TNPSC Current Affairs November 9-10, 2019

நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 9-10, 2019
சர்வதேச நிகழ்வுகள் 
இந்தியா-பாகிஸ்தான் இடையே 'கா்தார்பூா் வழித்தடம்' திறப்பு 
 • சீக்கிய மதத்தை நிறுவியவரும், அதன் முதல் குருவுமான குருநானக்கின் பிறந்த தினம் நவம்பர் 12-அன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், கா்தார்பூரில் உள்ள தா்பார் சாஹிப் குருத்வாராவுக்கு சீக்கியா்கள் ஆண்டுதோறும் யாத்திரை செல்வது வழக்கம். இந்த கா்தார்பூர் தா்பார் சாஹிப் குருத்வாராவை குருநானக் கடந்த 1522-இல் நிறுவினார். 
 • இந்த யாத்திரை மேற்கொள்ளும் சீக்கியா்களுக்கு வசதியாக, இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து பாகிஸ்தானின் கா்தார்பூா் குருத்வாரா வரை சாலை வழித்தடம் அமைக்கபட்டது. கா்தார்பூா் வழித்தடத்தை இந்தியப் பகுதியில் பிரதமா் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பகுதியில் அந்நாட்டின் பிரதமா் இம்ரான் கானும் நவம்பர் 9-அன்று திறந்துவைத்தனா்.
 • சுமார் 4.5 கி.மீ. தொலைவுகொண்ட இந்த வழித்தடம் வழியாகச் செல்லும் யாத்ரீகா்கள், நுழைவு இசைவு (விசா) இல்லாமல் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள முடியும். 
 • 500-க்கும் மேற்பட்டோரை கொண்ட இந்தியாவின் முதல் புனிதப்பயணிகள் குழுவை, பிரதமர் மோடி கர்தார்பூருக்கு வழியனுப்பி வைத்தார். கியானி கர்பிரீத் சிங் தலைமையிலான குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி குர்சரண் கவுர், பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங், மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் சுக்பீர்சிங் பாதல், முன்னாள் கிரிக்கெட் வீரர் நவஜோத் சிங் சித்து, சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி உறுப்பினர்கள், 117 சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரகள் இடம்பெற்றிருந்தனர்.
மிச்சிகன் பல்கலைக்கழகம்-AIIMS இணைந்து 'மரபணு சோதனை' 
 • அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகம் (University of Michigan) டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) மற்றும் மணிப்பாலில் உள்ள கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி (Kasturba Medical College, Manipal) ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவில் மரபணு பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளது.
தேசிய நிகழ்வுகள்
 • மாநிலங்களின் நீதி வழங்கல் தரவரிசை 2019 - மகாராஷ்டிரா முதலிடம் 
 • டாடா அறக்கட்டளையின் (Tata Trusts) முன்முயற்சியுடன் Common Cause, Commonwealth Human Rights Initiative, DAKSH, TISS- Prayas and Vidhi Centre for Legal Policy உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து வெளியிட்ட முதலாவது 2019 இந்திய நீதி அறிக்கையின் (IJR 2019), ஒரு பகுதியாக, இந்தியாவின் நீதி வழங்கல் தொடர்பான மாநிலங்களின் முதல் தரவரிசை (Ranking of States on Justice Delivery 2019) வெளியிடப்பட்டுள்ளது.
 • நீதி வழங்கலில், மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
அயோத்தி-பாபர் மசூதி வழக்கு - உச்சநீதிமன்றம் தீா்ப்பு 
 • உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு, 2.77 ஏக்கா் நிலத்தில் ராமா் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து ஒருமனதாக நவம்பர் 5-ஆம் தேதி தீா்ப்பளித்தது. 
 • முஸ்லிம் தரப்பினா் மசூதி கட்டிக் கொள்வதற்கு அயோத்தி நகரிலேயே 5 ஏக்கா் அளவில் மாற்று இடத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 • உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய விவரங்கள்:
  • சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராம்லல்லா, நிர்மோகி அகரா, சன்னி வக்பு வாரியம் ஆகியவை சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்ற அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது.
  • அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத் தில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • கோவில் கட்டுவதற்காக 3 மாதத்திற்குள் அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இந்த அறக்கட்டளையில் நிர்மோகி அகராவுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கலாம். அறக்கட்டளையின் அதிகார வரம்புகள், கோயில் கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை, 1993-ஆம் ஆண்டு இயற்றிய அயோத்தி நில கையகச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் 
  • சர்ச்சைக்குரிய இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை விவாதத்துக்கு உள்ளாக்க முடியாது.
  • மசூதி கட்டுவதற்காக அயோத்தியில் முக்கியமான பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்கவேண்டும்.
 • அலகாபாத் உயார்நீதிமன்ற தீர்ப்பு-மேல்முறையீடு 
  • 2.77 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அலகாபாத் உயார்நீதிமன்றம், 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் ரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று 2010 செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது.
  • இந்த தீர்ப்பை ஏற்க மறுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
  • அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளனர். நீதிபதிகளின் தீர்ப்பு 1,045 பக்கங்களை கொண்டதாக இருந்தது.
  • பாபரின் படைத்தளபதி மீர்பாகி அங்கு பாபர் மசூதியை கட்டி இருக்கிறார் என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை என்பதும், இஸ்லாமிய முறையிலான அடையாளங்கள் ஏதும் இன்றி இருந்த ஒரு கட்டிடத்தின் மேல்தான் அந்த மசூதி கட்டப்பட்டு உள்ளது என்பதும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
  • ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது அங்கு முஸ்லிம்கள் தொழுகை நடத்தி உள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
  • பாபர் மசூதி, ராமஜென்ம பூமி ஆகியவற்றை உள்ளடக்கிய சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தின் மீதான உரிமை ராம் லல்லாவுக்கு உள்ளது.
நியமனங்கள் 
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் - பதவி விலகல் 
 • மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நவம்பர் 8-அன்று பதவி விலகினார். 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா 105 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இரு கட்சிகளும் முறையே 44 மற்றும் 54 இடங்களை பெற்றன. பிற கட்சிகள் 16 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 13 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தனர். முதல்வர் பதவி யார் ஏற்பது என்பது குறித்து பாரதீய ஜனதா, சிவசேனா இடையே பூசல் ஏற்பட்டது.
கூகிள் இந்தியா நிறுவன புதிய மேலாளர் - சஞ்சய் குப்தா 
 • கூகிள் நிறுவனத்தின் இந்திய நாட்டு மேலாளராக 'சஞ்சய் குப்தா' (Sanjay Gupta) நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சய் குப்தா கூகிள் இந்தியா நிறுவனத்தின் (Google India) புதிய மேலாளராகவும், இந்தியாவுக்கான விற்பனை மற்றும் செயல்பாடுகளின் துணைத் தலைவராகவும் நவம்பர் 8-அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநாடுகள் 
இந்திய பெருங்கடல் ரிம் சங்க கூட்டம் 2019 (அபுதாபி)
 • 19-வது இந்திய பெருங்கடல் ரிம் சங்கத்தின் (IORA Council of Ministers 2019) அமைச்சர்கள் கூட்டம், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் நவம்பர் 7-அன்று நடைபெற்றது.
 • 2019-2021 ஆம் ஆண்டுக்கான இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் (IORA) தலைவராக ஐக்கிய அரபு அமீரகம் நாடு பொறுப்பேற்றுள்ளது.
 • "இந்தியப் பெருங்கடலில் செழிப்புக்கான பகிரப்பட்ட விதியையும் பாதையையும் ஊக்குவித்தல்" (Promoting a Shared Destiny and Path to Prosperity in the Indian Ocean) என்ற மையகருத்தின் கீழ் இந்த மாநாடு நடைபெற்றது.
 • இந்த கூட்டத்தில் மாலத்தீவு குடியரசு இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின், 22 வது உறுப்பினராக முறையாக இணைந்துள்ளது.
இந்திய-பெருங்கடல் ரிம் சங்கம் (1997)
 • இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கம், இந்தியப் பெருங்கடலின் எல்லையில் உள்ள 22 கடலோர மாநிலங்களைக் கொண்ட ஒரு சர்வதேச அமைப்பாகும்.
 • தலைமையகம்: எபேன், குவாட்ரே போர்ன்ஸ், மொரீஷியஸ்
 • நிறுவப்பட்டது: 7 மார்ச் 1997
அவசர மருத்துவம் தொடர்பான 10-வது ஆசிய மாநாடு 2019 (புதுடெல்லி)
 • அவசர மருத்துவம் தொடர்பான 10-வது ஆசிய மாநாடு (ACEM 2019) புதுடெல்லியில் உள்ள லீலா ஆம்பியன்ஸ் கன்வென்ஷன் ஹோட்டலில் நகரத்தில் நவம்பர் 7-10 தேதிகளில் நடைபெற்றது.
 • ACEM: Asian Conference of Emergency Medicine.
'பயங்கரவாதத்திற்கு பணம் இல்லை' மாநாடு 2019
 • 2019-ஆம் ஆண்டிற்கான 'பயங்கரவாதத்திற்கு பணம் இல்லை' (No Money For Terror) மாநாடு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.
 • 2020-ஆம் ஆண்டிற்கான 'பயங்கரவாதத்திற்கு பணம் இல்லை' (No Money For Terror 2020) மாநாடு, இந்தியாவில் நடைபெறுகிறது.
 • 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் நிதி புலனாய்வு அமைப்புக்கள் (FIUs) மற்றும் தி எக்மாண்ட் குழு (The Egmont Group) இணைந்த இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தன. 
 • FIUs: Financial Intelligence Units.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள் 
இந்தியாவின் முதல் காற்று மாசு வலை களஞ்சியம் - IndAIR 
 • இந்தியாவின் முதல் காற்று மாசு வலை களஞ்சியம் “IndAIR” என்ற பெயரில் CSIR அமைப்பால் தொடங்கப்பட்டுள்ளது. 
 • அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்-தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ( (CSIR-NEERI) அமைப்புகள் இணைந்து, சமீபத்தில் நாட்டின் முதல் காற்று தர ஆய்வுகள் ஊடாடும் இணைய களஞ்சியத்தை (Indian Air quality Studies Interactive Repository) வெளியிட்டுள்ளன.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்
தமிழ் அகராதியியல் நாள் விழா - நவம்பர் 8, 2019
 • வீரமாமுனிவரின் தமிழ் தொண்டை போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான நவம்பர் 8-ந்தேதி இந்த ஆண்டு முதல் தமிழ் அகராதியியல் நாளாக கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் சார்பில் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி கலையரங்கில் தமிழ் அகராதியியல் நாள் விழா நவம்பர் 8, நடைபெற்றது. 
9 ஆயிரம் புதிய தமிழ் சொற்கள் கண்டுபிடிப்பு
 • 9 ஆயிரம் புதிய தமிழ் சொற்கள் அடங்கிய குறுந்தகட்டை (CD) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டார். விழாவில் பேசிய ‘தமிழில் இருந்து மற்ற மொழிக்கும், மற்ற மொழியில் இருந்து தமிழுக்கும் மொழி மாற்றம் செய்யும் வகையில் 145 அகராதிகள் உள்ளன. இதில், 9 அகராதியில் மட்டும் 4 லட்சத்து 12 ஆயிரம் சொற்கள் உள்ளன. இதில் 1 லட்சத்து 700 சொற்கள் தனித்துவம் வாய்ந்த சொற்கள் ஆகும். செந்தமிழ் சொற்பிறப்பியல் இணையதளம் மூலம் மாணவ-மாணவிகளும் புதிய தமிழ் சொற்களை பதிவு செய்யலாம்’ என்று விழாவுக்கு முன்னிலை வகித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
மீனாட்சி அம்மன் கோயிலை கட்டியவர், மன்னர் குலசேகர பாண்டியன் 
 • மீனாட்சி கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு தமிழ்நாட்டில் வைகை ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை கட்டியவர், மன்னர் குலசேகர பாண்டியன் அவர்களால் (பொ.ஆண்டு. 1190-1216) கட்டப்பட்டது.
விளையாட்டு நிகழ்வுகள்
ஆக்கி 

