TNPSC Current Affairs 14-15 February 2020 - Download as PDF

Daily Current Affairs February 14-15, 2020

TNPSC Current Affairs February 2020 for forthcoming various TNPSC, TNEB/TANGEDCO, TRB,RRB. UPSC and all Government Exams 2020.

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 14-15, 2020
சர்வதேச நிகழ்வுகள்
கரோனா வைரஸின் புதிய பெயர் 'COVID-19'
  • கரோனா வைரஸுக்கு கொவைட்-19 (COVID-19) என்ற புதிய பெயரை உலக சுகாதார அமைப்பு சூட்டியுள்ளது.
  • இந்தப் பெயரில் CO' என்பது கரோனா  (CORONA) என்ற வார்த்தையையும், VI  என்பது வைரஸ் என்ற வார்த்தையையும், D  என்பது நோய் (DISEASE) என்ற வார்த்தையையும் குறிப்பதாகும்.
  • கரோனா என்பது லத்தீன் மொழியாகும். லத்தீன் மொழியில் கரோனா என்றால் க்ரீடம், மகுடம் என்று பொருளாகும். எலக்ட்ரோன் மைக்ரோஸ்கோப்பில் பார்க்கும் போது கரோனா வைரஸானது க்ரீடம் போலவும், சூரிய கதிர்வீச்சுப் போலவும் காணப்படுவதால், கரோனா என்று பெயரிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
  • சீனாவின் வூஹான் நகரில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட இந்த கரோனா வைரஸால் சீனாவில் மட்டும் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா-போர்ச்சுகல் - 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து
  • பிரதமா் நரேந்திர மோடி, போர்ச்சுகல் அதிபா் மாா்சேலோ ரெபேலோ டிசெளசா ஆகியோா் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே, அறிவுசாா் சொத்துரிமை, துறைமுகங்கள், போக்குவரத்து, கலாசாரம், தொழில், முதலீடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அளிக்கும் நோக்கில் 7 ஒப்பந்தங்கள் பிப்ரவரி 14-அன்று கையெழுத்தாகின.
இந்திய நிகழ்வுகள்
வேட்பாளர்களின் குற்றப்பின்னனி வெளியிட - உச்சநீதிமன்றம் தீர்ப்பு 
  •  குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்காக, அஸ்வினி உபாத்யாயா என்ற வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு பிப்ரவரி 13-அன்று தீர்ப்பு வழங்கியது, அதன் விவரம்:
  • வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்துக்குள் அல்லது வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு 2 வாரங்கள் முன்னதாக நாளேடு, பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தங்கள் வேட்பாளர்கள் குறித்த விவரங்களையும், அவர்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்த தகவல்களையும் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும். 72 மணி நேரத்துக்குள், நாளேடு, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட விவரங்கள் குறித்த பட்டியலை தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்ய வேண்டும், 
  • படிவம் எண் 26: 2018 அக்டோபர் 10-ந் தேதி படிவம் எண் 26-ஐ தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது. அதில், வேட்பாளர்கள் தங்கள் குற்றப்பின்னணி குறித்து குறிப்பிட வேண்டும் என தெரிவித்தது.

காவிரி-கோதாவரி இணைப்பு - வரைவுத் திட்ட அறிக்கை தயாரிப்பு
  • தேசிய நீா் மேம்பாட்டு நிறுவனத்தால் (NWDA), காவிரி-கோதாவரி நதிகளை இணைக்க காவிரியின் கல்லணைக்கும் ஆந்திர மாநிலம் ஜனம் பேட்டை ஈஞ்சம்பள்ளியிலுள்ள கோதாவரியையும் இணைக்கும் விரிவான வரைவுத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய நீா் வளம் மற்றும் சமூக நீதித் துறை அமைச்சா் ரத்தன் லால் கட்டாரியா தெரிவித்தாா்.
