GK Tamil Current Affairs March 17-18, 2020 (Tamil) - Download as PDF

GK Tamil/TNPSC Link Current Affairs March 17-18, 2020 (Tamil) PDF

GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge 17 and 18th March 2020, which have updates of Latest Current Affairs 2020 events.

Our Current Affairs March 2020 events will help you to get more marks in TNPSC, TRB, TNEB/TANGEDCO, Banking, Insurance, SSC, RRB Railways, UPSC, CLAT and all State Government Exams 2020 2021.
சர்வதேச நிகழ்வுகள்
பாலின சமூக நெறிகள் குறியீட்டு அறிக்கை-2020
  • ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) வெளியிட்டுள்ள பாலின சமூக நெறிகள் குறியீட்டு அறிக்கையின்படி (Gender Social Norms Index report), உலகில் எந்த நாடும் பாலின சமத்துவத்தை அடையவில்லை
  • 2030-க்குள் பாலின சமத்துவத்தை அடைவதற்கு உலகம் பாதையில் செல்லவில்லை என்றும் பொருளாதார வாய்ப்பில் பாலின இடைவெளியை நிரப்புவதற்கு 257 ஆண்டுகள் ஆகும் என்றும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
  • பெண்களுக்கு எதிரான பக்கச்சார்பான கருத்துக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. 
  • UNDP: United Nations Development Programme.
லண்டன் 'அம்பேத்கர் ஹவுஸ் நினைவுச்சின்னம்'
  • ஐக்கிய இராச்சியம் (United Kingdom) நாட்டின் லண்டன் நகரில் உள்ள அம்பேத்கர் ஹவுஸ் நினைவுச்சின்னம் (Ambedkar House memorial) அமைந்துள்ளது. இந்த நினைவுச்சின்னம் மூடப்படுவதை எதிர்த்து இந்தியா மேல்முறையீடு செய்தது. சமீபத்தில் இங்கிலாந்து இந்தியாவின் முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, வடக்கு லண்டனில் உள்ள நினைவுச்சின்னம் பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும் என்று அண்மையில் அறிவித்தது.
இந்தியா முன்மொழிந்த 'கோவிட்-19 அவசர நிதி'
  • கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த சார்க் கூட்டணியின் நாடுகளின் தலைவர்களின் கூட்டம் சமீபத்தில் காணொலி காட்சி மூலம் மார்ச் 15-அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சார்க் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். 
  • இம்மாநாட்டில், இந்தியா “கோவிட் -19 அவசர நிதியை” (Covid-19 emergency fund) முன்மொழிந்தது. இந்த நிதிக்கு இந்தியா முதல்கட்டமாக ரூ.74 கோடி (10 மில்லியன் டாலர்கள்) வழங்கி இதனை தொடங்கி வைக்கிறது என பிரதமர் தெரிவித்தார்.
இந்திய நிகழ்வுகள்
கங்கா அமந்திரன் அபியான் திட்டம் - சிறு தகவல் 
  • கங்கா அமந்திரன் அபியான் திட்டம் (Ganga Amantran Abhiyan) தேசிய தூய்மை கங்கை திட்டம் (National Mission for Clean Ganga) என்ற அமைப்பால் நடத்தப்படுகிறது. 
  • நீர்வளத்துறை அமைச்சகத்தின், தூய்மையான கங்கைக்கான தேசிய திட்டம் (National Mission for Clean Ganga) என்ற படகுப்பயணத் திட்டம் “கங்கா அமந்திரன் அபியான்” என்ற பெயரில் செயல்படுத்தப் படவுள்ளது.
  • கங்கை ஆற்றில் தேவ்பிரயாக் (உத்தரகண்ட்) முதல் கங்காசாகர் (மேற்கு வங்கம்) வரை ஆய்வு திறந்த நீர் ராஃப்டிங் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மத்திய அரசு பணிகளுக்கான புதிய ஆட்சேர்ப்பு முறை 'CET' 
  • இரயில்வே, வங்கிகள் மற்றும் மத்திய அரசு வேலைகளின் கீழ் மட்டங்களில் உள்ள வேலைகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு 2021 முதல் 'CET' என்ற பெயரில் புதிய ஆட்சேர்ப்பு முறை (Common Eligibility Test) கடைபிடிக்கப்படவுள்ளது.
  • இந்த ஆன்லைன் தேர்வை தேர்வை நடத்துவதற்கு ஒரு தன்னாட்சி தேசிய ஆட்சேர்ப்பு முகமை (NRA) அமைக்கப்பட உள்ளது.
