TNPSC current Affairs January 18-19, 2020 - Download as PDF

Daily Current Affairs January 18-19, 2020

TNPSC Current Affairs January 2020 for forthcoming various TNPSC and Government exams 2020.

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 18-19, 2020
இந்திய நிகழ்வுகள்
IRCTC -யின் 2-வது தேஜஸ் ரெயில் 'ஆமதாபாத்-மும்பை' இடையே தொடக்கம்
 • இந்தியன் ரெயில்வேயின் துணை நிறுவனமான ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) இயக்கும் 2-வது தேஜஸ் ரெயில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்-மும்பை இடையே ஜனவரி 17-அன்று தொடங்கி வைக்கப்பட்டது. 
 • IRCTC -யின் முதலாவது அதிவிரைவு தேஜஸ் ரெயில் டெல்லி-லக்னோ இடையே கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு
 • மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) தயாரிக்கும் பணிகளை 2020 ஏப்ரல் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
 • NPR: National Population Register.
17 சுற்றுலா தலங்கள் ரூ.5 ஆயிரம் கோடியில் மேம்பாடு 
 • இந்தியா முழுவதும் உள்ள 17 முக்கிய நினைவிடங்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவற்றை ரூ.5 ஆயிரம் கோடியில் மேம்படுத்தப்படும் என்று மத்திய சுற்றுலா அமைச்சர் பிரகலாத்சிங் (Prahlad Singh Patel) கூறினார். தமிழகத்தில் உள்ள மாமல்லபுரம், கர்நாடகத்தில் ஹம்பி, தாஜ்மஹால், கஜூராஹோ கோவில்கள், அஜந்தா, எல்லோரா உள்ளிட்டவை இதில் அடங்கும். 
ஃபாஸ்டேக் நிலை அறிய கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம் 
 • இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ) இணைந்து, பயனர்களின் ஃபாஸ்டேக் சமநிலையை சரிபார்க்க சமீபத்தில் ‘தவறவிட்ட அழைப்பு எச்சரிக்கை வசதி’க்கான (Missed Call Alert facility) ‘8884333331’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
அசாம் பயணிகள் படகுத் துறை நவீனமயமாக்கல்: உலக வங்கி உதவி 
 • அசாமின் பயணிகள் படகுத் துறையை நவீனமயமாக்க (Assam’s Passenger Ferry Sector) உதவும் வகையில், இந்திய அரசு, அசாம் அரசு மற்றும் உலக வங்கி (World Bank) ஆகியவை புதுடில்லியில் 88 மில்லியன் டாலருக்கான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
பாதுகாப்பு/விண்வெளி 
இந்திய இராணுவத்தின் 'வான்வழி பயிற்சி விங்கட் ரைடர்-2020'
 • "விங்கட் ரைடர்" (Winged Raider) என்று அழைக்கப்படும் மிகப்பெரிய வான்வழி பயிற்சி இந்திய இராணுவத்தால் வடகிழக்கு பகுதியில் ஜனவரி 6 முதல் 10 வரை நடத்தப்பட்டது.
 • இந்த பயிற்சியில் 500-க்கும் மேற்பட்ட சிறப்புப் படை துருப்புகள், மற்றும் C-130 ஹெர்குலஸ் மற்றும் C-17 குளோப்மாஸ்டர் டிரான்ஸ்போர்ட்டர் வகை விமானங்கள் பங்கேற்றன.
ISRO-வின் GSAT30 செயற்கைக்கோள் 
 • 2020-ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), GSAT-30 என்ற தனது முதலாவது செயற்கைக்கோளை ஏவியுள்ளது.
 • 3,357 கிலோ எடை கொண்ட GSAT-30 செயற்கைக்கோள், தென்அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானாவில் உள்ள கொரு ஏவுதளத்தில் இருந்து ஜனவரி 17-அன்று அதிகாலை 2.35 மணியளவில் விண்ணில் ஏரியான்-5 ராக்கெட் (Ariane-5 VA-251) மூலம் ஏவப்பட்டு, புவிசுற்றுவட்டப் பாதையில் (GTO), வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 
 • ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்4ஏ (INSAT-4A) செயற்கைக்கோளுக்கு பதிலாக, ஜிசாட்30 விண்ணில் ஏவப்பட்டுள்ளது. 
 • இதன், 'கியூ பேண்டு' டிரான்ஸ்பாண்டர் இந்திய நிலப்பரப்பு மற்றும் தீவுகளின் பாதுகாப்பையும், 'சி பேண்டு' டிரான்ஸ்பாண்டர் (C and Ku bands), வளைகுடா நாடுகள், ஏராளமான ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய பகுதிகளுக்கு விரிவாக்கப்பட்ட பாதுகாப்பு சேவைகளுக்கு துணைபுரியும். 
 • GTO: Geosynchronous Transfer Orbit.
S-400 ரக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் 
 • 2025-க்குள் ஒப்படைப்பு: இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, S-400 ரக வான் பாதுகாப்பு ஏவுகணைகளை தயாரிப்பதற்கான பணி தொடங்கி விட்டது. 2025-ஆம் ஆண்டுக்குள் 5 S-400 ஏவுகணைகளும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று ரஷ்யா ஜனவரி 17 அன்று தெரிவித்துள்ளது.
 • 400 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைக் கூட தாக்கும் ஆற்றல் கொண்ட S-400 ஏவுகணைகள் மூலம் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 36 இலக்குகளைத் தாக்க இயலும்.