  • முதல் இணைப்பு கோதாவரியின் ஜனம் பேட்டையிலிருந்து கிருஷ்ணா- நாகாா்ஜுன சாகா் வரையிலும், பின்னா் இங்கிருந்து சோமசீலா - பெண்ணாறு வரையிலும் இரண்டாவது கட்டமாகவும், இறுதியாக சோம சீலாவிலிருந்து காவிரி- கல்லணை வரை மூன்றாவது கட்டமாகவும் இணைக்கப்படவுள்ளது.
  • NWDA: National Water Development Agency 
குஜராத் ஆயுா்வேத நிறுவனங்களுக்கு தேசிய அந்தஸ்து-மசோதா 
  • குஜராத் மாநிலத்தில் ஜாம்நகா் பகுதியில் ஆயுா்வேத பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டுவரும் ஆயுா்வேத பயிற்சி மற்றும் ஆராய்ச்சி தொகுப்புக்கு தேசிய அந்தஸ்து வழங்க வகைசெய்யும் மசோதாவை மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்தது.

2020 ஏப்ரல் 1 முதல் ‘மருந்துகளாக’ கருதப்படும் மருத்துவ சாதனங்கள் 
  • இந்தியாவில் விற்கப்படும் அனைத்து மருத்துவ சாதனங்கள் (Medical devices)  மருந்துகளாக drugs) கருதப்படும் என்றும் 2020 ஏப்ரல் 1 முதல், 1940 ஆம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதனச் சட்டத்தின் கீழ் இவை கட்டுப்படுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு/விண்வெளி 
பிம்ஸ்டெக் நாடுகளின் 2-வது பேரிடர் மேலாண்மை பயிற்சி 2020
  • ஏழு நாடுகள் பங்கேற்ற பிம்ஸ்டெக் அமைப்பு நாடுகளின்  2-வது பேரிடர் மேலாண்மை பயிற்சி 2020  (BIMSTEC DMEx-2020) சமீபத்தில் ஒடிசாவின் தலைநகரான புவனேஸ்வர் மற்றும் பூரி ஆகிய இரு நகரங்களில் பிப்ரவரி 11-13 தேதிகளில் தொடர் நிகழ்வாக நடைபெற்றது.
  • இந்திய தேசிய பேரிடர் மீட்புப்  படை (NDRF) ஏற்பாடு செய்த இந்த பயிற்சியை முதலமைச்சர் ஒடிசா முதல்வர்  நவீன் பட்நாயக் பிப்ரவரி 11 அன்று தொடங்கிவைத்தார்.
  • பிப்ரவரி 12-ஆம் தேதி ஒடிசாவின் பூரி மாவட்ட ராமச்சண்டி கடற்கரையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் (Field Training Exercise) களப்பயிற்சியை தொடங்கிவைத்தார்.
  • பூகம்பம் மற்றும் வெள்ளம் அல்லது புயலில் கடுமையான சேதத்தை சந்திக்கும் ஒரு கலாச்சார பாரம்பரிய தளம் (A cultural heritage site that suffers severe damage in the Earthquake  & Flooding or Storm) என்ற மையக்கருத்தில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.
  • BIMSTEC என்பது பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான  வங்காள விரிகுடா நாடுகளின் கூட்டமைப்பாகும்.
  • உறுப்பினர்கள்-7: (பங்களாதேஷ், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம் மற்றும் பூட்டான்)
  • செயலகம்- டாக்கா, பங்களாதேஷ்.
  • BIMSTEC: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation

ககன்யான் திட்டம்: 04 விண்வெளி வீரர்களுக்கு ரஷியாவில் பயிற்சி
  • மனிதர்கள் விண்ணுக்கு செல்லும் ‘ககன்யான்’ திட்டத்தில், இந்தியாவின் சார்பில் விண்வெளிக்கு செல்ல உள்ள இந்திய விமானப்படையை சேர்ந்த 04 வீரர்களுக்கு ரஷிய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் காகரின் ஆராய்ச்சி மற்றும் சோதனை விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் 12 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி பிப்ரவரி 10-அன்று தொடங்கியது.
