TNPSC Current Affairs 20-21 February 2020 - Download as PDF

Daily Current Affairs February 20-21, 2020

TNPSC Current Affairs February 2020 for forthcoming various TNPSC, TNEB/TANGEDCO, TRB,RRB. UPSC and all Government Exams 2020.

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 20-21, 2020
 இந்திய நிகழ்வுகள்
பண்ணை ஏற்றுமதி (Farm Exports) தொடர்பான 'சஞ்சீவ் பூரி நிபுணர் குழு'
 • சமீபத்தில் 15-வது நிதி ஆணையத்தால் (FFC), ITC-குழுமத்தலைவரும் நிர்வாக இயக்குநருமான சஞ்சீவ் பூரி (Sanjiv Puri) தலைமையில் பண்ணை ஏற்றுமதி (Farm Exports) தொடர்பான உயர் மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
 • இந்த குழுவில் முன்னாள் வேளாண் செயலாளர் ராதா சிங் (Radha Singh) மற்றும் APEDA மையத்தின் பாபன் கே. போர்த்தாகூர் (Paban K. Borthakur) உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள உள்ளனர்.
 • பண்ணை ஏற்றுமதி துறையில், விவசாய சீர்திருத்தங்கள் மற்றும் ஏற்றுமதியை விரைவுபடுத்துவதற்காக 2021-22 முதல் 2025-26 வரை மாநில அரசுகளுக்கு செயல்திறன் அடிப்படையிலான சலுகைகளை இந்த குழு பரிந்துரைக்க உள்ளது.
 • FFC: 15th Finance Commission
உலக வங்கி ஆதரவு திட்டம் - அடல் பூஜால் யோஜனா
 • அடல் பூஜால் யோஜனா (Atal Bhujal Yojana) திட்டத்திற்காக, இந்தியாவுக்கு 450 மில்லியன் டாலர் ( $450 million ) கடனை, உலக வங்கி (World Bank) வழங்கவுள்ளது.
 • உலக வங்கி ஆதரவு திட்டம், குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் 78 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
 • நிலத்தடி நீர் குறைவதை தடுத்து நிலத்தடி நீர் ஆதாரங்களை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த அடல் பூஜால் யோஜனா தேசிய திட்டம் தொடங்கப்பட்டது.
 • ABHY: Atal Bhujal Yojana.
ஆந்திர அரசின் மருத்துவமனைகளை நவீனமயமாக்கும் ‘நாடு-நேடு’ திட்டம் 
 • ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, மருத்துவமனைகளை நவீனமயமாக்குவதற்காக சமீபத்தில் ‘நாடு-நேடு’ (Nadu-Nedu) என்ற திட்டத்தை தொடங்கினார்.
 • இத்திட்டத்தின் கீழ், ரூ .15337 கோடி உதவியுடன் அரசின் அனைத்து அரசு மருத்துவமனைகளும் மூன்று ஆண்டுகளில் இந்திய பொது சுகாதார தரநிலைகளுக்கு (IPHS) இணையாக நவீனமயமாக்கப்பட உள்ளன. 
 • IPHS: Indian Public Health Standards.
ஆதார் - குடியுரிமைக்கான ஆவணம் அல்ல - UIDAI விளக்கம் 
 • ஆதார், குடியுரிமைக்கான ஆவணம் அல்ல என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) விளக்கம் அளித்துள்ளது.ஆதார் என்பது குடியுரிமைக்கான ஆவணம் அல்ல. ஒருவர் ஆதாருக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் 182 நாட்களாவது 
 • இந்தியாவில் வசித்துள்ளாரா என்பதை உறுதி செய்வது ஆதார் சட்டப்படி இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் வேலை என்று கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 
 • இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் எண் வழங்கி வருகிறது.
பாதுகாப்பு/விண்வெளி 
நான்காவது நீர்மூழ்கி போர்க்கப்பல் 'INS காவரட்டி' 
 • கொல்கத்தாவை தளமாகக் கொண்ட பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட் (GRSE) சமீபத்தில் இந்திய கடற்படைக்கு, திட்டம் 28-இன் கீழ், 'INS காவரட்டி’ (INS Kavaratti) என்ற நான்காவது நீர்மூழ்கி போர்க்கப்பலை கட்டிமுடித்து வழங்கியுள்ளது.
