TNPSC Current Affairs 3rd February 2020 - Download as PDF

Daily Current Affairs February 3, 2020

TNPSC Current Affairs February 2020 for forthcoming various TNPSC, TNEB/TANGEDCO, TRB,RRB. UPSC and all Government Exams 2020.

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 3, 2020
சர்வதேச நிகழ்வுகள் 
இந்தியா, மாலத்தீவுகள் இடையே 'அட்டு சுற்றுலா மண்டல' ஒப்பந்தம் 
  • இந்தியா, மாலத்தீவுகள் பிப்ரவரி 2, 2020 அன்று, மாலத்தீவுகள் உள்ள அட்டுஅட்டோல் பகுதியில் (Addu Atoll) உள்ள 5 தீவுகளில் 2.49 மில்லியன் டாலர் திட்ட செலவில் அட்டு சுற்றுலா மண்டலத்தை (Addu tourism Zone) நிறுவ 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
  • மேலும், மாலத்தீவில் ஹோராபுஷியில் (Hoarafushi) ஒரு பாட்டில் நீர் ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
சீனாவிற்கு இ-விசா வழங்குவது - நிறுத்தம் 
  • சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் இந்த வைரஸ் முதலில் தோன்றி, உலக நாடுகளில் 
  • பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, சீனர்களுக்கு இ-விசா வழங்குவதை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது.
மடகாஸ்கா் நிவாரணப் பொருள்கள்
  • கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கா் புயலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கு இந்தியா சார்பில், இந்திய கடற்படையைச் சோ்ந்த ‘INS ஐராவத்’ போா்க்கப்பலில் அந்த நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்திய நிகழ்வுகள்
உதான் திட்டத்தின் கீழ் 250-வது விமானச்சேவை 
  • RCS உதான் திட்டத்தின் கீழ் 250-வது விமானச்சேவை சமீபத்தில் புவனேஸ்வர் மற்றும் வாரணாசி ஆகிய நகரங்கள் இடையே ஏர் இந்தியாவின் அலையன்ஸ் விமான நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.
  • RCS-UDAN: Regional Connectivity Scheme – Ude Desh Ka Aam Nagrik.
'மொகல் தோட்டம்' திறப்பு 
  • டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள 'மொகல் தோட்ட'த்தை (Mughal Garden) பொதுமக்கள் பார்வையிடும் வருடாந்திர "உத்யனோத்சவ்' நிகழ்வை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிப்ரவரி 4-அன்று தொடங்கி வைக்கவுள்ளார். பிப்ரவரி 5-ம் தேதி பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்படவுள்ளது. 
மலிவான சைவ உணவு கிடைக்கப்பபெறும் மாநிலம் - ஜார்கண்ட் 
  • சமீபத்தில் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியம் அவர்களால், 2020 ஜனவரி 31 அன்று 2019-20 பொருளாதார ஆய்வு வெளியிடப்பட்டது. 
  • ‘தாலினோமிக்ஸ்’ (Thalinomics) என்று அழைக்கப்படும் சொல் பயன்படுத்தப்பட்டது, அதாவது தாளி (உணவுத் தட்டு) வாங்குவதற்கான மலிவு விலை என்பதாகும்.
  • இந்த பொருளாதார ஆய்வின்படி, ஜார்கண்ட் மாநிலத்தில் மலிவான சைவ தாளி (உணவு தட்டு) கிடைக்கப்பெறுகிறது. 
புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் தரவரிசை - இந்தியா 3-வது இடம் 
  • ஜனவரி 31, 2020 அன்று வலியிடப்பட்ட 2019-20 பொருளாதார ஆய்வின்படி புதிய நிறுவனங்களின் எண்ணிக்கையில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2018-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 1,24,000 புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு/விண்வெளி 
‘மாட்லா அபியான்’ கடலோர பாதுகாப்புப் பயிற்சி 2020
  • மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் சுந்தர்பன் பகுதியில் இந்திய கடற்படை ‘மாட்லா அபியான்’ 
  • (Matla Abhiyaan 2020) என்ற 5 நாட்கள் கடலோர பாதுகாப்புப் பயிற்சியை நடத்தியது. ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை இந்த பயிற்சி நடைபெற்றது.
பொருளாதார நிகழ்வுகள் 
பட்ஜெட் மதிப்பீட்டில் நிதி பற்றாக்குறை - 132.4%
