GK Tamil Current Affairs March 28, 2020 (Tamil) - Download as PDF

GK Tamil/TNPSC Link Current Affairs March 28, 2020 (Tamil) PDF

GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge 28th March 2020, which have updates of Latest Current Affairs 2020 events.

Our Current Affairs March 2020 events will help you to get more marks in TNPSC, TRB, TNEB/TANGEDCO, Banking, Insurance, SSC, RRB Railways, UPSC, CLAT and all State Government Exams 2020 2021.
சர்வதேச நிகழ்வுகள்
கொரோனா வைரஸ் பாதிப்பு: அமெரிக்கா முதல் இடம்
  • சீனாவையும், இத்தாலியையும் பின்னுக்கு தள்ளி, கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது. 
  • கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவில், இதன் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 340 ஆக உள்ளது. இத்தாலியில் 86 ஆயிரத்து 498 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது.
  • இவ்விரு நாடுகளையும் பின்னுக்கு தள்ளி அமெரிக்கா இப்போது 93 ஆயிரத்துக்கு மேற்பட்ட நோயாளிகளுடன், முதல் இடத்தில் உள்ளது.
பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் - கரோனா நோய்த்தொற்று
  • பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் மற்றும் அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சா் மாத்யூ ஹான்காக்குக்கும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலா பாதிப்பு 
  • கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, உலக அளவில் சுற்றுலா துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.22 லட்சம் கோடி முதல் ரூ.33 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று, ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் செயல்படும் உலக சுற்றுலா அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலில் 'தேசிய ஒற்றுமை அரசு அமைக்க ஒப்பந்தம்'
  • இஸ்ரேல் நாட்டில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு (லிக்குட் கட்சி) மற்றும் முன்னாள் ராணுவ தலைமை தளபதியும் புளூ அண்ட் வைட் கட்சித் தலைவருமான பென்னி கான்ட்ஸ் ஆகியோர் இணைந்து தேசிய ஒற்றுமை அரசு அமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரே ஆண்டுக்குள் இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு மூன்று ஒப்பந்தத்தின்படி, வரும் 18 மாதங்களுக்கு நெதன்யாகு தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். அதன் பின்னா், பென்னி கான்ட்ஸ் பிரதமராகப் பொறுப்பேற்பாா்.
  • ஒரே ஆண்டுக்குள் இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு மூன்று முறை பொதுத்தோ்தல் நடத்தப்பட்டும், தனிப் பெரும்பான்மையுடன் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க இயலாத நிலை நிலவுகிறது.
ஆப்கன் அரசு - தலிபான் பேச்சுவாா்த்தை: 21 உறுப்பினா்கள் குழு அமைப்பு 
  • ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக தலிபான் அமைப்பினருடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவதற்கான 21 உறுப்பினா்கள் அடங்கிய குழுவை ஆப்கன் அரசு அறிவித்துள்ளது.
  • அமெரிக்கா - தலிபான் அமைதி ஒப்பந்தம் பிப்ரவரி 29-ஆம் தேதி கையெழுத்தானது.
கரோனா வைரஸ்: உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 25, 000
  • சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் பாதிப்பினால் உலக அளவில் பலியானவர்களின் எண்ணிக்கை மார்ச் 27-வரை, 25 ஆயிரத்தை எட்டியுள்ளது. 
  • உலகம் முழுவதும் கரோனாவால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,53,244 ஆகும்.
  • அதேபோல பலியானவர்களின் எண்ணிக்கையில் 8,215 பேருடன் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் 4,858 பேரும், சீனாவில் 3,174 பேரும் மரணமடைந்துள்ளனர். 
இந்திய நிகழ்வுகள்
கொரோனா வைரஸ் (SARS-Cov-2) படங்கள்: இந்தியாவில் வெளியீடு 
  • இந்தியாவில் முதல்முறையாக, கொரோனா வைரசின் படங்களை, புனே தேசிய வைராலஜி ஆராய்ச்சியாளர்கள் அதிநவீன நுண்ணோக்கி உதவியுடன் படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
  • 'சார்ஸ் - சிஓவி-2' (SARS-Cov-2) என்ற அந்த வைரசின் படங்களை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிட்டுள்ளது.
  • கடந்த 2012ல் பரவிய 'மெர்ஸ் - சிஓவி' (MERS-Cov) மற்றும் 2002ல் பரவிய 'சார்ஸ் - சிஓவி' (SARS-Cov) வைரஸ்களின் தோற்றங்களை ஒத்திருப்பதாக தேசிய வைராலஜி ஆய்வு நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • சீனாவில் வூஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பரில் கொரோனா தொற்று பரவத் துவங்கியது. தற்போது இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதிலும் உள்ள 199 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
  • கரோனா என்ற வார்த்தைக்கு லத்தீன் மொழியில் கிரீடம் என்று அா்த்தமாகும். தற்போது எடுக்கப்பட்டுள்ள படங்கள், ‘சார்ஸ் - சிஓவி-2’ வைரஸின் மரபணு மாற்றங்கள் குறித்த ஆய்வில் முக்கிய பங்காற்றும். கொவைட்-19 பாதிப்புக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிக்கும் இது உதவிகரமாக இருக்கும்.
