TNPSC Current Affairs December 29-31, 2019 - View and Download PDF

Daily Current Affairs December 29, 30 and 31st 2019

TNPSC Current Affairs December 29-31, 2019 for forthcoming various TNPSC and Government exams 2020.

நடப்பு நிகழ்வுகள் டிசம்பர்  29-31, 2019
 சர்வதேச நிகழ்வுகள் 
ரஷ்யா உருவாக்கியு சைபர் குற்றங்களுக்கான 'சர்வதேச ஒப்பந்தம்'
 • சைபர் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்காக (Treaty to Combat Cyber-Crime) சர்வதேச ஒப்பந்தத்திற்காக அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (UNGA) அங்கீகரித்த வரைவு தீர்மானத்தை ரஷ்யா உருவாக்கியுள்ளது. இது உலகின் அனைத்து பிராந்தியங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர் குழுவை நிறுவ அனுமதிக்கிறது.
இந்திய சூரிய ஆற்றல் & நீர்ப்பாசன திட்டம்: AIIB நிதிஉதவி 
 • சீனாவின் பெய்ஜிங் நகரை தலைமையகமாக கொண்ட, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank), இந்தியாவில் சூரிய ஆற்றல் மற்றும் நீர்ப்பாசன திட்டங்களுக்காக மொத்தம் 210 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுக்கு அது ஒப்புதல் அளித்துள்ளது.
ஐ.நா. நிதிநிலை அறிக்கை 2020
 • 2020-ஆம் ஆண்டுக்கான ஐ.நா. பட்ஜெட் (UN budget 2020) டிசம்பர் 27-அன்று நிறைவேற்றப்பட்டது. 2019-ஐ விட சற்று கூடுதலாக 307 கோடி டாலருக்கான (சுமாா் ரூ.21,928 கோடி) அந்த பட்ஜெட்டில் மியான்மா், சிரியா ஆகிய நாடுகளின் போா்க் குற்றங்கள் குறித்த விசாரணைக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
அயர்லாந்து பிரதமர் 'லியோ வராத்கர்' கோவா வருகை
 • அயர்லாந்து நாட்டு பிரதமர் லியோ வராத்கர் (Leo Varadkar), தன் குடும்பத்துடன் தனிப்பட்ட பயணமாக இந்தியா வந்து இருக்கிறார். இந்த புத்தாண்டை கோவாவில் கொண்டாட முடிவு செய்துள்ளார்.
 • லியோ வராத்கருடைய தந்தை அசோக் வராத்கர் ஒரு டாக்டர், இந்தியாவை சேர்ந்தவர். மராட்டியத்தின் கடலோர மாவட்டமான சிந்துதுர்கில் உள்ள வராத் என்ற கிராமமே அவரது சொந்த ஊர் ஆகும். 1960-ம் ஆண்டு அவர் இங்கிலாந்து சென்று குடியேறிவிட்டார்.
திருடப்பட்ட படைப்புகளுக்கான கலை தரவுத்தளம் (WoA)
 • சமீபத்தில் செய்திகளில் வெளிவந்த திருடப்பட்ட படைப்புகளுக்கான கலை தரவுத்தளம் (WoA) இன்டர்போல் (INTERPOL) அமைப்பால் பராமரிக்கப்படுபடுகிறது.
 • மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI), கலை திருட்டுகளுக்கு இந்தியா ஒரு பிரதான இலக்காக மாறுவது குறித்து சமீபத்தில் ASI போன்ற ஏஜென்சிகளை எச்சரித்தது.
 • WoA: Stolen Works of Art Database.
இந்திய நிகழ்வுகள் 
நிதி ஆயோக் SDG இந்தியா தரக்குறியீடு 2019 
 • ஐ.நா.வின் ‘நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளை’ (SDG) அடைவதற்கு மாநிலங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடா்பாக ‘SDG இந்தியா தரக்குறியீடு 2019’ என்ற பெயரிலான நிதி ஆயோக் அமைப்பின் ஆய்வு (Niti Aayog's SDG Index 2019) வெளியிட்டபட்டது. இந்த பட்டியலில் 70 புள்ளிகளுடன் கேரளா முதலிடம் பெற்றுள்ளது.
 • முதல் 3 இடங்கள் 
  1. கேரளா 
  2. இமாச்சல பிரதேசம் 
  3. தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா 
  • பிகாா், ஜாா்க்கண்ட், அருணாசல் ஆகியவை கடைசி இடங்களில் உள்ளன. 
  • யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் 70 புள்ளிகளுடன் சண்டீகா் முதலிடத்தைத் தக்கவைத்தது. 
  • கடந்த ஓராண்டில் உத்தரப்பிரதேசம், ஒடிஸா, சிக்கிம் ஆகியவை அதிகபட்ச வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன. 
  • வறுமை ஒழிப்பில் தமிழகம், திரிபுரா, ஆந்திரம், மேகாலயா, மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் சிறப்பான வளா்ச்சியை எட்டியுள்ளன.
 • ஐ.நா. நீடித்த வளா்ச்சி இலக்கு (2015): உலக நாடுகளில் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் வளா்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், நீடித்த வளா்ச்சிக்கான 17 இலக்குகளை ஐ.நா. பொதுச் சபை 2015-ஆம் ஆண்டு உருவாக்கியது. 
 • இந்த இலக்குகளை 2030-ஆம் ஆண்டுக்குள் அடைய 193 நாடுகளும் ஒப்புக்கொண்டன.
 • SDG: Sustainable Development Goals. 
மனதின் குரல் - டிசம்பர் 29, 2019
 • பிரதமர் மோடி அவர்கள் டிசம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை அன்று, ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின் விவரம்: 
 • சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த கன்னியாகுமரியில் உள்ள கற்பாறைக்கு இளைஞர்கள் செல்ல வேண்டும். 
 • 2022-ம் ஆண்டு நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அதுவரையாவது, இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு உள்நாட்டு தயாரிப்புகளை மட்டுமே வாங்குவோம் என்று நாம் உறுதி எடுத்துக் கொள்வோம்.
 • ஹிமயத் திட்டம்: திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு தொடர்பான காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்தியங்களுக்கு ‘ஹிமயத்’ என்ற பெயரிலான திட்டம் தொடங்கப்பட்டது. பர்வீன் பாத்திமா என்ற பெண், தமிழ்நாட்டில் திருப்பூரில் உள்ள ஒரு ஜவுளி ஆலையில் மேற்பார்வையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் ஓராண்டுக்கு முன்புவரை, கார்கிலில் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்.
ஸ்ரீநகரில் உறைந்த 'தால் ஏரி' 
 • டெல்லியில் இந்த ஆண்டு மிகவும் குறைந்த அளவாக டிசம்பர் 28-அன்று 2.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. காஷ்மீர் மாநிலத்தில் கடுமையான குளிர் நிலவுகிறது. ஸ்ரீநகரில் வெப்பநிலை மைனஸ் 6.2 டிகிரி செல்சியசாக குறைந்தது. இதனால் அங்குள்ள புகழ்பெற்ற தால் ஏரியின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் உறைந்தது.
நாகாலாந்தில் ஆயுதப் படை சிறப்பு சட்டம் - 6 மாதம் நீட்டிப்பு
 • ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் கீழ், வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து முழுவதும், டிசம்பர் 30 முதல் முதல் மேலும் 6 மாதங்களுக்கு ‘பதற்றம் மிகுந்த பகுதி’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
 • வடகிழக்கு மாநிலங்களில் நிகழும் கிளா்ச்சி மற்றும் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 1958-ஆம் ஆண்டு ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் கொண்டு வரப்பட்டது.
பெலகாவி பிரச்சினை - சிறு தகவல்
 • கர்நாடகம்-மகாராஷ்டிரா மாநிலங்களின் எல்லையில் பெலகாவி மாவட்டம் அமைந்துள்ளது. 
 • மொழி அடிப்படையில் அந்த மாவட்டம் தங்களுக்கு சேர்ந்தது என்று மகாராஷ்டிர மாநிலம் கூறி வருகிறது. இதனால் இருமாநிலம் இடையே பெலகாவி யாருக்கு சொந்தம் (Belgaum Border Dispute/Belagavi Dispute) என்பதில் நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வருகிறது.
டெல்லி அரசின் 'மின்சார வாகனக் கொள்கை 2019'
 • தேசிய தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டை எதிர்கொள்ள டெல்லி மாநில அமைச்சரவை சமீபத்தில் மின்சார வாகனக் கொள்கை 2019-க்கு (Electric Vehicle Policy 2019) ஒப்புதல் அளித்தது. இந்த கொள்கையின்படி, புதிய வாகனங்களில் 25% ஐ 2024 க்குள் மின்சார வாகனங்களாக மாற்ற அரசாங்கம் முயல்கிறது.
