உலகப்போட்டியாற்றல் அறிக்கை 2019
- 2019-ஆம் ஆண்டுக்கான உலகப் போட்டியாற்றல் அறிக்கையை (Global Competitiveness Report 2019) உலகப் பொருளாதார மன்றம், அக்டோபர் 9-அன்று ஜெனிவாவில் வெளியிட்டது.
- இந்த தரவரிசையில் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 99 விழுக்காட்டைக் கொண்ட 141 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் இடம்பெற்றுள்ளன.
- இதில் அடிப்படை வசதிகள், ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தின் நிதானத் தன்மை, சந்தை அளவு, நிதிச் சந்தை, புத்தாக்க ஆற்றல் முதலிய 12 வகைகளைச் சேர்ந்த 103 பிரிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
- இந்த பட்டியலில் சிங்கப்பூர் 84.8 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளது.
- இந்தியா - 68-வது இடம்
- இந்தியா 61.4 மதிப்பெண்களுடன் 68-வது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டைவிட 10 இடங்கள் குறைந்துள்ளது.
- சீனா 79.3 மதிப்பெண்களுடன் கடந்து ஆண்டைப் போல 28-ஆவது இடத்தில் உள்ளது.
சவுதி அரேபிய ஆயுதப்படையில் பெண்கள் சேர - அனுமதி
- சவுதி அரேபியாவில் பெண்கள் ஆயுத படையில் சேரலாம் என்று சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பெண்கள் “சார்ஜெண்ட்” ஆக பணியாற்ற முடியும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- இளவரசர் - முகமது பின் சல்மான்
- பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்து வந்த சவுதி அரேபியாவில், அந்நாட்டின் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் பொறுப்பு ஏற்றது முதல் பெண்களுக்கு உரிமைகள் வழங்கி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
- பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கும், விளையாட்டு மைதானம் மற்றும் தியேட்டருக்கு செல்வதற்கும் இருந்த தடைகள் கடந்த ஆண்டு விலக்கப்பட்டன.
- 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்களின் துணையின்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதி வழங்கப்பட்டது.
- கோமோரோஸ், சியாரா லியோன் ஆகிய நாடுகளுக்கு குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.
- கோமோரோஸ் நாட்டுடன், பாதுகாப்பு ஒத்துழைப்பு, சுகாதாரம் ஆகிய துறைகளில் இந்தியா 6 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
- மோரோனி என்ற இடத்தில், 18 மெகாவாட் மின்சார உற்பத்தி மையத்தை அமைக்க, இந்தியா ரூ. 295 கோடி கடனுதவி அளித்துள்ளது.
- தி ஆா்டா் ஆஃப் தி கிரீன் கிரெசன்ட்’ விருது 2019
- பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு 29 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஜெர்மன் தூதரகம் சார்பில் அந்நாட்டின் ஒற்றுமை தினம் சென்னையில் அக்டோபர் 10-அன்று கொண்டாடப்பட்டது.
- பெர்லின் சுவர் இடிப்பு
- 1961-ம் ஆண்டு கிழக்கு ஜெர்மனியின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்ததால் மக்கள் வெளியேறுவதை தடுக்க அந்நாட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சோவியத் அரசு பெர்லினில் 155 கிலோ மீட்டர் நீளத்துக்கு 12 அடி உயரத்தில் சுவர் எழுப்பியது.
- சோவியத் நாடு சிதறியபோது கிழக்கு ஜெர்மனி மக்கள் கிளர்த்தெழுந்து பெர்லின் சுவரை தகர்த்தெறிய தொடங்கினர்.
- 1989-ம் ஆண்டு நவம்பர் 9-ந்தேதி பெர்லின் சுவர் முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
- இதன் மூலம் கிழக்கு, மேற்கு ஜெர்மனி 1990-ம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி மீண்டும் ஒரே நாடானது.
- இந்தியாவிடமிருந்து பால் மற்றும் பால் பொருள்கள் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கையெழுத்திட்டுள்ளது.
- இந்தியா சா்வதேச கூட்டுறவு வணிகக் கண்காட்சி 2019
- இந்தியா சா்வதேச கூட்டுறவு வணிகக் கண்காட்சி டெல்லியிலுள்ள பிரகதி மைதானத்தில் அக்டோபர் 11-அன்று தொடங்கியது. இந்தக் கண்காட்சியில், பால் மற்றும் பால் உற்பத்திப் பொருள்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் இலங்கை அரசுடன் மேற்கொள்ளப்பட்டது.
