TNPSC Current Affairs 2nd February 2020 - Download as PDF

Daily Current Affairs February 2, 2020

TNPSC Current Affairs February 2020 for forthcoming various TNPSC, TNEB/TANGEDCO, TRB,RRB. UPSC and all Government Exams 2020.

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 2, 2020
சர்வதேச நிகழ்வுகள் 
பிரெக்ஸிட் உடன்படிக்கை: ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறிய பிரிட்டன்
  • ஐரோப்பிய யூனியனில், 47 ஆண்டுகளாக அங்கம் வகித்த பிரிட்டன், அந்த அமைப்பிலிருந்து விலகுவதற்கான பிரெக்ஸிட் உடன்படிக்கை 2020 ஜனவரி 31-முதல் அமலுக்கு வந்தது.
காமன்வெல்த் அமைப்பில் மீண்டும் மாலத்தீவு சேர்ப்பு 
  • காமன்வெல்த் அமைப்பிலிருந்து விலகிய மாலத்தீவு, அந்த அமைப்பில் மீண்டும் சோ்க்கப்பட்டுள்ளது. மாலத்தீவு 2016-ஆம் ஆண்டு விலகியது. 
  • மாலத்தீவு, மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலீயின் கோரிக்கையை ஏற்று, காமன்வெல்த் அமைப்பில் மாலத்தீவு மீண்டும் சோ்க்கப்பட்டது.
WHO சர்வதேச சுகாதார அவசரநிலை அறிவிப்பு 
  • உலக சுகாதார நிறுவனம் சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலை சர்வதேச சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கொரோனா வைரஸ் தாக்குதலை முறியடிப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும்.
வெட்டுக்கிளிகள்: பாகிஸ்தான் பஞ்சாப்பில் அவசர நிலை அறிவிப்பு 
  • பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், அதிக எண்ணிக்கையில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிா்களை நாசம் செய்து வருவதால், அந்தப் பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நிகழ்வுகள்
வரவு- செலவு திட்டம் 2020-2021 - குறிப்புகள் 
  • 2020 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்கும் 2020-21-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் பிப்ரவரி 1-அன்று தாக்கல் செய்தார். அதன் முக்கிய விவரங்கள்:
  • வேளாண் துறைக்கு ரூ.1.60 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்தையும், விவசாயிகள் நலனையும் கருத்தில்கொண்டு 16 அம்ச திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • வருமான வரி விதிப்பில், புதிய திட்டத்தின்படி ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது. வருமான வரி விலக்கு பெறுவதற்கான 100-க்கும் மேற்பட்ட இனங்களில், 70 இனங்கள் நீக்கப்பட்டுள்ளன. 
  • வங்கி வைப்பு நிதிக்கான காப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை மற்றும் காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை (LIC) பங்குச் சந்தையில் பட்டியலிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், எல்ஐசி-யில் அரசின் பங்கு விலக்கல் நடவடிக்கையும் தொடங்கியுள்ளது. 
  • இதேபோல் ஐடிபிஐ வங்கியின் பங்குகளை முழுமையாக விற்பனை செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.
  • அரசு-தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ் 150 ரயில்கள் இயக்கப்படும்.
  • 2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் "ஜன் ஒளஷதி' (மக்கள் மருந்தகம்) திறக்கப்படும்.
  • "உடான்' திட்டத்தின் கீழ் 100 விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
  • அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீா் வழங்கும் ‘ஜல் ஜீவன்’ திட்டத்துக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ. 11,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தேசிய கட்டமைப்புத் திட்டம் 2019 டிசம்பா் 31-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ரூ.103 லட்சம் கோடி செலவில் கட்டமைப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
  • இந்தியாவில் வரும் 2022-ஆம் ஆண்டு ஜி20 மாநாட்டை நடத்த ரூ.100 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
  • 5 மாநிலங்களில் வரலாற்றுப்புகழ் வாய்ந்த அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும், அவை: தமிழகம் (ஆதிச்சநல்லூர்) ராக்கி காா்க்கி (ஹரியாணா), உத்தரப் பிரதேசம் (ஹஸ்தினாபூா்), திவ்சாகா் (மகாராஷ்டிரம்), தோலாவிரா (குஜராத்)
  • சென்னை-பெங்களூரு இடையே விரைவு சாலை திட்டம் விரைவில், கர்நாடக மாநிலம், ஹொசக்கோட்டே நகரிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை 262 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கப்படவுள்ளது. 
  • ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
  • குஜராத்தின் லோத்தல் பகுதியில் கடல்சார் அருங்காட்சியகம் அமைக்கப்படும்
  • விவசாயப் பொருள்களை எடுத்துச் செல்ல இந்திய ரயில்வேயின் அரசு-தனியார் ஒத்துழைப்பில் "கிசான் ரயில்' திட்டம்.
  • ஏற்றுமதியாளர்களுக்கான காப்பீட்டை அதிகரிக்க "நிர்விக்' திட்டம்.
  • மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.70,000 கோடி ஒதுக்கீடு
  • சூரிய மின் தகடுகள் மீதான 20 சதவீத இறக்குமதி வரியை உடனடியாக ரத்து
  • காவல்துறை மேம்பாடு மற்றும் 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் உள்ளிட்டவற்றுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.1.05 லட்சம் கோடி ஒதுக்கீடு.
  • பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு ரூ.3.37 லட்சம் கோடி ஒதுக்கீடு.
  • தேசிய ஊட்டச்சத்து திட்டத்துக்காக (போஸான் அபியான்) ரூ. 3,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விளையாட்டுத்துறைக்கு ரூ.2,826.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
முகக்கவசங்கள் ஏற்றுமதிக்கு தடைவிதிப்பு
  • காற்றில் பரவும் நுண்கிருமிகளிலிருந்து மக்களை பாதுகாக்க பயன்படுத்தப்படும் முகக்கவசங்கள் (N 95 முகக்கவசம் உள்பட), உடல் முழுவதும் மூடும் வகையிலான ஆடைகள் மற்றும் அனைத்து வகையான பாதுகாப்பு உபகரணங்களையும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பபட்டுள்ளது. வெளிநாடு வர்த்தக இயக்குனர் ஜெனரல் (DGFT) அலுவலகம் இந்த தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே அதிக போலீஸ் நிலையங்களை கொண்ட மாநிலம் - தமிழகம் 
  • மத்திய அரசின் போலீஸ் துறை தொடர்பான தரவு பட்டியலில், நாட்டிலேயே அதிக போலீஸ் நிலையங்களை கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இங்கு மொத்தம் 2,019 போலீஸ் நிலையங்கள் உள்ளன. உத்தரபிரதேசத்தில் 1,532 போலீஸ் நிலையங்கள், மஹாராஷ்டிராவில்1,163 போலீஸ் நிலையங்கள் உள்ளன.
6 புதிய வழித்தடங்களில் புல்லட் ரயில்கள் 
  • 2023ஆம் ஆண்டுக்குள்ளாக நாடு முழுவதும் 6 புதிய வழித்தடங்களில் அதிவிரைவு புல்லட் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வழித்தடங்களில் அதிவிரைவு (300 கி.மீ. வேகம்) அல்லது மித அதிவிரைவு (160 முதல் 250 கி.மீ. வரையிலான வேகம்) புல்லட் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
  1. டெல்லி - நொய்டா - லக்னௌ - வாராணசி (865 கி.மீ.)
  2. டெல்லி - ஜெய்பூர் - உதய்பூர் - ஆமதாபாத் (886 கி.மீ.)
  3. மும்பை - நாசிக் - நாகபுரி (753 கி.மீ.)
  4. மும்பை - புணே - ஹைதராபாத் (711 கி.மீ.)
  5. சென்னை - பெங்களூரு - மைசூரு (435 கி.மீ.)
  6. டெல்லி - சண்டிகர் - லூதியானா - ஜலந்தர் - அமிர்தசரஸ் (459 கி.மீ.)
நியமனங்கள் 
கொலம்பியாவுக்கான இந்திய தூதர் - சஞ்சீவ் ரஞ்சன்
  • கொலம்பியா குடியரசு நாட்டிற்கான இந்திய தூதராக சஞ்சீவ் ரஞ்சன் (Sanjiv Ranjan) நியமிக்கப்பட்டார்.
அறிவியல் தொழில்நுட்பம் 
லித்தியம் அயன் செல்கள் தொழில்நுட்ப மாற்றம் - 10 நிறுவனங்கள் தேர்வு 
  • கேரளாவின் தும்பா நகரில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) உருவாக்கிய லித்தியம் அயன் செல்கள் தொழில்நுட்பத்தை (Lithium-ion cells technology) மாற்றுவதற்காக, நிதி ஆயோக் உடன் இணைந்து 10 நிறுவனங்களை 2019 ஜனவரி 29 அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) தேர்ந்தெடுத்தது.
