TNPSC Current Affairs February 25-26, 2019 - Download PDF


Daily Current Affairs Quiz 2019-2018
Daily Current Affairs Notes 2019-2018  
14500 Model Questions Answers
TNPSC Current Affairs February 25-26, 2019, Daily Current Affairs February 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
உலக, இந்திய நிகழ்வுகள்/ International and National Affairs
சவுதி அரேபியாவின் அமெரிக்க தூதராக "முதல் முறையாக பெண்" நியமனம்
  • சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ‘சவுதி அரேபியா விஷன் 2030’ என்ற தொலைநோக்குத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறார். அதன்படி பெண்களுக்கு அந்நாட்டில் இதுவரை அளிக்கப்படாத பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
நிதி செயல்பாட்டு நடவடிக்கை குழு - கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் - சேர்ப்பு
  • சர்வதேச பயங்கரவாத நிதி கண்காணிப்பு, நிதி அதிரடி செயல் படை (FATF: Financial Action Task Force) புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு "பாகிஸ்தான் நாட்டை கருப்பு பட்டியலில்" சேர்க்க முடிவு செய்துள்ளது. 
  • நிதி மோசடி, பயங்கரவாத செயல்களுக்கு நிதியளிப்பை கட்டுபடுத்துவதற்காக, 1989-ம் ஆண்டு ‘நிதி செயல்பாட்டு நடவடிக்கைக்குழு’ (FATF) என்ற பெயரில் சர்வதேச குழு அமைக்கப்பட்டது.
தேசிய போர் நினைவு சின்னம் திறப்பு
  • டெல்லியில், ரூ.176 கோடி செலவில் 40 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட தேசிய போர் நினைவு சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி 25.2.2019 அன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ரெயில்வே தகவல்களை அறிய ரெயில் "Rail Drishti Dashboard" அறிமுகம் 
  • ரெயில்வே தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிய "ரெயில் திரிஷ்டி டேஷ்போர்டு" (Rail Drishti Dashboard) என்ற புதிய இணையதளத்தை ரெயில்வே அமைச்சர் "பியூஸ் கோயல்" 25.2.2019 அன்று தொடங்கி வைத்தார்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி’ என்ற திட்டம் - குறிப்புகள் 
  • நாட்டில் உள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் வகையில் ‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி’ என்ற திட்டத்தின் மூலம், தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும் திட்டம், உத்தரபிரதேச மாநிலம், கோரக்பூரில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 24.2.2019 அன்று தொடங்கிவைக்கப்பட்டது.
  • இத்திட்டத்தில் ஒரே நாளில் 1 கோடியே 1 லட்சம் பேரின் வங்கி கணக்குகளில் முதல் தவணையாக தலா ரூ.2 ஆயிரம் நேரடியாக செலுத்தப்பட்டது.
  • சென்னையில் நடந்த விழாவில், இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம், 24.2.2019 
  • மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம், 24.2.2019 அன்று டெல்லியில் நடைபெற்றது. 
  • வரி குறைப்பு
  • கட்டுமான பணி நடந்து வரும் நிலையில் உள்ள வீடுகளுக்கான ஜி.எஸ்.டி., 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ஆனால், இதற்கு உள்ளட்டு வரி பயன் கிடையாது.
  • குறைந்த விலை வீடுகளுக்கான ஜி.எஸ்.டி., 8 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதமாக குறைக்கப்படுகிறது. 
  • இந்த வரி குறைப்பு, 2019 ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. 
விருதுகள்/ Awards and Honors
ஆஸ்கர் விருதுகள் 2019
  • அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது விழா (91st Academy Awards 2019) டால்பின் திரையரங்கில் 24.2.2019 அன்று நடைபெற்றது. 
    • சிறந்த துணை நடிகை - ரெஜினா கிங் (திரைப்படம்: இஃப் பீல் ஸ்ட்ரீட் குட் டாக்)
    • சிறந்த ஆவணப்படம் - எலிசபெத் சாய் வசர்ஹெலி, ஜிம்மி சின், இவான் ஹேஸ் மற்றும் ஷானன் டில் (ஃபிரீ சோலோ, FreeSolo)
    • சிறந்த ஒப்பனைக்கான விருது: கிரேக் கேனம், கேட் பிஸ்கோ மற்றும் பேட்ரிசியா டெஹானி (வைஸ்)
    • சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருது: ரூத் கார்ட்டர் (பிளாக் பேந்தர்)
    • தயாரிப்பு வடிவமைப்பு - பிளாக் பேந்தர்
    • சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது: அல்ஃபோன்சோ குவாரான் - 'ரோமா' 
    • சிறந்த ஒலி தொகுப்பு விருது: ஜான் வார்ஹஸ்ட் மற்றும் நினா ஹார்ட்ஸ்டோன் (போகிமியான் ரஃப்சோடி)
    • சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருது: 'ரோமா' (மெக்சிகோ)
    • சிறந்த ஒலி கலவை விருது: பால் மேஸ்சி, டிம் கேவஜின், ஜான் கேசலி (போகிமியான் ரஃப்சோடி)
    • சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது: அல்போன்சோ கியுரானுக்கு ரோமா படத்திற்காக பெற்றார்
    • சிறந்த படத்தொகுப்பு விருது: ஜான் ஓட்மேன் (போகிமியான் ரஃப்சோடி)
    • துணை நடிகர் விருது: மஹெர்ஷாலா அலி (கிரீன் புக்)
    • சிறந்த அனிமேஷன் பட விருது: 'ஸ்பைடர் மேன் - இன்டு த ஸ்பைடர் வெர்ஸ்' 
    • சிறந்த அனிமேஷன் குறும்பட விருது: பாவோ 
  • ‘பீரியட் எண்ட் ஆப் சென்டன்ஸ்’ இந்திய ஆவண படத்துக்கு ஆஸ்கார் விருது
    • கோவையை சேர்ந்த முருகானந்தம் கதையை கருவாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘பீரியட் எண்ட் ஆப் சென்டன்ஸ்’ என்ற இந்திய ஆவண படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.
    • 26 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவண படத்தில் நாப்கின் முருகானந்தமும் நடித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த பெண் தயாரிப்பாளர் குனீத் மோங்கா தயாரித்த இந்த படத்தை லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் ஈரானிய-அமெரிக்கரான ராய்கா ஷெடாக்சி டைரக்டு செய்திருந்தார். இந்த படத்துக்கு சிறந்த ஆவண படத்துக்கான ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள்/ Tamil Nadu Affairs 
தமிழ்நாடு இசை பல்கலைக்கழகத்துக்கு "ஜெயலலிதா" பெயர்
  • தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழகம் "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா"வின் அழைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
71 லட்சம் மரக்கன்று நடும் திட்டம் - தொடக்கம்
  • மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளையொட்டி (24.02.2019) , தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக தமிழகம் முழுவதும் 191.85 கோடி ரூபாய் மதிப்பில் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
  • சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பாரதிதாசன் சிலை அருகே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மகிழம்பூ மரக்கன்று ஒன்றை நட்டு இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார். 
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs
கிரிக்கெட்

