TNPSC Current Affairs October 4-5, 2019


நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 4-5, 2019
தேசிய நிகழ்வுகள் 
இந்தியாவின் முதலாவது தனியார் ரெயில் லக்னோ-டெல்லி 'தேஜஸ் எக்ஸ்பிரஸ்'
 • IRCTC-மூலம் இயக்கப்படும் முதலாவது தனியார் ரெயிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து டெல்லிக்கு அக்டோபர் 4-அன்று இயக்கப்பட்டது. 
 • இதனை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கிவைத்தார். 
 • இந்த பாதையில் இயக்கப்படும் முதலாவது வேகமான ரெயில் இதுவாகும். 
 • 6 மணி 15 நிமிடங்களில் இது டெல்லியை அடையும்.
 • நாட்டின் முதலாவது தனியார் ரெயில் இந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஆகும்.
 • தாமதத்திற்கு பயணிகளுக்கு இழப்பீடு 
 • இந்த புது தில்லி-லக்னோ தேஜாஸ் எக்ஸ்பிரஸ் வழித்தட இரயிலில் தாமதத்திற்கு பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் (compensate for train for delays) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 • India's First Private Train: New Delhi-Lucknow Tejas Express.
இந்தியாவின் மிகப்பெரிய ‘சர்கா’ (இராட்டை) நொய்டாவில் திறப்பு 
 • மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு, பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளால் செய்யப்பட்ட, இந்தியாவின் மிகப்பெரிய ‘சர்கா’ (நூற்பு இராட்டை, 1,650 கிலோ சுழல் சக்கரம்) மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்களால் நொய்டா நகரில், திறந்து வைக்கப்பட்டது.
 • காந்தியின் சுதேசி கனவை (தன்னிறைவு மற்றும் தன்னம்பிக்கை) இந்த ‘சர்கா’ குறிக்கிறது.
 • இது 14 அடி × 20 அடி × 8 அடி அளவிடும் மற்றும் 1,250 கிலோ பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆனதாகும். இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸால், நாட்டின் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய பிளாஸ்டிக் கழிவுகளால் ஆன சர்கா அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
 • India’s largest ‘charkha’.
திறந்த மலம் கழித்தல் இல்லாத நாடாக 'இந்தியா' அறிவிப்பு 
 • குஜராத்தில் அகமதாபாத் நகரில், பிரதமர் நரேந்திர மோடி, ஸ்வச் பாரத் திவாஸ்-2019 (Swachh Bharat Diwas 2019) அக்டோபர் 2 அன்று தொடங்கிவைத்தார். இந்தியாவை திறந்த மலம் கழித்தல் இல்லாத நாடாக (Open Defecation Free-ODF) நாடாக அறிவித்தார்.
 • மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் தபால்தலை மற்றும் வெள்ளி நாணயத்தையும் வெளியிட்டார்.
பிளாஸ்டிக் இல்லாத இந்தியா (2022)
 • 2022 ஆம் ஆண்டளவில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் இல்லாத இந்தியா என்ற இலக்கை அரசாங்கம் அடையும் என்று பிரதமர் தெரிவித்தார்.
 • உத்தரப்பிரதேச மாநிலத்தில் ‘பண்டைய நதி’ தோண்டி கண்டுபிடிப்பு 
 • கங்கை மற்றும் யமுனா நதிகளை இணைத்த ‘பண்டைய நதி’யை (Ancient River) உத்தரப்பிரதேச மாநிலத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
 • கங்கா, யமுனா நதிகள் சங்கமிக்கும் பிரயாகராஜ் நகரில் (முன்னர் அலகாபாத்) ஒரு பழைய, காய்ந்த நதியை மத்திய நீர் அமைச்சகம் தோண்டி கண்டுபிடித்துள்ளது.
 • பழங்கால புதைந்துள்ள நதி
  • புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நதி, நிலத்தடி மேம்பாட்டுக்காக மீட்டுருவாக்குவதே நோக்கம் ஆகும். இந்த "பழங்கால புதைந்துள்ள நதி" சுமார் 4 கி.மீ அகலமும், 45 கி.மீ நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்ட அடுக்குடன் மண்ணில் புதைத்துள்ளது.
