விசாகா கமிட்டி (2013) - குறிப்புகள்
- The Vishakha Guidelines were a set of procedural guidelines for use in India in cases of sexual harassment.
- They were promulgated by the Indian Supreme Court in 1997 and were superseded in 2013 by the Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013.
- 1992-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தை திருமண ஒழிப்பில் மிகத்தீவிரமாக செயல்பட்டுவந்த பன்வாரிதேவி என்ற சமூகசேவகர் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டார். இதை எதிர்த்து ‘விசாகா’ என்ற பெண்கள் உரிமைக்குழு உள்ளிட்ட சில குழுக்கள் சேர்ந்து ராஜஸ்தான் அரசாங்கத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தன. இதையொட்டி
- உச்சநீதிமன்றம், பெண்கள் பணிபுரியும் இடங்களில் அவர்கள் பாலியல் கொடுமையிலிருந்து பாதுகாக்கப்பட ‘விசாகா வழிமுறைகள்’ என்றபெயரில் சில வழிமுறைகளை வகுத்து தீர்ப்பளித்தது.
- இந்த வழிமுறைகளை அடிப்படையாக வைத்து நாடாளுமன்றத்தில், பணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலை தடுத்தல், தடைசெய்தல் மற்றும் தீர்வு காண்பது தொடர்பாக 2013-ம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றியது.
- இந்த சட்டப்படி 10 பெண்களுக்குமேல் பணிபுரியும் இடங்களில் ஒவ்வொரு அலுவலகத்திலும் அங்கு பணிபுரியும் ஒரு பெண் உயர் அதிகாரியை தலைவராக கொண்டு, குறைந்தபட்சம் 2 பெண் ஊழியர்கள் மற்றும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினரைக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.