ஹிம் தர்ஷன் எக்ஸ்பிரஸ் - சிறு தகவல் 
 • சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹிம் தர்ஷன் எக்ஸ்பிரஸ் (Him Darshan Express), கல்கா - சிம்லா நகரங்களை இணைக்கிறது.
 • இந்திய ரயில்வே விஸ்டாடோம் பெட்டிகளை (Vistadome Coaches) இந்த “ஹிம் தர்ஷன் எக்ஸ்பிரஸ்” ரயிலில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது. 
ODF தேசிய இலக்கு 2019 
 • மேற்கு வங்க மாநிலத்தின் நகர்ப்புற அமைப்புகள் தங்களை திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத பகுதிகளாக அறிவிக்கவில்லை.
 • ஸ்வாச் பாரத் மிஷன்-நகர்ப்புறம் திட்டத்தின் கீழ் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத (ODF) பகுதிகளுக்கான தேசிய இலக்கை அடைந்துவிட்டதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், 2019 டிசம்பர் மாதம் அறிவித்தது.
 • 35 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களின் நகர்ப்புறங்கள் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத பகுதிகளாக ஆகிவிட்டன. இருப்பினும், மேற்கு வங்கத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்களை ODF என்று இன்னும் அறிவிக்கவில்லை.
 • ODF: Open Defecation Free
CAT III B அமைப்பு - சிறு தகவல் 
 • வடக்கில் மூடுபனி நிலைமைகள் தொடர்பாக சமீபத்தில் செய்திகளில் வந்த CAT III B அமைப்பு என்பது கருவி தரையிறக்கும் கருவி அமைப்பு முறை ஆகும்.
 • CAT III B அமைப்பு ஒரு தரையிறக்கும் கருவி அமைப்பு முறை ஆகும். பார்வை தெரிவுநிலை குறைவாக இருக்கும் காலங்களில் விமானங்களை பாதுகாப்பாக தரையிறக்க இது பயன்படுத்தப்படுகிறது.
 • தெரிவுநிலை குறைந்தது 50 அடி இருக்கும்போது இது துல்லியமான தரையிறக்கத்தை செயல்படுத்துகிறது. CAT III B இணக்கமான விமானிகள் மட்டுமே டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டனர்.
பதல்கடி இயக்கம் - சிறு தகவல் 
 • பதல்கடி இயக்கத்தின் (Pathalgadi Movement) போது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநில அரசு முடிவு செய்தது.
 • பதல்கடி என்ற சொல்லுக்கு ‘கல் வரிசை நடவு செய்தல்’ என்று பொருள்.
 • பதல்கடி இயக்கத்தின் உறுப்பினர்கள் மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களின் அதிகாரத்தை அங்கீகரிக்க மறுத்தனர். மாறாக, அவர்கள் கிராம பஞ்சாயத்தை மட்டுமே அங்கீகரித்தனர்.
பாதுகாப்பு/விண்வெளி
ஈரான், சீனா, ரஷ்யா கூட்டு கடற்படை பயிற்சி 2019
 • ஈரான், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து, இந்தியப் பெருங்கடல் மற்றும் ஓமான் வளைகுடாவில் டிசம்பர் 27-முதல் 30 வரை கூட்டு கடற்படை பயிற்சிகளைத் மேற்கொண்டன. 'மூன்று நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவன் பொருட்டு' இந்த பயிற்சி நடத்தப்பட்டது.
இந்திய கடற்படை ஊழியா்கள் 'ஸ்மாா்ட் போன்' பயன்படுத்தத் தடை
 • இந்திய கடற்படை ஊழியா்கள் அறிதிறன் செல்லிடப்பேசிகளையும் (Smart Phone), சமூக வலைதளங்களையும் கடற்படை தளங்களில் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் JF-17 ரக போா் விமானங்கள் வெளியீடு
 • சீன உதவியுடன் பாகிஸ்தானிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட 8 அதிநவீன JF-17 ரக போா் விமானங்கள், இஸ்லாமாபாத் அருகே உள்ள விமான உற்பத்தியகத்தில் டிசம்பர் 27-அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் முறையாக வெளியிடப்பட்டன.
