TNPSC Current Affairs October 26-27, 2019

நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 26-27, 2019
தேசிய நிகழ்வுகள்
நாடாளுமன்ற பகுதி மறுசீரமைப்பு: HCP நிறுவனம் தேர்வு 
  • டெல்லியில் நாடாளுமன்றம், ராஜபாதை உள்ளிட்டவை அடங்கிய ‘சென்ட்ரல் விஸ்டா’ பகுதியை மறுசீரமைப்பு செய்வது, மத்திய அமைச்சகங்களின் அலுவலகங்களுக்கான ஒருங்கிணைந்த வளாகத்தை அமைப்பது ஆகியவற்றுக்கான கட்டுமான திட்டத்தை தயாரிக்க, குஜராத் அகமதாபாத் நகரை  சோ்ந்த ‘ஹெச்சிபி’ வடிவமைப்பு (HCP) நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
  • பி.எஸ்.என். ராவ் குழு
    • திட்டங்கள் மற்றும் வடிவமைப்புக்கான கல்வி நிறுவன இயக்குநா் பி.எஸ்.என். ராவ் தலைமையிலான 6 நபா்கள் குழு, ஹெச்சிபி நிறுவனத்தை தோ்வு செய்தது.
  • ‘சென்ட்ரல் விஸ்டா’ பகுதி
    • வடிவமைப்பு தயாரிப்பதற்காக ஹெச்சிபி நிறுவனத்துக்கு ரூ.229.75 கோடி வழங்கப்படவுள்ளது. 
    • குடியரசுத் தலைவா் மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான 3 கி.மீ. நீளமுள்ள ‘சென்ட்ரல் விஸ்டா’ பகுதியில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளும்போது, 90 ஆண்டுகள் பழைமையான நாடாளுமன்ற கட்டடம், நாா்த் மற்றும் சௌத் பிளாக் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படாது.
  • 75-வது சுதந்திர தினம்
    • 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 75-வது சுதந்திர தினம் கொண்டாட படும்போது, நாடாளுமன்ற மறுசீரமைப்புப் பணியை நிறைவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
    • ராஜபாதை மறுசீரமைப்பு, மத்திய அமைச்சக அலுவலகங்களுக்கான பொதுவான வளாகம் ஆகிய பணிகளை 2024-ம் ஆண்டுக்குள் நிறைவு செய்வதென திட்டமிடப்பட்டுள்ளது.
  • HCP: Hasmukh C. Patel Design, Planning And Management Pvt. Ltd. 

இந்திய வனச்சட்ட திருத்தம்: மிசோரம் அரசு நிராகரிப்பு 
  • இந்திய வனச்சட்டம் (1927)
    • 1927-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய வனச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது தொடா்பாக மத்திய அரசு அளித்த பரிந்துரைகளை மிசோரம் மாநில அரசு நிராகரித்துள்ளது.
  • 371G-பிரிவு 
    • இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 371G-பிரிவின்படி, மிஸோரம் மாநிலத்துக்கு சில சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 
    • இந்த சட்டப்படி, மிசோ மக்களின் மத மற்றும் சமூக பழக்கவழக்கங்கள், மிசோ சமூகத்தின் சட்டமுறைகள், உள்ளூா் நிா்வாகம் மற்றும் குற்ற வழக்குகளுக்கு மிசோ சமூகம் வழங்கும் தண்டனைகள் உள்ளிட்டவற்றில் குடியரசுத் தலைவா் தலையிடக்கூடாது. மேலும், மிசோரத்தில் உள்ள நிலங்களின் உரிமைகளில் மாற்றம் செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது.
  • Article 371G (1949)
    • Article 371G in The Constitution Of India 1949: 371G. Special provision with respect to the State of Mizoram Notwithstanding anything in this Constitution.
தலைமை தகவல் ஆணையரின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாக குறைப்பு
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம் (2005)
    • அரசின் அனைத்து மட்டத்திலும் வெளிப்படைத்தன்மை இருப்பதை உறுதி செய்யும் வகையில், 2005-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
    • இந்தச் சட்டத்தில், தலைமை தகவல் ஆணையா், தகவல் ஆணையா்கள், மாநில தகவல் ஆணையா்களின் நியமனம் தொடா்பான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள், அவா்களின் பதவிக்காலம், அவா்களுக்கான ஊதியம் மற்றும் படிகள் ஆகியவற்றை மத்திய அரசு நிா்ணயிப்பதற்கு 
    • அதிகாரமளிக்க வகை செய்யும் திருத்தம் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் 2019 ஜூலை மாதம் 25-ஆம் தேதி ‘RTI சட்டத் திருத்த மசோதா, 2019’ நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததையடுத்து அந்த மசோதா சட்டமாக்கப்பட்டது.
    • தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (RTI) திருத்தம் மேற்கொண்டதற்கான அறிவிக்கையை மத்திய அரசு அக்டோபர் 25-அன்று வெளியிட்டது. 
    • இந்தத் திருத்தத்தின்படி, தலைமை தகவல் ஆணையரின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
    • முந்தைய சட்டத்தின்படி, தலைமை தகவல் ஆணையரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் அல்லது அவா் 65 வயதை எட்டும் வரை இருந்தது. தற்போது அது 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. 
    • தலைமை தகவல் ஆணையரின் ஊதியம் ரூ. 2. 5 லட்சமாகவும், தகவல் ஆணையா்களின் ஊதியம் ரூ. 2.25 லட்சமாகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
  • RTI: Right to Information Act, 2005.
பிரதமா் மோடியின் ஓவியம் - ரூ.25 லட்சத்துக்கு ஏலம் 
  • பிரதமா் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருள்கள் அண்மையில், இணையவழியில் ஏலம் விடப்பட்டன, இவற்றில் காந்தியடிகளுடன் பிரதமா் மோடி இடம்பெற்றுள்ள ஓவியம் ஒன்று, ரூ.25 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
  • பிரதமா் மோடிக்கு கடந்த ஓராண்டில் அளிக்கப்பட்ட 2,772 பரிசுப் பொருள்களின் கண்காட்சி மற்றும் இணையவழி ஏலம் செப்டம்பர் 14-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 3-ஆம் தேதி நிறைவடைந்தது.

உத்தரப் பிரதேசத்தில் 'சுமங்லா கன்யா' திட்டம் - தொடக்கம் 
  • உத்தரப் பிரதேச மாநிலத்தில், பெண் குழந்தைகள் கல்வி பெறும் நோக்கில் 'சுமங்லா கன்யா யோஜனா' என்ற பெண் குழந்தைகளுக்கான சிறப்புத் திட்டத்தை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அக்டோபர் 25-அன்று  தொடங்கி வைத்தார்.  
  • 'சுமங்லா கன்யா' திட்டம் 
    • இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைக்கும் ரூ.15,000 வரையில் வழங்கப்படும். 'சுமங்லா கன்யா' திட்டம் பெண் குழந்தை பிறந்த காலத்திலிருந்தே பயன்படும். பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் கல்வியை கவனித்துக் கொள்ள வேண்டிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் குழந்தை பிறந்து அதற்கு தடுப்பூசி போடுவது, 1, 5 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் சேர்க்கும் போது, பட்டப்படிப்பு முடிக்கும்போது உள்ளிட்ட ஒவ்வொரு கட்டத்திலும் நிதி பகிர்ந்தளிக்கப்படுகிறது. 
பாதுகாப்பு/விண்வெளி 
இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை - 58-வது நிறுவன தினம் (அக்டோபர் 24, 2019)
  • இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறையின் (Indo-Tibetan Border Police) 58-வது நிறுவன தினம் அக்டோபர் 24 அன்று அனுசரிக்கப்பட்டது.  
  • 1962 ஆம் ஆண்டு சீன-இந்தியப் போரை அடுத்து, 1962 அக்டோபர் 24 ஆம் தேதி, இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை ஏற்படுத்தப்பட்டது.
நியமனங்கள் 
ஜம்மு-காஷ்மீர், லடாக் துணை நிலை ஆளுநர்கள் - நியமனம் 
  • ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய ஒன்றிய பிரதேசங்களுக்கான துணை நிலை ஆளுநர்கள் அக்டோபர் 25-அன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த  சத்யபால் மாலிக் கோவா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர், மாநிலங்கள், ஒன்றிய பிரதேசங்கள் விவரம்:
  • ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் - கிரிஷ் சந்திரா முர்மு   
  • லடாக் துணை நிலை ஆளுநர் -  ஆர்.கே.மாத்தூர் 
  • கோவா மாநில ஆளுநர் - சத்யபால் மாலிக் (ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்தவர்).
பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்துக்கு - 3 கூடுதல் நீதிபதிகள் 
  • பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக 3 மூத்த வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவர்கள் விவரம்: 
  • சுவீா் செகல்
  • கிரீஷ் அக்னிஹோத்ரி
  • அல்கா சரின்.
