TNPSC current Affairs January 1, 2020 - Download as PDF

Daily Current Affairs January 1, 2020

TNPSC Current Affairs January 2020 for forthcoming various TNPSC and Government exams 2020.

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 1, 2020
 சர்வதேச நிகழ்வுகள் 
இந்தியா, பாகிஸ்தான் அணுசக்தி நிலையங்களின் பட்டியல் - பகிர்வு
  • இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கை தொடர்பாக, அணுசக்தி நிலையங்களின் பட்டியல்களின் பகிர்வு ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் நடைபெறுவது வழக்கம்.
  • ஜனவரி 1-அன்று, தலைநகர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் இந்திய அதிகாரிகள் இந்தப் பட்டியலை ஒப்படைத்தனர்.
  • இஸ்லாமாபாத்தில் இந்திய தூதரக அதிகாரியிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் அவர்களது நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்கள் பற்றிய விவரங்களை ஒப்படைத்தனர்.
2026-இல் உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாகும் 'இந்தியா'
  • இங்கிலாந்தை தளமாகக் கொண்ட பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் (CEBR) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியா 2026 ஆம் ஆண்டில் ஜெர்மனியை முந்திக்கொண்டு உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும். 
  • 2034 க்குள் இந்தியா ஜப்பானை முந்திக்கொண்டு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய நிகழ்வுகள் 
தூய்மையான நகரங்களின் பட்டியல் 2019 - இந்தூா் முதலிடம் 
  • நாட்டில் தூய்மையான நகரங்களின் பட்டியலில் (Swachh Survekshan League 2020) தொடா்ந்து 4-ஆவது முறையாக மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூா் நகரத்தை மத்திய அரசு தோ்வு செய்துள்ளது.
  • முதல் காலாண்டில் அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மத்தியப் பிரதேசத் தலைநகா் போபால் இரண்டாவது இடத்தையும், இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பா்) குஜராத் மாநிலம், ராஜ்கோட் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
  • இரண்டாவது காலாண்டில், குஜராத் மாநிலம், வதோதரா 4-ஆவது இடத்தையும் அடுத்தடுத்த இடங்களில் போபால், ஆமதாபாத், நாசிக், மும்பை, அலாகாபாத், லக்னெள ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.
  • இந்தப் பட்டியலில் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா தூய்மைப் பணியில் மிகவும் மோசமாக இருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இதேபோல், முதல் காலாண்டில் குஜராத்தைச் சோ்ந்த சூரத் நகரம் மூன்றாவது இடத்தையும், இரண்டாவது காலாண்டில் நவி மும்பை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
  • தூய்மையான கண்டோன்மென்ட் வாரியங்கள் பட்டியலில், இரண்டாவது காலாண்டில் தில்லி கண்டோன்மென்ட் முதலிடத்திலும், அடுத்தடுத்த இடங்களில் ஜான்சி, ஜலந்தா் கண்டோன்மென்டுகளும் இடம்பெற்றுள்ளன.
இராஜஸ்தானில் 'வாகனம் இல்லாத நாள்'

  • 2020-ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில், “வாகனம் இல்லாத நாள்” என்ற நிகழ்வை ராஜஸ்தான் மாநிலம் கடைப்பிடிக்கப் போகிறது. 
  • இந்த நாளில், சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், வாகன மாசுபாட்டைக் குறைப்பதற்கும், ராஜஸ்தான் போக்குவரத்துத் துறையின் ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு பாதசாரிகளாக, சைக்கிள் அல்லது பொது போக்குவரத்து வழியாக வர வேண்டும்.
பிஹாரில் மாநில விழாவான 'அருண் ஜேட்லியின் பிறந்த நாள்' 

  • மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சா் அருண் ஜேட்லியின் பிறந்த நாளான டிசம்பர் 28-ஆம் தேதியை ஆண்டுதோறும் மாநில விழாவாக கொண்டாட நிதீஷ்குமாா் தலைமையிலான பிகாா் அரசு முடிவு செய்துள்ளது.
மலாலா வாழ்க்கை திரைப்படம் ‘குல் மகாய்’ 