அமெரிக்காவின் 5-ஆவது ஆய்வு ஊா்தி
 • ஃபுளோரிடா மாகாணம், கேப்கனாவெரல் ஏவுதளத்திலிருந்து 2020 ஜூலை மாதம் அனுப்பப்படவிருக்கும் அமெரிக்காவின் 5-ஆவது ஆய்வு ஊா்தி, செவ்வாய்கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்பதை ஆய்வு செய்வதோடு மட்டுமன்றி, எதிா்காலத்தில் அந்த கிரகத்துக்கு மனிதா்களை அனுப்புவதற்கான சோதனைகளையும் மேற்கொள்ளும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.
சீனாவின் கனமான செயற்கைக்கோள் 'ஷிஜியன்-20'
 • சீனா சமீபத்தில் ஷிஜியன்-20 (Shijian-20) என்ற கனமான செயற்கைக்கோளான லாங் மார்ச் 5 (Long March 5) என்ற எந்த ராக்கெட்டில் விண்ணில் ஏவியது,
 • இந்த சக்திவாய்ந்த இந்த ராக்கெட் அதிகபட்சமாக, 25 டன் எடையுடன் பூமியின் குறைந்த சுற்றுப்பாதையிலும் 14 டன் எடையுடன் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையிலும் கொண்டு செல்ல முடியும்.
ஆபரேஷன் இன்ஹெரென்ட் ரிஸால்வ் - சிறு தகவல் 
 • சமீபத்தில் செய்திகளில் வந்த ஆபரேஷன் இன்ஹெரென்ட் ரிஸால்வ் (Operation Inherent Resolve) என்பது அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை ஆகும்.
 • இது ஈராக், சிரியா மற்றும் முன்னர் லிபியாவில் ஐ.எஸ்.ஐ.எல் அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான இராணுவ தலையீடு ஆகும்.  
விண்வெளி வீராங்கனை - கிறிஸ்டினா கோச் 
 • கிறிஸ்டினா கோச் (Christina Koch) என்ற NASA விண்வெளி வீராங்கனை, மிக நீண்ட காலம் விண்வெளி விமானத்தில் தங்கிய பெண் (Longest Spaceflight by a Woman) என்ற சாதனையை படைத்துள்ளார்.
 • இதற்கு முன்பு விண்வெளி வீரர் பெக்கி விட்சன் 288 நாட்கள் விண்வெளியில் வைத்திருந்த முந்தைய சாதனையை அவர் முறியடித்தார். கோச் மொத்தம் 328 நாட்கள் விண்வெளியில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியமனங்கள்   
முப்படைகளின் தலைமை தளபதியாக 'பிபின் ராவத்' நியமனம்
 • இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், முப்படைகளின் தலைமை தளபதியாக டிசம்பர் 30-அன்று நியமிக்கப்பட்டார். 
 • பொறுப்புகள்: 
  • ராணுவ அமைச்சகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ராணுவ விவகாரங்கள் துறையின் தலைவராக அவர் செயல்படுவார்.
  • ராணுவம் தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் மத்திய அரசுக்கு ஆலோசனை சொல்லும் ஒரே நபராக இருப்பார்.
  • முப்படைத் தளபதி, நான்கு நட்சந்திர அந்தஸ்து பெற்ற ராணுவ ஜெனரலாக இருப்பாா். அவரது ஊதியம், மூன்று படைகளின் தலைமைத் தளபதிகளுக்கு நிகராக இருக்கும்.
  • ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கு இடையே சிறப்பான நல்லிணக்கம் நிலவச்செய்வதில் அவர் கவனம் செலுத்துவார். 
  • முப்படைகளுக்கும் தலைமை தளபதி, ராணுவ அமைச்சகத்தின் முதன்மை ராணுவ ஆலோசகராகவும் பொறுப்பு வகிப்பார்.
 • தலைமை தளபதியின் வயது வரம்பு-65: தலைமை தளபதியின் அதிகபட்ச வயது வரம்பு 65 என்று மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதற்காக ராணுவ விதிகள், 1954-ல் தேவையான திருத்தம் செய்யப்பட்டது. 
 • அஜித் தோவல் குழு: புதிதாக, முப்படைகளுக்கும் சேர்த்து ஒரு தலைமை தளபதி பதவியை உருவாக்கப்பட்டது. முப்படை தலைமை தளபதியின் பொறுப்புகள் மற்றும் அதிகாரங்களை வகுப்பதற்காக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
 • பிபின் ராவத், 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி ராணுவ தளபதி ஆனார். அவரது 3 ஆண்டு பதவிக்காலம் டிசம்பர் 31-அன்றுடன் முடிவடைகிறது. 
