TNPSC Current Affairs 1-2, March 2019 - Download as PDF


Daily Current Affairs Quiz 2019-2018
Daily Current Affairs Notes 2019-2018  
14500 Model Questions Answers
TNPSC Current Affairs 1st March and 2nd March 2019, Daily Current Affairs March 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
உலக, இந்திய நிகழ்வுகள்/ International and National Affairs
இந்திய-பசிபிக் பிராந்திய உரையாடல் 2019
  • இரண்டாவது இந்திய-பசிபிக் பிராந்திய உரையாடல் 2019 (IPRD-2019), 2019 மார்ச் மாதம் 05-06 தேதிகளில் புது தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் நடைபெறுகிறது. Indo-Pacific Regional Dialogue-2019, 05- 06 March 2019.
தேசிய யுனானி மருத்துவக் கழகம், காஜியாபாத்
  • உத்தரபிரதேச மாநிலத்தின் காஜியாபாத் நகரில் தேசிய யுனானி மருத்துவக் கழகம் (National Institute of Unani Medicine, NIUM), அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத எஸ்ஸோ நாயக் இந்த அடிக்கல்லை நாட்டினர். 
பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு அமைச்சர்கள் கூட்டம் 2019
  • ஏழாவது பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு நாடுகளின் அமைச்சர்கள் கூட்டம் (2019 RCEP Intersessional Ministerial Meeting), 2019 மார்ச் 2 ஆம் தேதி கம்போடியாவில் உள்ள சீம ரீப் பகுதியில் நடைபெற்றது. இம்மாநாட்டில் இந்திய வர்த்தகம், தொழில்துறை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்து கொண்டார். 
  • பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பில் மொத்தம் 16 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
விமானி அபிநந்தன் வர்த்தமான் விடுதலை
  • பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த விமானப்படை விமானி அபிநந்தன் வர்த்தமான் (Abhinandan Varthaman)அவர்களை, பாகிஸ்தான் மார்ச் 1 அன்று விடுதலை செய்து, வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. 
  • ஹோரா கிராமத்தில் பாகிஸ்தான் படையிடம் சிக்கிய அபிநந்தன் ராவல்பிண்டி கொண்டு செல்லப்பட்டு, பின்னர் லாகூர் வழியாக வாகா எல்லைக்கு அழைத்துவரப்பட்டு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். 
  • மேலதிக தகவல்கள்:
    • புலவாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு இந்திய போர் விமானங்கள் பிப்ரவரி 26-ந் தேதி சென்று, பயங்கரவாத முகாம்களை லேசர் குண்டு போட்டு அழித்தன. 
    • பிப்ரவரி 27-ந் தேதி பாகிஸ்தான், அதிநவீன ‘எப்-16’ ரக போர் விமானங்களை இந்தியாவில் தாக்குதல் நடத்த அனுப்பியது. இந்திய விமானப்படை, அந்த விமானங்களை விரட்டியடித்தது. 
    • இந்தியாவின் ‘மிக்-21’ ரக போர் விமானம், பாகிஸ்தான் பகுதிக்குள் (ஹோரா கிராமம்) விழுந்ததில், அதில் இருந்த விமானி அபிநந்தன் வர்த்தமான் (வயது 35) அவர்களை பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்தது. 
    • பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் (28.2.2019), பிரதமர் இம்ரான்கான் “நமது காவலில் உள்ள இந்திய விமானப்படை அதிகாரி, நல்லெண்ண அடிப்படையில் 1.3.2019 அன்று விடுவிக்கப்படுவார். இது அமைதிப்பேச்சுவார்த்தைக்கான முதல் படியாக அமையும்” என தெரிவித்தார். 
  • ‘போர்க்கைதி அபிநந்தன்’
    • இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பிடிபட்டது பற்றியும், வாகா எல்லையில் அவரை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது பற்றியும் கூறி உள்ள பாகிஸ்தான், தங்கள் காவலில் இருந்த போது அபிநந்தனை சர்வதேச விதிமுறைகளின்படி நல்லமுறையில் நடத்தியதாகவும் அபிநந்தனை ‘போர்க்கைதி’ என்றும் தெரிவித்துள்ளது.
வெனிசூலா தொடர்பான அமெரிக்க, ரஷிய தீர்மானங்கள் தோல்வி 