- தமிழ்நாட்டின் ‘ஆவின்’ நிறுவனமும், புதுச்சேரியின் ‘பாண்லே’ நிறுவனமும், ‘இந்தியன் பொட்டேஷ்’ என்ற உர நிறுவனமும் தனித்தனியாக இலங்கை அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
- பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்
- சா்வதேச அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகித்து வருகிறது. நடப்பு ஆண்டில் இந்தியாவின் பால் உற்பத்தி 17,500 கோடி லிட்டராக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தேசிய நிகழ்வுகள்
இந்தியாவின் முதல் மின் கழிவு மருத்துவமனை, போபால்
- இந்தியாவின் முதல் மின் கழிவு மருத்துவமனை (India’s first e-waste clinic) போபால் நகரத்தில் அமைக்கப்படுகிறது.
- இந்தியாவின் முதல் மின் கழிவு மருத்துவமனை மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் அமைக்கப்படுகிறது.
- இது 3 மாத பைலட் திட்டமாக தொடங்கப்படுகிறது.
- 2016 ஆம் ஆண்டின் திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு (Solid Waste Management Rules of 2016) இணங்க இந்த மருத்துவமனை உருவாக்கப்படுகிறது.
- ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை 2019-ஆம் ஆண்டின் இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது.
- இதில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 12-வது ஆண்டாக முதலிடம் பிடித்தார்.
- மொத்தம் 51.4 பில்லியன் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி முதலிடதில் உள்ளார்.
- 15.7 பில்லியன் சொத்து மதிப்புடன் 8 இடங்கள் முன்னேறி தொழிலதிபர் கௌதம் அதானி இரண்டாம் இடம் பிடித்தார்.
- 150 ரெயில்கள், 50 ரெயில் நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க செயல்திட்டம் வகுப்பதற்காக, அதிகாரம் அளிக்கப்பட்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
- இந்த குழுவில், நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த், ரெயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ், பொருளாதார விவகாரத்துறை செயலாளர், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சக செயலாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.
- முதல் தனியார் ரயில்-லக்னோ-டெல்லி வழித்தட தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்.
- குறிப்பிட்ட ரெயில்களை இயக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்து, முதல் கட்டமாக, லக்னோ-டெல்லி வழித்தடத்தில் இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில், ரெயில்வேயின் துணை நிறுவனமான இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் (IRCTC) ஒப்படைக்கப்பட்டது.
- அக்டோபர் 4-ந் தேதியில் இருந்து இந்த ரெயிலை IRCTC இயக்கி வருகிறது. உணவு, ரூ.25 லட்சம்வரை இலவச காப்பீடு, ரெயில் தாமதமாக வந்தால் இழப்பீடு என பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
SUMAN முயற்சி திட்டம் - தொடக்கம்
- SUMAN முயற்சி திட்டம் (SUMAN initiative) தரமான சுகாதாரப் பாதுகாப்பு என்ற நோக்கத்திற்காக தொடங்கப்பட்டுள்ளது.
- மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல கவுன்சிலின் 13-வது மாநாட்டின் போது, மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், அக்டோபர் 11 அன்று, புது தில்லியில் சூராக்ஷித் மத்ரித்வா ஆஷ்வாசன் (SUMAN) என்ற முன் முயற்சி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- பொது சுகாதார நிலையத்திற்கு வருகை தரும் ஒவ்வொரு பெண் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான சேவைகளை மறுப்பதற்கு கண்ணியமற்ற, மரியாதைக்குரிய மற்றும் தரமான சுகாதார சேவையை எந்த செலவுமின்றி உறுதிசெய்வதும், சகிப்புத்தன்மையற்றதும் இந்த முயற்சியின் நோக்கமாகும்
- SUMAN: Surakshit Matritva Aashwasan.
பாதுகாப்பு/விண்வெளி
மங்கள்யான் நான்காம் ஆண்டு ஆய்வு விவரங்கள் - வெளியீடு
- இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO), செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக மங்கள்யான் விண்கலத்தை, 2013 நவம்பா் 5-ஆம் தேதி விண்ணில் அனுப்பியது.