 • முன்னர் வழங்கப்பட்ட மற்ற மூன்று போர்க்கப்பல்கள்: INS கமோர்டா (INS Kamorta), INS காட்மட் (INS Kadmatt) மற்றும் INS கில்டன் (INS Kiltan). கார்பன் ஃபைபர் கலப்புப் பொருட்களால் ஆன ஒரு சூப்பர் கட்டமைப்பைக் கொண்டு (Superstructure made of Carbon Fiber Composite Material) கட்டப்பட்ட இந்தியாவின் முதல் இரண்டு பெரிய போர்க்கப்பல்கள் காவரட்டி மற்றும் கில்டான் ஆகும்.
நியமனங்கள் 
அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக 'ஸ்ரீ. சீனிவாசன்' நியமனம்
 • அமெரிக்காவில் கொலம்பியா சர்கியூட் மேல்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி (Chief Judge, the United States Court of Appeals for the DC Circuit) பதவிக்கு அமெரிக்க வாழ் தமிழரான ஸ்ரீ. சீனிவாசன் (வயது 52) நியமிக்கப்பட்டுள்ளார். இவரது முழுப்பெயர் பத்மநாபன் ஸ்ரீகாந்த் சீனிவாசன் (Sri Srinivasan) ஆகும். இவரது தந்தை பத்பநாபன் சீனிவாசன், திருநெல்வேலி அருகேயுள்ள மேல திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்தவர் ஆவார். 
 • தெற்கு ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவர் அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாகி இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
தலைமை ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி
 • தலைமை ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையராக (Central Vigilance Commissioner) சஞ்சய் கோத்தாரி (Sanjay Kothari) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 • தலைமை தகவல் ஆணையர் - பிமல் ஜுல்கா (Sanjay Kothari) 
 • சஞ்சய் கோத்தாரி, பிமல் ஜுல்கா இருவரும் ஓய்வுபெற்ற IAS அதிகாரிகள் ஆவர்.
 • ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையர் (Vigilance Commissioner) - சுரேஷ் பட்டேல் (Suresh Patel) 
 • தகவல் ஆணையர் ( Information Commissioner) - அனிதா பண்டோவ் (Anita Pandove)
 • உயர்மட்ட குழு: பிரதமர் மோடி தலைமையிலான மூன்று பேர் கொண்ட உயர்மட்ட குழு இம்முடிவை எடுத்தது. இதற்கு குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இம்முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பெரும்பான்மை அடிப்படையில் தேர்வு நடந்தது.
ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஸ்தல அறக்கட்டளை - நிர்வாகிகள் தேர்வு
 • தலைவர் - நிருத்ய கோபால்தாஸ்: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி ராமர் கோவில் கட்டுவதற்காக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஸ்தல அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் முதல் கூட்டம் பிப்ரவரி 20-அன்று நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
 • அறக்கட்டளை தலைவர் - மடாதிபதி நிருத்ய கோபால்தாஸ், பொதுச்செயலாளர் - சம்பத் ராய், கோவில் கட்டுமான கமிட்டி தலைவர் - நிருபேந்திர மிஸ்ரா வும், அறக்கட்டளையின் பொருளாளர் - புனே சாமியார் கோவிந்த் தேவ் கிரி.
மாநாடுகள் 
பெர்லினேல் திரைப்பட விழா 2020
 • பெர்லினேல் 2020 (Berlinale) என்ற புகழ்பெற்ற பெர்லின் திரைப்பட விழாவின் 70-வது பதிப்பு 2020 பிப்ரவரி 20 முதல் 1 ஆம் தேதி வரை, ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற உள்ளது.
 • இந்த படவிழாவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் (S. Jaishankar) இந்திய பெவிலியனை (Indian Pavilion) திறந்து வைக்கிறார்.
உலகளாவிய சாலை பாதுகாப்பு அமைச்சரவை மாநாடு 2020
 • சாலை பாதுகாப்பு தொடர்பான 3-வது உயர் மட்ட உலகளாவிய அமைச்சரவை மாநாடு 2020 (Global Ministerial Conference on Road Safety 2020), ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் பிப்ரவரி 19-20 தேதிகளில் நடத்தப்பட்டது.
 • ‘உலகளாவிய இலக்குகளை அடைதல் 2030’ (Achieving Global Goals 2030) என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
 • மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை மற்றும் MSME அமைச்சர் நிதின் கட்கரி இந்தியாவை பிரதிநிதியாக பங்கேற்றார். 
வணிகம்/பொருளாதார நிகழ்வுகள்
இந்தியா-நார்வே இடையிலான 'நீலப் பொருளாதாரப் பணிக்குழு'
 • நிலையான அபிவிருத்திக்கான நீல பொருளாதாரம் குறித்த பணிக்குழு (Task Force on Blue Economy for Sustainable Development) என்பது இந்தியாவிற்கும் நார்வே (Norway) நாட்டிற்கும் இடையிலான ஒத்துழைப்பு அமைப்பு ஆகும்.
