அவசர நிதிக்கு (SAARC corona emergency fund) இலங்கை அரசு 5 மில்லியன் டாலர் பங்களித்துள்ளது
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 2020 மார்ச் 15 அன்று சார்க் கூட்டமைப்புக்கான கொரோனா அவசர நிதி முன்மொழியப்பட்டது. இந்தியா கொரோனா அவசர நிதிக்கு 10 மில்லியன் டாலர் பங்களித்துள்ளது.
இந்தியா-ஜெர்மனி இரயில்வே தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம்
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இரயில்வே துறையில் இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை மார்ச் 25-அன்று ஒப்புதல் அளித்தது
  • இந்திய ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக ஜேர்மனியின் DB பொறியியல் மற்றும் ஆலோசனை GMBH நிறுவனத்துடன் இந்திய யில்வே அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 2020 பிப்ரவரியில் கையெழுத்தானது.
இந்திய நிகழ்வுகள்
தேசிய மக்கள் தொகை பதிவேடு நடைமுறை - ஒத்திவைப்பு 
  • நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து தேசிய மக்கள் தொகை பதிவேடு நடைமுறை மற்றும் 202ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட பணிகளை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக மத்திய அரசு மார்ச் 25-அன்று அறிவித்தது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை: நாடு முழுதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல் 
  • மக்கள் ஊரடங்கு மார்ச் 22, 2020: கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு மார்ச் 22-ந்தேதி கடைப்பிடிக்கபட்டது.
  • தமிழக அரசு, மாநிலம் முழுவதும் மார்க் 24 மாலை 6 மணி முதல் மார்ச் 31-வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 
  • 21 நாட்கள் ஊரடங்கு: பிரதமர் மோடி கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மார்ச் 24-அன்று இரவு அறிவித்தார்.
  • மார்ச் 24-அன்று நள்ளிரவு 12 மணி முதல், நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.
  • ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ வசதிகளை வலுப்படுத்த மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
COVID-19 நோயாளிகளுக்கு 'ஹைட்ராக்ஸி குளோரோகுயின்' மருந்து 
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அமைத்த கொரோனா வைரஸுக்கான தேசிய பணிக்குழு, சுகாதாரப் பணியாளர்கள் அல்லது COVID-19 நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (Hydroxychloroquine) என்ற மருந்தை பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது.
  • இந்த நெறிமுறைக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (DGCI) டாக்டர் வி. ஜி. சோமானி (Dr V. G. Somani) ஒப்புதல் அளித்துள்ளார்.
தொற்றுநோய்கள் சட்டம் 1897 - சில தகவல்கள் 
  • கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு 123 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 1897-ம் ஆண்டு, பிப்ரவரி 4-ந்தேதி இயற்றப்பட்ட ஒரு சட்டமும் உதவுகிறது. அந்த சட்டம்தான் தொற்றுநோய்கள் சட்டம் (Epidemic Diseases Act, 1897) ஆகும். பிளேக் நோயை கட்டுப்படுத்துவதற்காக இந்த சட்டம் அந்தக் காலத்தில் கொண்டு வரப்பட்டு, அது இந்தியர்களை சிறையில் தள்ளவும், அவர்களின் சொத்துகளை அழித்தொழிக்கவும் ஆங்கிலேயர்களால் தவறாக பயன்படுத்தப்பட்டது பழங்கதை.
  • பிளேக் நோயை கட்டுப்படுத்துவதற்காக இந்த சட்டம் அந்தக் காலத்தில் கொண்டு வரப்பட்டது.
  • இந்த சட்டத்தை முதலில் கர்நாடக மாநில அரசு கடந்த 11-ந்தேதி அமல்படுத்தியது. அதைத்தொடர்ந்து அரியானா, மராட்டியம், தமிழகம், டெல்லி, கோவா என பல மாநிலங்களும் அமல்படுத்தி வருகின்றன.
  • பிளேக் நோயை கட்டுப்படுத்துவதற்காக இந்த சட்டம் அந்தக் காலத்தில் கொண்டு வரப்பட்டு, அது இந்தியர்களை சிறையில் தள்ளவும், அவர்களின் சொத்துகளை அழித்தொழிக்கவும் ஆங்கிலேயர்களால் தவறாக பயன்படுத்தப்பட்டது பழங்கதை.
