TNPSC Current Affairs January 26-27, 2020 - Download as PDF

Daily Current Affairs January 26-27, 2020

TNPSC Current Affairs January 2020 for forthcoming various TNPSC, TNEB/TANGEDCO, TRB,RRB. UPSC and all Government Exams 2020.

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 26-27, 2020
 இந்திய நிகழ்வுகள்
மகாராஷ்ட்ராவில் மலிவு விலை உணவகம் ‘சிவ்போஜன்’
  • தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அம்மா உணவகம் போல் மராட்டிய மாநிலத்திலும் மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ‘சிவ்போஜன்’ (Shiv Bhojan scheme) என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இங்கு ரூ.10-க்கு வழங்கப்படும் மதிய உணவில் அரிசி சாதம், 2 சப்பாத்தி, பருப்பு குழம்பு, பொறியல் ஆகியவை இடம் பெறுகிறது.
சாதனைப் பெண்களின் பெயரில் பல்கலைக்கழகங்களில் 'இருக்கைகள்'
  • தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு (24.1.2020), பெண்களை உயா் கல்வியில் ஊக்குவிக்கும் நோக்கில் பல்கலைக்கழகங்களில் சாதனை படைத்த பெண்களின் பெயரில் இருக்கைகள் அமைக்க மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை முடிவு செய்துள்ளது.
  • பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மூலம் ஆண்டுக்கு ஓா் இருக்கைக்கு ரூ.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.5 கோடியில் பத்து துறைகளில் இந்த இருக்கைகள் அமைக்கப்படவுள்ளன. 
  • மத்திய அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த இருக்கைகள் விவரம்: 
  1. அஹில்யா பாய் ஹோல்கா்- (மகாராஷ்ரத்தைச் சோ்ந்த ஓல்கா் வம்ச பேரரசி-நிா்வாகத்துறை). 
  2. மகாதேவி வா்மா, (உத்தரப் பிரதேசம்-இலக்கியம்). 
  3. ராணி கெய்டின்லியு (வடகிழக்கு-சுதந்திரப்போராட்ட வீரா்). 
  4. டாக்டா் ஆனந்திபாய் கோபால்ராவ் ஜோஷி (மகாராஷ்டிரம்-மருத்துவம் மற்றும் சுகாதாரம்). 
  5. எம்.எஸ். சுப்புலட்சுமி (தமிழ்நாடு- இசைத் துறை). 
  6. கமலா சொஹோனே (உயிரி வேதியல் துறை). 
  7. அமிா்தா தேவி (ராஜஸ்தான் - வனம் மற்றும் வன விலங்குப் பாதுகாப்பு)
  8. லீலாவதி (கணிதவியல்). 
  9. லால் டெட் (காஷ்மீா்- கவிதை). 
  10. 10.ஹென்ஸ மேத்தா (கல்விச் சீா்திருத்தம்).
ஆக்ஸ்போர்டு அகராதியில் இடம் பிடித்த ‘ஆதார்’
  • புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு அகராதியை இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தொகுத்து வழங்குகிறது. இந்த அகராதியின் 10-வது பதிப்பு ஜனவரி 24-அன்று வெளியாகி உள்ளது. இந்த பதிப்பில் 26 புதிய இந்திய ஆங்கில வார்த்தைகள் இடம் பிடித்துள்ளன.
  • இந்திய மக்களின் தனித்துவ அடையாளமான ‘ஆதார்’ இடம் பிடித்துள்ளது. சால், டப்பா, ஹர்தால், ஷாடி உள்ளிட்ட வார்த்தைகளும் ஆக்ஸ்போர்டு அகராதியின் புதிய பதிப்பில் இடம் பெற்றுள்ளன.
  • 26 புதிய வார்த்தைகளில் 22 வார்த்தைகள் அச்சு பதிப்பில் இடம்பெற்றுள்ளன. எஞ்சிய 4 வார்த்தைகள் டிஜிட்டல் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • புதிய வார்த்தைகளில் பஸ் ஸ்டேண்ட், டீம்டு யுனிவர்சிட்டி, எப்.ஐ.ஆர்., நான்-வெஜ், வீடியோ கிராப் உள்ளிட்ட வார்த்தைகளும் அடங்கும்.