  • ஏவுகணை வாகனங்கள் மற்றும் செயற்கைக்கோள்களில் பயன்படுத்த ISRO 1.5 Ah to 100 Ah வரையிலான திறன் கொண்ட லித்தியம் அயன் பட்டேரிகளை உருவாக்கியது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள் 
ஒரே மாநிலம்-ஒரே ரேஷன் அட்டை திட்டம் 2 மாவட்டங்களில் - அமல் 
  • ‘ஒரே மாநிலம்-ஒரே ரேஷன் அட்டை’ திட்டம் தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய இரண்டு 
  • மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் பிப்ரவரி 1 முதல் செயல்படுத்தப்பபட்டது. 
  • ஒரே நாடு-ஒரே ரேஷன் அட்டை’ திட்டம் 2020 ஜூன் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவது செயல்படுத்தப்பட உள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள் 
ஆஸ்திரேலிய ஓபன் 2020 
  • ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான, 2020 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்தது. இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் விவரம்: 
    1. பெண்கள் ஒற்றையர் பிரிவு - சோபியா கெனின் (அமெரிக்கா)
    2. ஆண்கள் ஒற்றையர் பிரிவு - நோவக் ஜோகோவிச் (செர்பியா)
    3. ஆண்கள் இரட்டையர் பிரிவு - ராஜீவ் ராம் (அமெரிக்கா) - ஜோ சாலிஸ்பரி (இங்கிலாந்து)
    4. பெண்கள் இரட்டையர் பிரிவு - டெமியா பாபோஸ் (ஹங்கேரி)/ கிறிஸ்டினா மிலடெனோவிக் (பிரான்ஸ்)
    5. கலப்பு இரட்டையர் பிரிவு - பார்போரா கிரெஜ்கோவா (செக் குடியரசு)/ நிகோலா மெக்டிக் (குரோஷியா).
மல்யுத்தம் 

இந்திய மல்யுத்த வீரர் ரவிந்தர் குமாருக்கு '4 ஆண்டுகள் தடை'
  • தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியது தொடர்பாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி, இந்திய மல்யுத்த வீரர் ரவிந்தர் குமாருக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து ஜனவரி 31-அன்று உத்தரவிட்டது. 
கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள் - நியமனம் 
  • கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியின் உறுப்பினர்களாக இந்திய முன்னாள் வீரர்கள் மதன்லால், ஆர்.பி.சிங், இந்திய முன்னாள் வீராங்கனை சுலக்‌ஷனா நாய்க் ஆகியோரை இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. இந்திய அணிக்கான புதிய தேர்வாளர்களை அடையாளம் காணும் பணியை கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி மேற்கொள்ளும்.
இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி தலைவர் - தீபா மாலிக் 
  • இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக தீபா மாலிக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாற்றுத் திறனாளி வீராங்கனையான 49 வயதான தீபா மாலிக், 2016-ம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக்கில் குண்டுஎறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றவர்.
உலக கோப்பை படகு போட்டி: நேத்ரா குமணன் 'வெண்கலம்' 
  • சென்னையை சேர்ந்த நேத்ரா குமணன், உலக கோப்பை படகு ஓட்டும் போட்டியில் பதக்கத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளாா் .
  • அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற ஹெம்பல் உலகக் கோப்பை படகு ஓட்டும் போட்டியில் 'லேஸா் ரேடியல் கிளாஸ்' பிரிவில், நேத்ரா குமணன் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
முக்கிய தினங்கள் 
பிப்ரவரி 1 - கடலோர பாதுகாப்புப் படை எழுச்சி நாள் 
  • 1977-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி இடைக்கால கடலோரப் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. இதை நினைவு கூரும் வகையில், ஆண்டுதோறும் பிப்ரவரி 1-ஆம் தேதி கடலோர பாதுகாப்புப் படை எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
உலக ஈரநிலங்கள் தினம் - .பிப்ரவரி 2
  • ஈரநிலங்களின் மதிப்பு குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2 ஆம் தேதி உலக ஈரநிலங்கள் தினம் (World Wetlands Day 2020) கொண்டாடப்படுகிறது.
  • 2020 உலக ஈரநில தினத்தின் கருப்பொருள்: 'ஈரநிலங்கள் மற்றும் பல்லுயிர்' (Wetlands and Biodiversity) என்பதாகும்.
Download this article as PDF Format
Previous Post Next Post