 • ஒருங்கிணைந்த பெருங்கடல் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி தொடர்பான இந்த புதிய ஒத்துழைப்பு பணிக்குழு வை, இந்தியாவின் புவிஅறிவியல் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் நோர்வேயின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரால் பிப்ரவரி 19-அன்று தொடங்கிவைக்கப்பட்டது.
ஏற்றுமதி பொருட்கள் தரவுகளை பெறும் செயல்முறை - தொடக்கம் 
 • மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (CBIC) சமீபத்தில் ஏற்றுமதி பொருட்களின் தோற்றம் குறித்த மாவட்ட வாரியான தரவைப் பிடிக்கத் தொடங்கியது.
 • இந்த ஏற்றுமதி தகவல்கள் (Export Information), கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விரிவான புள்ளிவிவர உள்ளீடுகள் கிடைக்கும். 
 • CBIC: Central Board of Indirect Taxes and Customs.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியல் - இந்தியா ஐந்தாவது இடம்
 • அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலக மக்கள்தொகை மதிப்பாய்வு (World Population Review) வலைதளத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, ‘உலகின் மிகப்பெரிய பொருளாதாரம்’ கொண்ட நாடுகள் (Largest Economy of the World list) பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடம் பிடித்துள்ளது.
 • இந்தியா, 2019 ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.94 டிரில்லியன் டாலர் மதிப்புடன் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்தது.
 • இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை இந்தியா முந்தியுள்ளது.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள் 
UK-வை தாக்கிய பேரழிவுப் புயல் 'டென்னிஸ் (Dennis)' 
 • ஐக்கிய இராச்சியம் 2020 பிப்ரவரி மாதத்தில் ‘டென்னிஸ்’ (Dennis) என்ற பேரழிவுகரமான புயலை எதிர்கொண்டது. சவுத் வேல்ஸ் மற்றும் மேற்கு இங்கிலாந்தின் சில பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
பீகார் மாநிலத்தில் அமையும் 'நாட்டின் முதல் பறவை வளைய நிலையம்'
 • பீகார் மாநிலத்தில் ஒரு மாநில அரசாங்கத்தின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட நாட்டின் முதல் பறவை வளைய நிலையம் கட்டப்பட உள்ளது.
 • பாகல்பூரில் கட்டப்படவுள்ள இந்த நிலையம், புலம்பெயர் பறவைகள் பற்றிய கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளது.
அறிவியல் தொழில்நுட்பம்
யூபெர் டாக்ஸி அமைப்புடன் இணைந்த 'ஹிம்மத் செயலி' 
 • டெல்லி காவல்துறையின் ஹிம்மத் செயலி (Himmat application), சமீபத்தில் யூபெர் (Uber) டாக்ஸி ஸ்டார்ட்-அப் நிறுவன அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டது.
 • இந்த கூட்டணி, உபேர் மற்றும் டெல்லி காவல்துறை இணைந்து 1,000 ஹிம்மத் QR சரிபார்ப்பு அட்டைகளை ஓட்டுநர் கூட்டாளர்களுக்கு அண்மையில் விநியோகித்தன.
தேர்தல் ஆணையத்தின் இணையதளம் - ERO-NET
 • மும்பையில் நடைபெற்ற இ-ஆளுமை தொடர்பான 23-வது தேசிய மாநாட்டில், ‘டிஜிட்டல் மாற்றம், அரசு செயல்முறை மறு பொறியியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவதற்காக’, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ‘வெள்ளி’ விருது வழங்கப்பட்டது.
 • இந்த விருது தேர்தல் ஆணையத்தின் இணையதளமான ERO-NET-ற்காக வழங்கப்பட்டது. படிவங்களை செயலாக்குதல், தரவுத்தளங்களை எளிதில் கையாளுதல் மற்றும் E-Rolls-களை பராமரித்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்கு ERO-NET பயன்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள் 
பள்ளி இடை நிற்றல்: தமிழ்நாடு 3.7%
 • தமிழகத்தில் பள்ளிகளில் இடை நிற்றல் 3.7 சதவீதமாக இருக்கிறது. பீகார் மாநிலத்தில் இடைநிற்றல் 39.6 சதவீதமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக இடைநிற்றலில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது.