Fit India Plog run-பிளாஸ்டிக் சேகரிப்பு ஓட்டம் 2019
 • மகாத்மா காந்தியின் 150-வது காந்தி பிறந்த தினத்தை குறிக்கும் விதமாக புதுடில்லியில் இந்திரா காந்தி மைதானத்தில் நாடு தழுவிய ‘ஃபிட் இந்தியா பிளாக் ரன்’ (Fit India Plog run) என்ற பிளாஸ்டிக் சேகரிப்பு ஓட்டத்தை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு தொடங்கிவைத்தார்.
 • உடற்பயிற்சி மற்றும் தூய்மையை இந்த ஓட்டம் ஒன்றாக இணைக்கிறது.
 • தேசிய தலைநகரில் 225 இடங்கள் உட்பட நாடு முழுவதும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஓட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தியா-இலங்கை இடையே காந்தி தபால்தலை பரிமாற்றம்
 • மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா அக்டோபர் 2-ந் தேதி, இலங்கை அரசு சார்பில் கடந்த 2-ந் தேதி காந்தி சிறப்பு தபால்தலை-உறையை அந்நாட்டின் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வெளியிட்டார்.
 • சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரக அலுவலகத்தில் இருநாட்டு சார்பிலும் வெளியிடப்பட்ட காந்தியின் தபால்தலை-உறை பரிமாறி கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணம்-இந்தியா 'நேரடி விமான சேவை'
 • இலங்கை யாழ்ப்பாணம் நகரில் உள்ள பலாலி ராணுவ விமானநிலையம், இந்திய நிதி உதவியுடன் சர்வதேச விமானநிலையமாக மாற்றப்பட்டுள்ளது. 
 • அக்டோபர் 17-ந்தேதி பலாலி விமானநிலையம், சர்வதேச விமானநிலையமாக (Jaffna International Airport, Palali/Palaly) அறிவிக்கப்பட உள்ளது.
 • பலாலியில் இருந்து முதற்கட்டமாக இந்திய நகரங்களுக்கும், மாலத்தீவுக்கும் 15-ந்தேதியே விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் - 611 கைதிகள் விடுதலை
 • மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி சிறப்பு நிவாரண திட்டத்தின் கீழ், அக்டோபர் 2-ந்தேதி நாடு முழுவதும், 611 கைதிகளை மத்திய அரசு விடுதலை செய்துள்ளது 
 • மூன்று 3 கட்டங்களாக கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி முதற்கட்டமாக கடந்த 2018 அக்டோபர் மாதம் 2-ந்தேதி 919 கைதிகளும், 2-வது கட்டமாக 2019 ஏப்ரல் மாதம் 6-ந்தேதி 505 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டு இருந்தனர்.
 • தற்போது காந்தியின் 150-வது பிறந்தநாள் நிறைவு விழாவை முன்னிட்டு 2019 அக்டோபர் 2-ந்தேதி நாடு முழுவதும் 611 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 
ஆதார் ஆணையத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்யும் 'சசி தரூா் குழு'
 • தகவல் தொழில்நுட்ப விவகாரங்களை சசி தரூா் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு கையாண்டு வருகிறது.
 • தற்போது, குடிமக்களுக்கு ஆதாா் அடையாள அட்டைகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் செயல்பாடுகளை ஆய்வுசெய்வதற்கு சசி தரூா் தலைமையிலான நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 
ஐதராபாத்தில் மைக்ரான் டெக்னாலஜிஸ்’ சா்வதேச வளா்ச்சி மையம் - திறப்பு 
 • தெலங்கானா மாநிலம், ஐதராபாத் நகரில், ‘மைக்ரான் டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் சா்வதேச வளா்ச்சி மையம் அக்டோபர் 4-அன்று திறக்கப்பட்டது. 
