TNPSC Current Affairs December 8-9, 2019 - View and Download PDF

TNPSC Current Affairs December 8, 2019 and December 9, 2019 for forthcomong various TNPSC and Governmnet exams 2020.

நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 8-9-, 2019
இந்திய நிகழ்வுகள்
இந்தியாவின் சிறந்த காவல் நிலையங்கள் பட்டியல் 2019
  • மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவின் சிறந்த காவல் நிலையங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 
  • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள அபெர்தீன் காவல் நிலையம் இந்தியாவின் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
  • முதல் 5 சிறந்த காவல்நிலையங்கள் வரிசை:
    1. அபெர்தீன் காவல் நிலையம் - அந்தமான் 
    2. பாலசினோர் - குஜராத்
    3. அஜ்க் புர்ஹான்பூர் - மத்திய பிரதேசம் 
    4. தேனீ - தமிழ்நாடடு
    5. அநிநி - அருணாசல் பிரதேஷ்
மாநிலங்களவையில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட 'சந்தாலி மொழி' 
  • 2019 டிசம்பர் 6-அன்று சாந்தாலி (Santhali) மொழி மாநிலங்களவையில் அறிமுகமானது, ஒடிசாவைச் சேர்ந்த பிஜு ஜனதா கட்சியை சேர்ந்த சரோஜ்னி ஹெம்ப்ராம், மாநிலங்களவை உறுப்பினர் பூஜ்ஜிய நேரத்தின்போது, ஒடிசாவில் பழங்குடியினரால் பெரும்பாலும் பேசப்படும் ஆஸ்ட்ரோசியாடிக்-முண்டா மொழியான சந்தாலியில் பேசினார்.
  • 1925-ஆம் ஆண்டில் சந்தாலி மொழிக்கு ஓல் சிக்கி ஸ்கிரிப்டை (Ol Chiki script) உருவாக்கிய ரகுநாத் முர்முவுக்கு பாரத் ரத்னா விருதுக்கு கோரிக்கை வைத்தார். 
தூய்மையான மின்சார இயக்கம்: பஞ்சாப்-WEF கூட்டுமுயற்சி 
  • மின்சார இயக்கத்தை மேம்படுத்துவதற்காக பஞ்சாப் மாநிலம் சமீபத்தில் உலக பொருளாதார மன்றத்துடன் (WEF) கூட்டு சேர்ந்துள்ளது.
  • பொது-தனியார் முன்முயற்சியுடன், சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில்கொண்டு தூய்மையான மின்சார இயக்கம் குறித்து வடிவமைக்க பஞ்சாப் மாநில அரசு உலக பொருளாதார மன்றத்துடன் இணைந்துள்ளது.
இந்தியா-பங்களாதேஷ்: மோங்லா & சட்டோகிராம் துறைமுக ஒப்பந்தம் 
  • இந்தியாவிற்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான துறைமுகங்கள் என அழைக்கப்படும் துறைமுகங்கள் எது? பங்களாதேஷ் நாட்டில் உள்ள மோங்லா மற்றும் சட்டோகிராம் துறைமுகங்கள் Ports of Call என்ற நெறிமுறையின் கீழ் இந்தியா பயன்படுத்த இந்தியா-பங்களாதேஷ் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் நிலையான இயக்க முறைமை (SOP) கையெழுத்திடப்பட்டது.
  • SOP: Standard Operating Procedure
பாதுகாப்பு/விண்வெளி
திருச்சி NIT-யில் 'விண்வெளி தொழில்நுட்ப அடைகாக்கும் மையம்'
  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO), புதிய 'விண்வெளி தொழில்நுட்ப அடைகாக்கும் மையத்தை' (S-TIC) திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழக (NIT) நிறுவனத்தில் அமைத்துள்ளது.
  • S-TIC: Space Technology Incubation Centre.
சீனாவின் ‘ஜிலின்-2 காவோபென் 02பி’ செயற்கைகோள் 
  • சீனாவின் சாங் குவாங் செயற்கைகோள் தொழில் நுட்ப நிறுவனம் ‘ஜிலின்-2 காவோபென் 02பி’ என்ற செயற்கைகோளை டையுவான் ஏவு மையத்தில் இருந்து ‘கே இசட்-1 ஏ’ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது. இது தொலைநிலை உணர் திறன் தரவு மற்றும் சேவைகளை வழங்க இந்தசெயற்கோள் உதவியாக இருக்கும்.
நியமனங்கள் 
மொரீஷியஸ் பிரதமர் 'பிரவீந்த் ஜுக்நாத்'
  • மொரீஷியஸ் நாட்டின் பிரதமராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்ட பிரவீந்த் ஜுக்நாத் (Pravind Jugnauth), டிசம்பர் 6,2019 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவ மற்றும் நீடித்த இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் ஆழப்படுத்தவும் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
மாநாடுகள்
மத்திய தரைக்கடல் உரையாடல்கள் மாநாடு 2019
  • 2019-ஆம் ஆண்டிற்கான மத்திய தரைக்கடல் உரையாடல்கள் மாநாடு (MED – Mediterranean Dialogues 2019) இத்தாலியின் ரோம் நகரில் டிசம்பர் 5-7 வரை நடைபெற்றது. 
  • வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் மற்றும் இத்தாலிய சர்வதேச அரசியல் ஆய்வுகள் நிறுவனம்) ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை நடத்தின.
போலீஸ் டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் தேசிய மாநாடு-2019
  • 2019-ஆம் ஆண்டிற்கான போலீஸ் டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் தேசிய மாநாடு (National Conference DGPs, IGPs), மகாராஷ்ட்ர மாநிலம் புனேவில் டிசம்பர் 6-9 தேதிகளில் நடைபெற்றது. அனைத்து மாநிலங்களின் டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் பங்கேற்றனர்.
  • DGP: Directors General of Police, IGP: Inspectors General of Police.
இந்திய நீர் தாக்க உச்சி மாநாடு 2019
  • நான்காவது இந்திய நீர் தாக்க உச்சி மாநாடு (India Water Impact Summit 2019), டிசம்பர் 5-7 தேதிகளில் புது தில்லி நகரத்தில் Valuing Water | Transforming Ganga என்ற மையகருத்தில் நடைபெற்றது.
  • IIT கான்பூர் தலைமையில் மத்திய நீர்சக்தி அமைச்சகம் மற்றும் கங்கா நதி படுகை மேலாண்மை மற்றும் ஆய்வுகள் மையம் (cGanga) ஆகிய அமைப்புகளால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
  • cGanga: Centre for Ganga River Basin Management and Studies
விருதுகள்
தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் -2019 
  • இந்திய குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த், டிசம்பர் 5, 2019 அன்று புதுதில்லியில், செவிலியர்களுக்கு 2019-ஆம் ஆண்டிற்கான தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் (National Florence Nightingale Awards-2019) விருதுகளை வழங்கினார்.
அறிவியல் தொழில்நுட்பம் 
சிப்லா அறக்கட்டளையின் 'மொபைல் அறிவியல் ஆய்வகம்' 
  • சிப்லா அறக்கட்டளை தனது கார்ப்பரேட் சமூகப் பொறுப்பின் (CSR) கீழ், தரமான கல்வியை வழங்க மொபைல் அறிவியல் ஆய்வகத்தை சமீபத்தில் (MSL) தனது அகஸ்தியா சர்வதேச அறக்கட்டளையுடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.
  • MSL: Mobile Science Lab.
CODM 2-மாதங்களில் 170 மில்லியன் பதிவிறக்கங்கள் 
  • 'கால் ஆஃப் டூட்டி: மொபைல்' (CODM) மொபைல் கேம் வெளியான 2 மாதங்களில் 170 மில்லியன் பதிவிறக்கங்களைத் தாண்டியுள்ளது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
பழவேற்காடு ஏரி முகத்துவாரம் திறப்பு
  • இந்தியாவின் 2-வது மிகப்பெரிய உவர்ப்பு நீர் ஏரி: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பழவேற்காடு ஏரி உள்ளது. இந்த ஏரி இந்தியாவின் 2-வது மிகப்பெரிய உவர்ப்பு நீர் ஏரியாகும். இந்த ஏரிக்கரையை சுற்றில் தமிழகத்திலும், ஆந்திராவிலும் 69 மீனவ கிராமங்கள் உள்ளது.
  • ஆரணி ஆறு, காலாங்கி ஆறு, சொர்ணமுகி ஆறு என 50-க்கும் மேற்பட்ட பாசன ஏரிகளின் வடிகால் பகுதியாகவும், மழைக்காலங்களில் மழைநீர் ஏரியில் புகுந்து முகத்துவாரத்தின் வழியாகவும் சென்று வங்க கடலில் கலக்கிறது. இயற்கையின் சீற்றத்தால் முகத்துவாரம் தூர்ந்தது, தூர்வாரும் பணி நடந்து, டிசம்பர் 8-அன்று பழவேற்காடு ஏரி முகத்துவாரம் திறக்கப்பட்டது.
விளையாட்டு நிகழ்வுகள்
கிரிக்கெட்