  • பணியாளர்கள் தேர்வு ஆணையம் (SSC), ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மற்றும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) உள்ளிட்டவை நடத்தும் முதல் நிலை தேர்வாக 'CET' அமையும் எனப்படுகிறது.
நிலம் கையகப்படுத்துவதற்கான ‘பூமிராஷி’ இணையமுகப்பு 
  • தேசிய நெடுஞ்சாலைகளுக்கான நிலம் கையகப்படுத்தும் செயல்முறையை எளிமை மற்றும் துரிதப்படுத்தும் வகையில், ‘பூமிராஷி’ இணையமுகப்பை (BhoomiRashi Portal), மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (Ministry of the Road Transport and Highways) 2018-மார்ச்சில் அறிமுகப்படுத்தியது.
  • கையகப்படுத்தல் செயல்முறை பொது நிதி மேலாண்மை அமைப்பு (PFMS) உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
  • PFMS: Public Financial Management System.
அனைத்து பள்ளி, பல்கலைக்கழகங்கள் - மார்ச் 31 வரை மூடல் 
  • நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, பல்கலைக்கழகங்கள், அருங்காட்சியகங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றை மார்ச் 31-ஆம் தேதி வரை தற்காலிகமாக மூட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது குறித்து மத்திய அமைச்சா்கள் குழு மார்ச் 16-அன்று நடத்திய 7-ஆவது ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. 
அரியாணா மாநில கிராமத்தின் பெயர் மாற்றம் 
  • அரியாணா மாநிலம் குருக்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள 'அமின்' (Amin) என்ற கிராமத்தின் பெயரை மாற்ற 'அபிமன்யுபுர்' (Abhimanyupur) என்று மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. 
தொற்றுநோய் சட்டம் 1897 - நாடுமுதும் அமல் 
  • நாடு முழுதும் சுகாதார ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசாங்கம் தொற்றுநோய் சட்டத்தை (Epidemic Disease Act ) நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த சட்டம் 1897-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
  • எந்தவொரு நோய் பரவலையும் கட்டுப்படுத்த, சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க, ஒழுங்குமுறைகளை வகுக்கவும் இந்த சட்டத்தின் பிரிவு 2 (Section 2) மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.
பசுமை நெடுஞ்சாலை திட்டம் - சிறு தகவல் 
  • 7,660 கோடி செலவில் 780 கி.மீ பசுமை தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை (Green Highways Project) செயல்படுத்த அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த பசுமை நெடுஞ்சாலை திட்டத்தில், நெடுஞ்சாலை இடையே தோட்டத்திற்கும் அதன் பராமரிப்புக்கும் மொத்த திட்ட செலவில் 1% சதவீதம் செலவிடப்படுகிறது.
  • இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவது இந்த திட்டத்தில் அடங்கும்.
அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955 - சிறு தகவல் 
  • அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955 (Essential Commodities Act 1955) சட்டத்தின் கீழ், அரசமைப்பு அட்டவணையில் திருத்தம் செய்வதன் மூலம் 2020 ஜூன் 30 வரை முகமூடிகள் மற்றும் கை சுத்திகரிப்பான்களையும் அத்தியாவசியப் பொருட்களாக மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
பொது சொத்துக்களுக்கான சேதத்தை மீட்கும் சட்டம் 2020
  • கலவரக்காரர்களால் பொது சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதத்தை, கலவரக்காரர்களிடமே வசூலிக்க முற்படும் அவரசசட்டம் (Recovery of Damage to Public Properties Ordinance 2020) உத்தரபிரதேச மாநில அமைச்சரவை சமீபத்தில் நிறைவேற்றியது.
  • குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிராக மாநிலத்தில் பல வன்முறை போராட்டங்களின் பின்னணியில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
விருதுகள்
சாமேலி தேவி ஜெயின் விருது 2020
  • சாமேலி தேவி ஜெயின் விருது (Chameli Devi Jain Award) என்பது பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படும் வருடாந்திர விருது ஆகும்.
  • சிறந்த பத்திரிகையாளர்களுக்கான 2020-ஆம் ஆண்டின் சாமேலி தேவி ஜெயின் விருது இரு பெண் பத்திரிகையாளர்களுக்கு இணைந்து வழங்கப்படுகிறது. அவர்கள் விவரம்:
  • சாமேலி தேவி ஜெயின் ஒரு புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார்.