  • இந்த அகராதியில் மொத்தம் 384 இந்திய ஆங்கில வார்த்தைகள் உள்ளன. இந்த பதிப்பில் சாத்பாட், பேக் நியூஸ், மைக்ரோ பிளாஸ்டிக் போன்று மொத்தம் 1,000 புதிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
தேஜஸ் ரயிலில் ‘மேஜிக் பாக்ஸ்’ பொழுது போக்கு வசதி அறிமுகம்
  • சென்னையிலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் தேஜஸ் ரயிலில் பயணிகள் தங்களது செல்லிடப்பேசி, மடிக்கணினிகளில் திரைப்படங்கள் உள்ளிட்ட பொழுது போக்கு நிகழ்வுகளை கண்டுகளிக்கும் வகையில், வைஃபை தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ‘மேஜிக் பாக்ஸ்’ (Magic Box) எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. 
71-வது குடியரசு தின விழா 2020
  • 71-வது குடியரசு தின விழா 2020 ஜனவரி 26 அன்று கொண்டாடப்பட்டது. நமது நாட்டில் அரசியல் சாசன சட்டம் 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி நடைமுறைக்கு வந்த நாள், ஆண்டுதோறும் குடியரசு தின விழாவாக கொண்டாடப்படுகிறது.
  • ஜெயிர் போல்சனரோ: இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சனரோ கலந்து கொண்டார். அந்த நாட்டின் அதிபர் ஒருவர் இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொண்டது இது மூன்றாம் முறை ஆகும்.
  • டெல்லியில் உள்ள ராஜபாதையில், 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்க, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முப்படைகளின் அணிவகுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.
  • முப்படைகளின் அணிவகுப்பு: இந்த அணிவகுப்பில் முதல் முறையாக சினூக், அபாச்சி ஹெலிகாப்டர்கள் இடம் பெற்றன.
  • ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் ‘ஏ-சாட்’ என்று அழைக்கப்படுகிற செயற்கை கோள் தடுப்பு ஆயுத அமைப்பும், இந்த அணிவகுப்பில் முதல்முறையாக இடம் பெற்றது.
  • கேப்டன் மிரிகாங் பரத்வாஜ் தலைமையில் தனுஷ் பீரங்கி வண்டி, இந்த அணிவகுப்பில் முதல்முறையாக இடம் பெற்றது. 
  • ராணுவ அதிகாரி கேப்டன் தன்யா செர்கில், ‘கார்ப்ஸ் ஆப் சிக்னல்கள்’ அணிக்கு தலைமை வகித்தார். 
  • அலங்கார ஊர்திகள்: இந்த அணிவகுப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகளும், மத்திய அரசின் 6 அமைச்சகங்கள் சார்பிலான அலங்கார ஊர்திகளும் இடம் பெற்றன.
  • தமிழ்நாட்டின் சார்பில் காவல் தெய்வமான 17 அடி உயரம் கொண்ட அய்யனார் சிலையுடன் கூடிய அலங்கார ஊர்தி பங்கேற்றது. 
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக முதல் முறையாக அணிவகுப்பில் கலந்து கொண்டது.
  • மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் அனைத்து மகளிர் பிரிவினர், சீமா நாயக் தலைமையி குடியரசு தின விழாவில் முதல் முறையாக அங்கம் வகித்தனர். 
  • சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடந்த குடியரசு தின விழாவில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியகொடி ஏற்றினார்.
கேரளாவில் 20 கி.மீ. நீள மனித சங்கிலி போராட்டம்
  • கேரள மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கேரளாவில் 620 கி.மீ. நீள மனித சங்கிலி போராட்டம் ஜனவரி 26-அன்று நடந்தது.
‘83’ திரைப்படம் 
  • 1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை கைப்பற்றியது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் டைரக்டர் கபீர்கான் இயக்கத்தில் ‘83’ என்ற பெயரில் திரைப்படமாக படமாக ஆக்கப்பட்டுள்ளது. 
இந்தியாவின் முதல் 'வாக்-த்ரூ' பறவைகள் கூண்டு (மும்பை)
  • 100-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கொண்ட இந்தியாவின் முதல் 'வாக்-த்ரூ' பறவைகள் கூண்டு (India’s first and biggest walk-through aviary), ஜனவரி 26 அன்று மும்பை நகரத்தில் திறக்கப்பட்டது. மகாராஷ்டிராவின் தலைநகரான வீர்மதா ஜிஜாபாய் போசாலே உதயன் மற்றும் மிருகக்காட்சிசாலையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மிகப்பெரிய மற்றும் உயரமான பறவைகள் கூண்டை திறந்து வைத்தார்.