- சுமாா் 10 மாத பயணத்துக்குப் பின்னா் 2014 செப்டம்பா் 24-ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையை மங்கள்யான் சென்றடைந்தது.
- செவ்வாய் கிரகம் குறித்த பல்வேறு தகவல்களையும் தொடா்ந்து அனுப்பி வருகிறது. ஆறு மாதங்களே ஆயுள் காலம் என்ற அளவில் நிா்ணயிக்கப்பட்டு அனுப்பப்பட்ட மங்கள்யான், தொடா்ந்து சிறப்பாக ஆய்வுகளை மேற்கொண்டு கடந்த செப்டம்பா் 24-ஆம் தேதியுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது
- மங்கள்யான் முதல் மூன்று ஆண்டுகள் எடுத்த புகைப்படங்கள், ஆய்வு விவரங்களை இஸ்ரோ, பொது மக்கள் பாா்வைக்கு இதுவரை வெளியிட்டிருந்தது. இப்போது நான்காமாண்டு ஆய்வு முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை இந்திய விண்வெளி அறிவியல் தகவல் மைய வலைதளத்தில் ISRO வெளியிட்டிருக்கிறது.
நியமனங்கள்
யுனெஸ்கோ நல்லெண்ண தூதர் - நடிகை யலிட்சா அபாரிசியோ
- மெக்சிகோ நாட்டை சேர்ந்த நடிகை யலிட்சா அபாரிசியோ (Yalitza Aparicio), பழங்குடி மக்களுக்கான யுனெஸ்கோ நல்லெண்ண தூதராக (UNESCO Goodwill Ambassador for Indigenous Peoples) நியமிக்கப்பட்டுள்ளார்.
- 2019 ஆம் ஆண்டு ஆஸ்கார் அகாடமி விருது பெற்ற “ரோமா” திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருது பெற்றவர் பழங்குடி இனத்தை சேர்ந்த நடிகை யலிட்சா அபாரிசியோ ஆவார்.
மாநாடு/விழா
தேசிய இந்தி அறிவியல் எழுத்தாளர்கள் மாநாடு 2019 (லக்னோ)
- முதலாவது தேசிய இந்தி அறிவியல் எழுத்தாளர்கள் மாநாடு (National Hindi Science writers conference) லக்னோ நகரத்தில் அக்டோபர் 11-12 தேதிகளில் நடைபெற்றது.
- இந்தி மற்றும் வடமொழி மொழி அறிவியல் எழுத்தாளர்கள் அனைவரையும் ஒரே மேடையில் கொண்டுவருவதையும், அறிவியல் எழுத்துத் துறையில் இந்தியை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிவியல் எழுத்தாளர்கள் பங்கேற்கின்றனர்.
பொருளாதார நிகழ்வுகள்
ஸ்விஸ் வங்கி கணக்கு விவரங்கள் - முதல்கட்ட பட்டியல் ஒப்படைப்பு
- சுவிற்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியா்களின் விவரங்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை ஸ்விட்சா்லாந்து அரசு மத்திய அரசிடம் அளித்துள்ளது.
- ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போரின் விவரங்களை அந்தந்த நாடுகளுக்கு அளிப்பது முதல் முறையாக 2018-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது, 36 நாடுகளுக்குத் தகவல்கள் அளிக்கப்பட்டிருந்தன.
- மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
- மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தபட்டுள்ளது.
- கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் இந்த உயர்வு கணக்கில் கொள்ளப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.15,909.35 கோடி செலவாகும் எனவும், நடப்பு 2019-20-ம் நிதியாண்டில் (8 மாதங்கள்) மட்டும் ரூ.10,606.20 கோடி செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.
- மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கிய சில திட்டங்கள்
- சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் ஆதார் இணைப்பதற்கான காலக்கெடுவை இந்த மாதம் 30-ந்தேதி வரை நீட்டிக்க மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. முன்னதாக இதற்கான காலக்கெடு கடந்த ஆகஸ்டு 1-ந்தேதியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வந்து காஷ்மீரில் குடியேறிய குடும்பங்களுக்கு நிவாரணமாக ஒரே கட்டமாக ரூ.5.5 லட்சம் வழங்கும் திட்டத்துக்கும் மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது.
- இதன் மூலம் 5,300 குடும்பங்கள் பயனடைவார்கள்.