இந்தியாவிற்கு 'ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பு' 
  • இந்தியாவுக்கு ரூ.13,000 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்த ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பில், 5 ரேடாா் அமைப்புகள், 118 ஏவுகணைகள், 3 ஏவுகணை வழிகாட்டி அமைப்புகள், 4 ஏவுகணை கட்டுப்பாட்டு அமைப்புகள், மேலும் ஒரு வகையிலான 134 ஏவுகணைகள், 32 துப்பாக்கிகள், 40 ஆயிரம் தோட்டாக்கள் உள்ளிட்டவை அடங்கும்.
நியமனங்கள் 
இங்கிலாந்து நிதி அமைச்சராக 'ரிஷி சுனக்' நியமனம்
  • இங்கிலாந்து புதிய நிதி அமைச்சராக ரிஷி சுனக் (வயது 39) நியமிக்கப்பட்டு உள்ளார்.  இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்தவர்.
  • ‘இன்போசிஸ்’ நாராயண மூர்த்தி மருமகன்: ரிஷி சுனக் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பன்னாட்டு ஐ.டி. நிறுவனமான இன்போஸ் இணை நிறுவனரான நாராயண மூர்த்தியின் மருமகன் ஆவார்.
டெல்லி முதல்வர் 'அரவிந்த் கெஜ்ரிவால்'
  •  டெல்லி ராமலீலா மைதானத்தில் அரவிந்த் கெஜ்ரிவால், பிப்ரவரி 16-ந் தேதி முதலமைச்சராக பதவி ஏற்கிறார். அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக தொடர்ந்து 3-வது தடவையாக முதல்வர் ஆகிறார்.
  • பிப்ரவரி  8-ந் தேதி நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றியது. பா.ஜனதா 8 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி, ஒரு இடத்தைக்கூட பிடிக்கவில்லை.
  • பேபி மப்ளர் மேன்: அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிக்கு, கெஜ்ரிவால் வேடமிட்ட பேபி மப்ளர் மேன் என்று அவ்யன் தோமர் என்ற ஒன்றரை வயது குழந்தை அழைக்கப்பட்டுள்ளது.
ஏா் இந்தியா நிறுவனத்தின் தலைவா் - ராஜீவ் பன்சால்
  • ஏா் இந்தியா நிறுவனத்தின் தலைவா் மற்றும் தலைமை நிா்வாக இயக்குநராக ராஜீவ் பன்சால் 2-ஆவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
நியூ ஸ்பேஸ் இந்தியா  (NSIL) தலைவராக ஜி. நாராயணன்
  • புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானி  ஜி. நாராயணன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட வணிக நிறுவனமான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகனம் (SSLV)  தயாரிக்கும்   விண்வெளி சந்தையை வணிக ரீதியாக ஆராய்வதற்காக நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) 2019-ஆம்  ஆண்டு இஸ்ரோவின் கீழ் பொதுத்துறை நிறுவனமாக அமைக்கப்பட்டது. 
  • NSIL: New Space India Ltd, SSLV: Small satellite launch vehicle.
பொருளாதார நிகழ்வுகள்
அமெரிக்க-இந்திய வர்த்தகம் - GSP சலுகைகள் -  சில தகவல்கள்  
  • அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளின் (USTR’s) அலுவலகம் சமீபத்தில் இந்தியாவை ஒரு வளர்ந்த பொருளாதாரம் என்று வகைப்படுத்தியுள்ளது, இதனால் அமெரிக்காவிலிருந்து GSP சலுகைகளுக்கு இந்தியா பெற தகுதியற்றதாகிறது.
  • GSP சலுகைகள்: GSP என்ற பொதுமைப்படுத்தப்பட்ட அமைப்பு விருப்பத்தேர்வுகள் திட்டம் வளரும் நாடுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவின் ஏற்றுமதியாளர்களுக்கு குறைந்த கட்டணத்தை வழங்குகிறது.