  • ஜனவரி 31, 2020 அன்று, கணக்குக் கட்டுப்பாட்டு ஜெனரல் (CGA) அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2019-2020-க்கான நிதி பற்றாக்குறை (Fiscal Deficit) டிசம்பர் வரை பட்ஜெட் மதிப்பீட்டில் 132.4% கூடியுள்ளது. 
  • நடப்பு நிதியாண்டில் வருவாய் வசூல் குறைந்ததன் காரணமாக நிதி பற்றாக்குறை முழு நிதி இலக்கில் 132.4% ஐ எட்டியது. 
2018-19-இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி - 6.1% 
  • தேசிய புள்ளிவிவர அலுவலகம் கடந்த மூன்று ஆண்டுகளின் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளை ஜனவரி 31,2020 அன்று வெளியிட்டது. அறிக்கையின்படி, இது உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை 2018-19 ஆம் ஆண்டில் 6.1% ஆக நிர்ணயித்துள்ளது, அதன் முந்தைய மதிப்பீடு 6.8% ஆக இருந்தது, இது 2019 மே மாதத்தில் மதிப்பிடப்பட்டது.
அறிவியல் தொழில்நுட்பம்
டாங்கி (Tangi) வீடியோ பயன்பாடு 
  • படைப்பாற்றலை மையமாகக் கொண்ட ‘டாங்கி’ (Tangi) என்ற குறுகிய வீடியோ தயாரிக்கும் பயன்பாட்டை கூகிள் (Google) தொழில்நுட்ப நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மாநாடுகள் 
இந்தியா சர்வதேச தோல் கண்காட்சி 2020 (சென்னை)
  • இந்தியா சர்வதேச தோல் கண்காட்சி 2020 (India International Leather Fair), பிப்ரவரி 1 முதல் 3 வரை சென்னை நகரத்தில் நடைபெற்றது. 
விளையாட்டு நிகழ்வுகள் 
2020 தேசிய விளையாட்டுக்கான சின்னம் 'ரூபிகுலா'
  • கோவாவின் மாநில பறவை ரூபிகுலா (Rubigula) கோவாவில் நடைபெறும் 36-வது தேசிய விளையாட்டுக்கான அதிகாரப்பூர்வ சின்னமாக அறிவிக்கப்பட்டது.
  • 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு போட்டிகளை (National Games 2020) அக்டோபர் 20 முதல் நவம்பர் 4 வரை கோவா மாநிலம் நடத்துகிறது
மராட்டிய ஓபன் டென்னிஸ் 2020
  • மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில்பிப்ரவரி 3 முதல் 9 வரை நடக்கிறது. தெற்காசியாவில் நடைபெறும் ஒரே ATP டென்னிஸ் தொடர் இந்த போட்டி ஆகும், இதற்கு முன்பு சென்னையில் இந்த போட்டி நடந்து வந்தது.
ஜோகோவிச் - 17-வது கிராண்ட்ஸ்லாம்
  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் (Novak Djokovic) 8-வது முறையாக பட்டத்தை வென்றார். 32 வயதான ஜோகோவிச் இதுவரை ஆஸ்திரேலிய ஓபன்-8, பிரெஞ்ச் ஓபன்-1, விம்பிள்டன்-5, அமெரிக்க ஓபன்-3 என்று மொத்தம் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி இருக்கிறார். 
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களின் பட்டியலில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (20 கிராண்ட்ஸ்லாம்), ஸ்பெயினின் ரபெல் நடால் (19) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் ஜோகோவிச் உள்ளார்.
20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி சாதனை 
  • இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையில் நியூசிலாந்தில் நடந்த 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக (Whitewash) கைப்பற்றி சாதனை படைத்தது.
  • நியூசிலாந்து மண்ணில் இந்தியா 20 ஓவர் தொடரை வென்றது இதுவே முதல்முறையாகும். மேலும் 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் வென்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையையும் இந்தியா படைத்தது.
  • இந்திய வீரர் லோகேஷ் ராகுல் (224 ரன்கள்) தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
அதிக மெய்டன் ஓவர் வீசியவர் - ஜஸ்பிரித் பும்ரா
  • சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிக மெய்டன் ஓவர் வீசியவர் என்று சாதனையை 'ஜஸ்பிரித் பும்ரா' படைத்துள்ளார்.
14,000 ரன்கள் - ரோகித் சர்மா சாதனை 
  • இந்திய வீரர் ரோகித் சர்மா ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) 14 ஆயிரம் ரன்களை அண்மையில் கடந்துள்ளார்.
  • Download this article as PDF Format
Previous Post Next Post