TNPSC Current Affairs 8-9 February 2020 - Download as PDF

 Daily Current Affairs February 8-9, 2020

TNPSC Current Affairs February 2020 for forthcoming various TNPSC, TNEB/TANGEDCO, TRB,RRB. UPSC and all Government Exams 2020.

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 8-9, 2020
சர்வதேச நிகழ்வுகள்
சர்வதேச அறிவுசார் சொத்து குறியீட்டு தரவரிசை 2020
  • இந்தியா 40-வது இடம்: 2020 சர்வதேச அறிவுசார் சொத்து குறியீட்டு பட்டியலில் (International intellectual property index) இந்தியா 40-வது இடம் பிடித்துள்ளது.
  • அமெரிக்காவை சேர்ந்த உலகளாவிய கண்டுபிடிப்புக் கொள்கை மையம் (GIPC), மொத்தம் 53 நாடுகளின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.
சர்வதேச மத சுதந்திர கூட்டணி
  • உலகெங்கிலும் உள்ள மத சுதந்திரத்தை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட 'சர்வதேச மத சுதந்திர கூட்டணி'யை (International Religious Freedom Alliance) அமெரிக்கா சமீபத்தில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டணியில் 27 நாடுகள் இணைந்துள்ளன
  • மத சுதந்திரத்திற்கான முன்னேற்றத்திற்கான அடுத்த அமைச்சரவை மாநாடு (Advance Religious Freedom), 2020 ஜூலை மாதம் போலந்து நாட்டின் வார்சா நகரில் நடத்தப்பட உள்ளது.
இந்தியாவுக்கான புதிய குழந்தைகளின் பாதுகாப்பு நிதி
  • பிரிட்டனின் இளவரசர் சார்லஸ் (Prince of Britain Charles) சமீபத்தில் இந்தியாவுக்கான புதிய குழந்தைகளின் பாதுகாப்பு நிதியை (new children’s protection fund) வெளியிட்டார்.
  • 2007-இல் இளவரசர் சார்லஸ் நிறுவிய தொண்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாக, இந்த நிதி பிரிட்டிஷ் ஆசிய அறக்கட்டளை (British Asian Trust) மூலம் வழங்கப்படுகிறது.
போலி ஊடகச் செய்திகளை நீக்க லேபிளிங் செய்யும் 'ட்விட்டர்' 
  • அமெரிக்காவை தளமாகக் கொண்ட சமூக வலைப்பின்னல் மற்றும் மைக்ரோ பிளாக்கிங் (microblogging) சேவையான ட்விட்டர் (Twitter) சமூக ஊடக தளம் சமீபத்தில் தனது தளத்தில் பகிரப்பட்ட போலி ஊடகச் செய்திகளை நீக்க லேபிளிங் (labelling) செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்திய நிகழ்வுகள்
மகாராஷ்டிராவில் அமையும் 'இந்தியாவின் 13-வது பெரிய துறைமுகம்'
  • இந்தியாவின் 13-வது பெரிய துறைமுகத்தை மகாராஷ்டிராவின் வாதவன் (Vadhavan) பகுதியில் அமைக்க மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
  • தனியார்-பொது கூட்டு அடிப்படையில் மொத்தம் ரூ. 65,544 கோடி செலவில் இந்த துறைமுகம் அமைக்கப்படவுள்ளது.
  • இந்தியாவில் உள்ள 12 பெரிய துறைமுகங்கள் விவரம்: தீன்தயாள் துறைமுகம், பாரதீப் துறைமுகம், ஜவஹர்லால் நேரு துறைமுகம், மும்பை துறைமுகம், விசாகப்பட்டினம் துறைமுகம், சென்னை துறைமுகம், கொல்கத்தா துறைமுகம், புதிய மங்களூரு துறைமுகம், வி. ஓ. சிதம்பரனார் துறைமுகம், காமராஜர் துறைமுகம், கொச்சி துறைமுகம், மோர்முகாவோ துறைமுகம்.
  • இவற்றில் நான்கு துறைமுகங்களுக்கு தனிநபர்களின் பெயர்கள் சுட்டப்பட்டுள்ளன, அவை: தீன்தயாள் துறைமுகம் (காண்ட்லா), ஜவஹர்லால் நேரு துறைமுகம் (நவ ஷெவா), வி. ஓ. சிதம்பரனார் துறைமுகம்(தூத்துக்குடி), காமராஜர் துறைமுகம் (எண்ணூர்) 
UNESCO உலக பாரம்பரிய தள சான்றிதழ் பெற்ற 'ஜெய்ப்பூர் நகரம்' 
  • யுனெஸ்கோ அமைப்பால், உலக பாரம்பரிய தளமாக (UNESCO World Heritage site) முறையாக எந்த இந்திய நகரம் சமீபத்தில் ஜெய்ப்பூர் நகரத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
  • இந்தியாவின் பிங்க் சிட்டி எனப்படும் ஜெய்ப்பூர் நகரத்திற்கு யுனெஸ்கோ இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அசுயாலே (Audrey Azoulay) அவர்களால் உலக பாரம்பரிய தளத்திற்கான முறையாக சான்றிதழ், ஜெய்ப்பூரின் வரலாற்று சிறப்புமிக்க ஆல்பர்ட் ஹாலில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