  • வெனிசூலா நாட்டில் நிலவி வரும் அரசியல் பதற்றத்துக்குத் தீர்வு காணும் வகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகள் 28.2.2019 அன்று அடுத்துதடுத்து தீர்மானங்கள் கொண்டு வந்தது. இந்த தீர்மானங்கள் தோல்வியடைந்தன.
  • வெனிசூலாவில், 2013-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் நிக்கோலஸ் மடூரோ தலைமையிலான ஆட்சியில் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது.
ஜெனீவா ஒப்பந்தம் போர்க்கைதிகள் 

  • இரு நாடுகளிடையே போர் ஏற்படும் போது சம்பந்தப்பட்ட அந்த இரு நாடுகளுக்குமே உயிர்ச்சேதம், பொருட்சேதம் என்று பெரும் இழப்பு ஏற்படுகிறது.போரின் போது பல வீரர்கள் எதிரி நாட்டு ராணுவத்திடம் போர்க்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் உண்டு.
  • இதற்கு முடிவு கட்ட சர்வதேச நாடுகள் தீர்மானித்தன. அதன் விளைவாக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில், போர்க்கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்த ஒப்பந்தம் முதன் முதலாக கடந்த 1864-ம் ஆண்டு கையெழுத்தானது. இதில் 12 நாடுகள் கையெழுத்திட்டன. போர்க்கைதிகளாக பிடிபடும் எதிரி நாட்டு வீரர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உரிமைகள், போர் வீரர்களுக்கான நிவாரண உதவிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் இடம் பெற்றன.
  • பல ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட இரண்டாம் உலகப் போர் மனித குல வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. பல நாடுகளின் ராணுவ வீரர்கள் எதிரி நாடுகளின் ராணுவத்தால் போர்க்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர்.
  • ஜெனீவா ஒப்பந்தம் (1949)
  • இரண்டாம் உலகப் போருக்கு பின் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் ஜெனீவாவில் கூடி, போர்க்கைதிகளாக பிடிபடும் ராணுவ வீரர்களை நடத்த வேண்டிய விதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான ஒப்பந்தம் (Geneva Convention) செய்து கொண்டனர். இந்த ஒப்பந்தத்தில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 169 நாடுகள் கையெழுத்திட்டன. அதிக நாடுகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தமே ‘ஜெனீவா ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படுகிறது.
  • ஜெனீவா ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளுக்கு இடையேயான போர் முடிவுக்கு வந்ததும் போர்க்கைதிகளாக பிடிபட்ட எதிரி நாட்டு ராணுவ வீரர்களை உடனடியாக விடுதலை செய்து சம்பந்தப்பட்ட நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும். 
  • மேலும் அவர்களை துன்புறுத்தவோ, கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெறவோ கூடாது. இதுவே ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் ஆகும்.
  • இந்த ஒப்பந்தத்தின்படிதான் தற்போது பாகிஸ்தானிடம் பிடிபட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறார்.
  • இதற்கு முன்னர், 1999-ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் போது பாகிஸ்தானிடம் போர்க்கைதியாக பிடிபட்ட இந்திய விமானப்படை அதிகாரி கே.நச்சிகேட்டா 8 நாட்களுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியமனங்கள்/ Appointments 
தேசிய புத்தக அறக்கட்டளை தலைவர் "கோவிந்த் பிரசாத் ஷர்மா" 
  • தேசிய புத்தக அறக்கட்டளையின் (NBT,National Book Trust) புதிய தலைவராக கோவிந்த் பிரசாத் ஷர்மா (Govind Prasad Sharma) நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதார நிகழ்வுகள்/ Economic Affairs
2019 பிப்ரவரி மாத GST வரி வசூல் ரூ.97,247 கோடி 
  • சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் 2019 பிப்ரவரி மாதத்தில் ரூ.97,247 கோடியாக குறைந்துள்ளது.
  • கடந்த ஜனவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.02 லட்சம் கோடியாக இருந்தது. இந்த நிலையில், நவம்பரில் அதன் வசூல் ரூ.97,247 கோடியாக சரிவைக் கண்டது.
  • வசூலிக்கப்பட்ட மொத்த தொகையில், மத்திய ஜிஎஎஸ்டி ரூ.17,626 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.24,192 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.46,953 கோடியாகவும் (இறக்குமதி மீதான வசூல் ரூ.24,133 கோடி உள்பட), தீர்வை ரூ.8,031 கோடியாகவும் இருந்தன.
இந்தியப் பொருளாதாரம் 7.3% வளர்ச்சி: மூடிஸ் கணிப்பு 