விருதுகள்
பத்ம விருதுகள் 2020
  • கலை, இலக்கியம், தொழில், விஞ்ஞானம், சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மத்திய அரசு ஆண்டு தோறும் தேர்ந்தெடுத்து பத்ம விருதுகள் வழங்கபடுகின்றன. 
  • குடியரசு தினத்தையொட்டி, 2020-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு ஜனவரி 25-அன்று அறிவித்தது.
  • 141 பத்ம விருதுகள்: 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 16 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்தம் 141 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
  • தமிழகத்துக்கு 2 பத்ம பூஷண் விருது, 5 பத்மஸ்ரீ விருது என மொத்தம் 7 பத்ம விருதுகள் கிடைத்து இருக்கின்றன.
  • 12 பேருக்கு மரணத்துக்கு பின்னர் இந்த விருதுகள் கிடைத்து இருக்கின்றன.
  • விருது பெற்றவர்களில் 34 பேர் பெண்கள். 18 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
பத்ம விபூஷண் விருது (7 பேர்) 
  1. ஜார்ஜ் பெர்னாண்டஸ் (மரணத்திற்குப் பின்), பொது விவகாரங்கள், பீகார்
  2. அருண் ஜெட்லி (மரணத்திற்குப் பின்), பொது விவகாரம், டெல்லி
  3. அனிருத் ஜுக்நாத், பொது விவகாரங்கள், மொரீஷியஸ்
  4. எம். சி. மேரி கோம், விளையாட்டு, மணிப்பூர்
  5. சன்னுலால் மிஸ்ரா, கலை, உத்தரபிரதேசம்
  6. சுஷ்மா ஸ்வராஜ் (மரணத்திற்குப் பின்), பொது விவகாரங்கள், டெல்லி
  7. விஸ்வேஷதீர்த்த சுவாமிஜி ஸ்ரீ பெஜாவாரா அதோகாஜா மாதா உடுப்பி (மரணத்திற்குப் பின்), ஆன்மீகம், கர்நாடகா
பத்ம பூஷண் விருது (16 பேர்)
  1. எம்.மும்தாஜாலி, ஆன்மீகம், கேரளா
  2. சையத் முஅஸெம் அலி (மரணத்திற்குப் பின்), பொது விவகாரங்கள், பங்களாதேஷ்
  3. முசாபர் உசேன் பேக், பொது விவகாரங்கள், ஜம்மு-காஷ்மீர்
  4. அஜோய் சக்ரவர்த்தி, கலை, மேற்கு வங்கம்
  5. மனோஜ் தாஸ், இலக்கியம் மற்றும் கல்வி, புதுச்சேரி
  6. பால்கிருஷ்ணா தோஷி, கட்டிடக்கலை, குஜராத்
  7. கிருஷ்ணமல் ஜெகநாதன், சமூக பணி, தமிழ்நாடு
  8. எஸ். சி. ஜமீர், பொது விவகாரங்கள், நாகாலாந்து
  9. அனில் பிரகாஷ் ஜோஷி, சமூக பணி, உத்தரகண்ட்
  10. டாக்டர் செரிங் லாண்டோல், மருத்துவம், லடாக்
  11. ஆனந்த் மஹிந்திரா, வர்த்தகம் மற்றும் தொழில், மகாராஷ்டிரா
  12. நீலகாந்த ராமகிருஷ்ணா, மாதவ மேனன் (மரணத்திற்குப் பின்), பொது விவகாரம், கேரளா
  13. மனோகர் கோபால்கிருஷ்ணா, பிரபு பாரிக்கர் (மரணத்திற்குப் பின்), பொது விவகாரங்கள், கோவா
  14. பேராசிரியர் ஜெகதீஷ் ஷெத், இலக்கியம் மற்றும் கல்வி, அமெரிக்கா
  15. பி.வி.சிந்து, விளையாட்டு, தெலுங்கானா
  16. வேணு சீனிவாசன், வர்த்தக மற்றும் தொழில், தமிழ்நாடு
பத்மஸ்ரீ விருது (118 பேர்) 
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன், விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்த பிரதீப் தலப்பில், கலைத்துறையைச் சேர்ந்த லலிதா மற்றும் சரோஜா சிதம்பரம், கலீ ஷபி மெகபூப் மற்றும் ஷேக் மெகபூப் சுபானி, மனோகர் தேவதாஸ், புதுச்சேரியைச் சேர்ந்த வி.கே.முனுசாமி கிருஷ்ண பக்தர், நடிகை கங்கணா ரணாவத், சினிமா தயாரிப்பாளர் ஏக்தா கபூர், டைரக்டர் கரண் ஜோகர் உள்ளிட்ட 118 பேர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.