விருதுகள்
ஏபெல் பரிசு 2020 
  • நார்வேயின் அகாடமி ஆஃப் சயின்ஸ், 2020-ஆம் ஆண்டிற்கான ஏபெல் பரிசை (Abel Prize 2020) இரண்டு சிறந்த கணிதவியலாளர்களுக்கு அறிவித்துள்ளது. அவர்கள் விவரம்:
  • ஹில்லெல் ஃப்ரஸ்டன்பெர்க் (Hillel Frustenberg): இவர் ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த அமெரிக்க-இஸ்ரேலிய கணிதவியலாளர் ஆவார். இவர் ஜெர்மனியில் பிறந்தவர்,
  • கிரிகோரி மார்குலிஸ் (Gregory Margulis): இவர் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக சேர்ந்தவர், இரஷ்ய-அமெரிக்க கணிதவியலாளர். அவர் lattices பற்றிய படைப்புகளுக்கு பெயர் பெற்றவர்.
  • ஏபெல் பரிசு (2003) - குறிப்புகள்: ஏபெல் பரிசு, கணிதத்தின் “நோபல் பரிசு” என்று அழைக்கப்படுகிறது. ஏபெல் பரிசு (Abel Prize) என்பது நார்வே மன்னரால் ஆண்டுதோறும் "உலகளாவிய கணிப்பில் சிறந்த கணிதவியலாளருக்கு வழங்கப்பட்டு வரும்" ஒரு சிறப்பு விருதாகும்.
  • 2003ம் ஆண்டிலிருந்து நார்வே நாட்டின் 19-வது நூற்றாண்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் திகழ்ந்த "நீல்ஸ் ஹென்றிக் ஏபெல்" என்பவரின் நினைவாக நார்வே அரசினரால் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
  • ஏபெல் பரிசு வென்ற இந்தியர்: 2007 ஆம் ஆண்டிற்கான ஏபெல் பரிசு, இந்திய அமெரிக்கர் எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன் அவர்களுக்கு, “நிகழ்தகவுக் கோட்பாட்டிற்கு அவர் செய்த அடித்தளப் பங்களிப்புகளுக்காகவும், குறிப்பாக "பெரிய விலக்கங்கள் கோட்பாடிற்காக இப்பரிசு வழங்கப்பட்டது. 
  • ஏபெல் பரிசு வென்றவர்கள் (2017-2019)
    1. 2017 - வைவெஸ் மேயர் (பிரான்ஸ்)
    2. 2018 - ராபர்ட் பி. லாங்லாண்ட்ஸ் (கனடா)
    3. 2019 - பேராசிரியர் கரேன் உல்லேபெக் (அமெரிக்கா)
சுற்றுச்சுழல் நிகழ்வுகள் 
சதுப்புநிலங்கள் பற்றிய ஐ.நா. அறிக்கை 2020 
  • சதுப்புநிலங்களை (Peatlands) பாதுகாப்பது காலநிலை இலக்குகளை அடைய உதவும், ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) அறிக்கை வெளியிட்டுள்ளது.
  • 35 நிபுணர்களால் எழுதப்பட்ட இந்த அறிக்கையில் சதுப்புநிலங்களை மீட்டெடுப்பது மற்றும் நிர்வகிப்பது தொடர்பான நாடுகளுக்கான தகவல்களும் பரிந்துரைகளும் அடங்கியுள்ளது.
  • சீரழிவை எதிர்கொண்டுள்ள சதுப்புநிலங்கள், அவசரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
  • கரிம மண்ணின் அடர்த்தியான அடுக்கு கொண்ட ஈரநிலங்கள் அல்லது சதுப்புநிலங்கள் உலகளாவிய நிலப்பரப்பில் 3% மட்டுமே உள்ளன, ஆனால் அவை உலகின் மண்ணில் 30% கரிமத்தை சேமித்து வைத்துள்ளன.
தமிழ்நாட்டு நிகழ்வுகள் 
மதுரையில் 'கொரோனா பரிசோதனை மையம்' 
  • மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
  • இதன்மூலம் தமிழ்நாட்டில் 8-வது கொரோனா பரிசோதனை மையம் மதுரையில் அமைகிறது. ஏற்கனவே, சென்னை (கிங்ஸ் பரிசோதனை மையம்), தேனி, திருநெல்வேலி, திருவாரூர், கோவை, சேலம், ஈரோடு ஆகிய இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
  • 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் - தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு 
  • தமிழகத்தில் உள்ள 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் அறிவித்துள்ளார். 