மாநாடுகள்
அணிசேரா நாடுகள் உச்சிமாநாடு 2019, அஜா்பைஜான்
  • 18-ஆவது உச்சிமாநாடு 
    • அணிசேரா நாடுகள் அமைப்பின் 18-ஆவது உச்சிமாநாடு அஜா்பைஜான் நாட்டின் தலைநகரான பாகு நகரில் அக்டோபர் 25-அன்று தொடங்கியது.
    • ‘உலகப் பிரச்னைகளை எதிா்கொள்ள பாண்டுங் கொள்கைகளின் அடிப்படையில் ஒருங்கிணைந்த செயல்பாடு’ என்ற கருத்தை மையமாகக் கொண்டு இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது. 
    • இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில், இந்தியா சாா்பில் வெங்கய்ய நாயுடு தலைமையிலான குழு பங்கேற்றது.
  • அணிசேரா நாடுகள் அமைப்பு (1961) 
    • அணிசேரா நாடுகள் அமைப்பு, 1961-ஆம் ஆண்டு உருவானது. இந்த அமைப்பின் உருவாக்கத்தில் இந்தியா முக்கியப் பங்காற்றியது. 
    • இந்தோனேஷியாவின் ஜகாா்த்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் அணிசேரா நாடுகள் அமைப்பில் பாகிஸ்தான், இலங்கை, பூடான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 120 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்  
தென்மேற்குப் பருவ மழை 2019 - 2,155 போ் உயிரிழப்பு 
  • தென்மேற்குப் பருவ மழை காலம் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. 
  • நாடு முழுவதும் ‘தென்மேற்குப் பருவ மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 2,155 போ் உயிரிழந்துள்ளனா்; 22 மாநிலங்களில் 26 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்’ 
  • 2.23 லட்சம் வீடுகள் முழுமையாகவும், 2.06 லட்சம் வீடுகள் ஒரு பகுதியளவும் சேதமடைந்தன. 14.09 லட்சம் ஹெக்டோ் அளவிலான பயிா்கள் சேதமடைந்தன, என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அறிவியல் தொழில்நுட்பம் 
StartUp நிறுவனங்களுக்கான தேசிய களஞ்சியம் 'TechSagar'
  • இந்திய தரவு பாதுகாப்பு கவுன்சில் (DSCI), டெக்ஸாகர் (TechSagar) என்ற தொடக்கநிலை நிறுவனங்களுக்கான (startups) தேசிய களஞ்சியத்தை (national repository) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த களஞ்சியம், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) / இயந்திர கற்றல் (Machine Learning), பிளாக்செயின் (blockchain), கிளவுட் மற்றும் மெய்நிகராக்கம் (cloud and virtualization), ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் (robotics and Automation) மற்றும் பல தொழில்நுட்ப துறைகளில் வணிகங்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு ஒத்துழைப்பையும், புதுமைப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளையம் ‘டெக்ஸாகர்’ வழங்குகிறது.
  • DSCI: The Data Security Council of India
தமிழ்நாடு நிகழ்வுகள் 
வண்டலூர் பூங்காவில் 14 விலங்கினங்களை நேரடி ஒளிபரப்பில் காணும் வசதி 
  • வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை இணையதளத்தில் காணும் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 14 விலங்கினங்களை நேரடி ஒளிபரப்பில் காண இயலும். 
  • 30 ஆண்டுகளுக்கு பின்னர் வண்டலூர் பூங்காவுக்கு விலங்குகள் பரிமாற்ற முறையில் காண்டாமிருகம் பெறப்பட்டுள்ளது.  
  • காண்டாமிருக இணையை அதன் இருப்பிடத்தில் இருந்து நேரடியாக 24 மணி நேரமும் காணும் வசதியை அக்டோபர் 26-முதல் பூங்கா நிர்வாகம் (www.aazp.in) செய்துள்ளது.  
விளையாட்டு நிகழ்வுகள் 
கிரிக்கெட்
விஸ்டன் கிரிக்கெட் விருதுகள் 2019
  • விஸ்டன்-உலக கிரிக்கெட்டின் பைபிள்
    • இங்கிலாந்திலிருந்து வெளியாகும் 'விஸ்டன்' வருடாந்திரப் புத்தகமானது "உலக கிரிக்கெட்டின் பைபிள்" என்று புகழப்படுகிறது.
    • அக்டோபர் 25-அன்று வெளியான விஸ்டன் புத்தகத்தின் ஏழாவது பதிப்பில் 2019-2020 ஆண்டிற்கான  விஸ்டன் கிரிக்கெட் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  
    • 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளின் அடிப்படையில் இந்த தேர்வு நடைபெற்றுள்ளது.