    1. அர்ஃபா கானும் ஷெர்வானி (தி வயர் இதழ்)
    2. ரோஹினி மோகன் (ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர்) 
நியமனங்கள் 
மாநிலங்களவை நியமன உறுப்பினரானார் 'முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்'
  • அரசியல்சாசன சட்டத்தின் 80-ஆவது சட்டப் பிரிவின்படி, மாநிலங்களவை நியமன உறுப்பினராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அவர்களை குடியரசுத் தலைவா் மார்ச் 16-அன்று நியமித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு 6 பேர் - தேர்வு
  • தமிழ்நாடு சார்பாக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு 6 பேர் போட்டியின்றி மார்ச் 18-அன்று தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் கட்சிகள் விவரம்:
    1. திருச்சி சிவா - தி.மு.க. 
    2. அந்தியூர் செல்வராஜ் - தி.மு.க. 
    3. என்.ஆர்.இளங்கோ - தி.மு.க. 
    4. மு.தம்பிதுரை - அ.தி.மு.க.
    5. கே.பி.முனுசாமி - அ.தி.மு.க.
    6. ஜி.கே.வாசன் - தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சி
ஜம்மு-காஷ்மீர் ஆளுநரின் நான்காவது ஆலோசகர் - ஜி. சி. முர்மு
  • ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் ஆளுநர் ஜி. சி. முர்மு (G C Murmu) அவர்களின் நான்காவது ஆலோசகராக, அண்மையில் பசீர் அகமது கான் (Baseer Ahmed Khan) நியமிக்கப்பட்டார்.
பொருளாதார நிகழ்வுகள்
எஸ் வங்கியின் புதிய அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் - ரூ. 6,200 கோடி
  • எஸ் வங்கிக்கு (Yes Bank) நிதி உதவி வழங்க ரிசர்வ் வங்கியால் முன்மொழியப்பட்ட புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • இந்த புனரமைப்பு திட்டத்தின் படி, வங்கியின் புதிய அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் (new authorised capital) ரூ. 6,200 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்திய கணக்கியல் தரநிலைகள் 'Ind AS' - குறிப்புகள் 
  • இந்திய ரிசர்வ் வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) மற்றும் சொத்து புனரமைப்பு நிறுவனங்கள் (ARCs) ஆகியவற்றால் 'Ind AS' என்ற செயல்படுத்து வழிகாட்டுதல்களை மார்ச் 13-அன்று வெளியிட்டது. 'Ind AS' இந்திய கணக்கியல் தரநிலைகளைக் (Indian Accounting Standards) குறிக்கிறது.
  • இந்திய கணக்கியல் தரநிலைகள் என்பது இந்தியாவில் உள்ள நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் தரமாகும், அவை கணக்கியல் தர நிர்ணய வாரியத்தின் (ASB) மேற்பார்வையின் கீழ் வழங்கப்படுகின்றன.
  • IFRS: International Financial Reporting Standards
  • NBFCs: Non-banking financial companies ARCs: Asset reconstruction companies.
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான கடன் வழங்கு வரம்புகள்
  • இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிப்பின்படி, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கு (UCBs) ஒருநபர் கடன் வாங்குபவருக்கு கடன் வழங்குவதற்கான வரம்பு, அடுக்கு-1 மூலதனத்தை 15% (15% of Tier-I Capital) ஆக நிர்ணயித்துள்ளது. குழு கடன்வாங்குவோர்க்கான வரம்பு. அடுக்கு I மூலதனத்தில் 25% ஆகவும் நிர்ணயித்துள்ளது.
  • UCBs: Urban cooperative banks. 
RoDTEP திட்டம் - சிறு தகவல் 
  • வணிக ஏற்றுமதி ஊக்கத் திட்டத்தை (MEIS) மாற்றுவதற்காக, ஏற்றுமதி தயாரிப்புகள் மீதான கடமைகள் அல்லது வரிகளை நீக்குவது தொடர்பான RoDTEP திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. புதிய RoDTEP திட்டத்தில் 'R' என்பது நிவாரணத்தை (Remission) குறிக்கிறது. 
  • RoDTEP: Remission of Duties or Taxes on Export Products.
அறிவியல் தொழில்நுட்பம்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் 'அக்‌ஷய் உர்ஜா போர்ட்டல்'
  • ‘அக்‌ஷய் உர்ஜா போர்ட்டல்’ (Akshay Urja Portal) என்பது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் ( Ministry of New & Renewable Energy) முன்முயற்சி திட்டம் ஆகும். இது புதிய திட்டங்கள் மற்றும் திட்டங்கள் பற்றிய தகவல்களை பங்குதாரர்களுக்கு சிறந்த முறையில் வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை
  • 2016-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவும் தமிழ்நாடு சட்டசபையில் மார்ச் 16-அன்று தாக்கல் செய்யப்பட்டது
  • 2010-ம் ஆண்டு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
  • இந்த சட்டத்தின்படி, இனி பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, 12-ம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும். அதாவது, பட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப்பணிக்கு, பட்டப்படிப்புடன் 10 மற்றும் 12-ம் வகுப்புகளையும் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும். பட்ட மேற்படிப்பு தகுதிக்கான அரசு பணிக்கு, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பை தமிழ்வழி கல்வி மூலம் பயின்று இருக்க வேண்டும்.
