TNPSC Current Affairs January 28-29, 2020 - Download as PDF

Daily Current Affairs January 28-29, 2020

TNPSC Current Affairs January 2020 for forthcoming various TNPSC, TNEB/TANGEDCO, TRB,RRB. UPSC and all Government Exams 2020.

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 28-29, 2020
இந்திய நிகழ்வுகள்
மத்திய அரசு 'போடோலாந்து முத்தரப்பு அமைதி ஒப்பந்தம்' 
  • போடோலாந்து தனி மாநிலம் கோரும் விவகாரத்தில், அஸ்ஸாமில் 'போடோலாந்து' என்ற பெயரில் தனி மாநிலம் கேட்டு போராடி வந்த போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (NDFB), அனைத்து போடோ மாணவா்கள் சங்கம் (ABSU), போடோ மக்கள் அமைப்பு (UBPO) 
  • ஆகியவற்றுடன் மத்திய அரசு ஜனவரி 17-அன்று முத்தரப்பு அமைதி ஒப்பந்தம் (Tripartite Agreement) மேற்கொண்டது. 
  • உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில், NDFB, UBPO, ஆகிய அமைப்புகளின் தலைவர்களும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சத்யேந்திர கார்க், அசாம் மாநில அரசு தலைமை செயலாளர் குமார் சஞ்சய் கிருஷ்ணா ஆகியோர் கையெழுத்திட்டனர். 
  • NDFB: National Democratic Front of Bodoland, ABSU: The All Bodo Students’ Union, UBPO: United Bodo People's Organisation.
தேசிய தரவு மற்றும் பகுப்பாய்வு தளம் 'NDAP'
  • இந்தியாவின் நிதி ஆயோக் அமைப்பு (NITI Aayog) தேசிய தரவு மற்றும் பகுப்பாய்வு தளத்தை (NDAP) உருவாக்க உள்ளது. இந்த தரவுத்தளத்தில் பல்வேறு அரசாங்க வலைத்தளங்களின் சமீபத்திய தரவுகள் இடம்பெற்று இருக்கும். NDAP இன் முதல் பதிப்பு 2021-இல் வெளியிடப்பட உள்ளது.
  • NDAP: National Data and Analytics Platform
உதய் திட்டத்துக்கு மாற்றாக புதிய திட்டம்
  • உதய் திட்டம் (2015): மின்சார உற்பத்திக்கான செலவைக் குறைப்பதற்காகவும், மின் பகிா்மான நிறுவனங்களின் கடன் சுமையைக் குறைப்பதற்காகவும் மத்திய அரசு 2015-ஆம் ஆண்டில் உதய் (UDAY) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 
  • தற்போது உதய் திட்டம், அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் அளிக்கும் தீனதயாள் உபாத்யாய கிராம ஜோதி திட்டம் (DDUGJY), ஒருங்கிணைந்த மின்சக்தி வளா்ச்சித் திட்டம் (IDPS) ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு ஒரே திட்டமாக மத்திய அரசு செயல்படுத்தப்படவுள்ளது. 
  • UDAY: Ujwal DISCOM Assurance Yojana, Integrated Power Development Scheme, DDUGJY: Deendayal Upadhyaya Gram Jyoti Yojana (DDUGJY)
ஆந்திர மாநில சட்ட மேலவை கலைக்கும் - தீா்மானம்
  • ஆந்திர மாநில சட்ட மேலவையை கலைப்பது தொடா்பான தீா்மானம், அரசமைப்புச் சட்டத்தின் 169 (1) ஆவது பிரிவின் படி, மாநில சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது
மகாராஷ்டிராவின் வேளாண் வணிக & கிராமிய மாற்ற திட்டம் 
  • அண்மையில் 210 மில்லியன் டாலர் மகாராஷ்டிரா மாநிலத்தின் வேளாண் வணிக மற்றும் கிராமிய மாற்ற திட்டத்திற்காக (Agri-business and Rural Transformation Project) உலக வங்கியுடன் இந்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
WEF லைட்ஹவுஸ் நெட்வொர்க்கில் இணைந்த 'டாடா ஸ்டீல் கலிங்கநகர்'
  • உலக பொருளாதார மன்றத்தின் லைட்ஹவுஸ் நெட்வொர்க் (WEF’s Lighthouse Network) அமைப்பில் சேர்க்கப்பட்டதற்காக டாடா ஸ்டீல் கலிங்கநகர் (Tata Steel Kalinganagar) எஃகு ஆலைக்கு சமீபத்தில் நடந்த WEF வருடாந்திர கூட்டத்தில் விருது வழங்கப்பட்டது.