    • இந்த விருது பட்டியலில், இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தானா ஆகிய இருவருக்கும் இந்த 2019 ஆண்டிற்கான சிறந்த இந்திய வீரர்களுக்கான விருது அளிக்கப்பட்டுள்ளது.
  • சிறந்த கிரிக்கெட்  வீரர்கள் (Wisden India Almanack Cricketer of the Year award)
    • ஜஸ்ப்ரித் பும்ரா (இந்தியா) மற்றும் வீராங்கனை 
    • ஸ்ம்ரிதி மந்தானா (இந்தியா) 
      • மிதாலி ராஜ் மற்றும் தீப்தி சர்மா ஆகியோருக்குப் பிறகு இந்த விருதை வென்ற மூன்றாவது பெண்மணி என்ற பெருமையை மந்தனா பெற்றார்.
    • ஃபக்கர் சமான் (Fakhar Zaman) - பாகிஸ்தான் 
    • திமுத் கருணரத்னே (Dimuth Karunaratne) - இலங்கை 
  • சிறந்த அறிமுக டெஸ்ட் வீரர் - மயங்க் அகர்வால் (இந்தியா)
  • விஸ்டன் இந்தியா ஹால் ஆஃப் ஃபேம் விருது 2019
    • குண்டப்பா விஸ்வநாத்
    • லாலா அமர்நாத்.
விஜய் ஹசாரே கோப்பை 2019 - 'கர்நாடகா அணி' சாம்பியன் 
  • 18-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடர்-2019-இல் கர்நாடகா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
  • மொத்தம் 38 அணிகள் பங்கேற்ற, இந்த 50-ஓவர் போட்டியில், லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் இறுதிசுற்றில் விளையாடின.
  • வி.ஜே.டி. விதிமுறை
    • தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக, உள்ளூர் போட்டிகளுக்கான முடிவை அறிய பயன்படுத்தப்படும் வி.ஜே.டி. விதிமுறைப்படி (VJD method), கர்நாடக அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
    • கர்நாடகா அணி விஜய் ஹசாரே கோப்பையை 4-வது முறையாக வென்றுள்ளது. 
    • கர்நாடக வீரர் அபிமன்யு மிதுன் இறுதிப்போட்டியில்  ‘ஹாட்ரிக்’ சாதனை (தொடர்ந்து 3 விக்கெட்டுகள்) படைத்தார்.
  • VJD method
    • The Gokul Gurandi system, also known as the VJD method, is a proposed method for calculating target scores in interrupted one-day and Twenty20 cricket matches. 
    • The method was devised by V. Jayadevan, an Indian engineer.It can be used instead of DLS method.
தியோதா் கோப்பை 2019, ராஞ்சி 
  • அக்டோபர் 31 முதல் நவம்பா் 4-ஆம் தேதி வரை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் தியோதா் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடக்கிறது.
  • தியோதா் கோப்பை போட்டியை முன்னிட்டு ஹனுமா விஹாரி, பார்த்திவ் பட்டேல், ஷுப்மன் கில் ஆகியோர் தலைமையில் இந்தியா A, B, C அணிகளை BCCI அறிவித்துள்ளது.
  • வழக்கமாக விஜய் ஹஸாரே போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணியுடன் தியோதா் கோப்பையில் முதலிடம் பெறும் அணி இறுதிச் சுற்றில் மோதும். ஆனால் இந்த முறை 3 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் தரவரிசை 25.10. 2019
  • டெஸ்ட் போட்டி தரவரிசை
    • மட்டை வீச்சாளர்
      1. ஸ்டிவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) - 937 புள்ளிகள் 
      2. விராட் கோலி (இந்தியா) - 926 புள்ளிகள் 
      3. கனே வில்லியம்சன் (நியூஸிலாந்து) - 878 புள்ளிகள் 
    • பந்துவீச்சாளர் 
      1. பேட் சும்மின்ஸ் (ஆஸ்திரேலியா) 
      2. காகிஸோ ரபாடா (தென்னாப்பிரிக்கா)  
      3. ஜேசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்) 
    • ஆல்-ரவுண்டர் 
      1. ஜேசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்)  
      2. ரவீந்திர ஜடேஜா (இந்தியா)
      3. சாகிப்-அல்-அசன் (பங்களாதேஷ்)
  • ஒருநாள் போட்டி தரவரிசை
    • மட்டை வீச்சாளர் 
      1. விராட் கோலி (இந்தியா) 
      2. ரோஹித் சர்மா (இந்தியா) 
      3. பாபர் ஆஸம் (பாகிஸ்தான்)
    • பந்துவீச்சாளர் 
      1. ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா) 
      2. ட்ரெண்ட் பௌல்ட (நியூஸிலாந்து)
      3. காகிஸோ ரபாடா (தென்னாப்பிரிக்கா)  
    • ஆல்-ரவுண்டர் 
      1. சாகிப்-அல்-அசன் (பங்களாதேஷ்)
      2. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
      3. முஹம்மத் நபி (ஆப்கானிஸ்தான்)
  • T-20 போட்டி தரவரிசை
    • மட்டை வீச்சாளர்
      1. பாபர் ஆஸம் (பாகிஸ்தான்)
      2. க்ளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா)
      3. காலின் முன்றோ (நியூஸிலாந்து)
    • பந்துவீச்சாளர் 
      1. ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்)
      2. இமத் வாசிம் (பாகிஸ்தான்)
      3. அதில் ரஷித் (இங்கிலாந்து)
    • ஆல்-ரவுண்டர் 
      1. க்ளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா)
      2. சாகிப்-அல்-அசன் (பங்களாதேஷ்)
      3. முஹம்மத் நபி (ஆப்கானிஸ்தான்)
மூன்று வடிவ போட்டிகள் - முதல் 10 இடங்களில் 'ரோஹித் சர்மா'
  • மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும், இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா  முதல் 10 இடங்களில் வந்துள்ளார்.  
