TNPSC Current Affairs 3rd March 2019 - Download in PDF Format


Daily Current Affairs Quiz 2019-2018
Daily Current Affairs Notes 2019-2018  
14500 Model Questions Answers
TNPSC Current Affairs 3rd March 2019, Daily Current Affairs March 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
உலக, இந்திய நிகழ்வுகள்/ International and National Affairs
ஆரோக்கியமான நாடுகள் பட்டியல் 2019: இந்தியா 120-வது இடம் 
  • 169 நாடுகளில் ப்ளும்பெர்க் அமைப்பு நடத்திய ஆரோக்கியமான நாடுகள் பட்டியல் பற்றிய, சுகாதார கணக்கெடுப்பில் இந்தியா 120-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2017-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இந்தியா 119-வது இடத்தைப் பிடித்தது.
  • ஆரோக்கியமான நாடுகள் பட்டியல் 2019 (முதல் 5 இடங்கள், இந்தியா)
    1. ஸ்பெயின் 
    2. இத்தாலி 
    3. ஐஸ்லாந்து 
    4. ஜப்பான் 
    5. சுவிற்சர்லாந்து 
    • 120. இந்தியா 
    • அண்டை நாடுகள் அவை பெற்ற இடங்கள்: சீனா -53, இலங்கை - 66, வங்காள தேசம் - 91, நேபாளம் - 110, பாக்கிஸ்தான் - 124, ஆப்கானிஸ்தான் - 153.
இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு 2019
  • ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் மார்ச்1 அன்று நடைபெற்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC 2019, Organisation of Islamic Cooperation) மாநாடு நடைபெற்றது. 
  • OIC Summit 2019 மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றார்.
  • 57 இஸ்லாமிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஓஐசி அமைப்பின் மாநாட்டில், இந்தியாவைச் சேர்ந்த அமைச்சர் உரையாற்றுவது இதுவே முதல் முறை ஆகும்.
கட்டுமான தொழில்நுட்ப ஆண்டு - ஏப்ரல் 2019 - மார்ச் 2020
  • கட்டுமான தொழில்நுட்பம் குறித்த கண்காட்சி மற்றும் மாநாட்டை, தில்லியில் பிரதமர் மோடி மார்ச் 1 அன்று தொடங்கி வைத்தார். 
  • "ஏப்ரல் 2019 - மார்ச் 2020" காலகட்டத்தை கட்டுமான தொழில்நுட்ப ஆண்டாகக் கடைப்பிடிக்க வேண்டும் 
  • என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
  • Construction-Technology year - 2019-20
  • (2019-20, the year of construction technology, ("April 2019-March 2020" as Construction-Technology year).
  • GHTC-India செயலி அறிமுகம்: வீடு கட்டுமானம் தொடர்பான புத்தாக்க சிந்தனைகள், மாற்று தொழில்நுட்பங்கள் போன்றவற்றை அனைத்து தரப்பினரும் பகிர்ந்து கொள்வதற்கான "GHTC-India" என்ற செயலியை (mobile application) பிரதமர் அறிமுகம் செய்து வைத்தார்.
கலாசினிகோவ் ரைபிள் துப்பாக்கி ஆலை, அமேதி -அடிக்கல் 
  • Kalashnikov rifles manufacturing unit, Indo-Russia Rifles Pvt Limited, Kauhar in Amethi, UP.
  • உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அமேதி நகரில் உள்ள கவுஹர் பகுதியில், இந்திய-ரஷ்ய ரைபிள்ஸ் நிறுவனத்தை பிரதமர் மோடி 3.3.2019 அன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார் 
  • இந்திய-ரஷ்ய ரைபிள்ஸ் நிறுவனம் என்பது இந்தியாவின் ராணுவத் தளவாடத் தொழிற்சாலையும், ரஷ்ய நிறுவனமும் இணைந்த கூட்டு முயற்சி. கோர்வாவில் உள்ள ராணுவத் தளவாடத் தொழிற்சாலையில் நவீன கலாஷ்னிகோவ் துப்பாக்கிகள் தயாரிக்கப்படவுள்ளன.
ஊனமுற்றோர் விளையாட்டு மையம், குவாலியர் 
  • Centre for Disability Sports, Gwalior in Madhya Pradesh
  • ஊனமுற்றோருக்கான விளையாட்டு மையம் (Centre for Disability Sports’), மத்தியபிரதேச மாநிலம், குவாலியர் நகரில் அமையவுள்ளது. 
ஹம்பி திருவிழா 2019
  • கர்நாடக மாநிலம் ஹம்பி நகரில், ஹம்பி திருவிழா 2019 மார்ச் 2 அன்று தொடங்கியது. விஜயநகரப் பேரரசின் காலத்தில் இருந்தே ஹம்பி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. (Hampi Utsav 2019, Hampi Festival 2019).
நாடு கடத்தப்படும் "சஞ்சீவ் சாவ்லா"
  • கிரிக்கெட் சூதாட்டத்தரகர் (Cricket Bookie) சஞ்சீவ் சாவ்லாவை (Sanjeev Chawla) இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான உத்தரவில் (extradition order) பிரிட்டன் உள்துறை அமைச்சர் ஷாஜித் ஜாவீத் கையெழுத்திட்டுள்ளார்.
  • இந்தியாவில் குற்றம்சாட்டப்பட்டு பிரிட்டனில் தஞ்சமடைந்தோரை, இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிடுவது  இது 2ஆவது முறையாகும்.
  • இந்தியாவில் ரூ.9,000 கோடி நிதி மோசடி செய்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டு, லண்டனில் தஞ்சமடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான உத்தரவில் ஜாவீத் 2019 பிப்ரவரி  மாதம் கையெழுத்திட்டார்.
இந்தியா-அர்ஜெண்டினா இடையே மருத்துவப் பொருட்கள் ஒப்பந்தம்
  • மருத்துவப் பொருட்கள் ஒழுங்குமுறை துறையில் இந்தியாவுக்கும் அர்ஜெண்டினாவுக்கும் இடையே ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
விசாகப்பட்டினத்தில் ரயில்வே மண்டலம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரயில்வே மண்டலம் அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • தற்போதுள்ள தெற்கு மத்திய ரயில்வே மற்றும் கிழக்குக் கடற்கரை ரயில்வே மண்டலங்களை சீரமைத்து ராயகாடாவை தலைமையகமாகக் கொண்ட புதிய கோட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
புதுவை அரசின் தமிழ்மாமணி, தெலுங்கு ரத்னா விருதுகள் 
  • புதுவை அரசு சார்பில் புதுச்சேரி,  காரைக்கால் பிராந்தியங்களைச் சேர்ந்த தமிழறிஞர்கள் 20 பேருக்கு தமிழ்மாமணி விருதையும், ஏனாமைச் சேர்ந்த ஒருவருக்கு தெலுங்கு ரத்னா விருதையும் முதல்வர் நாராயணசாமி 2.3.2019 அன்று வழங்கினார்.
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs
டென்னிஸ்