 • மைக்ரான் டெக்னாலஜிஸ் (Micron Technology Inc), அமெரிக்காவை சேர்ந்த செமி-கண்டக்டர் நிறுவனம் ஆகும்.
 • இந்த நிகழ்ச்சியில் நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (CEO) அமிதாப் காந்த் பங்கேற்று, தெரிவித்த குறிப்புகள் சில: 
 • 2004 முதல் 2018 வரையிலான 14 ஆண்டு காலகட்டத்தில் 30 கோடி பேரின் வாழ்க்கை நிலை, வறுமை கோட்டின் கீழ் இருந்து, வறுமையற்றவா்களாக மாற்றப்பட்டுள்ளது.
 • அரசின் 600 திட்டங்களுக்கான மானியங்கள் டிஜிட்டல் முறையில் பயனாளிகளுக்கு பணப்பரிமாற்றம் செய்யப்படுகிறது.
நியமனங்கள்
அமராவதி மாவட்ட தேர்தல் ஆணைய தூதராக தேர்வு 'பபிதா ததே' தேர்வு 
 • கோன் பனேகா க்ரோர்பதி (Kaun Banega Crorepati) போட்டியில், ரூ .1 கோடி வென்ற பபிதா ததே (Babita Tade) , மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான அமராவதி மாவட்டத்தின் தேர்தல் ஆணைய தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • SVEEP திட்டம் 
  • SVEEP திட்டதின் கீழ் இவர் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • முறையான வாக்காளர்களின் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு (SVEEP-Systematic Voters’ Education and Electoral Participation) மற்றும் வாக்காளர் விழிப்புணர்வை பரப்புவதற்கும், நாட்டில் வாக்காளர் கல்வியறிவை மேம்படுத்துவதற்கும் தூதர்களை நியமிப்பபது, தேர்தல் ஆணையத்தின் முதன்மை திட்டமாகும்.
விருதுகள்/பரிசுகள்
தூய்மைக்கான தூதர் விருது 2019 - சச்சின் டெண்டுல்கர்
 • 2019-ஆண்டிற்கான 'மிகவும் பயனுள்ள தூய்மைக்கான தூதர்' விருது (Most Effective Swachhata Ambassador award-2019) சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 
 • மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது புகழ் மற்றும் புகழைப் பயன்படுத்தி ஒரு தூய்மையான பாரத திட்டத்தின் இலக்கை இந்தியா அடைவதை உறுதிசெய்ததற்காக, குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் ‘மிகவும் பயனுள்ள சுவச்சதா தூதர்’ என்ற விருதை சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு வழங்கியுள்ளார்.
வயோஷ்ரேஷ்ட சம்மான் விருது 2019 - தமிழ்நாடு 
 • Vayoshreshtha Samman-2019 
  • 2019 சர்வதேச முதியோர் தினத்தை (அக்டோபர் 1, 2019) கொண்டாடும் ஒரு பகுதியாக, வயோஷ்ரேஷ்ட சம்மான் விருதை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வழங்குகிறது.
  • மூத்த குடிமக்கள் நல சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு, 2019-ஆம் ஆண்டுக்கான "வயோஷ்ரேஷ்ட சம்மான் விருது-2019 வழங்கப்பட்டுள்ளது.
 • மூத்த குடிமக்களின் நலன் சட்டம் 2007
  • பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் நலனுக்காக 2007-ம் ஆண்டு இந்த சட்டம் இயற்றப்பட்டது.
  • டெல்லியில் அக்டோபர் 3-அன்று நடைபெற்ற விழாவில், இதற்கான விருதை குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் வழங்கினார். 
  • தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா பெற்றுக்கொண்டார்.   
மாநாடுகள்/விழா
இந்தியா-வங்காளதேச தொழில்துறை கூட்டம்-2019
 • டெல்லியில் ‘இந்தியா-வங்காளதேச தொழில்துறை கூட்டம்’ (India-Bangladesh Business forum 2019, New Delhi) அக்டோபர் 4-அன்று நடைபெற்றது. 
 • மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல், வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா ஆகியோர் பங்கேற்றனர். 
 • இதன் முக்கிய விவரங்கள்:
  • வங்காளதேசத்தில் 12 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் 3 நாடுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மோங்லா, பெராமரா, மிா்சராய் ஆகிய பகுதிகளில் 3 மண்டலங்கள் இந்திய முதலீட்டாளா்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
  • இரு நாடுகளுக்கு இடையிலான வா்த்தகத்தின் மதிப்பு ரூ.70,000 கோடியாக உள்ளது. 
  • இந்தியா-வங்கதேசம் இடையே இயக்கப்பட்டு வரும் பந்தன் எக்ஸ்பிரஸ், மெய்ட்ரீ எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரயில்களின் இயக்கத்தை அதிகரிக்க இந்தியா பரிசீலித்து வருகிறது.
பொருளாதார நிகழ்வுகள்
இந்திய ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை, அக்டோபர் 4, 2019
 • இந்திய ரிசர்வ் வங்கி இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடும் நிதிக் கொள்கை குறித்த அறிவிப்பை, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அக்டோபர் 4-அன்று வெளியிட்டார்.
 • ரிசர்வ் வங்கி, குறுகிய கால அடிப்படையில் வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான (ரெப்போ) வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 5.15 சதவீதமாக நிர்ணயித்தது. 
 • ரிசர்வ் வங்கி, பிற வணிக வங்கிகளிடமிருந்து பெறும் கடனுக்கான வட்டி விகிதமும் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 4.9 சதவீதமாக குறைந்துள்ளது.
 • நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 
 • ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகவும் குறைவாக 5 சதவீதமானது. 
பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு விலக்கல்: புதிய நடைமுறை 
 • பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடவடிக்கையை விரைவுபடுத்துவதற்கான புதிய நடைமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 
 • புதிய நடைமுறையின் படி, பொதுத்துறை நிறுவனத்தின் பங்கு விலக்கல் நடவடிக்கையில் பங்கேற்பதற்கான அதிகாரம், நிதியமைச்சகத்தின் கீழ் வரும் முதலீடுகள் மற்றும் பொதுச் சொத்து நிா்வாகத் துறைக்கும் (DIPAM) அளிக்கப்படுகிறது.
 • தற்போது, பங்கு விலக்கல் செய்ய வேண்டிய பொதுத்துறை நிறுவனங்களை நீதி ஆயோக் அமைப்பே அடையாளம் கண்டு வருகிறது. DIPAM-துறையும் பங்கு விலக்கல்விவகாரத்தில் நீதி ஆயோக் அமைப்புடன் இணைந்து செயல்படும்.
 • DIPAM: Department of Investment and Public Asset Management.
புத்தக வெளியீடு 
India and the Netherlands-Past, Present and Future - Venu Rajamony
 • ‘இந்தியா மற்றும் நெதர்லாந்து - கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்’ (India and the Netherlands – Past, Present and Future) புத்தகத்தை நெதர்லாந்தில் உள்ள இந்திய தூதர் வேணு ராஜமோனி (Venu Rajamony) எழுதியுள்ளார்.
 தமிழ்நாடு நிகழ்வுகள் 
ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் அமையும் 'தமிழ் இருக்கை' 
 • அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை அமையவுள்ளது.
 • ‘ஹூஸ்டன் தமிழ் கல்வி இருக்கை’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, இதன்மூலம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.14 கோடி (2 மில்லியன் அமெரிக்க டாலர்) திரட்டி ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் கல்வி இருக்கை அமைப்பதற்காக வழங்கபட்டுள்ளது.
 • இதன்மூலம் பழமையான தமிழ் மொழி பற்றியும், தமிழ் கலாசாரம் பற்றியும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் கற்க முடியும்.
