TNPSC Current Affairs December 27-28, 2019 - View and Download PDF

Daily Current Affairs December 27 and 28th 2019

TNPSC Current Affairs December 27-28, 2019 for forthcoming various TNPSC and Government exams 2020.

நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 27-28, 2019
சர்வதேச நிகழ்வுகள்
உலகின் பிரபலமான இளம்பெண் 'மலாலா யூசுப்சாய்' 
  • கடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாயை தேர்வு செய்து ஐ.நா கவுரவித்துள்ளது.
  • பெண்களின் கல்விக்காக போராடிய மலாலாவை கடந்த 2012-ம் ஆண்டு தலீபான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். எனினும் இந்த தாக்குதலில் அவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
  • ஐ.நா.வின் அமைதிக்கான தூதர்: அதன்பிறகு அவர் பாகிஸ்தான் மட்டும் இன்றி சர்வதேச அளவில் பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுக்க தொடங்கினார். 2014-ம் ஆண்டு அவருக்கும், இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்திக்கும் கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2017-ம் ஆண்டு ஐ.நா.வின் அமைதிக்கான தூதரானார்.
  • நடந்த முக்கிய நிகழ்வுகள்: கடந்த 10 ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகளாக, ஹைதி நிலநடுக்கம் (2010), சிரிய உள்நாட்டு போர் துவக்கம் (2011), பெண்களின் கல்விக்கு ஆதரவாக மலாலாவின் பணிகள் (2012), எபோலா வைரஸ் தாக்குதல் (2014), பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் ஏற்பு (2015) ஆகியவற்றை ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.
FAO வெளியிடும் 'உலகளாவிய வெட்டுக்கிளி நிலைமை' அறிவிப்பு 
  • உலகளாவிய வெட்டுக்கிளி நிலைமை general locust situation) குறித்த முன்னறிவிப்பை உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) வழங்குகிறது. மேலும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் ஆபத்தில் இருக்கும் நாடுகளுக்கு எச்சரிக்கை மற்றும் முன்னறிவிப்புகளை வழங்குகிறது.
  • குஜராத்தின் வடக்குப் பகுதிகள் தற்போது வெட்டுக்கிளிகளால் படையெடுக்கப்பட்டு பயிர்களுக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்துகின்றன.
உலகின் ஃபால்கன் தலைநகரம் 'நாகாலாந்து'
  • நாகாலாந்து மாநிலம், உலகின் ஃபால்கன் தலைநகரம் (Falcon Capital of the World) என்று அழைக்கப்படுகிறது.
  • அமுர் ஃபால்கான்ஸ் எனப்படும் ஃபால்கன் பறவை ஒரு சிறிய ராப்டார் வகை இடம்பெயர்வு பறவையினம் ஆகும். இது தென்கிழக்கு சைபீரியா மற்றும் வடக்கு சீனாவில் இனப்பெருக்கம் செய்கிறது மற்றும் குளிர்கால மாதங்களில் இந்தியா வழியாக தென்னாப்பிரிக்காவுக்கு குடிபெயர்கிறது.
  • நாகாலாந்தில் உள்ள டோயாங் ஏரி (Doyang Lake) என்பது ஒவ்வொரு ஆண்டும் இந்த பறவைகள் இடம்பெயரும் போது ஓய்வெடுத்து செலகின்றன. எனவே, நாகாலாந்து "உலகின் பால்கன் தலைநகரம்" என்று அழைக்கப்படுகிறது.
நீண்ட காலம் அதிபராக உள்ள 'தியோடோரோ மபசோகோ'
  • உலகின் மிக நீண்ட காலம் அதிபராக உள்ளவர் எக்குவடோரியல் கினியா (Equatorial Guinea) நாட்டின் அதிபர் 'தியோடோரோ மபசோகோ' (Teodoro Mbasogo) ஆவார்.
  • மபசோகோ, 1979 ல் ஆட்சிக்கு வந்தார். நாட்டின் பொருளாதாரம் தற்போது மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது, சர்வதேச நாணய நிதியத்திடம், நிதி உதவி பெற கோரியபோது, தனது சொத்துக்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு எம்பசோகோவிடம் அண்மையில் கோரியது.