துபாய் சாம்பியன்ஷிப் கோப்பை 2019: ரோஜர் பெடரர் சாம்பியன் 
  • துபாயில் நடந்த ஆண்களுக்கான துபாய் சர்வதேச டென்னிஸ் (Dubai Tennis Championship 2019) போட்டியில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) சாம்பியன் பட்டத்தை வென்றார். 
  • ரோஜர் பெடரர், ஒற்றையர் பிரிவில் பெறும்100-வது சர்வதேச பட்டம் (Roger Federer, ATP title century, 100th ATP title) இதுவாகும். 
  • ரோஜர் பெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் (20-time Grand Slam champion) பட்டங்களை வென்றுள்ளார். 
  • இவ்வெற்றி மூலம் ‘Open Era’ வரலாற்றில் (அமெச்சூர் வீரர்களுடன் இணைந்து தொழில்முறை வீரர்களும் அனுமதிக்கப்பட்ட 1968-ம் ஆண்டில் இருந்து) இந்த மைல்கல்லை எட்டிய 2-வது வீரர் என்ற சிறப்பை  பெடரர் பெற்றார். 
  • Roger Federer, the second man in the Open Era to claim 100 titles after Jimmy Connors (109). 
  • அமெரிக்க ஜாம்பவான் ஜிம்மி கனோர்ஸ் 109 பட்டங்களுடன் முதலிடம் வகிக்கிறார்.
கிரிக்கெட்

இந்தியா-ஆஸ்திரேலிய ஒரு நாள் போட்டி தொடர் 2019, இந்தியா
  • முதலாவது ஒரு நாள் போட்டி: இந்தியா வெற்றி
    • ஐதராபாத்தில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான (Australia tour of India, 2019, Ind Vs Aus ODI Series 2019) முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • கேதர் ஜாதவ் (Kedar Jadhav) ஆட்டநாயகன் (Player Of The Match) விருதை பெற்றார்.
முக்கிய தினங்கள்/ Important Days and Observances
உலக வனவிலங்கு நாள் (World Wildlife Day 2019) - மார்ச் 03
  • வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் "உலக வனவிலங்கு நாள் (World Wildlife Day 2019)" மார்ச் 03 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • 2019 உலக வனவிலங்கு நாள் (World Wildlife Day 2019 Theme) மையக்கருத்து:
    • நீருக்கு கீழே வாழ்க்கை: மக்கள் மற்றும் கிரகம் (Life Below Water: For people and planet) என்பதாகும்.
TNPSC Current Affairs 3rd March 2019 PDF
TNPSC Link File Size 1 MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.
Post a Comment (0)
Previous Post Next Post