TNPSC Current Affairs 5th February 2020 - Download as PDF

Daily Current Affairs February 5, 2020

TNPSC Current Affairs February 2020 for forthcoming various TNPSC, TNEB/TANGEDCO, TRB,RRB. UPSC and all Government Exams 2020.

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 5, 2020
இந்திய நிகழ்வுகள்
ஹப்பலி-தர்வாட் விரைவு பெருந்து போக்குவரத்து அமைப்பு (BRTS)
 • கர்நாடகா மாநிலத்தில் ஹப்பலி முதல் தர்வாட் ஆகிய இரட்டை நகரங்களுக்கு இடையிலான, விரைவு பெருந்து போக்குவரத்து அமைப்பு (BRTS) திட்டம் சமீபத்தில் துணை குடியரசுத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு அவர்களால் தொடங்கப்பட்டது.
 • மாநில மத்திய அரசுகள் மற்றும் உலக வங்கி நிதியுதவியுடன் ரூ. 970 கோடி ரூபாய் திட்ட செலவில் சோதனை அடிப்படையில் இந்த BRTS திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
 • BRTS: Bus Rapid Transit System
SATHI - பகுப்பாய்வு சோதனைக் கருவிகள் நிறுவனம் 
 • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) “அதிநவீன பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்ப உதவி நிறுவனம் (SATHI)” என்ற திட்டத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
 • இது உயர்நிலை பகுப்பாய்வு சோதனைக் கருவிகளைக் கொண்டதாகும், இது வெளிநாட்டு மூலங்களின் சார்புநிலையைக் குறைக்கிறது.
பன்றிக் காய்ச்சலுக்கான குறைந்த கட்டண தடுப்பூசி
 • இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICAR-IVRI) விஞ்ஞானிகள் சமீபத்தில் கிளாசிக்கல் பன்றிக் காய்ச்சலுக்கான (swine fever) குறைந்த கட்டண தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர்.
 • பன்றிக் காய்ச்சல் என்பது பன்றிகளில் அதிக இறப்பு மற்றும் நோயுடன் தொடர்புடைய ஒரு நோயாகும்.
விருதுகள்
மத்திய வங்கியாளர் விருது 2020 - சக்தி காந்தா தாஸ் 
 • பைனான்சியல் டைம்ஸ் இதழுக்குச் சொந்தமான பத்திரிகையான தி பேங்கர், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்தா தாஸ் (Shaktikanta Das) அவர்களுக்கு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் ‘2020 ஆம் ஆண்டின் மத்திய வங்கியாளர்’ (Central Banker of the Year 2020) என்ற விருது வழங்கி கௌரவித்துள்ளது.
 • ‘ஆண்டின் உலகளாவிய மத்திய வங்கியாளர்’ விருது (Global Central Banker of the Year) செர்பியாவின் தேசிய வங்கித்தலைவர் ஜோர்கோவங்கா தபகோவ் (Jorgovanka Tabakovi) அவர்களுக்கு வழங்கப்பட்டது.
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா' திட்ட விருது 2020
 • சமீபத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்களால் வழங்கப்பட்ட ‘பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா' திட்டத்தின் சிறந்த செயல்பாட்டு விருதை மத்தியப் பிரதேச மாநிலம் பெற்றது.
தங்கச்சங்கு விருது 2020
2020 மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிறந்த ஆவணப்படத்திற்கான தங்கச்சங்கு விருதை (Golden Conch Award for Best Documentary Film) பிரேசில் நாட்டின் “பாபென்கோ: நான் இறக்கும்பொது சொல்லுங்கள்” (Babenco: Tell Me When I Die) என்ற திரைப்படம் வென்றது.
மாநாடுகள் 
பாதுகாப்பு இணைப்புகள் மாநாடு 2020
 • புது டெல்லியில் மூன்றாவது பாதுகாப்பு இணைப்புகள் மாநாட்டை (Defence Attaches conference), 2020 பிப்ரவரி 4-அன்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
கலா கோடா கலை விழா 2020
 • மும்பை நகரில் ஆண்டுதோறும் ‘கலா கோடா கலை விழா’ (Kala Ghoda Arts Festival) எனப்படும் பிரபலமான தெரு விழாவின் 21 வது பதிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஒன்பது நாள் நீடிக்கும் இந்த விழாவில் கலை, இசை, சினிமா, இலக்கியம், நாடகம் மற்றும் பாரம்பரிய நடைகள் தொடர்பான 12 பிரிவுகளில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
தமிழ்நாட்டு நிகழ்வுகள் 
கோயம்புத்தூரில் 'LTMMSL ஏவுகணை ஒருங்கிணைப்பு வசதி' நிறுவனம் 
 • L&T MBDA ஏவுகணை அமைப்புகள் (LTMMSL) சமீபத்தில் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் நகரில் ஏவுகணை ஒருங்கிணைப்பு வசதியை (missile integration facility) அமைத்துள்ளது.
 • LTMMSL என்ற ஏவுகணை ஒருங்கிணைப்பு வசதி நிறுவனம், லார்சன் & டூப்ரோ (L&T) மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு நிறுவனமான MBDA ஆகியவற்றின் ஒரு கூட்டு நிறுவனமாகும்.
 • இந்த திட்டம் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை நடைபாதையின் (Tamil Nadu Defence Industrial Corridor)ஒரு பகுதியாகும்.
தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு 2020
 • தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு பிப்ரவரி 5-அன்று நடந்தது.
 • கடைசியாக 1997-ம் ஆண்டு பெரியகோவில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடைபெற்றது.
 • இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் 1010-ம் ஆண்டு கட்டினார். 
 • உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ள தஞ்சை பெரிய கோவில் மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள் 
இரஞ்சி கோப்பை கிரிக்கெட் - 12 ஆயிரம் ரன்கள் கடந்த முதல் வீரர் வாசிம் ஜாபர்
 • முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் விதர்பா பேட்ஸ்மேனுமான 41 வயதான வாசிம் ஜாபர் 19 ரன்கள் எடுத்த போது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 12 ஆயிரம் ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். ரஞ்சி போட்டியில் 12 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
Download this article as PDF Format
Previous Post Next Post