சாகோஸ் தீவுகள் - சிறு தகவல் 
  • சாகோஸ் தீவுகள் (Chagos Islands) இங்கிலாந்து மற்றும் மொரீஷியஸ் நாடுகள் இடையே சர்ச்சைக்குரிய தீவுப்பகுதியாக உள்ளது.
  • சாகோஸ்தீவுகளை பூர்வீக மக்களிடம் ஒப்படைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்த போதிலும், இங்கிலாந்து (UK) அதை செய்ய மறுத்துவிட்டது.
  • இதற்கு பதிலளிக்கும் வகையில், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை (crimes against humanity) இங்கிலாந்து செய்ததாக மொரிஷிய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
புஷெர் அணுமின் நிலையம் - சிறு தகவல் 
  • ஈரான் நாட்டில் உள்ள புஷெர் அணுமின் நிலையப் பகுதியில் (Bushehr Nuclear Power Plant) சமீபத்தில் பூகம்பம் ஏற்பட்டது.
  • மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முதல் சிவில்அணு உலையாக, 2010 ஆகஸ்டில் புஷெர் அணுமின் நிலையம் திறக்கப்பட்டது.
இந்திய நிகழ்வுகள்
மேகாலயாவில் “ஹின்னிவ் ட்ரெப்” எனப்படும் 'செங் காசி மதத்தினர்' 
  • செங் காசி (Seng Khasi) மதத்தைப் பின்பற்றுபவர்கள் “ஹின்னிவ் ட்ரெப்” (Hynniew Trep) என்று அழைக்கப்படுகிறார்கள்.
  • செங் காசி மதம், 1899 நவம்பர் 23-ஆம் தேதி மேகாலயாவில் நிறுவப்பட்டது. “செங்” (Seng) என்ற சொல்லுக்கு ஆரம்பம் அல்லது அடித்தளம் என்று பொருள், “காசிஸ்” (Khasis) என்பது இப்பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் ஆவர்.
  • இந்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் “ஹின்னிவ் ட்ரெப்” (ஏழு குடிசைகள்) என்று அழைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், லிம்பங் (Lympung) என்ற திருவிழா மதத்தின் ஸ்தாபனத்தை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் காணப்படும் ஒரே மனிதக் குரங்கு 'ஹூலாக் கிப்பன்'
  • ஹூலாக் கிப்பன் (Hoolock Gibbon) இந்தியாவில் காணப்படும் ஒரே மனிதக் குரங்கு (ape) ஆகும். 
  • இது கிழக்கு பங்களாதேஷ், வடகிழக்கு இந்தியா மற்றும் தென் மேற்கு சீனாவை பூர்வீகமாகக் கொண்டது.
  • இது மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய ஹூலாக் கிப்பன் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த இரண்டு இனங்களும் 1972-ஆம் ஆண்டு இந்திய (வனவிலங்கு) பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தியாவின் முதல் 'திருநங்கைகள் பல்கலைக்கழகம்'
  • திருநங்கைகளுக்கான இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் (India’s first university for transgender community) உத்தரபிரதேசத்தில் குஷிநகர் (Kushinagar) மாவட்டத்தின் பாசில்நகர் (Fazilnagar) பகுதியில் திறக்கப்படஉள்ளது. 
  • செஹ்ரி சம்ரிதி உர்சவ் 2020
  • DAY-NULM எனப்படும் 'தீன்தயாள் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம்' பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 'செஹ்ரி சம்ரிதி உர்சவ் 2020' என்ற நிகழ்வு மத்திய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • சுய உதவிக்குழுக்கள் போன்ற குழுக்களை அவற்றின் வளர்ச்சிக்கான பல்வேறு அரசாங்க திட்டங்களுடன் இணைக்க இந்த நிகழ்வு உதவுகிறது.
  • DAY-NULM: Deendayal Antyodaya Mission- National Urban Livelihood Mission. 
அரியானா அரசின் 'சுசாஷன் சங்கல்ப் வர்ஷ்'
  • 2020-ஆம் ஆண்டை 'சுசாஷன் சங்கல்ப் வர்ஷ்' (Susashan Sankalp Varsh) ஆண்டாக அரியானா மாநிலம் அனுசரிக்க உள்ளது.