இராணுவ தலைமைத் தளபதி - 'மனோஜ் முகுந்த் நராவனே' 
 • இந்திய ராணுவத்தின் 28-ஆவது தலைமைத் தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே டிசம்பர் 31-அன்று பொறுப்பேற்றார். ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த விபின் ராவத் டிசம்பர் 30-அன்று ஓய்வு பெற்றார்.
ஜார்கண்ட் முதலமைச்சராக "ஹேமந்த் சோரன்" பதவி ஏற்பு 
 • ஜார்கண்ட் மாநிலத்தின் 11-வது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்றார். ராஞ்சியில் உள்ள மொராபாடி மைதானத்தில் அவருக்கு ஆளுநர் திரவுபதி மர்மு, பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
 • ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ்-ராஷ்டிரீய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி, ஆட்சியை பிடித்தது. மொத்தம் உள்ள 81 தொகுதிகளில், 47 தொகுதிகளை அக்கூட்டணி கைப்பற்றியது.
 • கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன், முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மகாராஷ்டிராவில் 36 அமைச்சர்கள் பதவியேற்பு 
 • மகாராஷ்டிராவில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி சார்பாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக உள்ளார்.
 • அஜித்பவார் துணை முதலமைச்சர் 
 • மகாராஷ்டிராவில் 36 புதிய அமைச்சர்கள் டிசம்பர் 30-அன்று பதவி ஏற்றனர். தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் துணை முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். 
 • முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மந்திரி சபையில் அவரையும் சேர்த்து 43 பேர் உள்ளனர்.
 • அமைச்சர் பதவி ஏற்றவர்களில் ஆதித்ய தாக்கரே, அசோக் சவான்முக்கியமானவர்கள்.
 • ஆதித்ய தாக்கரே முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆவார். 
 • காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் சவான் ஏற்கனவே முதல்வராக பதவி வகித்தவர். 
சிறப்பு பாதுகாப்புப் படை - தலைவா் அருண் குமாா் சின்ஹா
 • சிறப்பு பாதுகாப்புப் படை(SPG) தலைவா் அருண் குமாா் சின்ஹாவின் பதவிக் காலம் 15 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாநாடுகள்/விழா 
மண்டு திருவிழா-2019
 • முதலாவது மண்டு திருவிழா-2019 (Mandu Festival), மத்திய பிரதேசத்தின் மண்டுநகரில் தொடங்கியது. இதை மத்திய பிரதேச சுற்றுலா வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
 • நகர கலாச்சாரத்தின் நவீன வாழ்வாதாரத்துடன் கலந்த வரலாற்று பாரம்பரியத்தை கொண்டாடுவது இதில் அடங்கும்.
விருதுகள் 
சிறந்த செயல்திறன் வங்கி விருது 2019 - ஆந்திர வங்கி
 • மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலன்புரி அமைச்சகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை, சமீபத்தில் “சிறந்த செயல்திறன் வங்கி விருதை” ஆந்திர வங்கிக்கு (Andhra Bank) வழங்கியது.
அறிவியல் தொழில்நுட்பம் 
ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் தொழில்நுட்பம் - சிறு தகவல் 
 • ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் தொழில்நுட்பம் (atrial fibrillation technology) தொடரபாக ஆப்பிள் (Apple) தொழில்நுட்ப நிறுவனம் மீது சமீபத்தில் வழக்குத் தொடரப்பட்டது, எந்த நிலையைக் கண்டறிய இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது? ஒழுங்கற்ற இதய துடிப்பு
 • இதயத் துடிப்பில் உள்ள முறைகேடுகளைக் கண்டறிய ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் தயாரிப்பு இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அணிந்தவரின் இதயத்தின் செயல்பாட்டைக் கண்காணிக்கிறது.
 • நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவர் ஒருவர் சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம், காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தை திருடியதாக வழக்குத் தொடர்ந்தார்.
இம்போர்டின் -11 புரதம் - சிறு தகவல் 
 • சமீபத்தில் விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்ட இம்போர்டின் -11 (Importin-11) என்ற புரதம் பெருங்குடல் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. 