  • 2019 ஜூலை மாதம் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடந்த யுனெஸ்கோ உலக பாரம்பரியக் குழுவின் 43 வது அமர்வில், சுவர் நகரமான ஜெய்ப்பூர் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.
20 விமான விதி - சிறு தகவல் 
  • 20 விமான விதிகளை (20-aircraft rule) தள்ளுபடி செய்வதன் மூலம் இந்தியாவிற்கும் இலங்கை நாட்டிற்கும் இடையே விமான நடவடிக்கைகளைத் தொடங்க அலையன்ஸ் ஏர் (Alliance Air) நிறுவனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனத்திற்கு ஐந்து வருட அனுபவம் உள்ளது, ஆனால் 20 விமான விதிப்படி, 20 விமானங்கள் இல்லை. இடைக்காலத்திற்கு ஒரு சிறப்பு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது 
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவன தகுதி பெற்றுள்ள '5 IIIT-க்கள்'
  • ஐந்து முக்கிய இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு (IIITs) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனத்தின் (INI) அந்தஸ்தை வழங்குவதற்காக, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIITs) சட்டங்கள் (திருத்த) மசோதா, 2020 க்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
  • தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவன தகுதி பெற்றுள்ள IIIT-க்கள் சூரத், போபால், பாகல்பூர், அகர்தலா மற்றும் ரைச்சூர் ஆகியவை ஆகும்.
பாதுகாப்பு/விண்வெளி 
ஆளில்லா வான்வழி வாகன (UAV) ஒப்பந்தம் 
  • இஸ்ரேல் நாட்டின் எல்பிட் சிஸ்டம்ஸ் (Elbit Systems) சமீபத்தில், ஆளில்லா வான்வழி வாகனத்தை (UAV) உருவாக்க, இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. UAV: Unmanned Aerial Vehicle
நியமனங்கள் 
ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் - கே பராசரன் 
  • சமீபத்தில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட ராம் கோயில் கட்டுமானத்திற்கான ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் (Shri Ram Janmabhoomi Teertha Kshetra) தலைவராக கே பராசரன் (K Parasaran) நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிவியல் தொழில்நுட்பம் 
ஈரானின் இணைய பாதுகாப்பு திட்டம் - 'டெஜ்ஃபா'
  • இணைய தாக்குதல்களை (DDoS attacks) எதிர்கொள்ள டிஜிட்டல் கோட்டை என்ற 'டெஜ்ஃபா' (Dejfa) என்ற இணைய பாதுகாப்பு திட்டத்தை (cybersecurity project) ஈரான் நாடு தொடங்கியுள்ளது.   
தமிழ்நாட்டு நிகழ்வுகள் 
கடலூரில் 'பெட்ரோலிய சுத்திகரிப்பு & பெட்ரோ கெமிக்கல் ஆலை'
  • கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலை நிறுவப்படவுள்ளது. இந்த ஆலையை ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டில், அமெரிக்காவை சேர்ந்த ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் நிறுவ உள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜனவரி 7-அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2020-21 
  • தமிழ்நாடு சட்டசபையில் பிப்ரவரி 14-ந்தேதி நிதிநிலை அறிக்கை 2020-21 (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
விருதுநகா் மாவட்டத்தில் 'உயிரிழந்தவா்களின் ஆதாா் சேகரிப்பு'
  • இந்தியாவில் உயிரிழந்தவா்களின் ஆதாா் அட்டை சேகரிப்பு முதன் முறையாக விருதுநகா் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 
  • விருதுநகா் மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் உயிரிழந்தவா்களின் ஆதாா் எண்களை சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள் 

தேசிய சீனியர் ஸ்குவாஷ் 2020 (சென்னை) 
  • 77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது.
முக்கிய தினங்கள்
பிப்ரவரி 8 - தைப்பூசம் 
  • 2020 பிப்ரவரி 8 அன்று, தைப்பூசம் திருவிழாவை உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகம் கொண்டாடியது. இந்த திருவிழா தமிழ்க்கடவுள் முருகனின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
  • Download this article as PDF Format
Previous Post Next Post