விருதுகள் 
29-வது சரஸ்வதி சம்மன் விருது - வாசுதேவ் மோகி
 • புகழ்பெற்ற சிந்தி எழுத்தாளரும் கவிஞருமான வாசுதேவ் மோகி (Vasdev Mohi) மதிப்புமிக்க 29-வது சரஸ்வதி சம்மன் விருதுக்கு (29th Saraswati Samman) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 • அவர் தனது சிறுகதைத் தொகுப்பான- காசோலை புத்தகத்திற்காக (Chequebook) இந்த மதிப்புமிக்க இலக்கிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • சரஸ்வதி சம்மன் விருது இலக்கியத் துறையில் கே.கே. பிர்லா அறக்கட்டளை வழங்கும் புகழ்பெற்ற விருது ஆகும்.
ICC சிறந்த வீரா் விருதுகள் 2019
 • சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரா் விருதுகள் (ICC Awards 2019) வழங்கப்படுகின்றன. 2019-ஆம் ஆண்டின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை:
  1. ஆண்டின் சிறந்த வீரருக்கான சா் கேரிபீல்ட் சோபா்ஸ் விருது- பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
  2. சிறந்த ஒருநாள் வீரா் விருது - ரோஹித் சா்மா (இந்தியா)
  3. சிறந்த டெஸ்ட் வீரா் விருது - பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா)
  4. சிறந்த டெஸ்ட் வீரா் விருது - தீபக் சாஹா் (இந்தியா)
  5. வளரும் T20 வீரர் விருது - மாா்னஸ் லேபுச்சேன் (ஆஸ்திரேலியா)
  6. ICC சிறந்த நடுவா் விருது - ரிச்சிா்ட் இல்லிங்வொா்த் (இங்கிலாந்து)
  7. சிறந்த இணை உறுப்பினா் வீரா் விருது - கெயில் கோட்ஸர் (ஸ்காட்லாந்து)
  8. ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது - விராட் கோலி (ஓவல் மைதானத்தில் ஸ்டீவ் ஸ்மித்தை ரசிகர்கள் கிண்டல் செய்ததை தடுத்து நிறுத்தியது). 
  9. ஒரு நாள் அணி கேப்டன் - விராட் கோலி (இந்தியா)
  10. டெஸ்ட் அணி கேப்டன் - விராட் கோலி (இந்தியா)
  11. ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருது - எல்லிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா)
  12. பெண்கள் ஒருநாள் வீராங்கனை விருது - எல்லிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா)
  13. பெண்கள் T20 வீராங்கனை விருது - அலிஸா ஹீலி (ஆஸ்திரேலியா)
  14. வளர்ந்து வரும் வீராங்கனை விருது - சனிதா சுத்திருங் (தாய்லாந்து)
  15. பெண்கள் T20 சிறந்த கேப்டன் - மெக் லானிங் (ஆஸ்திரேலியா)
  16. பெண்கள் ஒருநாள் சிறந்த கேப்டன் - மெக் லானிங் (ஆஸ்திரேலியா).
மாநாடுகள்
இரஷியா-இந்தியா-சீனா முத்தரப்பு பேச்சுவாா்த்தை 2020
 • 2020 மார்ச் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ரஷியாவில், ரஷியா-இந்தியா-சீனா ஆகிய நாடுகளின் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
பொருளாதார நிகழ்வுகள்
இந்திய பொருளாதார வளர்ச்சி: ஐ.நா. கணிப்பு 
 • ஐ.நா.,வின், 'உலகபொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் 2020' (WESP) எனும் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் விவரம்: இந்தியாவின், நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சியை, 7.6 சதவீதம் என்று முன்பு கணித்திருந்ததிலிருந்து குறைத்து, 5.7 சதவீதமாக இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டுக்கான வளர்ச்சி, முன்னர் கணிக்கப்பட்டிருந்த, 7.4 சதவீதத்திலிருந்து, 6.6 சதவீதமாக குறைத்து கணிக்கப்பட்டுள்ளது. 
 • WESP: World Economic Situation and Prospects Report 2020
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
2030-க்குள் கார்பன் உமிழ்வைக் குறைக்க 'மைக்ரோசாப்ட்' திட்டம் 
 • மைக்ரோசாப்ட் (Microsoft) தொழில்நுட்ப நிறுவனம், 2030-ஆம் ஆண்டுக்குள் அதன் விநியோகச் சங்கிலி முழுவதும் பாதிக்கும் மேற்பட்ட அளவில் கார்பன் உமிழ்வைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அறிவித்துள்ளது.
 • மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாகி சத்யா நாதெல்லா காலநிலை மாற்றத்தை தீர்க்க ஒரு புதிய லட்சியத்தை மைக்ரோசாப்ட்மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்  
டாப்சிலிப் வனப்பகுதியில் 'யானைகள் பொங்கல் விழா' 
 • ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்சிலிப் வனச்சரகத்தில் கோழிக்கமுத்தி என்ற இடத்தில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு 29 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி யானைகள் பொங்கல் விழா நடத்தப்பட்டது.
விளையாட்டு நிகழ்வுகள் 
கிரிக்கெட்

