GK Tamil Current Affairs March 19-20, 2020 (Tamil) - Download as PDF

GK Tamil/TNPSC Link Current Affairs March 19-20, 2020 (Tamil) PDF

GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge  19 and 20th March 2020, which have updates of Latest Current Affairs 2020 events.

Our Current Affairs March 2020 events will help you to get more marks in TNPSC, TRB, TNEB/TANGEDCO, Banking, Insurance, SSC, RRB Railways, UPSC, CLAT and all State Government Exams 2020 2021.
சர்வதேச நிகழ்வுகள்
ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா ‘முஜிப் பார்ஷோ’
  • பங்கபந்து (Bangabandhu) என்றும் அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மான் (Sheikh Mujibur Rahman) சுதந்திர நாடான பங்களாதேஷ் நாட்டின் நிறுவன ஜனாதிபதியாக இருந்தார்.
  • 1971-ல் பங்களாதேஷின் விடுதலைக்கு வழிவகுத்து, அப்போதைய கிழக்கு பாகிஸ்தானில் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு எதிரான இயக்கத்திற்கு அவர் தலைமை தாங்கினார்.
  • இவரது நூற்றாண்டு பிறந்த நாள் விழா 2020 மார்ச் 17-அன்று முதல் ஆண்டு பங்களாதேஷிலும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
  • இந்த கொண்டாட்டத்திற்கு ‘முஜிப் பார்ஷோ’ (Mujib Barsho) என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்திற்கு 1.1 பில்லியன் யூரோ 'அபராதம்' 
  • பிரான்ஸ் நாட்டின் ஒப்பந்தத் அதிகாரம் நிறுவனம் சமீபத்தில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் (Apple) நிறுவனத்திற்கு 1.1 பில்லியன் யூரோ (equivalent to $1.2 billion) அபராதம் விதித்தது.
COVID-19 வைரஸ் எதிர்ப்பு - ரஷ்யா $4 billion நெருக்கடி எதிர்ப்பு நிதி
  • COVID-19 வைரஸ் தாக்குதலில் இருந்து, தனது பொருளாதாரத்தைப் பாதுகாக்க 4 பில்லியன் டாலர் 300-billion rouble) நெருக்கடி எதிர்ப்பு நிதியை ரஷ்யா நாடு உருவாக்கியுள்ளது.
இந்திய நிகழ்வுகள்
ஆர்.சி.எஸ்-உதான் திட்டம்: இந்தூர்-கிஷன்கார் இணைப்பு 
  • ஆர்.சி.எஸ்-உதான் (RCS-UDAN scheme) திட்டத்தின் கீழ் இந்தூர் நகருடன் சமீபத்தில் கிஷன்கார் (Kishangarh) நகரம் இணைக்கப்பட்டது. 
  • இராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் மாவட்டத்தில் கிஷன்கார் ‘இந்தியாவின் மார்பிள் நகரம்’ (Marble city of India) என்றும் அழைக்கப்படுகிறது. 
  • ஸ்டார் ஏர் (Star Air) விமான நிறுவனத்திற்கு இந்தூர்-கிஷன்கர் இடையே விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • விமான போக்குவரத்து அமைச்சகம் உதான் திட்டத்தின் கீழ் இந்திய நகரங்களுக்கிடையே 268 விமான வழித்தடங்களை இயக்கியுள்ளது.
  • RCS-UDAN scheme: Regional Connectivity Scheme UDAN (Ude Desh ka Aam Naagrik)
  • உதான் (UDAN) திட்டம் (2016): குறைந்த செலவில், குறைவான நேரத்தில் சிறு நகரங்களை பெருநகரங்களுடன் இணைப்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு 21.10.2016-ல் மண்டலங்களுக்கு இடையேயான விமான போக்குவரத்து திட்டமான ‘உதான்’ மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆதார் அடையாள அட்டை: 90.1% பேருக்கு வழங்கல் 
  • நடப்பு 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 29-ஆம் தேதி வரையிலுமாக நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 90.1 சதவீதம் பேருக்கு ஆதார் அடையாள அட்டையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கியுள்ளது.
சம்ஸ்கிருத பல்கலைக்கழகங்கள் மசோதா-2020
  • நாடாளுமன்றத்தில் மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகங்கள் மசோதா மார்ச் 20-அன்று நிறைவேற்றப்பட்டது.
  • நாட்டில் உள்ள ராஷ்ட்ரீய சம்ஸ்கிருத சன்ஸ்தான், ஸ்ரீ லால் பகதூா் சாஸ்திரி ராஷ்ட்ரீய சம்ஸ்கிருத வித்யாபீடம், திருப்பதி ராஷ்ட்ரீய சம்ஸ்கிருத வித்யாபீடம் ஆகிய 3 சம்ஸ்கிருத பல்கலைக்கழகங்களை நிகா்நிலை பல்கலைக்கழகங்களாக மேம்படுத்துவதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது. 
'கேரியர் பேக் 2 வுமன்' மறு-திறன் தொழில் பயிற்சி திட்டம் 
  • ‘கேரியர் பேக் 2 வுமன்’ (Career Back 2 Women) என்று அழைக்கப்படும் பெண்களுக்கான மறு-திறன் தொழில் பயிற்சித் திட்டத்தை (re-skilling programme) இந்திய தொழில்நுட்ப நிறுவனம்-மெட்ராஸ் (IIT-Madras ) தொடங்கியுள்ளது.
