TNPSC Current Affairs 8-9th February 2019 - Download PDF

Daily Current Affairs Quiz 2019-2018
Daily Current Affairs Notes 2019-2018  
14500 Model Questions Answers
TNPSC Current Affairs February 8-9, 2019, Daily Current Affairs February 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs
கிரிக்கெட்

இரஞ்சி  கோப்பை கிரிக்கெட் 2018-19: "விதர்பா அணி" சாம்பியன்
  • 2018-19 இரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் "விதர்பா அணி" சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 
  • நாக்பூரில் நடந்த இறுதிப்போட்டியில் விதர்பா அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா அணியை தோற்கடித்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
  • ஆட்டநாயகன் விருது - ஆதித்யா சர்வாதே
  • விதர்பா அணியின் ஆதித்யா சர்வாதே 2 இன்னிங்சிலும் சேர்த்து 11 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
  • மராட்டிய மாநிலத்தை சேர்ந்த விதர்பா அணி தொடர்ந்து 2-வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது. இதன் மூலம் ரஞ்சி கோப்பையை விதர்பா அணி தக்கவைத்துக் கொண்டது.
  • விதர்பா, மும்பை, மராட்டியம், கர்நாடகா, ராஜஸ்தான், டெல்லி அணிகள் தொடர்ச்சியாக 2 முறை பட்டம் வென்றுள்ளன.
  • ரஞ்சி கோப்பையை தக்கவைத்துக் கொண்ட  6-வது அணி என்ற சிறப்பை விதர்பா அணி பெற்றது.
  • இரஞ்சி கோப்பை 2018-19 
    • 2018 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள், 2018 நவம்பர் 1 முதல் 2019 பிப்ரவரி 6 வரை நடைபெற்றது.  
    • 2018-19 ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பை போட்டி, 85-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டி ஆகும்.
    • 2017-18 ஆண்டில் மொத்தம் 37 அணிகள் பங்கேற்றன
  • 7 புதிய அணிகள் பங்கேற்பு 
    • ஒவ்வொரு மாநில அணிக்கும் கட்டாயம் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று லோதா கமிட்டி உத்தரவிட்டதை தொடர்ந்து, புதிதாக 7 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன, அவற்றின் விவரம்: மணிப்பூர், அருணாசல பிரதேசம், மிúஸாரம், உத்தரகண்ட், சிக்கிம், நாகாலாந்து, மேகாலயம், பிகார், புதுச்சேரி.
  • இரஞ்சி  கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் (கடந்த 4 ஆண்டுகள்)
    • 2015-16 - மும்பை
    • 2016-17 - குஜராத்
    • 2017-18 - விதர்பா
    • 2018-19 - விதர்பா
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணம் 2019
  • ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் (Australia tour of India, 2019) மேற்கொண்டு இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. 20 ஓவர் போட்டிகள், 2019 பிப்ரவரி 24 முதல் தொடங்குகின்றன. பெங்களூரு (பிப்.27) ஆகிய நகரங்களிலும், ஒரு நாள் போட்டிகள் 2019 மார்ச் 2 முதல் நடைபெறுகிறது.
இந்தியா - நியூசிலாந்து 20 ஓவர் கிரிக்கெட் தொடர் 2019
  • ஆக்லாந்தில் நடந்த இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  
T20 தொடரை கைப்பற்றிய - நியூசிலாந்து பெண்கள் அணி
  • நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து பெண்கள் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 
T20 போட்டிகளில் அதிக ரன்கள் - ரோஹித் சர்மா சாதனை 
  • ரோஹித் சர்மா T20 போட்டிகளில் அதிக ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். 
  • ரோஹித் சர்மா மொத்தம் 92, T20 போட்டிகளில் 2288 ரன்களை எடுத்துள்ளார். 
ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக "ரிக்கி பாண்டிங்" நியமனம்
  • ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
பளுதூக்குதல்

இகாட் கோப்பை பளுதூக்குதல் 2019: "மீராபாய் சானு" தங்கப்பதக்கம்
  • இகாட் கோப்பைக்கான சர்வதேச பளுதூக்குதல் போட்டி தாய்லாந்தில் (7.2.2019) தொடங்கியது.  
  • மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு, 48 கிலோ உடல் எடைப்பிரிவில் ‘ஸ்னாட்ச்’ முறையில் 82 கிலோவும், ‘கிளன் அண்ட் ஜெர்க்’ முறையில் 110 கிலோவும் தூக்கி தங்கப்பதக்கம் வென்றார்.
கால்பந்து

IFA கால்பந்து தரவரிசைப் பட்டியல் 7.2.2019
  • இந்திய கால்பந்து அணி 103-வது இடம் 
  • சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA), 7.2.2019 அன்று வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில், இந்திய கால்பந்து அணி 103-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. 
  • ஆசிய கால்பந்து சம்மேளனம் (AFC) தரவரிசையில் 18-ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. 
  • 2017-இல் தான் இந்திய கால்பந்து அணி, 21 ஆண்டுகளுக்கு பின் முதல் 100 இடங்களில் நுழைந்தது. 
உலக நிகழ்வுகள்/ International Affairs 
தாய்லாந்தின் தேசிய நீர்வாழ் உயிரினம் "சியாமீஸ் சண்டை மீன்"
  • சியாமீஸ் சண்டை மீன்-ஐ (Siamese fighting fish) தேசிய நீர்வாழ் விலங்காக (national aquatic animal) தாய்லாந்து 
  • நாடு  அறிவித்துள்ளது.
  • சியாமீஸ் சண்டை மீன்களை பாதுகாக்கும் முயற்சிகள் மற்றும் வர்த்தக இனப்பெருக்கம் ஆகியவற்றை அதிகரிக்க தாய்லாந்து அரசு தேசிய நீர்வாழ் உயிரினமாக அறிவித்துள்ளது.
உலகி வங்கி தலைவர்:  "டேவிட் மல்பாஸ்": பெயர் பரிந்துரை
  • உலகி வங்கி தலைவர் பதவிக்கு "டேவிட் மல்பாஸ்" பெயரை அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.
ஆடைகள் நுகர்வு குறித்த "India Size" திட்டம் 
  • இந்தியாவில் ஆடைகள் நுகர்வு பற்றிய ஆய்வை மேற்கொள்ள மத்திய அரசு "India Size" என்ற திட்டத்தை  துவக்கியுள்ளது.
இந்திய நிகழ்வுகள்/ National Affairs 
ரூ.100 கோடி வருமானம் உள்ள நபர்கள்: 61 பேர் 
  • நாட்டில் 2017-18 மதிப்பீட்டு ஆண்டில், ஆண்டு வருமானம் ரூ.100 கோடியும், அதற்கு மேலும் வருமானம் ஈட்டியதாக 61 தனிநபர்கள் மட்டுமே கணக்கு காட்டி உள்ளனர் 
  • 2016-17 நிதி ஆண்டில் இந்த எண்ணிக்கை 38 ஆக இருந்துள்ளது.
  • நாடாளுமன்ற மக்களவையில் எழுத்து மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதித்துறை இணை அமைச்சர்  பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
  • பினாமி சொத்து சட்டத்தின் கீழ் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் ரூ.6 ஆயிரத்து 900 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன” என  நிதித்துறை இணை அமைச்சர்  சிவபிரதாப் சுக்லா  தெரிவித்தார்.
ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்
  • மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ள ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் (RKA, Rashtriya Kamdhenu Aayog) திட்டம் , பசுக்களை அழிவின்றி காத்தல், பசுக்கள் பாதுகாப்பு மற்றும் பசுக்கள் சந்ததி விருத்தி ஆகிய நோக்கங்களை கொண்டது. 
16-18 வயதுள்ளவர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் லைஸென்ஸ்  
  • இந்தியாவில் தற்போது 16 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு இனி 4.0 வாட் திறன் உள்ள கியர் இல்லாத எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அல்லது பைக் ஓட்ட லைஸென்ஸ் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.   
இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதம்: குறைப்பு
  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI repo rate)  வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. 
  • ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் முதலாவது நிதிக் கொள்கை குழு கூட்டம் மும்பையில் (7.2.2019) நடைபெற்றது. 