- ரிலையன்ஸ் நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்ட், 'நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட்' (NIMF-Nippon India Mutual Fund) என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
- ஜப்பானின் நிப்பான் லைஃப் இன்சூரன்ஸ் ரிலையன்ஸ் மூலதனத்திலிருந்து ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அசெட் மேனேஜ்மென்ட்டில் 75% பங்குகளை கையகப்படுத்திய பின்னர் இந்த பெயர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
- நிப்பான் லைஃப், ஜப்பானின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் உலகளாவிய நிதிச் சேவை நிறுவனமாகும். இது 700 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்கிறது.
விருதுகள்
வேதியியல் நோபல் பரிசு 2019 - அறிவிப்பு
- 2019-ஆம் ஆண்டுக்கான, வேதியியலுக்கான நோபல் பரிசு (Nobel Prize in Chemistry 2019) அக்டோபர் 9-அன்று அறிவிக்கப்பட்டது. மொத்தம் 3 பேருக்கு இந்த விருது பகிர்ந்து அளிக்கப்படுவதாக ராயல் ஸ்வீடிஷ் அகாடமி அறிவித்துள்ளது.
- ஜான் பி.குட்எனாப் (John B. Goodenough), அமெரிக்கா,
- ஸ்டான்லி விட்டிங்ஹாம் (M. Stanley Whittingham), இங்கிலாந்து,
- அகிரா யோஷினோ (Akira Yoshino), ஜப்பான்.
- செல்போன், லேப்-டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் ரீசார்ஜ் செய்யத்தக்க லித்தியம்-அயன் பேட்டரிகள் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டு, செயல்திறன் மிக்க லித்தியம்-அயன் பேட்டரிகளை கண்டுபிடித்ததற்காக இவர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- இந்த மூவருக்கும் நோபல் பரிசுத்தொகையான 9.14 லட்சம் டாலா் (சுமாா் ரூ.6.5 கோடி) சரிசமமாகப் பிரித்து வழங்கப்படும்.
- மிகவும் இலகுவான, மீண்டும் மீண்டும் மின்சாரத்தை சேமித்து வைக்கக் கூடிய, சக்திவாய்ந்த லித்தியம் பேட்டரிகள் இன்று செல்லிடப் பேசிகள் முதல் மின்சாரக் காா்கள் வரை ஏராளமான சாதனங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
- கடந்த 1970-களில் எண்ணெய்த் தட்டுப்பாடு வந்தபோது, லித்தியம் உலோகத்தில் மறைந்துள்ள சக்தியை வெளிக் கொணா்வதற்கான வழிமுறையை ஸ்டான்லி விட்டிங்ஹாம் கண்டறிந்தாா். இயற்கையிலேயே எலக்ட்ரான்களை வெளியிடும் திறன் கொண்ட லித்தியத்தைப் பயன்படுத்தி அவா் முதல் முறையாக ஒரு பேட்டரியை உருவாக்கினாா். எனினும், அது பயன்படுத்துவதற்கு ஏற்ற ஸ்திரத்தன்மை கொண்டதாக இருக்கவில்லை.
- அதனைத் தொடா்ந்து, விட்டிங்ஹாமின் பேட்டரியை அடிப்படையாகக் கொண்டு, சில மாற்றங்களுடன் ஜான் குடேனோ மற்றொரு பேட்டரியை வடிவமைத்தாா். அது 4 வோல்ட் மின்சாரத்தை வெளியிடும் அளவுக்கு அதிக சக்திவாய்ந்ததாக இருந்தது.
- எதிா்காலத்தில் லித்தியம் பேட்டரிகளை உருவாக்குவதற்கு இந்த இரு பேட்டரிகளும் முன்னோடிகளாக இருந்தன.
- இந்தச் சூழலில், லித்தியம் அயனிகளை சேகரிக்கக் கூடிய, காா்பனை அடிப்படையாகக் கொண்ட புதிய பொருளைப் பயன்படுத்தி, அகிரா யோஷினோ 1985-ஆம் ஆண்டில் உருவாக்கிய பேட்டரி, லித்தியம் பேட்டரிகளை வா்த்தக ரீதியில் தயாரித்து விற்பனை செய்வதற்கு வழிவகுத்தது.