கீழடி 6-ம் கட்ட அகழாய்வு பணி - தொடக்கம் 
 • தமிழக அரசின் தொல்லியல் துறை மூலம் சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மணலூர், கொந்தகை மற்றும் அகரம் ஆகிய இடங்களில், கீழடி 6-ம் கட்ட அகழாய்வு பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலமாக பிப்ரவரி 19-அன்று தொடங்கி வைத்தார்.
சென்னையில் 'ஹஜ் இல்லம்' 
 • ஹஜ் பயணிகள் தங்களுடைய பயணத்திற்கு முன்பு தங்கி கடவுச்சீட்டு, பயண உடைமைகள் சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சிரமமின்றி மேற்கொள்ள, சென்னையில் ரூ.15 கோடியில் ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று சட்ட சபையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சிறப்பு வேளாண் மண்டலமாக மசோதா 2020
 • காவிரி டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து பாதுகாக்க வகை செய்யும் மசோதா (Cauvery Delta as Protected Agricultural Zone) பிப்ரவரி 20-அன்று தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேறியது. 
 • இந்த சட்டம் 'தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம்' என வழங்கப்பெறும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோவில், மேல் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி வட்டாரங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம் மற்றும் கறம்பக்குடி வட்டாரங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதிகள் இதில் அடங்கும்.
 • இந்த சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு முதலமைச்சரை உள்ளடக்கிய 24 பேர் கொண்ட அமைப்பு அமைக்கப்படுகிறது. இது ‘வேளாண் மண்டல அதிகார அமைப்பு’ என்ற பெயரில் செயல்படும். அதிகார அமைப்பின் தலைமையிடமானது சென்னையில் இருக்கும்.
பிப்ரவரி 24 - மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் 
 • பெண் குழந்தைகளுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய சேவையினை நினைவு கூரத்தக்க வகையில், ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதியை, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அனுசரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள் 
ஆசிய மல்யுத்தம் 2020 (டெல்லி)
 • ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பதக்கம் வென்ற வீரர்/வீராங்கனைகள் விவரம்:
  • திவ்யா கக்ரன் (68 கிலோ) - தங்கப்பதக்கம் 
  • பிங்கி (55 கிலோ) - தங்கப்பதக்கம் 
  • சரிதா (59 கிலோ) - தங்கப்பதக்கம் 
  • நிர்மலா தேவி (76 கிலோ) - வெள்ளிப்பதக்கம்.
ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து 2022 (இந்தியா)
 • 2022-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து (2022 AFC Women's Asian Cup) போட்டியை நடத்தும் உரிமையை இந்தியாவுக்கு வழங்குவதாக ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் பெண்கள் கமிட்டி, பிப்ரவரி 20-அன்று அறிவித்தது. 2020 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் இந்த போட்டிகளில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன.
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் 2020
 • பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் (ICC Women's T20 World Cup) ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி 21-அன்று தொடங்கியது. மார்ச் 8 வரை நடைபெறுகிறது. 10 அணிகள் இந்த போட்டிகளில் பங்கேற்கின்றன.
 • ஹர்மன்பிரீத் தலைமையில் இந்திய பெண்கள் அணி பங்கேற்கிறது.
உலகின் மிகப்பெரிய 'சர்தார் பட்டேல்’ கிரிக்கெட் ஸ்டேடியம் 
 • குஜராத் மாநிலம் ஆமதாபாத் மொடேராவில் 63 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.700 கோடி செலவில், ‘சர்தார் பட்டேல்’ பெயரில் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்க முடியும். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான இது விரைவில் திறக்கப்பட உள்ளது.
முக்கிய தினங்கள் 
பிப்ரவரி 21 - சர்வதேச தாய் மொழி தினம் (International Mother Language Day) 
 • 2020 கருப்பொருள் (Theme): "எல்லைகள் இல்லாத மொழிகள் (Languages without Borders).
 • பின்னணி: இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் பிரிந்த பின் பாகிஸ்தானின் அரசு மொழியாக உருது இருந்தது. 1952-ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) மக்கள் வங்கமொழியை அரசு மொழியாக அங்கீகரிக்க கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை போராட்டமாக வெடித்த நிலையில் 1952, பிப்ரவரி 21 அன்று டாக்காவில் ஊரடங்கு உத்தரவு இடப்பட்டது. உத்தரவையும் மீறி டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் நான்கு மாணவர்கள் உயிர் நீத்தனர். இந்தத் துயர நிகழ்வின் நினைவாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) பிப்ரவரி 21-ம் நாளை உலக தாய்மொழி நாளாக அறிவித்தது.
Download this article as PDF Format
Previous Post Next Post