8 மாநிலங்களுக்கு பேரிடா் நிவாரணம்; ரூ. 5,700 கோடி 
  • 2019-ஆம் ஆண்டு வெள்ளம், நிலச்சரிவு, புயல் மற்றும் வறட்சி போன்ற பேரிடரால் பாதிக்கப்பட்ட 8 மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ. 5,751.27 கோடியை நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • அதன்படி கேரளம், மகாராஷ்டிரம், பிகாா், நாகாலாந்து, ஒடிஸா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் மற்றும் கா்நாடகம் ஆகிய 8 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு பெறுகின்றன.
ஒடிசாவில் அமையும் இந்தியாவின் மிகப்பெரிய கோவிட் -19 மருத்துவமனை
  • 2020 மார்ச் 27 அன்று, ஒடிசா மாநில அரசு நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் (Covid-19 outbreak) இந்தியாவில் மிகப்பெரிய கோவிட் -19 மருத்துவமனையை அமைக்க உள்ளதாக அறிவித்தது. ஒடிசாவின் புவனேஸ்வரில் அமையும் இந்த மருத்துவமனை 1000 படுக்கைகளை கொண்டு இருக்கும். அடுத்த பதினைந்து நாட்களில் இது செயல்பாட்டுக்கு வரும்.
பாதுகாப்பு/ விண்வெளி 
இந்தியா-பிரான்சு இணைந்த ஒருங்கிணைந்த கூட்டு ரோந்து 2020
  • இந்தியாவும் பிரான்சும் முதன்முறையாக ஒருங்கிணைந்த கூட்டு ரோந்துப் பணிகளை ரியூனியன் தீவில் மேற்கொண்டன.
  • வர்த்தக மற்றும் தகவல்தொடர்புகளுக்கான சர்வதேச கடல் வழித்தடங்களின் பாதுகாப்பைப் பராமரிப்பதற்காக இந்தியா, பிரான்சு நாட்டின் கடற்படை பணியாளர்களுடன் P-8I விமானம் மூலம், 2020 பிப்ரவரி மாதம் முதல் முறையாக ரியூனியன் தீவில் ஒருங்கிணைந்த கூட்டு ரோந்துப் பணிகளை (CORPAT) மேற்கொண்டது. 

  • தற்போது இந்திய கடற்படை, ‘அக்கம்பக்கத்து முதல் என்ற கொள்கை (Neighbourhood First’ policy) மற்றும் பரந்த கடல் ஒத்துழைப்பின் கீழ் மாலத்தீவுகள், சீஷெல்ஸ் மற்றும் 
  • மொரீஷியஸுடன் கூட்டு பிரத்தியேக பொருளாதார மண்டல (EEZ) கண்காணிப்பு மற்றும் பங்களாதேஷ், மியான்மர், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவுடன் ஒருங்கிணைந்த ரோந்து (CORPAT) ஆகியவற்றை நடத்துகிறது.
  • CORPAT: Coordinated Patrols
மேம்பட்ட மிக அதிக அதிர்வெண் செயற்கைக்கோள் 'AEHF-6' 
  • அமெரிக்க விண்வெளிப் படை (US Space Force), Atlas V551 ராக்கெட்டில் புளோரிடாவின் கேப் கனாவெரல் மையத்தில் இருந்து தனது முதலாவது மேம்பட்ட மிக அதிக அதிர்வெண் கொண்ட AEHF-6 என்ற அதிவேக பாதுகாப்பான இராணுவ தகவல் தொடர்பு செயற்கைக்கோளை புவியின் சுற்றுப்பாதையில் மார்ச் 26 அன்று செலுத்தியது.
மாநாடுகள் 
G-20 கொவைட்-19 சிறப்பு மெய்நிகர் உச்சிமாநாடு 2020 
  • கொவைட்-19 நோய் தடுப்பு பற்றிய G-20 அமைப்பின் சிறப்பு உச்சிமாநாடு (Virtual Group of 20 (G20) Leaders’ Summit), மார்ச் 26-ஆம் நாளிரவு காணொளி மூலம் நடைபெற்றது. 
  • பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். COVID-19 உருவாக்கிய சவால்களைப் பற்றி விவாதிப்பதற்கும், உலகளாவிய ஒருங்கிணைந்த பதிலுக்கான செயல் திட்டத்தை உருவாக்குவதற்காகவும் இம்மாநாடு நடைபெற்றது.
