TNPSC Group 4 Vacancy Increased to 9398 Posts

Latest Group 4 Vacancy Detail 

குரூப் 4 பணியிடங்கள் எண்ணிக்கை - 9398 ஆக அதிகரிப்பு
  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி-4-ல் (குரூப்-4) அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவி ஆகியவற்றை உள்ளடக்கி 6 ஆயிரத்து 491 காலி இடங்களுக்கான அறிவிப்பை 9 ஆயிரத்து 398 ஆக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. 
  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தொகுதி-4-ல் (GROUP-4) அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ) - 397, ஜூனியர் அசிஸ்டெண்ட் (நான் செக்யூரிட்டி) - 2688, பில் கலெக்டர், கிரேடு - I -34, பீல்டு சர்வேயர் - 509, டிராப்ட்ஸ்மேன்- 74, தட்டச்சர் - 1901 மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் -784 ஆகியவற்றை உள்ளடக்கி 6 ஆயிரத்து 491 காலி இடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி வெளியிட்டது. இதற்கு 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
  • இதற்கான தேர்வு 2019 செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 575 தேர்வு மையங்களில் நடந்தது. இந்த நிலையில் அதற்கான தேர்வு முடிவை TNPSC நிர்வாகம் நவம்பர் 12 ஆம் தேதி வெளியிட்டது. 
  • விண்ணப்பித்து தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண்கள் www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. தேர்வாணையத்தின் விதிமுறைகளின்படி, 12 லட்சத்து 76 ஆயிரத்து 108 பேரின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது.
  • தேர்வு நடந்த நாளில் இருந்து 72 நாட்களில் தரவரிசைப்படுத்தி தேர்வு முடிவுகளை குறைவான நாட்களில் வெளியிட்டிருந்தது தேர்வாணைய வரலாற்றில் இது முதன்முறை ஆகும். இதற்கு முன்பு 105 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
  • நவம்பர் 25-அன்று, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தொகுதி-4-ல் (GROUP4) அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவி ஆகியவற்றை உள்ளடக்கி 6 ஆயிரத்து 491 காலி இடங்களுக்கான அறிவிப்பை 9 ஆயிரத்து 398 ஆக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. Courtesy: Dinamani, 25.11.2019.
TNPSC Group 4 Increased Vacancy - Notification 25.11.2019 - Click Here PDF

TNPSC Group 4 Increased posts details
TNPSC Group 4 Increased posts details

Post a Comment (0)
Previous Post Next Post