  • பிரதமரின் 'வயா வந்தனா யோஜனா'
  • பிரதான் மந்திரி வய வஞ்சனா யோஜனா திட்டம் (Pradhan Mantri Vaya Vanjana Yojana), மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய திட்டமாகும். இது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்களை உள்ளடக்கியது.
  • இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகள் அடையாள அட்டையுடன், ஆதாரமாக ஆதார் இணைப்பை (Aadhaar linking) அரசாங்கம் சமீபத்தில் கட்டாயமாக்கியது.
லடாக் ஒன்றிய பிரதேசத்தில் லோசர் விழா-2020
  • லோசர் விழா (Losar Festival 2020) சமீபத்தில் லடாக் ஒன்றிய பிரதேசத்தில் கொண்டாடப்பட்டது. 
  • லோசார் என்பது இமயமலை மாநிலங்களில் கொண்டாடப்படும் புத்தாண்டு தின கொண்டாட்டமாகும்.
  • இது திபெத்திய-புத்த மரபுகளை அடிப்படையாகக் கொண்ட 15 நாட்கள் கொண்டாட்டமாகும்.
  • இது பூட்டான், நேபாளம் போன்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
ஆயுர்வேத சிகிச்சைமுறை 'சிரோதாரா'
  • சிரோதாரா (Shirodhara), ஆயுர்வேத சிகிச்சையுடன் மிகவும் தொடர்புடையது. அண்மையில் சுகாதார அமைச்சகத்தினால் சிரோதாரா முறை முன்னிலைப்படுத்தப்பட்டது. 
  • சிகிச்சையில் எண்ணெய், தேங்காய் நீர், பால், நீர், மோர் போன்ற திரவங்களை நெற்றியில் ஊற்றுவது ஆகும்.
விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா-2019
  • கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பொன்விழா நிகழ்வு டிசம்பர் 25-அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். கன்னியாகுமரியில் கடலில் உள்ள பாறையில் தான் 1892-ம் ஆண்டு டிசம்பர் 25-ந் தேதி சுவாமி விவேகானந்தர் தியானம் செய்தார்.
2019-20 நடப்பு நிதியாண்டு: பயணிகள் இறப்பு பூஜ்ஜியம் 
  • 166 ஆண்டுகால இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக, 2019-20 நடப்பு நிதியாண்டில் பயணிகள் இறப்பு பூஜ்ஜியமாக உள்ளது என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு/விண்வெளி 
விமானப்படை சேவை: ‘மிக்-27’ விமானங்கள் விடைபெற்றன
  • இந்திய விமானப்படை சேவையில் இருந்து மிக்-27 (MiG 27 fleet) ரக போர் விமானங்கள் விடைபெற்றன.
  • 1999-ம் ஆண்டு, கார்கில் போரின்போது மிக்-27 போர் விமானங்கள் ஆற்றிய சேவை முக்கியத்துவம் வாய்ந்தவை.
  • மிக்-27 ரக போர் விமானங்கள் 40 ஆண்டு கால சேவைக்கு பின்னர் இந்திய விமானப்படையில் இருந்து டிசம்பர் 27-அன்றுடன் ஓய்வு பெற்றன. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் 7 மிக்-27 விமானங்களை கொண்ட படைப்பிரிவு இருந்தது.
  • இந்திய விமானப்படை சமீபத்தில் மிக் 27 சோவியத் யூனியனால் உருவாக்கப்பட்டு, இந்தியாவில் எச்.ஏ.எல் (HAL) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
அமேசான் நிறுவனத்தின் 'கைப்பர் திட்டம்' 
  • ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தும் கைப்பர் என்ற திட்டத்தை (Project Kuiper) எந்த அமெரிக்க நிறுவனமான அமேசான் உருவாக்கி வருகிறது.
  • இந்த கைப்பர் திட்டம் ஒரு பகுதியாக அமேசான் 3,000 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்த உள்ளது.
  • செயற்கைக்கோள்கள் பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் Low Earth Orbit) இருந்து இயக்கப்பட உள்ளன.
விருதுகள் 
ஹரிவராசனம் விருது 2020: இளையராஜா 
  • மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை கேரளா அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. 
  • 2020-ம் ஆண்டுகான விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளது.