  • 2019 ஜூலையில், உலக பொருளாதார மன்றத்தின் ‘கலங்கரை விளக்கம் வலையமைப்பில்’ சேர்க்கப்பட்ட முதல் மற்றும் ஒரே இந்திய உற்பத்தி ஆலையாக டாடா ஸ்டீல் கலிங்கநகர் இணைக்கப்பட்டது.
அசுகஞ்ச்-அகவுரா சாலை மேம்பாடு: பங்களாதேஷ்-இந்தியா ஒப்பந்தம் 
  • அசுகஞ்ச்-அகவுரா (Ashuganj-Akhaura) என்ற சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்த பங்களாதேஷ் நாட்டோடு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
  • ஆஷுகஞ்ச் நதி துறைமுகத்திற்கும் (Ashuganj ) பங்களாதேஷின் அக்கராவுக்கும் இடையிலான 50.58 கி.மீ சாலையை 4 வழிச் சாலையாக மேம்படுத்த இந்தியா சமீபத்தில் பங்களாதேஷுடன் ஒப்பந்தம் செய்தது. இந்தியாவை சேர்ந்த 'ஆஃப்கான்ஸ் உள்கட்டமைப்பு' (Afcons) நிறுவனம் இந்த சாலையை மேம்படுத்துகிறது.
விருதுகள்
மிஷெல் ஒபாமாவுக்கு 'கிராமி' விருது 
  • அமெரிக்காவின் முன்னாள் அதிபா் பராக் ஒபாமாவின் மனைவி மிஷெலுக்கு 'கிராமி' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மிஷெலின் சுயசரிதையான 'பிகமிங்' (Becoming) என்ற நூலின் ஒலிவடிவத்துக்கு 'சிறந்த ஒலிவடிவ ஆல்பம்' பிரிவில் கிராமி விருது அறிவிக்கப்பட்டது.
சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புராஸ்கர் 2020 
  • 2020-ஆண்டிற்கான சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புராஸ்கர் விருது, குமார் முன்னன் சிங் (Kumar Munnan Singh) அவர்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையை (NDRF) நிறுவியதற்காக அறிவிக்கப்பட்டது.
மாநாடுகள் 
உலக ஹோலோகாஸ்ட் மன்றம் 2020 (ஜெருசலேம்) 
  • ஹோலோகாஸ்டை நினைவுகூருவதற்கும் யூத-விரோதத்தை எதிர்ப்பதற்கும் உலக ஹோலோகாஸ்ட் மன்றம் (World Holocaust Forum) சமீபத்தில் ஜெருசலேம் நகரத்தில் ஜனவரி 23-அன்று கூட்டப்பட்டது. 
  • இந்த மன்றம் ஆஷ்விட்ஸ் மரண முகாமின் (Auschwitz death camp) விடுதலையின் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கூட்டப்பட்டது.
கங்கா-வோல்கா நாகரிகங்களின் உரையாடல் 2020 (புதுடெல்லி)
  • இந்தியாவிற்கும் ரஷ்யா நாட்டிற்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த முதலாவது கங்கா-வோல்கா நாகரிகங்களின் உரையாடல் 2020 (Ganga-Volga Dialogue of Civilizations 2020) ஜனவரி 22-அன்று “Connectivity” என்ற கருப்பொருளில் புதுடெல்லியில் நடைபெற்றது.
தேசிய சுற்றுலா மாநாடு 2020
  • 2020-ஆம் ஆண்டின் தேசிய சுற்றுலா மாநாடு (National Tourism Conference of the year 2020) சமீபத்தில் ஒடிஷாவின் கோனார்க் நகரத்தில் ஜனவரி 23-24 தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டது. 
STEM சர்வதேச பெண்கள் உச்சி மாநாடு-2020 (புதுடெல்லி)
  • STEM என்ற பெண்கள் குறித்த சர்வதேச உச்சி மாநாடு புதுடெல்லியில் ஜனவரி 23-24 தேதிகளில் நடைபெற்றது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள பயோடெக்னாலஜி துறை ஏற்பாட்டில், 'Visualizing the Future: New Skylines' என்ற கருப்பொருளில் இம்மாநாடு நடந்தது.
