TNPSC Current Affairs December 18-19, 2019 - View and Download PDF

TNPSC Current Affairs December 18, 2019 and December 19, 2019 for forthcoming various TNPSC and Government exams 2020.

நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 18-19, 2019
சர்வதேச நிகழ்வுகள்
பாலின விகித பட்டியல் 2019
  • இந்தியா 112-ஆவது இடம்: உலக பொருளாதார கூட்டமைப்பு (WEF) வெளியிட்டுள்ள பாலின விகித பட்டியலில் இந்தியா 112-ஆவது இடத்தைப்பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 108-ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. 
  • ஐஸ்லாந்து முதலிடம்: உலக அளவில் பாலின சமநிலையை கடைப்பிடிக்கும் ஐஸ்லாந்து இந்தப் பட்டியலில் தொடா்ந்து முதலிடம் பெற்று வருகிறது. 
  • 153-ஆவது இடத்தில் உள்ள யேமன் உலகிலேயே பாலின விகிதம் அதிகம் உள்ள நாடாக உள்ளது.
  • உலக அளவில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினா்களாக 25.2 சதவீதம் பெண்கள் உள்ளனா். அமைச்சா் பதவிகளில் 21.2 சதவீத பெண்கள் உள்ளனா். ஆண்களை ஒப்பிடும்போது, அரசியலில் பெண்கள் 95 ஆண்டுகள் பின்தங்கியவா்களாக உள்ளனா்.
  • பெண்களுக்கு பொருளாதார ரீதியிலான வாய்ப்புகள் இந்தியா (34.5%), பாகிஸ்தான் (32.7%), ஏமன் (27.3%) உள்ளிட்ட நாடுகளில் குறைவாக உள்ளது.
2019-இல் உலகம் முழுவதும் '49 செய்தியாளா்கள் கொலை'
  • 2019-ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் இதுவரை 49 செய்தியாளா்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ‘தேச எல்லைகளற்ற செய்தியாளா்கள்’ அமைப்பு தெரிவித்துள்ளது. பெரும்பாலும் யேமன், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற போா்க் களங்களில் ஏற்பட்ட இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
UNESCO பாரம்பரிய பட்டியலில் 'நுவாட் தாய் மசாஜ்'
  • ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (UNESCO) மதிப்புமிக்க பாரம்பரிய பட்டியலில் சமீபத்தில் 'நுவாட் தாய் மசாஜ்' (Nuad Thai) என்ற தாய்லாந்தின் புகழ்பெற்ற 2000 ஆண்டு பழமையான மசாஜ் சேர்க்கப்பட்டது.
இந்திய நிகழ்வுகள்
ஆந்திரத்துக்கு 3 தலைநகரங்கள் - பரிசீலனை 
  • ஆந்திரப் பிரதேச மாநிலத் தலைநகராக அமராவதி நகரம் இருந்து வருகிறது. மேலும் ஆந்திரத்துக்கு மூன்று தலைநகரங்கள் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. அவற்றின் விவரம்:
  • சட்டப் பேரவைத் தலைநகரம் - அமராவதி
  • நிா்வாக தலைநகரம் - விசாகப்பட்டினம் 
  • நீதித் துறை தலைநகரம் - கா்னூல்.
விண்டேஜ் வாகனங்களான வரைவு அறிவிப்பு 
  • பழைய வாகனங்களான விண்டேஜ் வகை வாகனங்களை (Vintage Vehicle) பதிவு செய்வதை ஒழுங்குபடுத்துவதற்காக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் 2019 டிசம்பர் 15 அன்று வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ITBP வீரர்களுக்கான பிரத்யேக திருமணத்தகவல் தளம் 
  • எல்லை பாதுகாப்புப் படைகளில் ஒன்றான இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை (Indo-Tibetan Border Police) முதல் நடவடிக்கையாக, தனது ஊழியர்களுக்காக ஒரு பிரத்யேக திருமணத்தகவல் தளத்தைத் (matrimonial site ) தொடங்கியுள்ளது.
புதுச்சேரி அரசின் 'தொழில்துறையின் தொடக்கநிலை நிறுவனங்களுக்கான கொள்கை' 
  • புதுச்சேரி ஒன்றியப்பிரதேசம், தொழில்துறையின் தொடக்கநிலை நிறுவனங்களுக்கான கொள்கையை (start up policy) அண்மையில் வெளியிட்டது.
பாதுகாப்பு/விண்வெளி  
சீனாவின் 2-ஆவது விமானம் தாங்கிக் கப்பல் 'ஷாண்டாங்'
  • சீனாவின் 2-ஆவது விமானம் தாங்கிக் கப்பலான 'ஷாண்டாங்' (Shandong) , அந்த நாட்டு கடற்படையில் டிசம்பர் 17-அன்று சோ்க்கப்பட்டது. முழுவதும் உள்நாட்டிலேயே வடிமைத்து கட்டப்பட்ட சீனாவின் முதல் விமானம் தாங்கிக் கப்பல் இதுவாகும்.
  • முதல் விமானம் தாங்கி கப்பல் 'லியோனிங்': சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பலான லியோனிங் (Liaoning), சோவியத் ஒன்றிய காலத்தில் உக்ரேனிலிருந்து 1998-இல் வாங்கப்பட்டது.
737 மேக்ஸ் ரக விமான தயாரிப்பு நிறுத்தம் 
  • அமெரிக்காவின் போயிங் நிறுவனம் , தனது 737 மேக்ஸ் ரக விமானத்தின் தயாரிப்பை டிசம்பர் மாதம் முதல் நிறுத்திவைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. ‘போயிங்’ தயாரித்த ‘737 மேக்ஸ்’ ரக விமானங்கள் 5 மாத இடைவெளியில் இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகின
நியமனங்கள்
சந்திராயன்-3 திட்ட இயக்குநர் - வீரமுத்துவேல்
  • சந்திராயன் 3 Chandrayaan-3) திட்ட இயக்குநராக வீரமுத்துவேல் (P Veeramuthuvel) நியமிக்கப்பட்டுள்ளார். சந்திராயன் 3 திட்ட இயக்குநராக இருந்து வந்த வனிதா (M Vanitha) செயற்கைக்கோள், தகவல் மேலாண்மை பிரிவு துணை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க-இந்திய வா்த்தக கவுன்சில் இயக்குநா் குழு - மல்லிகா ஸ்ரீனிவாசன் நியமனம்
  • அமெரிக்க வா்த்தக சங்கத்தின் அமெரிக்க-இந்திய வா்த்தக கவுன்சில் இயக்குா் குழுவில் டிராக்டா்ஸ் அண்டு ஃபாா்ம் எக்கியூப்மெண்ட்ஸ் (TAFE) நிறுவனத்தின் தலைவா் மல்லிகா ஸ்ரீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். 
விருதுகள்
ஜனாதிபதியின் வண்ணங்கள் விருது 2019: குஜராத் காவல்துறை
  • குஜராத் மாநிலத்தின் காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ணங்கள் விருது -2019 (President Colours Award -2019) வழங்கப்பட்டுள்ளது. காந்தி நகரில் உள்ள காரை போலீஸ் அகாடமியில் டிசம்பர் 15 அன்று நடைபெற்ற விழாவில் குஜராத் காவல்துறைக்கு துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு ‘ஜனாதிபதி வண்ணங்கள்’ விருதை வழங்கினார்.
  • ஏழாவது மாநிலம்: குஜராத் இப்போது மதிப்புமிக்க ஜனாதிபதியின் வண்ணங்களைப் பெறும் ஏழாவது மாநிலமாக மாறியுள்ளது, இது நிஷான் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு சின்னமாகும், இது குஜராத்தின் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் தங்கள் சீருடையில் இடது கையில் இந்த சின்னத்தை அணிந்திருப்பர்.
விண்வெளி ஆஸ்கார் விருது 2019 - ப்ளூ ஸ்கை அனலிட்டிக்ஸ்
  • பின்லாந்தின் ஹெல்சின்கியில் நடைபெற்ற ஐரோப்பிய விண்வெளி வாரத்தின் இடையே நடந்த விழாவில், ப்ளூ ஸ்கை அனலிட்டிக்ஸ் (Blue Sky Analytics) நிறுவனம், 2019 சர்வதேச கோப்பர்நிக்கஸ் மாஸ்டர்ஸ் போட்டியில், விண்வெளி ஆஸ்கார் (Space Oscars) விருதுகளை வென்றது.
ICC பெண்கள் கிரிக்கெட் விருதுகள் 2019