  • 2019 ஜூன் வரை அமெரிக்காவிற்ககான கட்டணமில்லா அணுகலை GSP-திட்டத்தின் கீழ் பெற்ற மிகப்பெரிய பயனாளிகள் நாடு இந்தியாவாகும்.
  • USTR’s: United States Trade Representative’s, GSP: Generalized System of Preferences.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள் 
இந்தியாவில் இயற்கைச் சீற்றம் - 2,038 பேர் உயிரிழப்பு 
  • 2019-ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த வானிலை  இயற்கைச் சீற்றங்களுக்கு 2,038 பேர் உயிரிழந்துள்ளனர், 2018 இல் 1,396 பேர் இறந்துள்ளனர். அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் "இந்தியாவின் சுற்றுச்சூழல் 2020" என்ற அறிகையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அறிவியல் தொழில்நுட்பம் 
முகநூல் நிறுவனத்தின் ‘வி திங்க் டிஜிட்டல்’ கல்வியறிவு திட்டம் 
  • ‘வி திங்க் டிஜிட்டல்’ (We Think Digital) என்பது முகநூல் (Facebook) நிறுவனத்தின் டிஜிட்டல் கல்வியறிவு திட்டமாகும். 
  • இணையத்தில் பாலின ஏற்றத்தாழ்வைக் கடக்கும் நோக்கில் இந்த திட்டம் 2019 இல் தொடங்கப்பட்டது. 
  • அண்மையில், பேஸ்புக் நிறுவனம் தேசிய மகளிர் ஆணையம் (NCW) மற்றும் சைபர் அமைதி அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து உத்தரபிரதேசத்தில் ‘வீ திங்க் டிஜிட்டல்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஏழு இந்திய மாநிலங்களில் கிட்டத்தட்ட 1,00,000 பெண்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
Google நிறுவனத்தின் ‘பெஹ்லே  சேஃப்டி’ இணைய பாதுகாப்பு பிரச்சாரம் 
  • கூகிள் இந்தியா நிறுவனம் சமீபத்தில் இணைய பாதுகாப்பு குறித்த புதிய பொது பிரச்சாரத்தை முதலில் பாதுகாப்பு என்ற பொருள்படும் 'பெஹ்லே  சேஃப்டி' (PehleSafety) என்ற பெயரில் அறிவித்தது.
  • பயனர்களுக்கு இணையத்தை அணுகும்போது ஆன்லைன் பாதுகாப்பு, பாதுகாப்பு சோதனை மற்றும் கடவுச்சொல் சரிபார்ப்பு போன்ற சக்திவாய்ந்த கருவிகளையும் இது அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்-அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை '200 கோடி'
  • சமூக ஊடக தளமான ‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2019-ம் ஆண்டின் இறுதியில் இது 200 கோடியை எட்டியுள்ளது. இந்த தகவல் அனுப்பும் செயலியை பேஸ்புக் நிறுவனம் 2014-ம் ஆண்டு வாங்கியது. இதன்மூலம் சமூக ஊடக தளங்களில் வாட்ஸ்-அப் 2-வது இடத்தை பிடித்துள்ளது.  
  • பேஸ்புக் 250 கோடி தீவிர பயன்பாட்டாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது. வாட்ஸ்-அப்பில் அனுப்பப்படும் தகவல்களை பாதுகாப்பதற்காக திறக்க முடியாத ‘டிஜிட்டல் லாக்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
தமிழ்நாட்டு நிகழ்வுகள்  
‘சியட்’ டயர் தொழிற்சாலை தொடங்கிவைப்பு 
  • காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கண்ணன்தாங்கல் கிராமத்தில் சுமார் 165 ஏக்கரில் ‘சியட்’ நிறுவனத்தின் புதிய டயர் தொழிற்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
அக்‍ஷய பாத்ர அறக்கட்டளையின் 'காலை உணவு திட்டம்'  
  • சென்னை மாநகரில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் அக்‍ஷய பாத்ர அறக்கட்டளை வழங்கவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், சென்னை மாநகராட்சியின் 35 பள்ளிகளைச் சேர்ந்த 12,000 பிள்ளைகளுக்கு சத்தான காலை உணவினை வழங்க அக்‍ஷய பாத்ர மைப்பு திட்டமிட்டுள்ளது.