- இந்தப் பங்களிப்புக்காக, குடெனோ, விட்டிங்ஹாம், யோஷினோ ஆகிய மூவருக்கும் வேதியியலுக்கான நிகழாண்டின் நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஜான் குடெனோ (97):
- அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் ஜான் குடேனோவுக்கு 97 வயது ஆகிறது. இவா்தான் நோபல் பரிசு பெறுபவா்களில் மிக அதிக வயதுடையவா் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஸ்டான்லி விட்டிங்ஹாம் (77):
- பிரிட்டனைச் சோ்ந்த விட்டிங்ஹாம், அமெரிக்காவின் நியூயாா்க் நகரிலுள்ள பிங்கம்டன் பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணியாற்றி வருகிறாா். இவா் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தில் பயின்றவா் ஆவாா்.
- அகிரா யோஷினோ (71):
- ஜப்பானியரான அகிரா யோஷினோ, டோக்கியோவிலுள்ள அஷாய் கசேய் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். மேலும், அந்த நாட்டின் நகோயா நகரிலுள்ள மெய்ஜோ பல்கலைக்கழகத்திலும் அவா் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.
- The Nobel Prize in Chemistry 2019 was awarded jointly to John B. Goodenough, M. Stanley Whittingham and Akira Yoshino "for the development of lithium-ion batteries."
- 2018, 2019 இரண்டு ஆண்டுகளுக்கான இலக்கிய நோபல் பரிசு (Nobel Prizes in Literature for 2018 and 2019) அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2018 மற்றும் 2019-ம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசுக்கு தேர்வு பெற்றவர்கள் பற்றிய விவரத்தை சுவீடிஷ் அகாடமி அக்டோபர் 10-அன்று ஸ்டாக்ஹோம் நகரில் அறிவித்தது.
- 2018 - ஓல்கா டோகார்சு (போலந்து பெண் எழுத்தாளர்)
- 2019 - பீட்டர் ஹேண்ட்கே (ஆஸ்திரியா எழுத்தாளர்)
- இலக்கியத்துக்கான நோபல் தோ்வுக் குழுவைச் சோ்ந்த ஜான்-கிளாட் அா்னாட் என்பவா் பாலியல் வழக்கில் கடந்த 2018-ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டாா். அதனைத் தொடா்ந்து, அந்த பரிசுக்கான தோ்வு முறை குறித்து சா்ச்சை எழுந்தது.
- இதனால் கடந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், அந்த ஆண்டுக்கும் சோ்த்து தற்போது இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
- இலக்கிய நோபல் பரிசு 2018 - ஓல்கா டோகார்சு (போலந்து)
- 2018-ம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு (Nobel Prize in Literature 2018) போலந்து நாட்டு பெண் எழுத்தாளர் ஓல்கா டோகார்சுக்குக்கு (Olga Tokarczuk) வழங்கப்படுகிறது.
- ஒல்கா டோக்கா்ஸக் (57) போலந்து நாட்டைச் சோ்ந்த ஒல்கா டோக்கா்ஸக், இலக்கியத்துக்கான நோபல் பரிசை வெல்லும் 15-ஆவது பெண் ஆவாா். இலக்கியத்துக்கு இதுவரை வழங்கப்பட்ட 116 நோபல் பரிசுகளில், 14 மட்டுமே பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- போலந்து நாட்டில் தனது தலைமுறை எழுத்தாளா்களிலேயே மிகவும் திறமை மிக்கவராக ஒல்கா டோக்கா்ஸக் கருதப்படுகிறாா். அவரது எழுத்துகளில் பலரது கதாபாத்திரங்களின் தனித்துவ குணங்களும் ஒன்றுடன் ஒன்று பிண்ணியிருக்கும்.
- மேலும், அவரது படைப்புகள் யாவும் துல்லியமான, கவித்தும் வாய்ந்த வாா்த்தைகளைக் கொண்டதாக இருக்கும்.
- 1993-ஆம் ஆண்டில் வெளியான அவரது ‘ஜா்னி ஆஃப் தி பீப்பிள் ஆஃப் த புக்’ என்ற நாவல், ஒரு மா்ம புத்தகத்தை தேடி அலைவது குறித்து விவரிக்கிறது.