இரஞ்சி கிரிக்கெட் போட்டி 2019-20 - தொடக்கம்
  • 2019-2020 சீசனுக்கான 86-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி நவம்பர் 9-அன்று தொடங்கி மார்ச் 13 வரை வரை பல்வேறு நகரங்களில் நடக்கிறது. போட்டியில் 38 அணிகள் பங்கேற்கின்றன.
  • இந்தியாவில், முதன்மையான முதல்தர கிரிக்கெட் போட்டியான ரஞ்சி போட்டி 1934-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. 
  • சண்டிகார் அணி முதல்முறையாக ரஞ்சியில் கால்பதிக்கிறது. 
  • நடப்பு சாம்பியன்: விதர்பா அணி
இந்தியாவின் பெண் கிரிக்கெட் நடுவா் 'ஜிஎஸ்.லட்சுமி' 
  • சா்வதேச கிரிக்கெட் கவன்சில் (ஐசிசி) ஆடவா் சா்வதேச ஒருநாள் போட்டிகளில் பெண் நடுவா்களை நியமித்துள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் ஷாா்ஜாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை லீக் 2 போட்டியில் இந்தியாவின் ஜிஎஸ்.லட்சுமி பணிபுரிய உள்ளாா். 
  • ஜிஎஸ்.லட்சுமி, ஆந்திர மாநிலம் ராஜமகேந்திரவரத்தைச் சோ்ந்தவர்.
டென்னிஸ்