 • இந்த பீட்டா-கேடெனின் குடல் புற்றுநோய் உயிரணுக்களின் பெருக்கத்தை உந்துகிறது. இம்போர்டின்- 11 புரதத்திற்கான குறியீட்டுக்கு IPO11 மரபணு பொறுப்பு என்பதை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டனர்.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
இந்தியாவின் வனம், மரங்கள் பரப்பு குறித்த ஆய்வறிக்கை 2019
 • நாட்டின் வன வளத்தை இந்திய வன ஆய்வகம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பீடு செய்கிறது. 2017-ம் ஆண்டுக்கு பிறகு எடுக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கையை (SoFR 2019)  மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டிசம்பர் 30-அன்று டெல்லியில் வெளியிட்டார். அதன் விவரம்:
 • கடந்த 2 ஆண்டுகளில் நாட்டின் வனம் மற்றும் மரங்கள் பரப்பளவு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேசிய அளவில் வனங்கள் பரப்பளவு 3 ஆயிரத்து 976 சதுர கிலோ மீட்டரும் (0.56 சதவீதம்), மரங்கள் பரப்பு 1,212 சதுர கிலோ மீட்டரும் (1.29 சதவீதம்) அதிகரித்துள்ளது.
 • மத்தியப் பிரதேசம் பரப்பளவில் மிக அதிகஅளவு வனப்பகுதியைப் பதிவு செய்துதுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் அருணாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் உள்ளன.
 • மாநிலவாரியாக எடுத்துக் கொண்டால், கர்நாடகா (1,025 சதுர கி.மீ.), ஆந்திரா (990 சதுர கி.மீ.), கேரளா (823 சதுர கி.மீ.), காஷ்மீர் (371 சதுர கி.மீ.), இமாசலபிரதேசம் (334 சதுர கி.மீ.) ஆகிய 5 மாநிலங்களில் வன பரப்பு அதிகஅளவில் உயர்ந்துள்ளது. மூங்கில் காடுகள் பரப்பளவு 3 ஆயிரத்து 229 சதுர கி.மீ. அதிகரித்துள்ளது. மாங்குரோவ் காடுகள் பரப்பு 54 சதுர கி.மீ. அதிகரித்துள்ளது. ஆனால், வடகிழக்கு பிராந்தியத்தில் காடுகள் பரப்பளவு 765 சதுர கி.மீ. குறைந்துள்ளது.
 • SoFR: State of India’s forest Report 2019 
உலகின் வயதான காண்டாமிருகம் மரணம் 
 • உலகிலேயே வயதான காண்டாமிருகம் என்ற பெயரை தான்சானியா நாட்டில் வனவிலங்கு புகலிடத்தில் வசித்து வந்த 'பாஸ்டா' (Fausta) என்ற பெண் காண்டா மிருகம் (வயது 57) டிசம்பர் 27-ந் தேதியன்று வயோதிகத்தாலும், உடல்நலக்குறைவாலும் மரணம் அடைந்தது.
பிஜி தீவுகளை தாக்கிய 'சூறாவளி சாராய்' 
 • வெப்பமண்டல சூறாவளி சாராய் (Tropical Cyclone Sarai) சமீபத்தில் பிஜி தீவுகளை தாக்கியது. பிஜி தீவு மொத்தம் 300 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூடம் ஆகும்.
பொருளாதார நிகழ்வுகள் 
இந்தியாவின் ஏற்றுமதி 34,000 கோடி டாலர் - FIEO கணிப்பு 
 • நடப்பு நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதி 33,000- 34,000 கோடி டாலரை (ரூ.23.10 லட்சம் கோடி-ரூ.23.80 லட்சம் கோடி) எட்ட வாய்ப்புள்ளது என இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIEO) தெரிவித்துள்ளது.
 • FIEO: Federation of Indian Export Organisations
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
சென்னையில் 'அடுத்த தலைமுறை ஆற்றல் சேமிப்பு மையம்'
 • காரைக்குடியில் உள்ள மைய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI) புதிய தலைமுறை பேட்டரிகளான லித்தியம் அயன் பேட்டரி, சோடியம் அயன் பேட்டரி மற்றும் லித்தியம் சல்பர் பேட்டரி தயாரித்தல் போன்ற உயரிய தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.
 • CECRI: Central Electro-Chemical Engineering Research Institute
 • இந்த மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் சென்னை தரமணியில் உள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய வளாகத்தில் ரூ.100 கோடி மதிப்பில் அடுத்த தலைமுறை ஆற்றல் சேமிப்புக்கான புதுமை தொழில் நுட்ப மையம் அமைக்கப்படுகிறது.