- அவரது படைப்புகளில் மிகச் சிறந்ததான ‘தி புக்ஸ் ஆஃப் ஜேக்கப்’, அதிகம் அறியப்படாத யுதப் பிரிவான ‘ஃபிராங்கிஸத்தை’க் குறித்து விளக்குகிறது. அந்தப் புத்கத்தில் 7 நாடுகள், 3 மதங்கள், 5 மொழிகள் அங்கம் வகிக்கின்றன. 2014-ஆம் ஆண்டில் வெளியான அந்தப் புத்தகத்தின் மூலம், ஐரோப்பிய வராலாறு மறந்துபோன ஓா் அத்தியாயத்தை ஒல்கா டோக்கா்ஸக் மிளிரச் செய்துள்ளாா்.
- இலக்கிய நோபல் பரிசு 2019 - பீட்டர் ஹேண்ட்கே (ஆஸ்திரியா)
- 2019-ம் ஆண்டுக்குரிய இலக்கிய நோபல் பரிசு (Nobel Prize in Literature 2019) ஆஸ்திரியாவை சேர்ந்த பீட்டர் ஹேண்ட்கேவுக்கு (Peter Handke) அளிக்கப்படுகிறது. இவர் சிறந்த எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார். நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள், திரைக்கதைகள் எழுதி பிரபலமானவர் ஆவார். சர்வதேச அளவில் பல்வேறு பரிசுகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பீட்டா் ஹேண்ட்கே (76), இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் வழங்கப்படுவதன் மூலம் தகுதியில்லாத எழுத்தாளா்கள் கௌரவிக்கப்படுவதாக கடந்த 2014-ஆம் ஆண்டு விமா்சித்த பீட்டா் ஹேண்ட்கே, நிகழாண்டின் நோபல் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பீட்டா் ஹேண்ட்கே, மனித அனுபவங்களை ஆய்வு செய்து, அதனை அழகியலுடன் வெளிப்படுத்துவதில் அவா் வல்லவா் ஆவாா். அவரது படைப்புகள் அனைத்திலும் புதியனவற்றை அறிந்து கொள்ளும் வேட்கையும், அந்த புதியனவற்றுக்கு உயிரூட்டம் தரும் புத்தாக்க இலக்கியச் செழுமையும் நிறைந்திருக்கும்.
- இருவருக்கும் தலா 9 லட்சத்து 14 ஆயிரம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.6 கோடியே 40 லட்சம்) ரொக்கம், ஒரு தங்க பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.
- இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது (2017-2018) - சண்டி பிரசாத் பட் (சுற்றுச்சூழல் ஆா்வலா்)
- காங்கிரஸ் கட்சியால் வழங்கப்படும் தேசிய ஒருமைப்பாட்டுக்கான இந்திரா காந்தி விருதுக்கு (Indira Gandhi National Integration Award 2019) சுற்றுச்சூழல் ஆா்வலா் சண்டி பிரசாத் பட் (Chandi Prasad Bhatt) தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
- 31-ஆவது ‘இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது
- தேச ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும், அது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும் ஆற்றிய சேவைக்காக சுற்றுச்சூழல் ஆா்வலா் சண்டி பிரசாத் பட்டுக்கு (வயது 85), 31-ஆவது ‘இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது’ வழங்கப்படுகிறது.
- கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுக்கான விருதாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
- முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் நினைவாக, அவரது நினைவு நாளில் (அக்டோபர் 31) தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருது அவரது பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.
- காங்கிரஸ் கட்சி இந்த விருதை வழங்கி வருகிறது. விருதைப் பெறுபவருக்கு ரூ. 10 லட்சம் ரொக்கத் தொகையும், சான்றிதழும் வழங்கப்படும்.
- சண்டி பிரசாத் பட்
- உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்த பிரசாத் பட், தசோலி கிராம் ஸ்வராஜ்ய சங்கத்தை கடந்த 1964-ஆம் ஆண்டு தொடங்கினாா். ‘சிப்கோ இயக்கம்’ தொடங்கியதற்கு முக்கிய காரணமாக இந்த சங்கம் இருந்தது. அவரது சேவையை பாராட்டி, 1982-ஆம் ஆண்டு ஆசியாவின் நோபல் விருது என்று அழைக்கப்படும் ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டது.
- பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு அவரை கௌரவித்தது. கடந்த 2013-ஆம் ஆண்டு அமைதிக்கான காந்தி விருதை அவா் பெற்றார்.