  • 2019-2020-ஆம் நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.3 சதவீத வளர்ச்சி காணும் என சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் 1.3.2018 அன்று தெரிவித்துள்ளது.
  • 2017-18 நிதியாண்டில் 7.2 சதவீதமாக காணப்பட்ட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2018-19 நிதியாண்டில் அதை விட குறைவாக 7 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
GDP வளர்ச்சி விகிதம் 6.6%ஆக குறைவு 

  • நாட்டின் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) விகிதம் 3ஆவது நிதிகாலாண்டில் 6.6 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 5 நிதிகாலாண்டில் மிகவும் குறைவாகும்.
  • 2018-19ஆம் நிதியாண்டின் 3ஆவது காலாண்டில் ஜிடிபி ரூ.35 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2017-18ஆம் நிதியாண்டில் 3ஆவது காலாண்டில் ரூ.32.85 லட்சம் கோடியாக இருந்தது. இதை வைத்து பார்த்தால், ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.6 சதவீதம் எனத் தெரிய வருகிறது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்/ Tamil Nadu Affairs 

அத்திக்கடவு-அவினாசி திட்டம் - அடிக்கல் நாட்டல் 

  • திருப்பூர் மாவட்டம் புதுப்பாளையத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் (28.2.2019) நாட்டினார்.
  • அத்திக்கடவு-அவினாசி திட்டம் ரூ.1,652 கோடி செலவில் செயல்படுத்தப்படஉள்ளது.
  • அத்திக்கடவு-அவினாசி திட்டம் 
    • கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஏரிகள், குளங்களில் தண்ணீர் நிரப்பி அதன்மூலம் நிலத்தடி நீரை செறிவூட்டும் வகையிலும், பில்லூரில் இருந்து பவானி ஆற்றில் உபரியாக செல்லும் தண்ணீரை பாசனத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்தும் வகையில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் 3 மாவட்ட மக்களின் 60 ஆண்டு கனவு நிறைவேற உள்ளது.
  • திருப்பூர் சீர்மிகு நகர திட்டப்பணிகள்
    • திருப்பூரில் அம்ரூத் மற்றும் சீர்மிகு நகரங்கள் திட்டத்தில் ரூ.1,875 கோடியே 47 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் அடிக்கல் நாட்டு விழா மேற்கொள்ளப்பட்டது. 
தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கிவைப்பு 

  • கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில், மார்ச் 1 அன்று நடந்த மத்திய அரசின் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
  • மதுரை-செட்டிகுளம் (மதுரை மாவட்டம்) இடையிலான நான்கு வழிச்சாலை திட்டப்பணி, செட்டிகுளம் (மதுரை மாவட்டம்)- நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) ஆகியவற்றுக்கு இடையேயான நான்கு வழிச்சாலை திட்டப்பணி, கன்னியாகுமரியில் சாலை பாதுகாப்பு பூங்கா, போக்குவரத்து மியூசியம் மற்றும் ராமேசுவரம்- தனுஷ்கோடிக்கு புதிய ரெயில் வழி தடத்தில் பாலம் அமைப்பதற்கான அடிக்கலையும் பிரதமர் மோடி நாட்டினார்.
  • மதுரை மற்றும் சென்னை இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கிவைத்தார். 
இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு - புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரில் இதுவரை 366 தொழில் நிறுவனங்கள், ரூ.721.80 கோடி முதலீட்டில் உற்பத்தியை தொடங்கியுள்ளனர். இதன் மூலம் 4,863 பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
கலைமாமணி விருதுகள் 2011-2018