  • தங்கள் தொழில் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்ற பெண்களுக்கு 150 மணிநேர பயிற்சி அளிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு/விண்வெளி
பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல்: இந்திய நிறுவனங்களின் பங்கு 75.03 %
  • மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சமீபத்திய தகவல்களின்படி, பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய ஒப்பந்தங்களில் இந்திய நிறுவனங்களின் பங்கு 2019-20ல் 75.03 சதவீதமாகும்.
  • இந்த பங்கு 2015-16ல் 39.06 சதவீதத்திலிருந்து 2019-20ல் 75.03 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இலகு ரக துப்பாக்கிகள்: இந்தியா-இஸ்ரேல் ஒப்பந்தம் 
  • இந்திய ஆயுதப்படைகளுக்கு ரூ.880 கோடி மதிப்பில் ‘நெகேவ்’ எனப்படும் இலகு ரக துப்பாக்கிகள் வாங்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம், இஸ்ரேல் ஆயுத விற்பனை நிறுவனம் இடையே மார்ச்-19 அன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. மொத்தம் 16,479 துப்பாக்கிகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இந்த ‘நெகேவ்’ வகையிலான துப்பாக்கிகள், ஆயுதப் படைகளிடம் தற்போதுள்ள துப்பாக்கிகளைவிட தொலைவில் உள்ள எதிரிகளை மிக துல்லியமாக தாக்க உதவும்
பாதுகாப்புத் தளவாட கொள்முதல் வரைவு அறிக்கை-2020
  • பாதுகாப்புத் தளவாடங்களைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களைக் கொள்முதல் செய்வது தொடா்பான விதிமுறைகளின் வரைவு அறிக்கையை மத்திய அரசு மார்ச் 20-அன்று வெளியிட்டது.
  • பாதுகாப்புத் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதை ஊக்குவிக்கும் நோக்கில், அதற்கான மூலப்பொருள்களைக் கொள்முதல் செய்வதற்கான விதிமுறைகள் அடங்கிய வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. அதில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
  • மூலப்பொருள்கள், உலோகங்கள், கணிப்பொறி மென்பொருள் உள்ளிட்டவற்றை உள்நாட்டிலேயே கொள்முதல் செய்வதை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய வரைவு அறிக்கையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.1,000 கோடிக்கு அதிகமான மதிப்பு கொண்ட கொள்முதல் ஒப்பந்தங்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
நியமனங்கள்
பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் தலைவர் - இரவீந்தர் சிங் தில்லான்
  • இரவீந்தர் சிங் தில்லான் (Ravinder Singh Dhillon) பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (Power Finance Corporation) என்ற பொதுத்துறை நிறுவனத்தின் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதார நிகழ்வுகள்
அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் - பூஜ்ஜியமாக குறைப்பு 
  • அமெரிக்காவின் மத்திய பெடரல் ரிசர்வ் வங்கி (Fed Reserve) சமீபத்தில் அதன் முக்கிய வட்டி விகிதத்தை கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகக் குறைத்துள்ளது.
  • அதிகபட்ச வேலைவாய்ப்பு மற்றும் விலை ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை எளிதாக்க 700 பில்லியன் டாலர் பத்திரங்களை வாங்கப்போவதாகவும் அமெரிக்கா மத்திய வங்கி ரிசர்வ் அறிவித்தது.
விளையாட்டு நிகழ்வுகள் 
ஒலிம்பிக் தீபம் ஜப்பானிடம் ஒப்படைப்பு
  • 2020 ஒலிம்பிக் போட்டி ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடக்கிறது. இதையொட்டி ஒலிம்பிக் தீபம் மார்ச் 12-அன்று ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் ஏற்றப்பட்டது. 
  • ஒலிம்பிக் தீபத்தை முறைப்படி ஜப்பானிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஏதென்ஸ் நகரில் உள்ள பழமைவாய்ந்த பான்ஏதெனிக் ஸ்டேடியத்தில் மார்ச் 19-அன்று நடந்தது. கிரீஸ் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஸ்பைரோஸ் கேப்ராலோஸ், ஒலிம்பிக் தீபத்தை ஜப்பான் முன்னாள் நீச்சல் வீராங்கனை இமோட்டா நாகோவிடம் ஒப்படைத்தார்.
  • மார்ச் 26-ந்தேதி முதல் தீபம் ஜப்பான் முழுவதும் தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்படும்.
முக்கிய நபர்கள்
மூத்த பத்திரிகையாளர் 'பாட்டீல் புட்டப்பா'
  • கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் பாட்டீல் புட்டப்பா, பாபு என்று அன்போடு அழைக்கப்பட்டார், சமீபத்தில் தனது 99 வயதில் காலமானார். அவர் காந்திய கொள்கைகளை தீவிரமாக பின்பற்றுபவர் மற்றும் காதி ஆர்வலர் ஆவார்.
முக்கிய தினங்கள் 
மார்ச் 20 - சர்வதேச மகிழ்ச்சி தினம். 