  • 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ICC), டிசம்பர் 17-அன்று வெளியிட்டது. 
  • விருதுகள்/வீராங்கனைகள் விவரம்:
  • சிறந்த கிரிக்கெட் வீராங்கனை, ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீராங்கனை விருது - எல்சி பெர்ரி (ஆஸ்திரேலியா)  
  • எல்சி பெர்ரி, இந்த ஆண்டில் ஒருநாள் போட்டியில் 441 ரன்னும், 21 விக்கெட்டும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 3 சதம் அடித்துள்ளார். 20 ஓவர் போட்டியில் 1,000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை கடந்த முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். 
  • சிறந்த 20 ஓவர் வீராங்கனை விருது - அலிசா ஹீலி (ஆஸ்திரேலியா) 
  • அலிசா ஹீலி, இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 148 ரன்கள் குவித்து சாதனை படைத்து இருந்தார். 
  • வளர்ந்து வரும் வீராங்கனை விருது - சனிதா சுதிருயாங் (தாய்லாந்து) 
  • கனவு லெவன் அணிகள்/வீராங்கனைகள்
  • இந்த ஆண்டுக்கான ICC கனவு லெவன் அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிக்கான அணியில் இந்திய வீராங்கனைகள் மந்தனா, ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூனம் யாதவ் ஆகியோரும், 20 ஓவர் போட்டிக்கான அணியில் இந்திய வீராங்கனைகள் மந்தனா, தீப்தி ஷர்மா, ராதா யாதவ் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.
இன்டர்நேஷனல் மெடிக்கல் ஜெர்னல் விருது 2019 - பிரதாப் ரெட்டி
  • 'இன்டர்நேஷனல் மெடிக்கல் ஜெர்னல்' சார்பில் சென்னை, அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டிக்கு (Prathap C. Reddy), வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்  