  • கடந்த 2019-க்கான ஹரிவராசனம் விருதை பாடகி பி.சுசிலாவுக்கு வழங்கப்பட்டது. 
  • இந்த விருதில் ரூ.1 லட்சம் பணம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும்.
பொருளாதார நிகழ்வுகள்
GST குறைதீா்ப்பு குழு 
  • சரக்கு-சேவை வரி (GST) செலுத்துவோரின் புகாா்களை ஆய்வு செய்ய, மாநில மற்றும் பிராந்திய அளவில் GST குறைதீா்ப்பு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர்18-ஆம் தேதி நடைபெற்ற 38-ஆவது GST கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • இதில் மத்திய, மாநில அரசு வரித்துறை அதிகாரிகள், வா்த்தக, தொழில் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள், GST தொடா்புடைய இதர தரப்பினரும் இடம் பெறுவாா்கள். இக்குழு இரண்டு ஆண்டுகளுக்கு பொறுப்பில் இருக்கும். குழு உறுப்பினா்களின் பதவிகாலம் 2 ஆண்டுகளாகும். 
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
உர்சுலா புயல் என்ற ஃபான்ஃபோன் புயல்
  • உர்சுலா புயல் (Typhoon Ursula) என்ற பெயரிலும் வெப்பமண்டல புயல் ஃபான்ஃபோன் புயல் (Typhoon Phanfone) அழைக்கப்படுகிறது. 
  • பிலிப்பைன்ஸ் பிராந்தியத்தில் சூறாவளி ஃபான்ஃபோன் தாக்கியுள்ளது. இது உள்நாட்டில் உர்சுலா சூறாவளிஎன்று அழைக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் பலர் கொல்லப்பட காரணமான இந்த புயல், பசிபிக் சூறாவளி பருவத்தின் ஒரு பகுதியாக வீசியுள்ளது. 
விளையாட்டு நிகழ்வுகள்
குத்துச்சண்டை

ஒலிம்பிக் தகுதிச்சுற்று: மேரி கோம் தகுதி
  • 2020 ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு, தகுதிச்சுற்று இறுதிப்போட்டியில் முன்னாள் ஜூனியா் உலக சாம்பியன் நிஹாத் ஸரீனும், 6 முறை உலக சாம்பியனான மேரி கோமும் 51 கிலோ எடைப் பிரிவில் டிசம்பர் 28-அன்று மோதினா். இதில் 9-1 என்ற கணக்கில் நிஹாத் ஸரீனை வீழ்த்தி 
  • ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டிக்கு இந்தியா சார்பில் மேரி கோம் தகுதிபெற்றார்.
கால்பந்து

சிறப்புத் தூதரான 'மரடோனா' நியமனம் 
  • அர்ஜென்டீனா கால்பந்து அணியின் முன்னாள் வீரரும், உலகின் மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரருமான மரடோனா (59), நகா்ப்புற திறந்தவெளி இடங்களை மீட்டு விளையாட்டு மைதானங்களாக மாற்றுவதற்கான சிறப்புத் தூதராக அந்நாட்டு அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட்

விஸ்டன் இதழின் 'சிறந்த 5 கிரிக்கெட் வீரர்கள்' 
  • கிரிக்கெட் வீரர்களின் பைபிள்’ என்று வர்ணிக்கப்படும் ‘விஸ்டன்’ இதழ் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த 5 கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை (The Five Wisden Cricketers of the Decade) வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி இடம் பிடித்துள்ளார். 
    1. ஸ்டீவன் சுமித் (Steve Smith), ஆஸ்திரேலியா 
    2. எலிசி பெர்ரி (Ellyse Perry) , ஆஸ்திரேலியா (வீராங்கனை)
    3. விராட் கோலி (Virat Kohli), இந்தியா 
    4. டிவில்லியர்ஸ் (AB de Villiers), தென்ஆப்பிரிக்கா
    5. டேல் ஸ்டெயின் (Dale Steyn), தென்ஆப்பிரிக்கா
150 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் 'ஜேம்ஸ் ஆண்டர்சன்'
  • 150 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற சிறப்பை இங்கிலாந்து வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார்.
  • செஞ்சுரியனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார்.