பள்ளிக் கல்வித்தர குறியீட்டு அட்டவணை (SEQI)
 • இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள கல்வித்தரத்தை நிர்ணயம் செய்வதற்கு 44 பிரிவுகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
 • இந்த பள்ளிக்கல்வித் தரம் பற்றிய குறியீட்டு அட்டவணையை  நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டு வருகிறது.
 • தமிழ்நாடு இரண்டாம் இடம்
  • அதன் அடிப்படையில், பள்ளிக் கல்வியில் ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த செயல் திறனை குறியீட்டு புள்ளிகளாக கணக்கிட்டு நிதி ஆயோக் தர வரிசை செய்கிறது.
  • 2015-16-ம் ஆண்டிலும், 2016-17-ம் ஆண்டிலும் முறையே 77.6 மற்றும் 82.2 சதவீத புள்ளிகளைப் பெற்று கேரளா மாநிலம் முதலிடம் பிடித்தது. அதற்கு அடுத்தபடியாக இந்த இரண்டு ஆண்டுகளிலும் தமிழ்நாடு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
  • 2015-16-ம் ஆண்டில் 63.2 சதவீதமும், 2016-17-ம் ஆண்டில் 73.4 சதவீதம் புள்ளிகளுடன் தமிழகம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. கேரளாவில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 50 லட்சம் என்ற அளவில்தான் உள்ளது. ஆனால் தமிழகத்தில் 1.32 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • 2015-16-ம் ஆண்டில் மராட்டியமும், 2016-17-ம் ஆண்டில் அரியானாவும் மூன்றாமிடத்தை பெற்றன.
 • கல்வி மேலாண்மை தகவல் தள (எமிஸ்) அடையாளக் குறியீடு
  • மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு உபகரணங்களை வழங்குதல், மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கும் கல்வி மேலாண்மை தகவல் தளத்தில் (எமிஸ்) அடையாளக் குறியீடு ஏற்படுத்துதல் ஆகியவற்றில் தமிழகம் 100 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
 • ஸ்வாச் வித்யாலயா புரஸ்கார் விருது-100%
  • கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளை தூய்மையாக பராமரித்ததற்காக ஸ்வாச் வித்யாலயா புரஸ்கார் விருதை தமிழகம் பெற்றுள்ளது. டிஜிட்டல் முறை கல்வி கற்பித்த வகையில் ‘தீக்‌ஷா ஆப்’ செயலியை அதிக அளவு பயன்படுத்தியதிலும் தமிழகத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது. 
விளையாட்டு நிகழ்வுகள்
கிரிக்கெட்
கிரிக்கெட் சங்க தலைவர்கள் - தேர்வு 
 • இராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் - வைபவ் கெலாட்
 • இராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்க தலைவராக வைபவ் கெலாட் (Vaibhav Gehlot) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 • இவர் இராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் ஆவார்.
 • கர்நாடக கிரிக்கெட் சங்க தலைவர் - ரோஜர் பின்னி
 • கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தலைவராக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் 'ரோஜர் பின்னி' (Roger Binny) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 • மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் - டாக்டர் விஜய் பட்டீல் 
 • மும்பை கிரிக்கெட் சங்க தலைவராக டாக்டர் விஜய் பட்டீல் (Dr. Vijay Patil) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
இந்தியா-தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடர் 2019-சாதனை குறிப்புகள்
 • அதிக முறை 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகள்-ரவிச்சந்திரன் அஸ்வின்
  • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் அதிக முறை 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சிறப்பை ரவிச்சந்திரன் அஸ்வின் (இதற்கு முன்பு ஹர்பஜன்சிங், ஸ்ரீநாத் தலா 4 முறை) பெற்றார்.
 • 200 விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்திய இடக்கை பவுலர்-இரவீந்திர ஜடேஜா
  • இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா, 200 விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்திய இடக்கை பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
  • ஜடேஜா தனது 44-வது டெஸ்டில் இந்த இலக்கை எட்டியிருக்கிறார், இலங்கை இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் 47-வது டெஸ்டில் இந்த இலக்கை எட்டியதே முந்தைய சாதனையாகும். 