  • தமிழ்நாடு அரசின், இயல், இசை, நாட்டியம், நாடகம், கிராமியம், திரைத்துறை மற்றும் சின்னத்திரை போன்ற பல்வேறு கலைப்பிரிவுகளில் புகழ்பெற்ற, திறமைமிக்க 201 கலை வித்தகர்களுக்கு மாநில அளவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கலைமாமணி விருதுகளை 2011 முதல் 2018 ஆண்டு வரை, 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • கலைமாமணி விருது விருது பெறும் ஒவ்வொரு கலைஞருக்கும் மூன்று பவுன் (24 கிராம்) எடையுள்ள பொற்பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்.
  • புகழ்பெற்ற தமிழக கலைஞர்கள் விருது
  • அகில இந்திய அளவில் புகழ்பெற்ற தமிழக கலைஞர்களுக்கான விருது 
  • இவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையுடன் சான்றிதழும் வழங்கப்படும்.
  • இயல் பிரிவு - பாரதி விருது 
    • புலவர் புலமைப்பித்தன்
    • கவிஞர் சுப்பு ஆறுமுகம்
    • சிவசங்கரி 
  • இசைப்பிரிவு - எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது
    • எஸ்.ஜானகி, 
    • பாம்பே சகோதரிகள் சி.சரோஜா- லலிதா
    • டி.வி.கோபாலகிருஷ்ணன் 
  • நாட்டிய பிரிவு - பால சரஸ்வதி விருது
    • வைஜயந்திமாலா பாலி, 
    • வி.பி.தனஞ்ஜெயன்
    • சி.வி.சந்திரசேகர் 
கீழடியில் 5-வது கட்ட அகழாய்வு 

  • கீழடியில் 5-வது கட்ட அகழாய்வு இன்னும் விரிவாக நல்ல உலகத்தரம் மிக்க பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்றும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ளது. 
  • முதல் 4 ஆய்வுகளில் கண்டெடுத்த 14 ஆயிரத்து 500 பொருட்களையும் காட்சிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
  • இதற்காக 1 ஏக்கரில் அகழ் வைப்பகம் ஏற்படுத்தப்பட உள்ளது. 
  • தமிழகத்தில் 91 வரலாற்று சின்னங்கள் உள்ளன
  • தமிழகத்தில் உள்ள 36 அருங்காட்சியகத்தில் 1 லட்சத்து 22 ஆயிரம் அரும்பொருட்கள் உள்ளன. மேற்கண்ட தகவல்களை தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs

கேலோ இந்தியா செயலி (Khelo India App) அறிமுகம் 
  • விளையாட்டு, உடல்தகுதி ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், கேலோ இந்தியா என்ற பெயரில் செல்லிடப் பேசி செயலியை பிரதமர் மோடி பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார்.
  • மத்திய அரசின் கேலோ இந்தியா (விளையாடு இந்தியா) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய விளையாட்டு ஆணையம், இந்தச் செயலியை வடிவமைத்துள்ளது. 
  • விளையாட்டையும், உடல்தகுதியையும் அடிப்படையாக வைத்து செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். 
  • 18 விளையாட்டுகள் குறித்த விதிமுறைகளும் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும். 
  • ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தகவல்கள் கிடைக்கின்றன.
முக்கிய தினங்கள்/ Important Days
பூஜ்ய பாகுபாடு நாள் (Zero Discrimination Day) - மார்ச் 01 
  • பூஜ்ய பாகுபாடு நாள் (Zero Discrimination Day 2019) என்பது ஐநா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் கொண்டாடப்படும் நாளாகும். இந்நாள் அனைத்து நாடுகளிலும் சட்டம் மற்றும் நடைமுறையில் சமத்துவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
பொதுக் கணக்கு தினம் (Civil Accounts Day 2019)- மார்ச் 1
  • மார்ச் 1, 1976 அன்று புது டெல்லியில் இந்திய சிவில் அக்கவுண்டஸ் சர்வீஸ் (ICAS) தொடங்கப்பட்டதின் நினைவாக ஆண்டுதோறும் மார்ச் 1 அன்று "பொதுக் கணக்கு தினம் (Civil Accounts Day)" கடைபிடிக்கப்படுகிறது. 
தியாகராஜ பாகவதர் பிறந்த தினம் - மார்ச் 1 
  • எம். கே. தியாகராஜ பாகவதர், மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக MKT என அழைக்கப்படுகிறார். தமிழ்த் திரையுலகின் முடிசூடா வேந்தர், ஏழிசை மன்னர் என்று போற்றப்பட்ட தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் மார்ச் 1 ஆகும்.
  • கர்நாடக சங்கீதத்துக்கு ஒரு தியாகராஜர் என்றால், திரை இசைக்கு ஒரு தியாகராஜ பாகவதர். தமிழ் தியாகராஜர் என்று அழைக்கப்பட்டவர்.
TNPSC Current Affairs 1-2 March 2019 PDF
TNPSC Link File Size 1 MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.
Post a Comment (0)
Previous Post Next Post