  • STEM: Science, Technology, Engineering and Mathematics.
பொருளாதார நிகழ்வுகள் 
உலகளாவிய டிஜிட்டல் நாணய நிர்வாக கூட்டமைப்பு 
  • டிஜிட்டல் நாணயங்களை நிர்வகிப்பதற்கான, உலகளாவிய டிஜிட்டல் நாணய நிர்வாக கூட்டமைப்பு (Global Consortium for Digital Currency Governance) என்ற அமைப்பு சமீபத்தில் உலக பொருளாதார மன்றத்தால் (World Economic Forum) அறிவிக்கப்பட்டது.
இண்டஸ்இண்ட் வங்கியின் 'Pioneer Banking' தளம் 
  • இந்திய தனியார் துறை வங்கியான இண்டஸ்இண்ட் வங்கி சமீபத்தில் தனது 'Pioneer Banking' என்ற செல்வ மேலாண்மை தளத்தை அறிமுகப்படுத்தியது. 
வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டு வரம்பு-30%
  • இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய வழிமுறைகளுக்குப் பிறகு, அரசு மற்றும் கார்ப்பரேட் பத்திரங்களில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களுக்கான (FPI) தற்போதைய முதலீட்டு வரம்பு 30%-மாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • FPI: Foreign portfolio investment
சுற்றுச்சுழல் நிகழ்வுகள் 
இந்தியாவில் 6 ஆண்டுகளில் '750 புலிகள் இறப்பு'
  • இந்தியாவில் புலிகளைக் காக்கும் வகையில், 1972-இல் புலிகள் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. புலிகள் வசிக்கும் பகுதி புலிகள் காப்பகங்களாக மாற்றப்பட்டு, இந்தியாவில் தற்போது 50 புலிகள் காப்பகங்கள் உள்ளன. அண்மையில் எடுக்கப்பட்ட சா்வதேச புலிகள் கணக்கெடுப்பில் உலக அளவில் 3,890 புலிகள் உள்ளன. அதில், 2,226 புலிகள் அதாவது 60 சதவீதத்துக்கும் மேலான புலிகள் இந்தியாவில் இருக்கின்றன.
  • இந்தியாவில் அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 526 புலிகளும், கா்நாடகத்தில் 524 புலிகளும், குறைந்தபட்சமாக கோவாவில் 3 புலிகளும் உள்ளன.
  • தமிழ்நாட்டில் 2018-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 264 புலிகள் இருப்பது தெரியவந்தது. 
  • 750 புலிகள் இறப்பு: 2012 முதல் 2018 வரையிலான 6 ஆண்டுகளில் புலிகளின் நகம், பல், தோல் ஆகியவற்றுக்காக வேட்டையாடப்படுவது போன்ற நிகழ்வுகளினால் 750 புலிகள் இறந்துள்ளன.
விளையாட்டு நிகழ்வுகள்  
செஸ்

டாடா ஸ்டீல் செஸ் 2020: ஃபாபியானோ கரெளனா சாம்பியன் 
  • நெதா்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் அமெரிக்க வீரா் ஃபாபியானோ கரெளனா சாம்பியனானாா். நாா்வே வீரரும் உலக சாம்பியனுமான மாக்னஸ் காா்ல்சென் 2-ஆவது இடம்பிடித்தாா்.
முக்கிய நபர்கள் 
நெதர்லாந்து பிரதமர் 'மார்க் ருட்டே' 
  • சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட நெதர்லாந்து நாட்டின் பிரதமர் மார்க் ருட்டே (Mark Rutte),
  • அண்மையில் 'ஹோலோகாஸ்ட்' (Holocaust) என்ற படுகொலையில் தனது நாட்டின் பங்கிற்கும், யூதர்களைத் துன்புறுத்துப்பட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காததற்கும் வருந்துவதாக தெரிவித்தார். இதுபோன்ற உத்தியோகபூர்வ மன்னிப்பு கோரிய முதல் டச்சு பிரதமர் மார்க் ருட்டே ஆவார்.
Download this article as PDF Format
Previous Post Next Post