TNPSC current Affairs January 5-6, 2020 - Download as PDF

Daily Current Affairs January 5-6, 2020

TNPSC Current Affairs January 2020 for forthcoming various TNPSC and Government exams 2020.

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 5-6, 2020
சர்வதேச நிகழ்வுகள்
குழந்தைகளுக்கான ‘கொடிய தசாப்தம்’ 
 • ஐ.நா. குழந்தைகள் நிதியம் யுனிசெப் (UNICEF) கடந்த பத்தாண்டுகளை (2010-2019) குழந்தைகளுக்கான ‘கொடிய தசாப்தம்’ (Deadly Decade) என்று குறிப்பிட்டுள்ளது.
 • 2019-ஆம் ஆண்டின் இறுதி அறிக்கையில், இதை தெரிவித்துள்ளது. 2010 முதல் குழந்தைகளுக்கு எதிராக 1,70,000 க்கும் மேற்பட்ட கடுமையான அத்துமீறல்கள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 
 • யுனிசெப், நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஐ.நா. வுக்கான குழந்தைகள் அமைப்பாகும்.
 • UNICEF: United Nations Children's Fund.
உலகின் மிகப்பெரிய பூ 'ரப்லேசியா அர்னால்டி' 
 • இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் 'ரப்லேசியா அர்னால்டி' (Rafflesia arnoldii) என்ற பெயரிலான 4 அடி அகலம் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய பூ மலர்ந்துள்ளது. 
 • உலகில் இதுவரை பூத்த மலர்களில் இதுவே மிகப்பெரியது என்று தாவரவியல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ரப்லேசியா அர்னால்டி பூக்கும் செடிகள் ஒட்டுண்ணி தாவர வகையை சேர்ந்தவை ஆகும். இஅந்த பூவில் இருந்து அழுகிய இறைச்சியின் துர்நாற்றம் வீசும். எனவே இந்த மலர் பிணமலர் என்றும் அழைக்கப்படுகிறது.
ஈரான் இராணுவத் தளபதி ஜெனரல் காசிம் சொலெய்மணி
 • ஈரானின் சக்திவாய்ந்த இராணுவத் தளபதி ஜெனரல் காசிம் சொலெய்மணி அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் அண்மையில் கொல்லப்பட்டார்.
 • சொலெய்மணி, இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் குட்ஸ் படையின் (IRGC) தளபதியாக இருந்தார்.
 • IRGC: Quds Force of Islamic Revolutionary Guard Corps
நன்கானா சாகிப் குருத்வாரா (பாகிஸ்தான்)
 • பாகிஸ்தானில் உள்ள சீக்கியா்களின் புனிதத் தலமான நன்கானா சாகிப் குருத்வாராவில் ஜனவரி 3-அன்று சிலா் நபா்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
 • சீக்கிய மதத்தை நிறுவியவரும், அதன் முதல் குருவுமான குருநானக் தேவ், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள நன்கானா சாகிப் பகுதியில் பிறந்தாா். அவரது நினைவாக அந்தப் பகுதியில் குருத்வாரா எழுப்பப்பட்டுள்ளது.
இந்திய நிகழ்வுகள் 
பார்வையற்றோருக்கான ரிசர்வ் வங்கி 'MANI' செயலி 
 • பார்வை சவால் அடைந்தவர்களுக்காக ரிசர்வ் வங்கி 'MANI' செயலி பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது
 • பார்வையற்றோர் நாணயத்தாள்களின் மதிப்பை அடையாளம் காண உதவும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் ‘மணி’ பயன்பாட்டை (‘MANI’ app) அறிமுகப்படுத்தியது.
 • இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்: சக்தி காந்த தாஸ்.
இந்திய அறிவியல் மாநாடு 2020 (பெங்களூரு)
 • 107-வது இந்திய அறிவியல் மாநாடு 2020 (107th Indian Science Congress), பெங்களூரு விவசாய பல்கலைக்கழகத்தில் ஜனவரி 3-7 தேதிகளில் நடைபெற்றது. 
 • இந்த மாநாடு “அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்: ஊரக வளர்ச்சி (Science and Technology: Rural Development) என்ற கருப்பொருளில் நடைபெற்றது.
 • பிரதமர் மோடி கலந்து கொண்டு, மாநாட்டை தொடங்கிவைத்தார். அவர் தெரிவித்த குறிப்புகள்:
 • அறிவியல் வளர்ச்சியில் இந்தியா உலக அளவில் 3-வது இடத்தில் உள்ளது.
 • ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை அறவே ஒழிக்க வேண்டும்.
 • 2025-ம் ஆண்டுக்குள் நாட்டின் எந்த மூலையிலும் காசநோய் இருக்கக்கூடாது.
 • 2025-ம் ஆண்டுக்குள் நாட்டின் எந்த மூலையிலும் காசநோய் இருக்கக்கூடாது.
 • 2022-ம் ஆண்டுக்குள் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் பொருட்டு உயிரி எரிபொருள், எத்தனால் உள்ளிட்டவற்றின் உற்பத்தியை பெருக்க வேண்டும்.
ரிலையன்ஸின் இணைய வர்த்தக நிறுவனம் - ஜியோமார்ட் 
 • ரிலையன்ஸ் நிறுவனம் தனது முதல் இணைய வர்த்தக மளிகை பொருட்கள் நிறுவனத்தை ஜியோமார்ட் (JioMart) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
 • ஜியோமார்ட் பல கோடி ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களை இந்தியா முழுவதும் உள்ள வீடுகளுக்கு நெருக்கமாக கொண்டு வருகிறது. இது இலவசமாக வீட்டு வாசலில் பொருட்களை வழங்குகிறது. 
விருதுகள்
கோல்டன் குளோப் விருதுகள் 2020 
 • 2019-ஆம் ஆண்டு வெளியான சிறந்த ஹாலிவுட் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், கலைஞர்கள் ஆகியோருக்கு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2020-ம் ஆண்டுக்கான 77-வது கோல்டன் குளோப் விருதுகள் (Golden Globe awards 2020) ஜனவரி 5-அன்று அன்று வழங்கப்பட்டன. முக்கிய விருதுகள் விவரம்:
 • சிறந்த திரைப்படம் - 1917
 • சிறந்த நடிகர் - ஜோவாகின் பீனிக்ஸ்/Joaquin Phoenix (ஜோக்கர்)
 • சிறந்த நடிகை - ரெனீ ஜெல்வெகர்/Renée Zellweger (ஜூடி கார்லண்ட்)
 • சிறந்த இயக்குனர் - சாம் மெண்டிஸ் (1917)
 • சிறந்த திரைப்படம் (இசை/நகைசுவை): Once Upon a Time in Hollywood
 • சிறந்த நாடகத் தொடர்: Succession.
முக்கிய நபர்கள் 
நாடகக்கலைஞர், சமூக ஆர்வலர் - ரத்னா ஓஜா 
 • மூத்த நாடகக் கலைஞரும் அசாம் மாநிலத்தின் சமூக ஆர்வலருமான ரத்னா ஓஜா (Ratna Ojha) குவஹாத்தி நகரில் காலமானார்.
சுதந்திர போராட்ட வீரா் - பீம்சந்திர ஜனா
 • மேற்கு வங்க மாநிலம், ஹௌரா மாவட்டத்தில் வயது மூப்பு காரணமாக நூற்றாண்டு கடந்த சுதந்திர போராட்ட வீரா் பீம்சந்திர ஜனா (Bhim Chandra Jana), ஜனவரி 3-அன்று காலமானர்.
 • சுதந்திர போராட்ட வீரா்களால் பீம் சந்திர ஜனா ‘நானு’ (Nanu) என்று அழைக்கப்பட்டார்.
Download this article as PDF Format
Previous Post Next Post