 • இதற்கான அடிக்கல் நாட்டு விழா டிசம்பர் 29-அன்று நடந்தது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்ஷ வர்தன் அடிக்கல் நாட்டினார். 
சேலம் தலைவாசலில் 'நவீன கால்நடை பூங்கா'
 • சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்ரோட்டில், சேலம் ஒருங்கிணைந்த கால்நடைகள் பூங்கா அமைக்க இந்தப் பணிகளுக்காக மொத்தத்தில் ரூ.564.44 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 447 கோடி ரூபாய், நபார்ட் வங்கியிடம் கடனாகப் பெறப்படவுள்ளது. இந்தத் தொகைக்கான நிர்வாக ஒப்புதலை தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
 • அந்தப்பூங்காவில், கால்நடைப் பண்ணை வளாகம், மீன்வள காட்சியக வளாகம், கால்நடைகள் ஆய்வு வளாகம் உள்ளிட்ட 10 பெரிய கட்டிட வளாகங்கள் கட்டப்படவுள்ளன. 
முக்கிய நபர்கள்  
சீன எழுத்தாளர் 'டா சென்'
 • சமீபத்தில் காலமான சீன எழுத்தாளர் டா சென் (Da Chen), “மலையின் நிறங்கள்” (Colours of the Mountain) என்ற புத்தக படைப்பிற்காக புகழ்பெற்றவர்.
 • இந்த புத்தகத்தில், மாவோ சேதுங் தொடங்கிய சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் போது அவரும் அவரது குடும்பத்தினரும் அனுபவித்த துஷ்பிரயோகங்களை அவர் விவரிக்கிறார். இந்த புத்தகம் ஏழு மொழிகளில் வெளியிடப்பட்டது.
 பெஜாவர் மடாதிபதி - மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமி
 • கர்நாடக மாநிலம் உடுப்பியில் பிரசித்தி பெற்ற பெஜாவர் மடத்தின் மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமி (வயது 88) டிசம்பர் 29-அன்று காலமானார். 
சமூக சேவகர் நந்தி நாசர்
 • துபாயில் வசித்து வந்த கேரளா மாநிலத்தின் கொயிலாண்டி பகுதியை சேர்ந்த சமூக சேவகர் நந்தி நாசர் (Nasar Nandi) டிசம்பர் 29-அன்று மரணம் அடைந்தார். அமீரகத்தில் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார்.
 • துபாயில் எதிர்பாராதவிதமாக இந்தியர்கள் யாராவது உயிரிழந்தால், அவர்களது உடல்களை துபாயில் அடக்கம் செய்யவோ அல்லது அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவோ தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்து வந்தார்.
நாகாலாந்து பேரவைத் தலைவா் 'விகோ யோசு' மறைவு
 • தேசியவாத ஜனநாயக முன்னேற்ற கட்சியை (NDPP) சேர்ந்த நாகாலாந்து சட்டப் பேரவைத் தலைவா் விகோ யோசு (வயதி 67), டிசம்பர் 27 அன்று டெல்லியில் காலமானாா்.
விளையாட்டு நிகழ்வுகள் 
செஸ்

உலக ரேபிட் செஸ் 2019: சாம்பியன்கள் 
 • அதிவேகமாக காய்களை நகர்த்தி விளையாடக்கூடிய உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மாஸ்கோவில் நடந்தது. 
 • கோனெரு ஹம்பி-சாம்பியன்: 
  • இதில் 12 சுற்றுகள் கொண்ட பெண்கள் பிரிவில், இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 32 வயதான ஹம்பி ஆந்திராவைச் சேர்ந்தவர். 
  • அர்மகெதோன் செஸ் (Armageddon chess) முறைப்படி போட்டியில் வென்றார், அர்மகெதோன் சதுரங்கத்தில், கறுப்பு கைகளை விட வெள்ளை கைகளுக்கு அதிக நேரம் கொடுக்கப்படும்.
  • இந்த பட்டத்தை கைப்பற்றிய 2-வது இந்தியர் ஹம்பி ஆவார். 2017-ம் ஆண்டில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உலக ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
 • மாக்னஸ் கார்ல்சென்-சாம்பியன்: 
  • 15 சுற்றுகளை கொண்ட ஆண்கள் பிரிவு போட்டியில் நார்வே நாட்டை சேர்ந்த உலக சாம்பியனான 'மாக்னஸ் கார்ல்சென்' சாம்பியன் பட்டம் வென்றார்.