உலகக் கோப்பை கிரிக்கெட் (U-19) 2020
 • 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2020 (ICC Under-19 Cricket World Cup) தென்னாப்பிரிக்காவில் ஜனவரி 17 முதல் பிப்ரவரி 9 வரை நடைபெறவுள்ளது. இந்தியா உள்ளிட்ட மொத்தம் 16 அணிகள் இந்த உலகக் கோப்பையில் ஆடுகின்றன.
 • இந்திய அணி பிரியம் கார்க் தலைமையில் பங்கேற்கிறது.
 • இந்திய அணி மொத்தம் 4 முறை கோப்பையை வென்றுள்ளது.
கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் 'பாபு நட்கர்னி'
 • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான மஹாராஷ்ட்ராவை சேர்ந்த பாபு நட்கர்னி (வயது 86) ஜனவரி 17-அன்று மும்பையில் மரணம் அடைந்தார். 
ஆக்கி

புரோ லீக் ஆக்கி 2020
 • உலகின் தலைச்சிறந்த ஆக்கி அணிகள் பங்கேற்கும் ஆண்களுக்கான 2-வது புரோ லீக் ஆக்கி போட்டி (FIH Hockey Pro League 2020) ஜனவரி 18-அன்று தொடங்கி ஜூன் 28 வரை பல்வேறு நாடுகளில் நடக்கிறது.
 • ஆஸ்திரேலியா, பெல்ஜியம், இந்தியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, நியூசிலாந்து ஆகிய 9 அணிகள் கலந்து கொள்கின்றன.
 • மன்பிரீத் சிங் தலைமையில் பங்கேற்கும் இந்திய அணி உலக தரவரிசையில் 5-வது இடம் வகிக்கிறது.
Previous Post Next Post