  • மலாலா வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு, ‘குல் மகாய்’ என்ற இந்திப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சஞ்சய் சிங்க்லா தயாரிக்க, அம்ஜத்கான் இயக்கி உள்ளார். ரீம் ஷேக், மலாலாவாக நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி 31-ந் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
  • பாகிஸ்தானில் சுவாட் பள்ளத்தாக்கை சேர்ந்த இளம்பெண் மலாலா யூசப்சாய். சுவாட் பள்ளத்தாக்கை தலீபான்கள் கைப்பற்றியபோது, அவர்களது அடக்குமுறைக்கு எதிராக மலாலா குரல் கொடுத்தார்.
  • பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக போராடினார். அதனால் தலீபான்களின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து உயிர் பிழைத்தார். அவரது துணிச்சலுக்காக, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அரசமைப்புச் சட்டத்தின் 7-ஆவது அட்டவணை
  • குடியுரிமை திருத்தச் சட்டமானது, அரசமைப்புச் சட்டத்தின் 7-ஆவது அட்டவணையின்கீழ் இயற்றப்பட்டுள்ளது. எனவே, இச்சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று கூற மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது என ன்று மத்திய சட்டத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் தெரிவித்துள்ளார்.
CAA சட்டத்தை ரத்து செய்ய கேரள சட்டப் பேரவையில் தீர்மானம் 
  • குடியுரிமை திருத்தச் சட்டத்தை (Citizenship Amendment Act) ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, கேரள சட்டப் பேரவையில் டெம்பர் 31-அன்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. 
  • நாட்டிலேயே முதலாவதாக கேரள சட்டப் பேரவையில் இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாதுகாப்பு/விண்வெளி
டோர்னியர்-228 விமானம் - விமானப்படையில் இணைப்பு
  • நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய இலகுரக பயன்பாட்டு டோர்னியர் ரக போர் விமானங்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தின் கீழ் தயாரித்து வருகிறது.
  • அந்நிறுவனத்திடமிருந்து முதலாவது “டோர்னியர்-228” போர் விமானம் 2019 நவம்பர் மாதம் 19-ஆம் தேதி விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
  • விமானப்படைப் பிரிவில் இணைப்பு: டெல்லியிலுள்ள பாலம் விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த போர் விமானம், 41-ஆவது விமானப்படைப் பிரிவில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விமானப்படைத் தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா பங்கேற்றார்.
புதிய 'ராணுவ விவகாரங்கள் துறை' உருவாக்கம்
  • பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் புதிதாக ராணுவ விவகாரங்கள் துறை என்ற துறை உருவாக்கப்பட்டுள்ளது.இந்த துறை, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தலைமையில் செயல்படும்.
  • ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய 3 படைகள் சார்ந்த பணிகளை ராணுவ விவகாரங்கள் துறை கவனிக்கும். முப்படைகளுக் கான ஆயுதங்கள், தளவாட கொள்முதல்களையும் சட்டவிதிகள், நடைமுறைகளின்படி கவனிக்கும்.
  • இனி பாதுகாப்பு அமைச்சகம், 5 துறைகளை கொண்டதாக இருக்கும். அவை, பாதுகாப்பு துறை, ராணுவ விவகாரங்கள் துறை, ராணுவ உற்பத்தி துறை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுதுறை, ஓய்வுபெற்ற படைவீரர்கள் நலன் ஆகும்.
ரெயில்வே பாதுகாப்பு படையின் பெயர் 'IRPF' என மாற்றம்
  • ரெயில்வே துறை தனது பாதுகாப்பு அமைப்பான ரெயில்வே பாதுகாப்பு படையின் (Railway Protection Force) பெயரை ‘இந்திய ரெயில்வே பாதுகாப்பு படை சேவை‘ (Indian Railway Protection Force) என்று மாற்றி உள்ளது.
  • இந்த படைக்கு ‘அமைப்புரீதியான குழு ஏ அந்தஸ்தை‘ ரெயில்வே அமைச்சகம் அளித்துள்ளது. 
சந்திரயான்-3 திட்டம் 
  • சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 600 கோடி ரூபாயில் சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
  • ராக்கெட் ஏவுதளம்: தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கிவிட்டது. 
  • ககன்யான் திட்டம்: 4 வீரர்கள் தேர்வு: மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
  • மேற்கண்ட தகவல்களை பெங்களூருவில் ISRO தலைவர் சிவன் ஜனவரி-1 அன்று தெரிவித்தார்.
மாநாடுகள்/விழா 
இந்திய அறிவியல் மாநாடு 2020, பெங்களூரு
  • இந்திய அறிவியல் மாநாட்டு அமைப்பு நடத்தவுள்ள 107-வது இந்திய அறிவியல் மாநாடு 2020 ( Indian Science congress 2020) 2020 ஜனவரி 3-7 ஆம் தேதி வரை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள விவசாய அறிவியல் பல்கலைக்கழகம், ஜிகேவிகே வளாகத்தில் நடைபெறவுள்ளது.
சென்னை IIT தொழில்நுட்ப திருவிழா - சாஸ்த்ரா - 2020
  • மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக சென்னை கிண்டியில் உள்ள IIT வளாகத்தில் 'சாஸ்த்ரா - 2020' (Shaastra 2020) என்ற பெயரில் தொழில்நுட்ப திருவிழா ஜனவரி 3 முதல் 6 வரை நடைபெற உள்ளது. 
ஒடிசாவின் தேசிய நாடகவிழா 'தனு ஜாத்ரா'
  • மேற்கு ஒடிசாவில் உள்ள பார்கர் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், புகழ்பெற்ற 11-நாட்கள் தன ஜாத்ரா (Dhanu Jatra) என்ற வருடாந்திர நாடக விழா நடத்தப்படுகிறது
  • இது கிருஷ்ணர் மற்றும் அவரது மாமா மன்னர் கன்சாவின் புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டது. 2014 நவம்பரில் இந்த விழாவிற்கு தேசிய திருவிழா நிலை வழங்கப்பட்டது.
பொருளாதார நிகழ்வுகள் 
ரூ.105 லட்சம் கோடியில் புதிய திட்டங்கள்
  • ரூ.105 லட்சம் கோடியில் நிறைவேற்ற உள்ள உள்கட்டமைப்பு திட்டங்கள் பற்றிய அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
பனி சிறுத்தை கணக்கெடுப்பு 2020
  • உத்தரகண்ட் மாநிலம் தனது முதலாவது பனி சிறுத்தை கணக்கெடுப்பை (snow leopards survey) நடத்த முடிவு செய்துள்ளது. உத்தரகண்டில் 80-க்கும் மேற்பட்ட பனிச்சிறுத்தை இருப்பதாக நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
அறிவியல் தொழில்நுட்பம் 
மத்திய உபகரணங்கள் அடையாளப்பதிவு இணையமுகப்பு 
  • மத்திய தொலைத் தொடர்புத் துறை, சமீபத்தில் மத்திய உபகரணங்கள் அடையாளப்பதிவு இணையமுகப்பை (Central Equipment Identify Register portal) அறிமுகப்படுத்தியது. 
  • மொபைல் போன்களைத் தடுப்பதற்கும் கண்டுபிடிப்பதற்கும் இந்திய அரசு, டிசம்பர் 2019-இல், மத்திய கருவி அடையாள பதிவு போர்ட்டலைத் தொடங்கியது. இது தடுப்புப்பட்டியலில் உள்ள மொபைல் போன்களின் சர்வதேச மொபைல் கருவி அடையாள எண்ணின் தரவுத்தளத்தைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் 5G சோதனை முயற்சி - ஹுவாவே நிறுவனத்திற்கு அனுமதி 
  • சீனாவைச் சோ்ந்த மிகப்பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமான ஹுவாவே நிறுவனத்திற்கு, சோதனை அடிப்படையில் 5G அலைக்கற்றையை (India Huawei for 5G trials)வழங்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
தூய்மை நகரங்கள் பட்டியல் 2019: தமிழக நகரங்கள் சிறப்பிடம் 