  • மாக்னஸ் கார்ல்சென், உலக ரேபிட் செஸ் மகுடத்தை 3-வது முறையாக சூடியுள்ளார்.
உலக பிளிட்ஸ் செஸ் 2019: சாம்பியன்கள் 
 • 2019 உலக பிளிட்ஸ் செஸ் போட்டி ரஷியாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்றது. 
 • இதில் ஆண்கள் பிரிவில் நார்வே நாட்டின் மாக்னஸ் காா்ல்ஸன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
 • பெண்கள் பிரிவில் ரஷிய வீராங்கனை லாக்னோ கட்ரேயனா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
கிரிக்கெட் 

பீட்டர் சிடில் - ஓய்வு அறிவிப்பு 
 • ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் 35 வயதான பீட்டர் சிடில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக டிசம்பர் 29-அன்று அறிவித்தார்.
 • சிடில், 67 டெஸ்டுகளில் விளையாடி 221 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.
2019 ஆண்டின் கடைசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் 
 • டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டிசம்பர் 30-அன்று வெளியிட்டது. இது தான் இந்த ஆண்டின் கடைசி தரவரிசை பட்டியல் ஆகும்.
 • பேட்டிங் தரவரிசை (முதல் 5 இடங்கள்) 
  1. விராட் கோலி (இந்தியா)
   • விராட் கோலி 928 புள்ளிகளுடன் (274 நாட்கள்) முதலிடத்தில் நீடிக்கிறார்.  
  2. ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா)
  3. கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) 
  4. மார்னஸ் லபுஸ்சேன் (ஆஸ்திரேலியா)
  5. புஜாரா (இந்தியா)
 • பந்து வீச்சாளர் தரவரிசை
  1. பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா)
  2. நீல் வாக்னெர் (நியூசிலாந்து) 
  3. காஜிசோ ரபடா (தென்ஆப்பிரிக்கா)
  4. ஜேசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்)
  5. வெரோன் பிலாண்டர் (தென்ஆப்பிரிக்கா)
 • ஆல்-ரவுண்டர் தரவரிசை
  1. ஜாசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்)
  2. ரவீந்திர ஜடேஜா (இந்தியா)
  3. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
  4. வெரோன் பிலாண்டர் (தென்ஆப்பிரிக்கா) 
  5. அஸ்வின் (இந்தியா)
 • டெஸ்ட் சாம்பியன்ஷிப்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளி பட்டியலில் 360 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம் வகிக்கிறது. 
4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் 
 • சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது 5 நாட்கள் கொண்டதாக நடத்தப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் அதை முழுமையாக 4 நாள் கொண்ட போட்டியாக மாற்றுவது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) பரிசீலிக்க முன்வந்துள்ளது.
கால்பந்து

குளோப் கால்பந்து விருதுகள் 2019 
 • உலகின் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான 'குளோப் கால்பந்து விருதுகள் 2019' (Globe Soccer Awards 2019) துபாய் நகரில் டிசம்பர் 29-அன்று வழங்கப்பட்டன 
 • சிறந்த கால்பந்து வீரர் விருது - கிறிஸ்டியானா ரொனால்டோ
  • போர்ச்சுகல் அணியின் கேப்டனும், யுவென்டஸ் கிளப் வீரருமான 'கிறிஸ்டியானா ரொனால்டோ' அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 • சிறந்த பெண் கால்பந்து வீராங்கனை விருது - லூஸி பிரான்ஸ் (இங்கிலாந்து)
 • சிறந்த பயிற்சியாளா் விருது - ஜுா்கன் கிளாப் (லிவா்பூல் மேலாளா்).
முக்கிய தினங்கள்
காங்கிரஸ் கட்சியின் 135-வது நிறுவன தினம் - டிசம்பர் 28, 2019
 • 2019 டிசம்பர் 28-அன்று, 135-வது நிறுவன தினத்தை நாடு முழுவதும் காங்கிரஸ் கொண்டாடியது. டெல்லி தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கொடி ஏற்றினார்.
நேதாஜி கோடியேற்றிய 76-வது ஆண்டு விழா - டிசம்பர் 30, 2019
 • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின், போர்ட் பிளேரில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் முதல் கொடி ஏற்றப்பட்ட 76-வது ஆண்டு நினைவு தினவிழா டிசம்பர் 30 அன்று நடைபெற்றது.
Previous Post Next Post