  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 
கொரோனா தடுப்பு நடவடிக்கை: ரூ.3,280 கோடி ஒதுக்கீடு
  • கொரோனா நிவாரண நிதிக்கு தமிழக அரசு ரூ.3,280 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
தலைக்காயம் மற்றும் அவசரகால சிகிச்சைக்கான - புதிய பிரிவு
  • தமிழ்நாட்டின் 24 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில், தலைக்காய சிகிச்சை சேவையை வலுப்படுத்த, தலைக்காயம் மற்றும் அவசரகால சிகிச்சைக்காக தனியாக புதிய பிரிவு உருவாக்கப்பட உள்ளது. 
மாநல்லூா் சிப்காட்டில் 'மின்சார வாகனப் பூங்கா'
  • தமிழ்நாடு முதல்வா் க. பழனிசாமி சட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ் மார்ச் 24-அன்று அறிவிப்புகளை வெளியிட்டார் அவற்றின் விவரம்: 
  • மின்சார வாகனப் பூங்கா: தமிழகத்தில் புதிய தொழில் முதலீட்டை ஈா்க்கும் வகையில், சென்னைக்கு அருகில் உள்ள சிப்காட் மாநல்லூா் தொழில் பூங்காவில் மின்சார வாகனப் பூங்கா ரூ.148 கோடியில் உருவாக்கப்பட உள்ளது. 
  • ஸ்ரீபெரும்புதூரில் தரவு மைய பூங்கா: வணிகம் மற்றும் நிறுவனத் தகவல்களைச் சேமித்தல், மீட்டெடுத்தல் போன்ற பணிகளுக்காக சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நெமிலி, மன்னூா் கிராமங்களில் ரூ.500 கோடி மதிப்பில் தரவு மைய பூங்கா ஒன்று உருவாக்கப்பட உள்ளது.
  • சென்னையில் புத்தாக்க நகரம்: புத்தாக்கங்கள், அறிவுசாா் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆதரித்து புதிய தொழில்களை உருவாக்கும் நோக்கத்துடன் ஒரு புத்தாக்க நகரம் சென்னையில் ரூ.350 கோடியில் அமைக்கப்படும். 
  • கோவை மாவட்டம் கல்லப்பாளையம் கிராமத்தில் கொடிசியா மூலம் புதிய தனியாா் தொழில்பூங்கா அமைக்கப்பட உள்ளது. 
  • பால் உற்பத்தித் திறன் அடிப்படையின் மூலம் பிறந்த கிடாரிகளின் வம்சாவழி சோதனை திட்டத்தின் மூலம் 180 உயர்ரக பொலி காளைகள் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
  • தூத்துக்குடி, தேனி மாவட்டங்களில் புதிய பால் பண்ணைகள் உருவாக்கப்பட உள்ளது. 
  • தமிழ் நிலம்’ மென்பொருள்: சாதாரண மக்களும் எளிதாக கையாளும் வகையில் இணையவழியாக நிலம் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் கிடைக்க வகை செய்ய ‘தமிழ் நிலம்’ என்ற ஒரு மென்பொருள் உருவாக்கப்படும். இதில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு நில ஆவணங்களை புதுப்பித்தல், இணையவழியாக சொத்து தொடர்பான வில்லங்க விவரங்கள் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்படும்.
  • ரோபோட்டிக்’ அறுவை சிகிச்சை மையம்: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நவீன ‘ரோபோட்டிக்’ அறுவை சிகிச்சை மையம் ரூ.34.60 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
  • பயோ சேப்ட்டி லெவல்-3: சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மருந்து நிலையத்தில் உள்ள ஆய்வகத்தை ‘பயோ சேப்ட்டி லெவல்-3’ நிலைக்கு மேம்படுத்துவதற்கும் ரூ.110 கோடி செலவிடப்படும்.
  • திருக்கோவில்’ தொலைக்காட்சி: ரூ.8.77 கோடி மதிப்பீட்டில் ‘திருக்கோவில்’ என்ற பெயரில் தொலைக்காட்சி தொடங்கப்படும்.
  • சென்னை பெருநகர பூந்தமல்லியில் புதிய காவல் மாவட்டம் உருவாக்கப்படும்.
  • நுண்ணீர் பாசன வசதிகள்; விவசாயிகளின் பட்டா நிலங்கள் கண்டறியப்பட்டு அந்த இடத்தில் ரூ.50 கோடி மானியத்தில் ‘பிரதம மந்திரி கிரிஷி சின்ஜாயி யோஜனா’ திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசன வசதிகள் செய்து தரப்படும்.
