TNPSC Group 4 Exam Latest Update February 8, 2019
TNPSC Group 4 காலி பணியிடங்கள் 9,882 ஆக அதிகரிப்பு
TNPSC Group 4 காலி பணியிடங்கள் 9,882 ஆக அதிகரிப்பு
- Group-4 பிரிவுகளுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து பிப்ரவரி 7-அன்று TNPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- தமிழகத்தில் குரூப்-4 பிரிவுப் பணிக்காக கூடுதலாக 484 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன, காலிப்பணியிடங்களின் தற்போதுள்ள மொத்த எண்ணிக்கை 9,398ல் இருந்து 9,882ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது
- TNPSC பிப்ரவரி 7-அன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:
- அரசுத் துறைகளில் 2018-19, 2019-20-ம் ஆண்டுக்கான காலி பணியிடங்கள் அன்றைய நிலவரப்படி 6,491 என அறிவிக்கப்பட்டது.
- ஒவ்வொரு துறையிலும் இருந்து புதிதாக பணியிடங்கள் பெறப்பட வாய்ப்புள்ளது என்றும், இதனால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது என்றும், எந்த நேரத்திலும் மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
- 484 இடங்கள் அதிகரிப்பு
- அதன் அடிப்படையில் சில துறைகளில் இருந்து பெறப்பட்ட காலி இடங்களை கணக்கில் கொண்டு, 25.11.2019 அன்று 9,398 ஆக அதிகரிக்கப்பட்டது.
- தற்போது கூடுதலாக 484 இடங்கள் அதிகரிக்கப்பட்டு, 9,882 காலி இடங்களாக அறிவிக்கப்படுகிறது.
- 9,882 காலி பணியிடங்கள்
- காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகமாவது வழக்கமான ஒன்றுதான். இதற்கு முன்னர் நடந்த குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, ஒருங்கிணைந்த என்ஜினீயர் பணிகளுக்கான தேர்வுகளிலும் நடந்துள்ளன.
- தற்போது இறுதி செய்யப்பட்டுள்ள 9,882 காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ள தேதிகள் விரைவில் வெளியிடப்படும்.