ரோஜா் பெடரா் உருவம் பதித்த வெள்ளி நாணயம் - வெளியீடு 
  • ஸ்விஸ் மின்ட் எனப்படும் சுவிற்சர்லாந்து நாட்டு வெள்ளி நாணயத்தில் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜா் பெடரரின் உருவத்தைப் பொறித்துள்ளது. 
  • வாழும் காலத்திலேயே இத்தகைய சிறப்பு பெற்ற வீரா் பெடரா் ஆவாா்.
  • 20 ஸ்விஸ் பிராங்க் நாணயங்களில் பெடரரின் உருவம் அச்சிடப்பட்டு, 2020 ஜனவரி மாதம் புழக்கத்துக்கு விடப்படுகிறது.
  • டென்னிஸ் உலகின் பிக் த்ரீ எனப்படும் நடால், பெடரா், ஜோகோவிச் ஆகியோரில் முதன்மையானவா் ரோஜா் பெடரா்.
  • ஸ்விட்சா்லாந்தின் பேஸல் நகரில் 1981 ஆகஸ்ட் 8-ஆம் தேதி பிறந்தாா். இதுவரை 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனையை படைத்துள்ளாா். உலகிலேயே அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவா் என்ற சிறப்பை பெடரர் பெற்றுள்ளார்.
தெற்காசிய விளையாட்டு 2019
  • 13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு மற்றும் போக்ஹராவில் நடந்து வருகிறது.இதில் 7 நாடுகள் பங்கேற்றுள்ளன. முக்கிய இந்திய வீரர்/வீராங்கனைகள் வென்ற பதக்கங்கள் விவரம்:
  • மல்யுத்தம்; 4 தங்கப்பதக்கங்கள் 
  • சாக்‌ஷி மாலிக் (62 கிலோ பிரிவு), ரவீந்தர் (61 கிலோ), பவான்குமார் (86 கிலோ), அன்ஷூ (59 கிலோ) 
  • பளுதூக்குதலில் தமிழக வீராங்கனை அனுராதா தங்கப்பதக்கம் வென்றார்.
குத்துச்சண்டை

உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை: அந்தோணி ஜோஷ்வா சாம்பியன்
  • சவுதி அரேபியாவின் அட்டிரியாத் நகரில் நடைபெற்ற IBF உலக குத்துச்சண்டை ஹெவிவெயிட் சாம்பியன் போட்டியில் பிரிட்டனின் அந்தோணி ஜோஷ்வா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா். 
முக்கிய தினங்கள் 
SAARC அமைப்பு நாள் - டிசம்பர் 8 - தகவல்கள்
  • தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் (South Asian Association for Regional Cooperation, SAARC) என்பது தெற்காசிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். 
  • தெற்காசியாவின், இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூடான் நாடுகள் இணைந்து, 1985-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி சார்க் (SAARC) அமைப்பு உருவாக்கப்பட்டது. 
  • 2007-ல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14-வது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இதன் 8-வது உறுப்பு நாடாக சேர்த்துக்கொள்ளப்பட்டது. 
  • SAARC அமைப்பின் தலைமைச் செயலகம் நேபாள நாட்டின் தலைநகர் காட்மாண்டுவில் செயல்பட்டுவருகிறது. 
  • SAARC உறுப்பு நாடுகள்: ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், இந்தியா, மாலை தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் - டிசம்பர் 09
  • ஆண்டுதோறும் டிசம்பர் 9 அன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (International Anti-Corruption Day) கடைபிடிக்கப்படுகிறது. 
  • ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துகிற நோக்கத்தில், ஐக்கிய நாடுகள் சபை, 2003-ம் ஆண்டு முதல், டிசம்பர் 9 அன்று ‘ஊழல் எதிர்ப்பு நாள்’ அனுசரித்து வருகிறது. 
  • 2019 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின மையக்கருத்து: 'United against Corruption' என்பதாகும்.
சர்வேதேச இனப்படுகொலை தடுப்பு தினம் - டிசம்பர் 9
  • ஆண்டுதோறும் டிசம்பர் 9 அன்று சர்வேதேச இனப்படுகொலை தடுப்பு மற்றும் இனப்படுகொலையால், பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியம் மற்றும் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. (International Day of Commemoration and Dignity of the Victims of the Crime of Genocide and of the Prevention of this Crime).
Post a Comment (0)
Previous Post Next Post