    • டெஸ்ட் போட்டி தரவரிசை - 10-வது இடம்
    • ஒருநாள் போட்டி - 2-வது இடம்
    • T-20 போட்டி தரவரிசை - 7-வது இடம் 
கால்பந்து
விரிவாக்கப்பட்ட கிளப் உலகக் கோப்பை போட்டி 2021, சீனா
  • விரிவாக்கப்பட்ட கிளப் உலகக் கோப்பை கால்பந்து அறிமுக (Expanded FIFA Club World Cup 2021) போட்டி வரும் 2021இல் சீனாவில் நடைபெற உள்ளது. ஷாங்காயில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில், சர்வதேச கால்பந்து அமைப்பான FIFA-வின் தலைவர் இன்ஃபேன்டினோ இந்த தகவலை தெரிவித்துள்ளார். 
முக்கிய தினங்கள் 
அக்டோபர் 23 - சர்வதேச பனிச்சிறுத்தை தினம் 
  • உலகளாவிய பனிச்சிறுத்தை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்ட (GSLEP) 4 வது வழிநடத்தல் குழு கூட்ட மாநாடு 2019, அக்டோபர் 23-அன்று டெல்லி நகரத்தில் நடைபெற்றது.
  • பனிச்சிறுத்தை கணக்கெடுப்புக்கான தேசிய நெறிமுறை
    • இந்த நிகழ்வில் பங்கேற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்தியாவில் பனிச்சிறுத்தை எண்ணிக்கையை கணக்கிடுவதற்கான முதல் தேசிய நெறிமுறையை (First National Protocol to Enumerate the Snow Leopard Population) அறிமுகப்படுத்தினார்.
  • GSLEP: Global Snow Leopard and Ecosystem Protection Program.
அக்டோபர் 25 - பாப்லோ பிக்காசோ  பிறந்த தினம் 
  • நவீன ஓவியத்தின் தந்தை பாப்லோ பிக்காசோ ஆவார். 1881-ல் அக்டோபர் 25-ல் ஸ்பெயின் நாட்டில் பாப்லோ பிக்காசோ பிறந்தார், 
  • இந்தியாவில் எம்.எப்.உசேன், எஸ்.எச்.ரஷா, எப்.என்.சவுசா, சுனில்தாஸ் போன்ற பல கலைஞர்கள் பிக்காசாவை பின்பற்றியவர்கள் ஆவர். 
அக்டோபர் 27 - காலாட்படை தினம் 
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புகளை முறியடிக்க இந்திய ராணுவத்தின் காலாட்படை மேற்கொண்ட நடவடிக்கையின் 73-ஆவது ஆண்டு தினம் அக்டோபர் 27 ஆகும்.
அக்டோபர் 27 - உலக ஒலிக்காட்சி பாரம்பரிய தினம் 
  • உலக ஒலிக்காட்சி பாரம்பரிய தினம் (World Day for Audiovisual Heritage) அக்டோபர் 27 அன்று கடைபிடிக்கப்படுகிறது
  • 2019 உலக ஒலிக்காட்சி பாரம்பரிய தின கருப்பொருள்: 
    • 'ஒலி மற்றும் படங்கள் மூலம் கடந்த காலத்தில் ஈடுபடுங்கள்' (2019 Theme: Engage the Past Through Sound and Images).
Post a Comment (0)
Previous Post Next Post