  • ரூ.300 கோடி மதிப்பீட்டில் 4 இடங்களில் மின்னணு உற்பத்தி தொகுப்பு மண்டலங்கள் அமைக்கப்படும். * புதிய ‘இணைய பாதுகாப்பு கொள்கை’ வெளியிடப்படும்.
  • ஜெயலலிதா பெயர்: உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி சாதனை படைத்த ஜெயலலிதாவை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு உயர் கல்வி மன்ற வளாகத்துக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா வளாகம் என்று பெயர் சூட்டப்படும். 
  • தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான மாணவ, மாணவியா் படை உருவாக்கப்படும்
  • திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொழில் பூங்காவில் மருந்துகள் உற்பத்திக்கான தனி தொழில் பூங்கா தொடங்கப்படும்.
தமிழ்நாட்டின் 38-வது மாவட்டம் - மயிலாடுதுறை 
  • தமிழ்நாட்டின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 24-அன்று அறிவித்தார்.
  • நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படுகிறது.
  • மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீா்காழி ஆகிய நான்கு வருவாய் வட்டங்கள் உள்ளன. உள்ளாட்சி அமைப்பின் அடிப்படையில், மயிலாடுதுறை நகராட்சியாக உள்ளது. மயிலாடுதுறை வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட தரங்கம்பாடியில் டச்சு காலத்திய கோட்டை அமைந்துள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.
  • இதுவரை 38 மாவட்டங்கள்: தமிழகத்தில் ஏற்கெனவே 32 மாவட்டங்கள் இருந்தன. கடந்த சில ஆண்டுகளில் ஐந்து மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. அதன்படி, கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்டங்கள் உருவானதால் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயா்ந்தது. இந்த மாவட்டங்களுக்கு ஆட்சியா்கள் நியமனம் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்துள்ளன.
ஒரே நாளில் 27 துறை மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றம் 
  • கொரோனா வைரஸ் பரவுவதன் தீவிரத்தை உணர்ந்து மார்ச் 24-அன்றுடன் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவு செய்யப்பட்டது.
  • 2020 மார்ச் 24-அன்று ஒரே நாளில் 27 துறைகளின் மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றப்பட்டது. 
  • தமிழ் வழியில் கல்வி பயின்றவா்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை பெறுவதற்கு 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளை தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும் என்பது உள்பட 4 மசோதாக்கள் பேரவையில் மார்ச் 24-அன்று நிறைவேற்றப்பட்டன.
விளையாட்டு நிகழ்வுகள் 
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி - தள்ளிவைப்பு
  • 32-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. 32-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
  • இந்த போட்டி இந்த ஆண்டுக்கு (2020) பிறகும், அடுத்த ஆண்டு (2021) கோடை காலத்திற்கு முன்பாகவும் நடைபெறும். அதுவரை ஒலிம்பிக் தீபம் ஜப்பானில் இருக்கும் என்றும் இந்த போட்டி ‘ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டி 2020’ என்ற பெயரிலேயே அழைக்கப்படும்.
FIFA கரோனா விழிப்புணா்வு குழு - சுனில் சேத்ரி 
  • சா்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) உலக சுகாதார நிறுவனம் சாா்பில் முன்னாள் மற்றும் இந்நாள் பிரபல கால்பந்து வீரா்கள் 28 போ் அடங்கிய கரோனா விழிப்புணா்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • இக்குழுவில் நட்சத்திர வீரா்கள் லியோனல் மெஸ்ஸி, உலகக் கோப்பை வெற்றி வீரா்கள் பிலிப் லாம், இகோா் காஸிலாஸ், காா்லெஸ் புயோல் உள்பட இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரியும் இடம் பெற்றுள்ளாா்.
முக்கிய தினங்கள்
மார்ச் 25 - காணாமல்போன ஐ. நா. ஊழியர்களுக்கான சர்வதேச நாள் 
  • ஆண்டுதோறும் மார்ச் 25 அன்று, ஐ. நா. அவையால் "சர்வதேச கைதுசெய்யப்பட்ட & காணாமல்போன ஐ. நா. ஊழியர்களுக்கான ஒற்றுமை நாள்" (International Day of Solidarity with Detained and Missing Staff Members) கடைபிடிக்கப்படுகிறது. 
  • ஐ.நா. அவையின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண அமைப்பின் ஊழியர் "அலேக் கெல்லட்" (Alec Collett) என்பவர் கடத்திக்கொல்லப்பட்டதின் நினைவாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. 
Download this article as PDF Format
    Previous Post Next Post