  • இதில் ரெப்போ ரேட் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ ரேட் ஆகியவற்றை 0.25 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டது. 
  • இதன் மூலம், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 6.5 சதவீதத்தில் இருந்து குறைந்து 6.25 சதவீதமாக இருக்கும். அதேபோல் வர்த்தக வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 6.25 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 
நுண்ணறிவுப் நடவடிக்கைகள் குறித்த தேசிய மாநாடு 2019 
  • 2019 பிப்ரவரி 7 ஆம் தேதி புது டெல்லியில், தேசிய போலிஸ் பணிக்குழுவின் நுண்ணறிவுப் நடவடிக்கைகள் குறித்த இரண்டாவது தேசிய மாநாடு (National Conference of Micro Missions of National Police Mission) நடைபெற்றது.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்/ Environmental Affairs 
2018-இல் புவியின் வெப்பம் அதிகபட்ச உயர்வு
  • 2018-ஆம் ஆண்டில், பூமியின் சராசரி வெப்பம் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிக அதிகபட்ச அளவு இருந்ததாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (NASA) மற்றும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல அமைப்பு (NOAA) தெரிவித்துள்ளன.
  • நாசாவின் கோடார்ட் விண்வெளி ஆய்வு மையப் பிரிவு (GISS) வெளியிட்டுள்ள அறிக்கை 
    • பூமியின் வெப்பநிலை, கடந்த 1951-ஆம் ஆண்டு முதல், 1980-ஆம் ஆண்டு வரை இருந்த சராசரி அளவைவிட கடந்த 2018-ஆம் ஆண்டில் 0.83 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்துள்ளது.
  • 2018 ஆண்டின் வெப்பநிலை கடந்த 2016, 2017, 2015-ஆம் ஆண்டுகளை விட குறைவாகவே இருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளின் ஒட்டுமொத்த வெப்பநிலை நவீன முறையில் பதிவு செய்யப்பட்டதிலேயே மிகவும் அதிகம் ஆகும் என்று அந்த அமைப்பு தெரிவித்தது.
  • 2018-ஆம் ஆண்டின் வெப்பநிலை, கடந்த 20-ஆம் நூற்றாண்டின் சராசரி வெப்பநிலையைவிட 0.79 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்ததாக (NOAA) தெரிவித்தது.
உலக பருவநிலை, வெப்ப நிலை மற்றம் 2019-2023
(9.2.2019 தினத்தந்தியில் இலஞ்சியன் அவர்கள் எழுதிய கட்டுரையின் தகவல் பகுதிகள் தேர்வு நோக்கில் இங்கு பகிரப்படுகிறது).
  • உலகளவில் பருவநிலையை கணக்கிடத் தொடங்கிய காலக்கட்டம் என்றால் அது 1850-ம் ஆண்டு. அந்த காலக்கட்டத்தில் இருந்து 150 ஆண்டுகளுக்கு மேலாக வெப்ப நிலை பதிவு செய்யப்பட்டு வருகிறது.  
  • அடுத்த 5 ஆண்டுகளில் வெப்ப நிலை தொழில்புரட்சி காலத்தில் இருந்ததை விட 1 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு மேலாக கடந்து செல்லும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கணித்திருக்கிறார்கள்.
  • 2015-ம் ஆண்டுதான் உலகளாவிய வெப்ப நிலை, ‘பிரி இண்டஸ்டிரியல்’ என்று சொல்லப்படுகிற தொழில் புரட்சிக்கு முந்தைய கால கட்டத்தில் (1850-1900) நிலவிய வெப்ப நிலையை விட 1 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகி இருக்கிறது. 
  • பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டுப்படி, தொழில் புரட்சிக்கு முந்தைய கால கட்டத்தில் (1850-1900) இருந்த வெப்ப நிலையை விட குறைந்தது 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்ப நிலையை குறைத்தாக வேண்டும்,  
  • 2019-ம் ஆண்டு வெப்ப நிலை
    • 2019-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையில் வெப்ப நிலையானது தொழில் புரட்சிக்கு முந்தைய கால கட்டத்தில் நிலவிய வெப்ப நிலையை விட சராசரியாக 1.03 டிகிரி செல்சியஸ்சிலிருந்து 1.57 டிகிரி செல்சியஸ் வரை உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
  • பசுமை குடில் வாயுக்கள் 
    • பசுமை குடில் வாயுக்கள் என்பது என்ன என்றால் நீராவி, கார்பன்டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, குளோரோபுளோரா கார்பன், ஹைட்ரோ புளோரா கார்பன் போன்றவை
    • இவை பூமியின் வெப்பத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இவை மட்டும் இல்லாவிட்டால், பூமியின் வெப்ப நிலை குறைந்தபட்சம் 33 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைவாக இருக்கும்.
தமிழ்நாடு நிகழ்வுகள்/ Tamil Nadu Affairs
தமிழ்நாடு வரவு-செலவு திட்டம் 2019-2020
  • 2019-2020-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வரவு-செலவு திட்டத்தை (TN Budget 2019) சட்டசபையில், நிதி அமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
  • 2019-2020 வரவு-செலவு திட்ட முக்கிய அம்சங்கள்: 
  • 2018-2019-ம் ஆண்டில் 1.80 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில் ரூ.1,361 கோடி நிதி ஒதுக்கீட்டில் மேலும் 2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். 
  • சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைப்பதற்காக விவசாயிகளுக்கு அரசு 90% மானியம் அளிக்கிறது. 
  • ரூ.84.09 கோடி மானிய உதவியுடன், 10 குதிரை திறன் வரையுள்ள சூரிய சக்தியால் இயங்கும் 2 ஆயிரம் பம்புசெட்டுகளை விவசாயிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
  • ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 
  • பயிர்க்கடன்கள் மீதான வட்டி தள்ளுபடிக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ‘கஜா’ புயல் பாதித்த மாவட்டங்களில் சேதம் அடைந்த குடிசைகளுக்கு மாற்றாக ஒரு வீட்டுக்கு ரூ.1.70 லட்சம் அலகுத் தொகை வீதம் ரூ.1,700 கோடி திட்ட மதிப்பீட்டில், ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான பணிகளை இந்த அரசு மேற்கொண்டுள்ளது.
  • மதுரை திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு, திருமங்கலம், கள்ளிக்குடி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 3 வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய்க் கோட்டம் ஒன்று உருவாக்கப்படும்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு 3 ஆயிரம் பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 3 ஆயிரம் சிறப்பு நாற்காலிகளும் வழங்கப்படும்.
  • மாணவர்களுக்கு ரூ.1,362 கோடியில் மடிக்கணினிகள் வழங்கப்படும்.
  • காவல் துறையில் 9,975 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
  • சென்னை, மதுரை, கோவையில் 2 ஆயிரம் மின்சார பஸ்கள் இயக்கப்படும்.
  • ராமேசுவரத்தில் அப்துல்கலாம் பெயரில் புதிய கலை-அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்.
தமிழ்நாடு வரவு-செலவு திட்டம் 2019-2020 - குறிப்புகள் 
  • தமிழ்நாடு வரவு-செலவு திட்டம் 2019-2020 நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம்  தெரிவித்த குறிப்புகள் சில;
  • தமிழகத்துக்கு நீண்ட காலத்துக்கு பயன் அளிக்கும் நீர்ப்பாசனம், மக்கள் நலத்திட்டங்கள் உள்பட 36 புதிய திட்டங்கள் சுமார் ரூ.20 ஆயிரம் கோடிக்கு மதிப்பிடப்பட்டுள்ளது.
  • மூலதனச் செலவுகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் நிதி ஒதுக்கப்படுகிறது. 
  • வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு ஆயிரத்து 31 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. 
  • வருவாய் பற்றாக்குறை
  • இந்த நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.19 ஆயிரத்து 317 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
  • வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.14 ஆயிரத்து 314 கோடியாக இருக்கும்.
  • ஒரு நிதியாண்டுக்கு ரூ.51 ஆயிரத்து 800 கோடியை கடனாக பெற மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஆனாலும், ரூ.43 ஆயிரம் கோடி அளவுக்குத்தான் கடன் வாங்குவோம். 