  • அதேபோன்று 10-ம் வகுப்பு தகுதியுள்ள அரசுப்பணிக்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ்வழிக்கல்வியில் பயின்றிருக்க வேண்டும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இனி தமிழ்வழியில் கல்வி பயின்றால் மட்டுமே TNPSC உள்ளிட்ட அரசு பணியில் முன்னுரிமை கிடைக்கும்.
கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் கணக்கெடுப்புப்பணி
  • நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில், மார்ச் 14, 15 தேதிகளில் விலங்குகள் கணக்கெடுப்புப்பணி நடைபெற்றது.
3 மாநகராட்சிகளில் 'நகா்ப்புற வடிவமைப்பு மேம்பாட்டு திட்டங்கள்' 
  • ஈரோடு, வேலூா் மற்றும் ஒசூா் மாநகராட்சிகளில் ரூ.128 கோடி மதிப்பீட்டில் நகா்ப்புற வடிவமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
இரவு நேர ஆதார் சேவை மையம் - தொடக்கம் 
  • நாட்டிலேயே முதல் முறையாக இரவு நேர ஆதாா் சேவை மையம், கும்பகோணம் ரயில் நிலையம் அருகே உள்ள அஞ்சல் பிரிப்பகத்தில் மார்ச் 16-அன்று தொடங்கப்பட்டது.
முக்கிய நபர்கள்
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஸ்மரக் சமிதி நிறுவனர் 'சதானந்த் புல்செல்' 
  • டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஸ்மரக் சமிதியின் (Dr Babasaheb Ambedkar Smarak Samiti) நிறுவனர் செயலாளர் சதானந்த் புல்செல் (Sadanand Fulzele) சமீபத்தில் தனது 91 வயதில் காலமானார்.
  • 1956-இல் பாபாசாகேப் அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறிய இடமான நாக்பூரில் உள்ள தீக்ஷபூமியை (Deekshabhoomi ) இந்த சமிதி கவனிக்கிறது.
  • பி. ஆர். அம்பேத்கர் அவர்கள் புத்த மதத்திற்கு மாறிய வரலாற்று மாற்றத்திற்கு காரணமான ஒரு முக்கியமான ஆளுமை சதானந்த் புல்செல் ஆவார்.
  • 6 லட்சத்திற்கும் அதிகமானோருடன் அம்பேத்கர் மதம் மாறியபோது ஃபுல்செல் நாக்பூரின் துணை மேயராக இருந்தவர் சதானந்த் புல்செல்.
'மகாதேஷ் பிரசாத்' 
  • உலக சுகாதார நிறுவனம் அமைத்துள்ள, கரோனா வைரஸ் (கொவைட்-19) தொற்றைத் தடுப்பதற்கான மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஐரோப்பிய ஆராய்ச்சிக் குழுவில் இந்தியா் 
  • 'மகாதேஷ் பிரசாத்' இடம்பெற்றுள்ளாா்.
  • மகாதேஷ் பிரசாத், கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் உள்ள அரகலாகுட் நகரைச் சோ்ந்தவர். 
  • தற்போது பெல்ஜியத்தில் உள்ள லூவென் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி வருகிறார்.
புத்துசேரி ராமச்சந்திரன் 
  • பிரபல கவிஞரும் மலையாள அறிஞருமான புத்துசேரி ராமச்சந்திரன் (Puthussery Ramachandran) சமீபத்தில் தனது 91 வயதில் காலமானார்.
  • 2013-ஆம் ஆண்டில் மத்திய அரசால் மலையாளத்தை செம்மொழியாக அங்கீகரிக்க வைப்பதில் அவர் ஒரு கருவியாக செயல்பட்டார்.
  • கேரள கம்யூனிஸ்ட் இயக்கத்துடனும் அவர் தொடர்புடைய ராமச்சந்திரன் சாகித்ய அகாடமி விருது, 2015-இல் எசுதாச்சன் புராஸ்காரம், கேரள சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளார்.
Download this article as PDF Format
    Previous Post Next Post