உலக கோப்பை ஆக்கி போட்டி 2023 (இந்தியா)
 • 2023-ம் ஆண்டுக்கான 15-வது ஆண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி 2023 ஜனவரி 13-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது.
 • 14-வது ஆண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி (2023 Men’s Hockey World Cup), ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் 2018-ஆம் ஆண்டு நடந்தது. இதில் பெல்ஜியம் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
 • இதன் மூலம் உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டியை அதிக முறை (4-வது முறை) நடத்தும் நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. 1982-ம் ஆண்டு (மும்பை), 2010 (டெல்லி), 2018 (புவனேசுவரம்) ஆகிய ஆண்டுகளிலும் இந்த போட்டி இந்தியாவில் நடந்துள்ளது. ஆண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியை நெதர்லாந்து 3 முறை நடத்தியுள்ளது.
 • பெண்கள் உலக கோப்பை போட்டியை (2022 Women’s World Cup) 2022-ம் அண்டு ஸ்பெயின், நெதர்லாந்து இணைந்து நடத்த உள்ளன.
முக்கிய தினங்கள் 
அக்டோபர் 25 

தேசிய ஆயுர்வேத தினம் - 25 அக்டோபர் 2019
 • தேசிய ஆயுர்வேத தினம் (National Ayurveda Day) ஒவ்வொரு ஆண்டும் தன்வந்தரி ஜெயந்தி (தந்தேராஸ்) என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்த 2019 ஆண்டு ஆயுர்வேத தினம் 25 அக்டோபர் 2019 அன்று அனுசரிக்கப்படுகிறது.
 • 2018-ஆம் ஆண்டு தேசிய ஆயுர்வேத தினம் நவம்பர் 5-அன்று அனுசரிக்கப்பட்டது.
நவம்பர் 09

சட்ட சேவைகள் தினம் - நவம்பர் 9 
 • ஆண்டுதோறும் நவம்பர் 9-ஆம் தேதி சட்ட சேவைகள் தினமாக (Legal Services Day) கொண்டாடப்படுகிறது. 
 • அரசியல் சட்டத்தின் 39-ஆம் பிரிவு: நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சட்ட உதவி கிடைப்பதை அரசியல் சட்டத்தின் 39-ஆம் பிரிவு உறுதி செய்கிறது. 
நவம்பர் 10

உலக அறிவியல் நாள்: 10 நவம்பர்
 • ஆண்டுதோறும் நவம்பர் 10-ஆம் தேதி அன்று அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான உலக அறிவியல் நாள் (World Science Day for Peace and Development) கடைப்படுக்கப்படுகிறது. 
 • 2019 உலக அறிவியல் நாள் கருப்பொருள்: "Open science, leaving no one behind" (அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாத் தரப்பினருக்கும் தங்குதடையின்றி போய்ச்சேர வேண்டும்) என்பதாகும்.
Post a Comment (0)
Previous Post Next Post