  • கடனை படிப்படியாக குறைத்து வட்டி செலவுகளை தவிர்க்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
  • வரி வருவாய் 
  • பெட்ரோலிய பொருட்களுக்கான வரியில் 12 சதவீதமும், பத்திரப்பதிவுகள் போன்ற அம்சங்கள் மூலம் 14 சதவீதம் அளவுக்கும் வரி வருவாய் உயர்ந்துள்ளது. 
  • இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுவகைகள் மூலம் 8 சதவீத வரிவருவாய் உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி. என்ற சரக்கு மற்றும் சேவை வரியில் (2018-ம் ஆண்டு மார்ச் - டிசம்பர் வரை) தமிழகத்தின் பங்கு ரூ.33 ஆயிரத்து 978 கோடியாக உள்ளது. 
  • வரும் நிதியாண்டில் இது ரூ.53 ஆயிரத்து 738 கோடியாக உயரும்.
சரக்கு & சேவை வரி (GST) வருவாய் 2018 : ரூ.3,161.57 கோடி வருவாய் 
  • 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதியில் இருந்து ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, இந்தியா முழுவதிலும் அமலுக்கு வந்தது. 
  • நிதி ஆண்டின் தொடக்கமான 2018 ஏப்ரல் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதிவரை 9 மாதங்களில் தமிழக அரசுக்கு கிடைத்துள்ள வருவாய் மற்றும் இழப்பீடு விவரம்:
  • 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் GST மூலம் தமிழ்நாடு அரசுக்கு ரூ.3,161.57 கோடி வருவாய் கிடைக்கப் பெற்றது. 
    • மே - ரூ.2,864.29 கோடி 
    • ஜூன் - ரூ.4,718.51 கோடி 
    • ஜூலை - ரூ.3,072 கோடி 
    • ஆகஸ்டு - ரூ.3,593.15 கோடி 
    • செப்டம்பர் - ரூ.3,014.26 கோடி 
    • அக்டோபர் - ரூ.4,159.91 கோடி 
    • நவம்பர் - ரூ.3,116.53 கோடி 
    • டிசம்பர் - ரூ.3,650.42 கோடி 
  • GST இழப்பீடு
    • 2018 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலும், அக்டோபரிலும் இழப்பீடாக ஒரு ரூபாயைக்கூட மத்திய அரசு வழங்கவில்லை. செப்டம்பரில் ரூ.308 கோடி, நவம்பரில் ரூ.77 கோடி, டிசம்பரில் ரூ.1,470 கோடி என மொத்தம் ரூ.1,855 கோடியை தமிழக அரசுக்கு இழப்பீடாக மத்திய அரசு வழங்கியுள்ளது.
சென்னை-மதுரை இடையே "தேஜஸ் ரெயில்" சேவை 
  • நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ‘தேஜஸ்’ 2-வது ரக ரெயில் (Tejas Express), சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படவுள்ளது.  
  • ‘தேஜஸ்’ 2-வது ரக  அதிவேக ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 19-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.
  • சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF) நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ‘தேஜஸ்’ 2-வது ரக ரெயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டது.
  • மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் ‘தேஜஸ்’ ரெயில் சென்னையில் இருந்து மதுரைக்கு 6½ மணி நேரத்தில் செல்லும்.
  • ‘தேஜஸ்’ ரெயில் 6½ மணி நேரத்தில் மதுரை செல்வதால், தெற்கு ரெயில்வேயின் அதிவேக ரெயிலாக ‘தேஜஸ்’ ரெயில் இருக்கும்.
முக்கிய தினங்கள்/ Important Days February 2019
உலக பருப்பு வகைகள் தினம் - பிப்ரவரி 10 
  • முதலாவது உலக பருப்பு வகைகள் தினம் (World Pulses Day 2019), பிப்ரவரி 10 2019 (10.2.2019) அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • 2016 ஆம் ஆண்டை, ஐக்கிய நாடுகள் அவை, சர்வதேச பருப்பு வகைகள் ஆண்டாக (International Year of Pulses 2016) கடைபிடித்தது. 
TNPSC Current Affairs 8-9th February 2019 PDF
TNPSC Link File Size 2 MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.
Post a Comment (0)
Previous Post Next Post