100, 20 ஓவர் போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியர் - ஹர்மன்பிரீத் கவுர் 
 • இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 100 ஆட்டங்களில் விளையாடிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். 
 • ஆண்கள் கிரிக்கெட்டில் இந்திய அளவில் டோனி, ரோகித் சர்மா தலா 98 ஆட்டங்களில் பங்கேற்றதே அதிகபட்சமாகும்.
கூடைப்பந்து
இந்தியாவில் முதன்முறையாக NBA கூடைப்பந்து போட்டிகள் 
 • அமெரிக்காவில் புகழ்பெற்ற NBA கூடைப்பந்து விளையாட்டு போட்டி (National Basketball Association) முதல்முறையாக இந்தியாவின் மும்பை நகரில் நடத்தப்படுகிறது. 
 • NBA நட்புறவு ஆட்டம் (NBA India Games) ஒன்றில் இன்டியானா பேசர்ஸ்-சாக்ரமென்டோ கிங்ஸ் அணிகள் மும்பையில் அக்டோபர் 4-அன்று விளையாடின. 
தடகளம் 
உலக தடகள சாம்பியன்ஷிப் 2019 - பதக்க குறிப்புகள் 
 • 17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. 
 • இதில் பதக்கங்கள் வென்ற வீரர்/வீராங்கனைகள் விவரம்:
  • 400 மீட்டர் ஓட்டம் (பெண்கள்)
   • சல்வா எய்ட் நாசர் (பக்ரைன்) - தங்கப்பதக்கம் (48.14 வினாடிகள்)
  • குண்டு எறிதல் (பெண்கள்)
   • கோங் லிஜியாவ் (சீனா) - தங்கப்பதக்கம்(19.55 மீ.)
  • ஹெப்டத்லான் (பெண்கள்).
   • கேத்ரினா ஜான்சன் தாம்சன் (இங்கிலாந்து) - தங்கப்பதக்கம் (6,981 புள்ளிகள்) 
   • (ஹெப்டத்லான் என்பது, நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 100 மீட்டர் தடை ஓட்டம் உள்பட 7 பந்தயங்களை உள்ளடக்கியது) 
  • டெக்கத்லான்
   • நிக்லாஸ் கால் ( ஜெர்மனி) - தங்கப்பதக்கம் (8,691 புள்ளிகள்) 
   • (டெக்கத்லான் என்பது 10 பந்தயங்களை உள்ளடக்கியது).
முக்கிய தினங்கள் 
உலக விண்வெளி வாரம் அக்டோபர் 4-10, 2019 
 • உலக விண்வெளி வாரம் 2019
  • உலக விண்வெளி வாரம், அக்டோபர் 4-10, 2019 வரை (World Space Week 2019 October 4-10) கடைபிடிக்கப்படும் வருடாந்திர விண்வெளி நிகழ்வு ஆகும்.
  • உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுவதன் நோக்கம்:
  • விண்வெளி பற்றி மாணவர்களை ஊக்குவிப்பது, மூலம் நாளைய பணியாளர்களை உருவாக்க உதவுகிறது, விண்வெளித் திட்ட நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது. 
  • விண்வெளி மற்றும் கல்வித்துறையில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்க்கிறது.
 • 2019 உலக விண்வெளி வார மையக்கருத்து: 
  • “நிலவு: நட்சத்திரங்களுக்கு நுழைவாயில்” (The Moon: Gateway to the Stars) என்பதாகும்.
அக்டோபர் 5 - உலக ஆசிரியர்கள் தினம்
 • World Teachers’ Day 2019
  • ஆண்டுதோறும் அக்டோபர் 5 ஆம் தேதி உலக ஆசிரியர்கள் தினம் கடைபிடிக்கப் படுகிறது.
 • 2019-ஆம் ஆண்டிற்கான உலக ஆசிரியர்கள் தினக் கருப்பொருள் (World Teachers’ Day 2019 Theme):
  • “Young Teachers: The future of the Profession”. என்பதாகும்.
Post a Comment (0)
Previous Post Next Post