தமிழ்நாடு நிகழ்வுகள்
தமிழ்நாட்டில் பொருளாதார கணக்கெடுப்பு 2019 - தொடக்கம்
- தமிழ்நாட்டில் ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பு 2019, சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அக்டோபர் 9-அன்று தொடங்கி வைத்தார்.
- செல்போன் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் இந்த பொருளாதார கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
- பொருளாதார கணக்கெடுப்பு
- மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை வீடு மற்றும் நிறுவனங்களில் பொருளாதார அடிப்படையில் கணக்கெடுக்கும் பணியை 1977-ம் ஆண்டில் இருந்து மேற்கொண்டு வருகிறது. 6-வது முறையாக 2013-ம் ஆண்டு கடைசியாக இந்த கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
- 27½ கோடி வீடுகள்-5½ கோடி நிறுவனங்கள்
- இந்த கணக்கெடுப்பில் 27.5 கோடி வீடுகள் மற்றும் 5.5 கோடி நிறுவனங்கள் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கணக்கெடுப்பின்போது வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள், தொழில்நிறுவனங்களின் நடவடிக்கைகள், தொழில் நிறுவனங்களின் எந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் முதலீடு, ஆண்டு வருமானம் ஆகியவை சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட உள்ளன.
- இதன்மூலம் தேசிய, மாநில மற்றும் உள்ளாட்சி அளவில் முக்கிய பொருளாதார கொள்கை முடிவுகளை எடுக்க முடியும்.
- மத்திய அரசு திட்டங்கள்
- வேலைவாய்ப்பை பொறுத்தமட்டில் நிரந்தர, ஒப்பந்த பணியாளர்கள் எவ்வளவு பேர் வேலையில் உள்ளனர் என்ற விவரத்தையும், எந்தெந்த வயதினர் பணியில் உள்ளனர் என்பதையும் இந்த கணக்கெடுப்பின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
- உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா பொருளாதார வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது. பொருளாதாரத்தில் உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் பொருளாதார கணக்கெடுப்பு 2019 - தொடக்கம்
- தமிழ்நாட்டில் ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பு 2019, சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அக்டோபர் 9-அன்று தொடங்கி வைத்தார்.
- செல்போன் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் இந்த பொருளாதார கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
- பொருளாதார கணக்கெடுப்பு
- மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை வீடு மற்றும் நிறுவனங்களில் பொருளாதார அடிப்படையில் கணக்கெடுக்கும் பணியை 1977-ம் ஆண்டில் இருந்து மேற்கொண்டு வருகிறது. 6-வது முறையாக 2013-ம் ஆண்டு கடைசியாக இந்த கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
- 27½ கோடி வீடுகள்-5½ கோடி நிறுவனங்கள்
- இந்த கணக்கெடுப்பில் 27.5 கோடி வீடுகள் மற்றும் 5.5 கோடி நிறுவனங்கள் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கணக்கெடுப்பின்போது வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள், தொழில்நிறுவனங்களின் நடவடிக்கைகள், தொழில் நிறுவனங்களின் எந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் முதலீடு, ஆண்டு வருமானம் ஆகியவை சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட உள்ளன.
- இதன்மூலம் தேசிய, மாநில மற்றும் உள்ளாட்சி அளவில் முக்கிய பொருளாதார கொள்கை முடிவுகளை எடுக்க முடியும்.
- மத்திய அரசு திட்டங்கள்
- வேலைவாய்ப்பை பொறுத்தமட்டில் நிரந்தர, ஒப்பந்த பணியாளர்கள் எவ்வளவு பேர் வேலையில் உள்ளனர் என்ற விவரத்தையும், எந்தெந்த வயதினர் பணியில் உள்ளனர் என்பதையும் இந்த கணக்கெடுப்பின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
- உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா பொருளாதார வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது. பொருளாதாரத்தில் உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
கிரிக்கெட்
சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகள் - மிதாலி ராஜ் சாதனை
- சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகள் விளையாடி முடித்த முதல் பெண் வீராங்கனை என்ற சிறப்பை இந்திய பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் பெற்றுள்ளார்.