பொருளாதார நிகழ்வுகள் 
வங்கிக் கடன் வட்டி விகிதங்கள் குறைப்பு 
  • கொரோனாவால் உலகில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக , உலக மைய வங்கிகளைப் பின்பற்றி ரிசர்வ் வங்கி மார்ச் 27-அன்று வங்கிக் கடன் வட்டி விகிதங்களை குறைத்தது. 
  • இதன்படி ரெப்போ விகிதம் 0.75 சதவீதம் குறைந்து 4.40 சதவீதமாக உள்ளது. ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 0.90 சதவீதம் குறைந்து 4 சதவீதமாக இருக்கிறது.
  • CRR எனப்படும் ரொக்க இருப்பு விகிதத்தை ரிசர்வ் வங்கி 1 சதவீதம் குறைத்துள்ளது. எனவே இப்போது அது 3 சதவீதமாக உள்ளது. இதனால் வங்கித்துறையில் பணப்புழக்கம் ரூ.1.37 லட்சம் கோடி அளவிற்கு அதிகரிக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
  • 3 மாதங்கள் கால அவகாசம்: வங்கிகள் வழங்கிய அனைத்து வகை குறித்த கால கடன்களுக்கும் மாத தவணைத் தொகை மற்றும் வட்டியை செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி 3 மாதங்கள் கால அவகாசம் கொடுத்துள்ளது.
  • 4 அம்ச திட்டம்: சர்வதேச அளவிலான பொருளாதார வளர்ச்சி 20 ஆண்டுகள் இல்லாத அளவு சரிவை சந்தித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதார பாதிப்பு மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான 4 அம்ச திட்டங்களை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்தார். அவற்றின் விவரம்: 1. போதுமான நிதி சந்தையில் இருப்பதை உறுதி செய்வது, 2.வங்கிகள் தாராளமாக கடன் வழங்க ஏற்பாடு, 3. கடனை திருப்பி செலுத்துவதில் உள்ள நெருக்கடியை குறைப்பது, 4. சந்தையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைக்க நடவடிக்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்களை அறிவித்துள்ளது.
  • CRR: Cash Reserve Ratio.
YES வங்கி 8 உறுப்பினர்கள் இயக்குநர்கள் குழு - அமைப்பு 
  • YES வங்கி தனது 8 உறுப்பினர்கள் கொண்ட இயக்குநர்கள் குழுவை மார்ச் 26 அன்று அமைத்துள்ளது.
  • YES வங்கி லிமிடெட் புனரமைப்பு திட்டம் 2020-திட்டத்தின் படி (Yes Bank Limited Reconstruction Scheme 2020) இந்திய அரசின் நிதி அமைச்சகத்தால் இக்குழு அறிவிக்கப்பட்டது.
  • நிர்வாக இயக்குநர், தலைமை நிர்வாக அதிகாரியாக பிரசாந்த் குமார் செய்லபடுவார்.
புத்தக வெளியீடு 
'Legacy Of Learning' Savita Chhabra 
  • சவிதா சப்ரா (Savita Chhabra) தனது 'Legacy Of Learning' என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த புத்தகம் பகவத் கீதையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களை கொண்டுள்ளது.
தமிழ்நாடு நிகழ்வுகள் 
கரோனா நோய் பாதிப்பு: முதலாவது கட்டத்தில் தமிழ்நாடு 
  • தமிழகத்தில் தற்போது முதலாவது கட்டத்தில்தான் கரோனா நோய் பாதிப்பு உள்ளது. அது இரண்டாவது கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அந்தப் பாதிப்பு மேலும் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத்தான் தற்போது அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 
  • கரோனா நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவமனை: ஓமந்தூராா் அரசு மருத்துவமனை, கோவை ESI மருத்துவமனை ஆகியவை கரோனா நோய் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனைகளாக மாற்றியமைக்கப்ப0ட்டுள்ளன. 
முக்கிய நபர்கள்
பிரம்மா குமாரிகள் இயக்க தலைவி தாதி 'ஜானகி' மரணம்
  • பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தலைவி தாதி ஜானகி (வயது 104) மவுண்ட் அபுவில் வயது முதிர்வு காரணமாக மார்ச் 27-அன்று மரணம் அடைந்தார்.
  • பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தலைமையகம், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மவுண்ட் அபு சிகரத்தில் இயங்கி வருகிறது.
  • ஆன்மிக சேவையிலும், பொது சேவையிலும் ஈடுபட்டுவரும் இயக்கம் பிரம்மா குமாரிகள் இயக்கம் ஆகும்.
  • ஜானகி மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராகவும் இருந்தார்.
முக்கிய தினங்கள்
மார்ச் 27 - உலக நாடக தினம்
  • உலக நாடக தினம் (World Theatre Day) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27-அன்று கொண்டாடப்படுகிறது.
Download this article as PDF Format
    Previous Post Next Post