விளையாட்டுத்துறைக்கான பத்ம விருதுகள் 2020
  • விளையாட்டுத்துறையைச் சேர்ந்த 8 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் விவரம்: 
  • பத்ம விபூஷண் - மேரிகோம், குத்துச்சண்டை, மணிப்பூர் 
  • பத்ம பூஷண் விருது - பி.வி.சிந்து, பேட்மிண்டன்
  • பத்ம ஸ்ரீ விருது - ஜாகீர்கான், முன்னாள் கிரிக்கெட் வீரர் 
  • ராணி ராம்பால், இந்திய பெண்கள் ஆக்கி அணி கேப்டன் 
  • பெம்பெம் தேவி - பெண்கள் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன்
  • எம்.பி.கணேஷ் - முன்னாள் ஆக்கி வீரர் , 
  • ஜிது ராய் - துப்பாக்கி சுடுதல் வீரர் 
  • தருண்தீப் ராய் - வில்வித்தை வீரர் 
ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் 2019
  • இந்தியாவில் ஒரு நபரின் உயிரைக் காப்பாற்றும் சிறப்பான செயலுக்காக ஒரு நபருக்கு வழங்கப்படும் தேசிய விருது ஜீவன் ரக்ஷா பதக்க தொடர் விருதுகள் (Jeevan Raksha Padak Series of Awards) ஆகும். 2019-ஆம் ஆண்டுக்கான விருதுகள் மொத்தம் 54 நபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள்- 2019 
  • ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. இந்த விருதில் சர்வோட்டம் ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் 7 பேருக்கும், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் எட்டு பேருக்கும், ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் 39 பேருக்கும் வழங்கப்படுகின்றன.
  • ஒரு நபரின் உயிரைக் காப்பாற்றும் சிறப்பான செயலுக்காக ஒரு நபருக்கு வழங்கப்படும் இந்திய தேசிய விருதின் பெயர் என்ன? ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் (Jeevan Raksha Padak Series of Awards) 
தமிழ்நாடு அரசின் குடியரசு தின விழா விருதுகள் 2020
  • குடியரசு தின விழா விருது பெற்றவர்கள் விவரம்:
  • வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் 
    • (அரசு ஊழியர் பிரிவு),  ஓட்டுனர் ராஜா,  நாகப்பட்டினம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை
    • (பொதுமக்கள் பிரிவு) மறைந்த ஏகேஷ், பிரின்ஸ்டன் பிராங்களின், வினித், சார்லிபன், ஈஸ்டர் பிரேம்குமார் 
    • தனலட்சுமி, காட்டுப்பாக்கம்,  திருவள்ளூர் மாவட்டம்
    • தஞ்சாவூர் மாவட்டம் முத்தம்மாள்புரம் தம்பதி பழனியப்பன் - இந்திராகாந்தி
  • சமூக நல்லிணக்க கோட்டை அமீர் விருது
    • திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டத்தைச் சேர்ந்த மு.ஷாஜ் முகமது 
  • காந்தியடிகள் காவலர் பதக்கம்
    • திருப்பூர் மாநகரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.சந்திரமோகன், திருச்சி மண்டலம் மத்திய புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் தே.ராஜசேகரன், கடலூர் மாவட்டம் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் த.பூங்கோதை, விழுப்புரம் மண்டலம் மத்திய புலனாய்வுப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் என்.அழகிரி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேற்கு தலைமைக் காவலர் அ.பார்த்திபநாதன் 
  • சிறந்த காவல் நிலையத்துக்கான முதல்-அமைச்சர் விருது முதல் 3 இடங்கள்)
    1. கோயம்புத்தூர் பந்தையசாலை காவல் நிலையம்
    2. திண்டுக்கல் நகர வடக்கு காவல் நிலையம்
    3. தர்மபுரி நகர காவல் நிலையம்
  • விவசாயிக்கான வேளாண்மைத் துறை சிறப்பு விருது - ஈரோடு மாவட்டம் பசுவப்பட்டி க.யுவக்குமார் 
பாதுகாப்பு/விண்வெளி
உலகின் மிகப்பெரிய விமானம் ‘போயிங் 777 எக்ஸ்’ 
  • அமெரிக்காவை சேர்ந்த ‘போயிங்’ விமான நிறுவனம், ‘போயிங் 777 எக்ஸ்’ என்ற உலகிலேயே மிகப்பெரிய இரட்டை என்ஜின் விமானத்தை தயாரித்துள்ளது. ஜனவரி 25-அன்று சியாட்டில் நகரில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
விரைவு ரோந்து கப்பல் 'அன்னி பெசன்ட்'
  • இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்தியத்தில், பாதுகாப்பு பணியை மேற்கொள்ள அன்னி பெசன்ட் என்ற நவீன விரைவு ரோந்து கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, இந்திய கடலோர காவல் படையின் 3-வது விரைவு ரோந்து கப்பல் ஆகும். 48.9 மீட்டர் நீளம் உள்ள இந்த கப்பல், 308 டன் எடை கொண்டது.