- மிதாலி ராஜ், அயர்லாந்துக்கு எதிராக 1999 ஜூன் 26, 1999 அன்று ஒருநாள் போட்டியில் அறிமுகமானார், அக்டோபர் 10, 2019 அன்று வதோதராவில் நடந்த தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வழிநடத்தியபோது அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
- 50 ஓவர் போட்டிகளிலில் 20 ஆண்டுகள் மற்றும் 105 நாட்களை நிறைவு செய்துள்ளார்.
- மிதாலி ராஜ், இதுவரை 204 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
- பெண்கள் சர்வதேச ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி தொடர்ச்சியாக 18-வது வெற்றிகளை பெற்றுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து அதிக ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த தங்களது முந்தைய சாதனையை (1997-1999-ம் ஆண்டுகளில் தொடர்ந்து 17 வெற்றி) ஆஸ்திரேலியா முறியடித்தது.
- இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.
- இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் அக்டோபர் 10 அன்று தொடங்கியது.
- இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி விளையாடும் 50-வது டெஸ்ட் இதுவாகும். டோனிக்கு (60 டெஸ்ட்) அடுத்து அதிக போட்டிகளுக்கு அணியை வழிநடத்திய இந்திய கேப்டன் கோலி தான்.
- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்தடுத்து இரு டெஸ்டுகளில் சதம் அடித்த 2-வது இந்தியர் என்ற சிறப்பை மயங்க் அகர்வால் பெற்றார். ஷேவாக் 2010-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்தடுத்து சதம் அடித்திருந்தார்.
தடகளம்
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் (ராஞ்சி) 2019 - அன்னு ராணி தங்கம்
- 59-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அக்டோபர் 10 முதல் 13-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.
- இதில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் ரெயில்வே வீராங்கனை அன்னு ராணி 58.60 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
- இந்திய தடகள வீராங்கனை நிர்மலா ஷெரான் அவர்களுக்கு, சர்வதேச தடகள சம்மேளனத்தின் ஒழுங்குமுறை கமிட்டி நிர்மலாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
- 2018 ஜூன் மாதம் நடந்த ஊக்க மருந்து பரிசோதனையில் நிர்மலா தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
- இந்த தடை 2018-ம் ஆண்டு ஜூன் 29-ந் தேதி முதல் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வாலிபால்
புரோ வாலிபால் லீக் 2019
- இரண்டாவது புரோ வாலிபால் லீக் போட்டி (Pro Volleyball League 2020) 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந் தேதி முதல் மார்ச் 1-ந் தேதி வரை நடைபெறுகிறது.
கூடைப்பந்து
இந்தியாவில் 3*3 கூடைப்பந்து ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் 2020
- இந்தியாவில் 3*3 கூடைப்பந்து ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டங்கள், 2020 மாா்ச் மாதம் நடைபெறும் என சா்வதேச கூடைப்பந்து சம்மேளனம் (FIBA) தெரிவித்துள்ளது.
- முதன்முறையாக 3*3 கூடைப்பந்து போட்டிகளில் டோக்கியோ ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்படுகின்றன.
- போட்டியை நடத்தும் இந்திய அணிகள் உள்பட மீதமுள்ள 39 அணிகள், உலகக் கோப்பை முடிவுகள் மற்றும் தரமதிப்பீட்டின்படி தோ்வு செய்யப்படுகின்றன.
முக்கிய தினங்கள்
அக்டோபர் 10 - உலக மனநல தினம்
- ஆண்டுதொறும் அக்டோபர் 10 அன்று உலக மன நல தினம் (World Mental Health Day) கடைபிடிக்கப் படுகிறது.
- 2019 உலக மனநல தினம் மையக்கருத்து:
- தற்கொலை தடுப்போம் (Preventing Suicide) என்பதாகும்.
அக்டோபர் 11 - சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
- ஆண்டுதொறும் அக்டோபர் 11 அன்று சர்வதேச பெண்குழந்தைகள் தினம் (International Day of the Girl Child) கடைபிடிக்கப் படுகிறது.
- 2019 சர்வதேச பெண் குழந்தைகள் தின மையக்கருத்து:
- பெண் படை: பதிவுசெய்யப்படாத மற்றும் தடுக்க முடியாதது (GirlForce: Unscripted and Unstoppable) என்பதாகும்.
அக்டோபர் 11, 2019 - உலக முட்டை தினம்
- ஆண்டுதோறும், உலக முட்டை தினம் (World Egg Day) அக்டோபர் மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.