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 'இரண்டாக பிரிப்பு'
  • சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கப்படவுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ‘புகழ்பெற்ற நிறுவனம்’ (Institutions of Eminence) என்ற அந்தஸ்தை சமீபத்தில் வழங்கியது.
  • சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவதால், அண்ணா பல்கலைக்கழகத்தின் சட்டம் 1978 மற்றும் புதுசட்டம் திருத்தம் ஆகியவற்றின்படி அண்ணா பல்கலைக்கழகத்தை அண்ணா புகழ்பெற்ற நிறுவனம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் என்று இரண்டாக பிரிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டிற்கு GST இழப்பீடு ரூ.1,898 கோடி 
  • தமிழ்நாட்டிற்கு GST இழப்பீடாக மத்திய அரசு ரூ.1,898 கோடி வழங்கியுள்ளது. GST-யால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிகட்ட டிசம்பர் 16-அன்று மத்திய அரசு இழப்பீடாக ரூ.35,298 கோடி ஒதுக்கியது.
  • தமிழ்நாட்டிற்கு மட்டும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. (IGST) நிலுவைத்தொகையாக ரூ.4,072.03 கோடியும், GST இழப்பீடாக ரூ.3,236.32 கோடியும் மத்திய அரசு வழங்க வேண்டியுள்ளது.
  • நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில், 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (GST) கொண்டுவரப்பட்டது.
தமிழ்நாடு வாக்காளர்கள் எண்ணிக்கை - 6,00,01,329
  • உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர்கள் பட்டியலுடன் துணை வாக்காளர்கள் பட்டியல் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியை தாண்டி உள்ளது.
  • தமிழகத்தில் தற்போதுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே ஆயிரத்து 329 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 2 கோடியே 96 லட்சத்து 46 ஆயிரத்து 287 பேர் ஆண்கள், 3 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 118 பேர் பெண்கள், 5,924 பேர் மூன்றாம் பாலினத்தவர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்: பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பு 
  • சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் நடைபெற்ற பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் குறித்த இரண்டு நாள் கணக்கெடுப்பில் 201 பறவை இனங்கள், 157 வண்ணத்துப்பூச்சி இனங்கள் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
  • தமிழகத்தில் நான்காவது புலிகள் காப்பகமாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
பேட்மிண்டன்

சர்வதேச பேட்மிண்டன் தரவரிசை 
  • சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை டிசம்பர் 17-அன்று வெளியிட்டது. முக்கிய வீரர்/வீராங்கனைகள் விவரம்:
  • பெண்கள் ஒற்றையர் பிரிவு 
    • சென் யூ பே (சீனா) - 1-வது இடம் 
    • தாய் ஜூ யிங் (சீனதைபே) - 2-வது இடம் 
    • பி.வி.சிந்து (இந்தியா) - 6-வது இடம் 
    • சாய்னா நேவால் (இந்தியா) - 12-வது இடம் 
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு 
    • கென்டோ மோமோட்டா (ஜப்பான்)
    • சாய் பிரனீத் (இந்தியா) - 11-வது இடம் 
    • ஸ்ரீகாந்த் (இந்தியா) - 12-வது இடம் 
    • லக்‌ஷயா சென் (இந்தியா) - 32-வது இடம்
முக்கிய தினங்கள்
சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் - டிசம்பர் 18
  • சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் (International Migrants Day) ஆண்டுதோறும், டிசம்பர் 18 அன்று அனுசரிக்கப்படுகிறது. 
  • 2019 சர்வதேச புலம்பெயர்ந்தோர் தின மையக்கருத்து: "We Together".
அரபு மொழி நாள் (Arabic Language Day) - டிசம்பர் 18

கோவா விடுதலையான நாள் - டிசம்பர் 19, 1961 
  • போர்ச்சுகீசியர்களின் பிடியில் இருந்து,கோவா மாநிலம், 1961 டிசம்பர் 19 இல் "ஆபரேஷன் விஜய்" எனும் ராணுவ நடவடிக்கையின் மூலம் இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது. 1987 மே 30-ல் கோவா இந்தியாவின் 25-வது மாநிலம் என்ற அந்தஸ்தைப் பெற்றது.
PDF Download
Previous Post Next Post