"4 பந்துகளில் 4 விக்கெட்" வீழ்த்தி "ரஷித்கான்" உலக சாதனை

  • சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் "4 பந்துகளில் 4 விக்கெட்" வீழ்த்தி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் "ரஷித்கான்" உலக சாதனை படைத்துள்ளார்.
  • ரஷித்கான் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதில் ‘ஹாட்ரிக்’ உள்பட தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 
  • உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நேற்று நடந்த, அயர்லாந்து அணிக்கு எதிராக, 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. 
T20 கிரிக்கெட்: விராட் கோலி சாதனை
  • சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட அணிக்கு எதிராக 500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை இந்திய கேப்டன் "விராட் கோலி" படைத்துள்ளார். விராட் கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொத்தம் 514 ரன்கள் எடுத்துள்ளார். 
இந்தியா-ஆஸ்திரேலியா T20 தொடர் 2019 
  • இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இந்தியாவில் நடைபெற்ற, 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. உள்நாட்டில் விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி ஒரு தொடரை இழப்பது இதுவே முதல் முறையாகும். தொடர் நாயகன் விருதை ஆஸ்திரேலியா மேக்ஸ்வெல் பெற்றார்.
இங்கிலாந்து அணி 24 சிக்சர் அடித்து உலக சாதனை
  • ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் "ஒரு இன்னிங்சில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர்கள் அடித்த அணி" என்ற (24 சிக்சர்கள்) சாதனையை இங்கிலாந்து கிரிக்கெட் அணி பெற்றுள்ளது. 
  • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்த சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது. 
துப்பாக்கி சுடுதல்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: சவுரப் சவுத்ரி உலக சாதனை
  • டெல்லியில் நடந்து வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில், இந்திய வீரர் சவுரப் சவுத்ரி, 245 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து, புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றார்.
TNPSC Current Affairs 25-26th February 2019 PDF
TNPSC Link File Size 1 MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.
Post a Comment (0)
Previous Post Next Post