லண்டன் அருங்காட்சியகத்தில் திருமங்கை ஆழ்வார் சிலை 
  • தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் உள்ள சவுந்தர்ராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான திருமங்கை ஆழ்வார் உலோகச்சிலை, லண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னையில் வாகனங்கள் ஏற்படுத்தும் அதிக அளவிலான 'காற்றுமாசு' 
  • இந்தியாவில் டெல்லிக்கு அடுத்தபடியாக, வாகனங்களால் காற்றுமாசு ஏற்படும் நகரங்களின் பட்டியலில் சென்னைதான் உள்ளது. சென்னையில் ஒவ்வொரு நாளும் வாகனங்களால் 3,200 டன்கள் கார்பன் டையாக்ஸைட் (CO2) உற்பத்தியாவதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது.
சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தரநிலை
  • சென்னை கோட்டூா்புரத்தில் இயங்கி வரும் சென்னை பொறியியல் கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு முக்கியத்துவ தரநிலை வழங்கப்பட உள்ளது. இதற்காக தனிச் சட்டம் இயற்றப்படும்.  
  • சென்னையில் 1993-ஆம் ஆண்டு சென்னை பொருளியல் கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டது. இதன்மூலம் அந்த கல்வி நிறுவனமே பட்டங்களையும், பட்டயங்களையும் வழங்கலாம்.
விளையாட்டு நிகழ்வுகள்  
தேசிய குளிர்கால விளையாட்டு போட்டிகள் 2020 
  • தேசிய குளிர்கால விளையாட்டு போட்டிகள் 2020 நடைபெறவிருக்கும் குல்மார்க் நகரம் ஜம்மு & காஷ்மீர் ஒன்றிய பிரதேசத்தில் அமைந்துள்ளது. 
  • மார்ச் 7 முதல் கெலோ இந்தியா விளையாட்டின் கீழ் ஐந்து நாள் தேசிய குளிர்கால விளையாட்டு போட்டிகள் இங்கு நடைபெறவுள்ளது. 
  •  குல்மார்க் இது மேற்கு இமயமலையில் உள்ள பிர் பஞ்சால் மலைத்தொடரில் அமைந்துள்ள பிரபலமான பனிச்சறுக்கு தளம் ஆகும், ஒன்றிய பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள ஒரு மலைவாசஸ்தலமாகும்.
ஆக்கி

ஆண்டின் சிறந்த ஆக்கி வீரராக 'மன்பிரீத் சிங்' தேர்வு
  • சர்வதேச ஆக்கி சம்மேளனம் (FIH) சார்பில் ஆண்டின் சிறந்த வீரர் விருதுக்கு (FIH Men's Player of the Year 2019) இந்திய ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் (Manpreet Singh) தேர்ந்தெடுக்கப்பட்டார். 
  • இந்த விருது 1999-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கவுரவமிக்க இந்த விருதை பெறும் முதல் இந்தியர் என்ற சிறப்பை மன்பிரீத்சிங் பெறுகிறார். 
  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணியை தகுதி பெற வைத்ததில் முக்கிய பங்காற்றிய 27 வயதான நடுகள வீரரான மன்பிரீத்சிங் இதுவரை 260 சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்கிறார். 2012 மற்றும் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கிலும் பங்கேற்றுள்ளார்.
 குத்துச்சண்டை

உலக குத்துச்சண்டை தரவரிசை: 'அமித் பன்ஹால்' முதலிடம்
  • சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் குத்துச்சண்டை பணிக்குழு உலக குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை பிப்ரவரி 13-அன்று வெளியிட்டது. 
  • ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பன்ஹால் 420 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். விஜேந்தர் சிங்குக்கு பிறகு (2009-ம் ஆண்டு) நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் இந்திய வீரர் அமித் பன்ஹால் ஆவார். 
  • அரியானா மாநிலத்தை சேர்ந்த 24 வயதான அமித் பன்ஹால் 2019-இல் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கமும், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கமும் வென்றவர்.
  • இந்திய வீராங்கனைகள் மேரிகோம் 51 கிலோ எடைப்பிரிவில் 5-வது இடத்தையும், லவ்லினா போர்கோஹைன் 69 கிலோ எடைப்பிரிவில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
கிரிக்கெட்

பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: 'ஆஸ்திரேலியா அணி' சாம்பியன் 
  • ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள்  பங்கேற்ற பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. 
  • இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை, 11 ரன்வித்தியாசத்தில் விழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஒரு நாள் கிரிக்கெட் தொடர் - நியூசிலாந்துக்கு முழுமையான வெற்றி 
  • நியூசிலாந்தில் நடைபெற்ற, இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தொடர் நாயகன் விருதை பெற்றார்.
  • இந்திய அணி முழுமையாக பறிகொடுப்பது கடந்த 31 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். 
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் 2020 (ஆஸ்திரேலியா)
  • பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 21-ந்தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. 3-வது நடுவர்-நோ-பால் கண்டறியும் முறை அமல் இந்த தொடரில், பந்து வீச்சாளர்கள் நோ-பால் வீசினால் அதை கண்டுபிடிக்கும் பொறுப்பு 3-வது நடுவருக்கு வழங்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அறிவித்தது.  3-வது நடுவரின் ஆலோசனை இல்லாமல் கள நடுவர்கள் நோ-பால் குறித்து ‘சிக்னல்’ கொடுக்கக்கூடாது.
  • உலக அளவிலான போட்டி ஒன்றில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
முக்கியநபர்கள் 
ஆா்.கே.பச்சௌரி - காலமானார் 
  • அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், ஆற்றல் மற்றும் வளங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ஆா்.கே.பச்சௌரி (வயது 79) பிப்ரவரி 13-அன்று டெல்லியில் காலமானாா். 2007-இல் பருவநிலை மாற்ற விவகாரத்தில் சா்வேதச அரசுகளுக்கான ஐ.நா. குழுவின் தலைவராக பதவி வகித்துவந்தபோது பச்சௌரிக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.
முக்கிய தினங்கள் 
பிப்ரவரி 11 - உலக யுனானி தினம் 
  • சிறந்த யுனானி மருத்துவரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஹக்கீம் அஜ்மல் கானின் (Hakim Ajmal Khan) பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 11 ஆம் தேதி உலக யுனானி தினமாக (World Unani Day) கொண்டாடப்படுகிறது.
  • ஹக்கீம் அஜ்மல் கான், யுனானி மருத்துவ விஞ்ஞான ஆராய்ச்சி மைய நிறுவனர் மற்றும் புதுடெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா கல்வி மைய நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்.
  • கிரேக்கத்தில் தோன்றிய யுனானி மருத்துவத் துறை அரேபியர்கள் மற்றும் பெர்சியர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.  
 பிப்ரவரி  14 - புல்வாமா தாக்குதல் தினம் 
  • 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி  14 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (CRPF)  பயணித்த வாகனத்தின் மீது வெடிபொருள் நிரப்பிய காரை மோதச் செய்து, ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். 
பிப்ரவரி  14 - காதலர் தினம்
  • காதலர் தினம் எனப்படும் வேலன்டைன் நாள் (Valentine's Day) புனித வேலன்டைன் நாள் (Saint Valentine's Day) பிப்ரவரி 14-அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • Download this article as PDF Format
Previous Post Next Post