  • தூய்மைக்கான நகரங்கள் குறித்த ‘தூய்மை சா்வே லீக் 2020’ ஆகியவற்றின் முடிவுகளை மண்டல வாரியாக மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி டெல்லியில் டிசம்பர் 31-அன்று வெளியிட்டாா். 
  • முதல் காலாண்டில் தூய்மை சா்வேயில் 25 ஆயிரம் மக்கள் தொகை பிரிவில் தமிழகத்தின் மேலத்திருப்பந்துருத்தி, கங்குவாா்பட்டி, டி.கல்லுப்பட்டி ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றது. 
  • இரண்டாவது காலாண்டு தூய்மை சா்வேயில் டி.கல்லுப்பட்டி, மேலத்திருப்பந்துருத்தி, நரசிங்கபுரம் ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றன.
  • 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை மக்கள்தொகை கொண்ட நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் முதலாவது காலாண்டுக்கான தூய்மை சா்வேயில் தமிழகத்தின் சின்னமனூா் முதலிடமும், இரண்டாவது காலாண்டுக்கான சா்வேயில் தமிழகத்தின் திருவத்திபுரம் மூன்றாமிடமும் பெற்றுள்ளது.
  • 50 ஆயிரம் முதல் 1 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகா்ப்புற பகுதிகளில் முதலாவது காலாண்டு தூய்மை சா்வேயில் தமிழகத்தின் நாமக்கல் முதலிடம், திருவள்ளூா் மூன்றாமிடம் , இரண்டாவது காலாண்டு சா்வேயில் நாமக்கல் மூன்றாமிடம் பெற்றுள்ளது.
  • கண்டோன்மென்ட் வாரியம் பகுதிகளில் முதலாவது காலாண்டு தூய்மை சா்வேயில் தமிழகத்தின் பரங்கிமலை கன்டோன்மென்ட் முதலிடம் பெற்றுள்ளது. 

முக்கிய நபர்கள் 

சமூக ஆா்வலா் 'அலஜங்கி விஸ்வநாத் சுவாமி' காலமானார் 
  • ஒடிசா சமூக ஆா்வலரும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யுமான அலஜங்கி விஸ்வநாத் சுவாமி (வயது 91) வயதுமுதிா்வு காரணமாக டிசம்பர் 31-அன்று காலமானாா். சமூக சீா்திருத்தவாதி வினோபா பாவே தொடங்கிய பூமிதான இயக்கத்தில் விஸ்வநாத் சுவாமி முக்கிய பங்காற்றியுள்ளாா். 

விளையாட்டு நிகழ்வுகள் 
2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டி: இந்தியா பங்கேற்பு 

  • 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா பங்கேற்கும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. 
  • 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2022-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நடக்கிறது. இந்த போட்டியில் துப்பாக்கி சுடுதல் பந்தயத்தை நீக்கியதால் கடும் அதிருப்திக்குள்ளான இந்திய ஒலிம்பிக் சங்கம், 2022-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை புறக்கணிக்கப்போவதாக அறிவித்தது.
Download this article as PDF Format
Previous Post Next Post