பொருளாதார நிகழ்வுகள் 
ஏர் இந்தியா நிறுவனத்தின் 100% பங்குகள் விற்பனை
  • இது தொடர்பான அறிவிப்பில், லாபமற்ற பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடுகளை திரும்ப பெறும் திட்டத்தின்கீழ் ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் 100 சதவீத பங்குகளையும், ஏ.ஐ.எஸ்.ஏ.டி.எஸ். கூட்டு நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளையும் விற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய நபர்கள்  
சிற்பி ஷெர் சிங் குக்கால்
  • சமீபத்தில் காலமான ஷெர் சிங் குக்கால், எந்த துறையில் பிரபலமான ஆளுமை? 86 வயதான மூத்த கலைஞரும் சிற்பியுமான ஷெர் சிங் குக்கல் (Sher Singh Kukkal) 2020 ஜனவரி 25 அன்று புதுதில்லியில் காலமானார். 
கூடைப்பந்து வீரர் - கோபே பிரையன்ட்
  • அமெரிக்க முன்னாள் கூடைப்பந்து வீரர் கோபே பிரையன்ட் (வயது 41) லாஸ் ஏஞ்சல்சில் ஹெலிகாப்டர் விபத்தில் மகள் ஜியானாவுடன் மரணமடைந்தார். தேசிய கூடைப்பந்து சங்க (NBA) போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணிக்காக 20 ஆண்டுகளாக விளையாடியுள்ளார்.
முக்கிய தினங்கள்
சர்வதேச சுங்க தினம் (International Customs Day) - ஜனவரி 26, 2020
ஆண்டுதோறும் ஜனவரி 27 அன்று சர்வதேச சுங்க தினம் (International Customs Day) கடைபிடிக்கப்படுகிறது. சுங்க அதிகாரிகள் தங்கள் வேலைகளில் எதிர்கொள்ளும் நிலைமைகள் மற்றும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை இந்த நாள் ஏற்படுத்துகிறது.
சர்வதேச “ஹோலோகாஸ்ட்” படுகொலை" நினைவு தினம் - ஜனவரி 27. 2020
  • ஆண்டுதோறும் ஜனவரி 27 அன்று "சர்வதேச ஹோலோகாஸ்ட் படுகொலை நினைவு தினம்" (International Day of Commemoration in Memory of the Victims of the Holocaust) கடைபிடிக்கப்படுகிறது. 
  • ஹோலோகாஸ்ட் படுகொலை, என்பது இரண்டாம் உலகப்போரின் போது அடோல்ப் ஹிட்லரின் நாஜி ஜெர்மனியின் அடோல்ப் ஹிட்லரின் நாஜி படைகளால் நிகழ்த்தப்பட்ட ஒரு இனப்படுகொலை ஆகும், இதில் மூன்றில் இரண்டு பகுதி ஐரோப்பிய யூதர்கள் கொல்லப்பட்டனர். 
  • 2020-ஆம் ஆண்டுக்கான கருப்பொருள்: "75 years after Auschwitz - Holocaust Education and Remembrance for Global Justice".
Previous Post Next Post