மார்ச் 20 - கதை சொல்லும் தினம்.

மார்ச் 20 - உலக சிட்டுக்குருவி தினம் 
  • "சிட்டுக்குருவிகளைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகை"யில் ஆண்டுதோறும் மார்ச் 200ஆம் தேதி உலக சிட்டுக்குருவி தினம் (World Sparrow Day 2020) 
  • 2020 சர்வதேச மகிழ்ச்சி தின மையக்கருத்து: "நான் குருவிகளை நேசிக்கிறேன் (I LOVE Sparrows) என்பதாகும்.
சர்வதேச மகிழ்ச்சி தினம் - மார்ச் 20
  • உலகளாவிய அளவில், சர்வதேச மகிழ்ச்சி தினம் (International Day of Happiness) ஆண்டுதோறும், மார்ச் 20 அன்று கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2020 சர்வதேச மகிழ்ச்சி தின மையக்கருத்து: "அனைவருக்கும் மகிழ்ச்சி' (Happiness for All) என்பதாகும். 
பிரெஞ்சு மொழி தினம் - மார்ச் 20
  • ஆண்டுதோறும் பிரெஞ்சு மொழி தினம் (French Language Day 2020) மார்ச் 20 அன்று, ஐக்கிய நாடுகள் அவையால் அனுசரிக்கப்படுகிறது.
Download this article as PDF Format
    Previous Post Next Post