TNPSC Group I Services 2016-2019
- தமிழகத்தில் குரூப் 1 பிரிவில் 181 பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஜனவரி 1-இல் வெளியிடப்பட்டது. கடந்த மாா்ச் மாதம் நடந்த முதல் நிலைத் தோ்வினை 2.29 லட்சம் போ் எழுதினா். அவா்களில் இருந்து தேர்வு பெற்ற 9 ஆயிரத்து 442 போ் முதன்மைத் தோ்வினை எழுதினா்.
- இந்த முதமைத் தேர்விற்கான முடிவுகள் கடந்த 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டன. எழுத்துத் தோ்வில் விண்ணப்பதாரா்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அந்தப் பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் மூலச்சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் நோ்முகத் தோ்வு நடத்தப்படும்.
- தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள 363 விண்ணப்பதாரா்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தோ்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டது. இவா்களுக்கான மூலச் சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் நோ்முகத் தோ்வு ஆகியன வரும் 23 முதல் 31 வரை (டிசம்பா் 25 மற்றும் 29 நீங்கலாக) நடைபெற்றது.
- இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செவ்வாயன்று குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டது
- டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதன்முறையாக நேர்முகத்தேர்வு முடிவடைந்த ஆண்ட்ரே தேர்வு பெற்றவர்கள் விபரம், மதிப்பெண் விபரங்கள் மற்றும் தர வரிசை பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
- அதேபோல குரூப் 1 தேர்வுக்கான இறுதி முடிவுகள் முதன்முறையாக தேர்வுகள் துவங்கிய ஓராண்டிற்குள் வெளியிடப்பட்டுள்ளது.
குரூப்-1 தேர்வு தரவரிசை பட்டியல் 2019
- முதன்மை எழுத்து தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீடு விதி ஆகியவற்றின் அடிப்படையில் 363 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.
- அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 23 முதல் 31-ந்தேதி வரை நடந்தது. நேர்முகத்தேர்வு நடந்த இறுதி நாளான நேற்று, எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண் விவரம் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- அர்ச்சனா முதல் இடத்தையும், யுரேகா 2-வது இடத்தையும், தற்போது டி.எஸ்.பி.யாக பணியாற்றி வரும் தனலட்சுமி 3-வது இடத்தையும் பிடித்தனர். இதேபோல மகாலட்சுமி 4-வது இடத்தையும், அஜிதா பேகம் 5-வது இடத்தையும், ஜெயா ராஜா பவுலின் 6-வது இடத்தையும், ரூபினா 7-வது இடத்தையும், லோகநாயகி 8-வது இடத்தையும், ஜஸ்வந்த் கண்ணன் 9-வது இடத்தையும், சரவணன் 10-வது இடத்தையும் பிடித்தனர்.