  • 150 டெஸ்டுகள் விளையாடிய வீரர்கள்
  • சச்சின் (200), பாண்டிங் (168), ஸ்டீவ் வாஹ் (168), காலிஸ் (166), சந்தர்பால் (164), டிராவிட் (164), அலாஸ்டர் குக் (161), ஆலன் பார்டர் (156). இவர்களில் காலிஸ் மட்டும் ஆல்ரவுண்டர். ஆண்டர்சனைத் தவிர அதிக டெஸ்டுகளில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர், சக இங்கிலாந்து வீரரான ஸ்டூவர்ட் பிராட் - 134 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார்.
முக்கிய தினங்கள்
சுனாமியின் 15-வது ஆண்டு நினைவு தினம் - டிசம்பர் 26, 2019 
  • தமிழக அரசு சமீபத்தில் 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் 15-வது ஆண்டு நினைவு தினம், 2019 டிசம்பர் 26-அன்று கொண்டாடியது. இந்த சுனாமி, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் (Sumatran Island) நீருக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தோன்றியது.
  • இந்த சுனாமி இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சுனாமி நிகழ்வுகளில் ஒன்றாகும்.
  • இந்த சுனாமி ‘சுமத்ரா அந்தமான் பூகம்பம்’ (Sumatra Andaman earthquake) என்று அழைக்கப்படுகிறது.
முதன் முதலில் தேசிய கீதம் பாடப்பட்ட தினம் - டிசம்பர் 27
  • இந்தியாவின் தேசிய கீதமான "ஜன கண மன" பாடலை இரபீந்திரநாத் தாகூர் எழுதினார். 5 பத்திகளை கொண்ட இப்பாடலின் முதல் பத்தி மட்டுமே தேசிய கீதமாக பாடப்படுகிறது. வங்காள தேச பிரிவினையின் போது இந்த பாடலை தாகூர் எழுதினார். வங்காள மொழியில் எழுதப்பட்ட இந்த பாடல் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • 'ஜன கண மன' பாடலானது முதல் முதலாக, 1911 ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாட்டின் போது பாடப்பட்டது. சரளா தேவி என்பவர் பள்ளி மாணவர்களுடன் இணைந்து பாடினார். 
  • 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதி ஜன கண மன பாடலானது இந்தியாவின் தேசிய கீதமாக அரசால் அங்கீகரிக்கப்பட்டது. அதன் பின் நாட்டின் அனைத்து இடங்களிலும் ஜன மண பாடல் ஒலிக்கப்பட்டது. 52 விநாடிகள் பாடப்படும் இந்த பாடல் அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளின் முடிவில் பாடப்படுகிறது.
உலக வங்கி உருவாக்கப்பட்ட நாள் - டிசம்பர் 27
  • உலக வங்கி (World Bank) என்பது வளரும் நாடுகளின் முதலீட்டு திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஓர் பன்னாட்டு நிதி நிறுவனமாகும். உலக வங்கியின் அலுவல்முறை நோக்கம் தீவிர வறுமையைக் குறைப்பதாகும்.
  • உலக வங்கி (1945) - தகவல்கள்
  • உலக வங்கி, 1945 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் DC நகரில் அமைந்துள்ளது. தற்போது மொத்தம் 189 நாடுகள் இவ்வமைப்பிலு உறுப்பினர்களாக உள்ளன. ஜிம் யோங் கிம் இதன் தலைவராக உள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் உருவாகிய நாள் - டிசம்பர் 28
  • இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ், 1885-ம் ஆண்டு டிசம்பர் 28 அன்று தொடங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி தொடக்க காலத்தில் இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை. அப்போது இதன் குறிக்கோள் கல்வி கற்ற இந்தியர்களுக்கு அரசில் பெரும் பங்கு வாங்கி தருவதாக இருந்தது. 
  • உமேஸ் சந்திர பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, ஆலன் ஆக்டவியன் குமே (Allan Octavian Hume), வில்லியம் வெட்டர்பர்ன் (William Wedderburn), தாதாபாய் நௌரோஜி, தின்சா வாச்சா (Dinshaw Wacha) ஆகியோரால் தொடங்கப்பட்ட இதன் முதல் தலைவராக பம்பாயில் 1885 டிசம்பரில் நடந்த கூட்டத்தில் உமேஸ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Previous Post Next Post