TNPSC Current Affairs 14th February 2019 - Download PDF


Daily Current Affairs Quiz 2019-2018
Daily Current Affairs Notes 2019-2018  
14500 Model Questions Answers
TNPSC Current Affairs February 14, 2019, Daily Current Affairs February 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
உலக, இந்திய நிகழ்வுகள்/ International and National Affairs 
பன்னாட்டு கடல் பயிற்சி 'AMAN 2019'
  • 46 நாடுகள் பங்கேற்ற "பன்னாட்டு கடல் பயிற்சி "AMAN 2019", பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் பிப்ரவரி 8 முதல் 12 வரை நடைபெற்றது. Multinational maritime exercise ‘AMAN 2019.
  • “Together for Peace” என்ற முழக்கத்துடன் பயிற்சி நடைபெற்றது. 
நாட்டின் இரண்டாவது "மின்னணு தொழில்முனைவோர்" பூங்கா 
  • நாட்டின் இரண்டாவது "மின்னணு தொழில்முனைவோர்" பூங்கா (Electropreneur Park), ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரில் 2019 மே மாதத்தில் தொடங்கபடவுள்ளது. இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா (STPI) அமைப்பு இந்த பூங்காவை செயல்படுத்த உள்ளது. 
  • STPI அமைப்பு, மின்னணு கணினி வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான (ESDM, Electronic System Design and Manufacturing) ஆரம்பநிலை தொழில்முனைவு நிறுவனங்களின் காப்பகமாக (park will incubate start-ups செயல்படுகிறது. 
  • டெல்லி பல்கலைக்கழகம் நாட்டின் முதலாவது "மின்னணு தொழில்முனைவோர்" பூங்காவை அமைத்துள்ளது. இந்த பூங்கா, சந்தை மதிப்பீடு 150 கோடி ரூபாய்க்கு உட்பட்ட 22 நிறுவனங்கள் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
மோடி சீட்டு நிறுவனங்களை ஒடுக்கும் மசோதா 2019
  • மோடி சீட்டு நிறுவனங்களை ஒடுக்கும் மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் (13.2.219) நிறைவேறியது. கட்டுப்பாடற்ற டெபாசிட் திட்டங்களை தடை செய்ய இந்த மசோதா வழிவகை செய்கிறது. 
  • உரிய அங்கீகாரமின்றி டெபாசிட்டுகளை பெற்றது தொடர்பாக 978 சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் மேற்கு வங்காளத்தில் மட்டும் 326 சம்பவங்கள் நடந்திருக்கின்றன. 
  • இத்தகைய அங்கீகாரமற்ற டெபாசிட்டுகளை பெறுவதை முடிவுக்கு கொண்டு வர, இந்த மசோதா, சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் சொத்துக்களை ஜப்தி செய்து, அவற்றை விற்று டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்க வகை செய்கிறது.
மாநாடுகள்/ Conferences
உலக அரசாங்க உச்சி மாநாடு 2019, துபாய் 
  • 2019 பிப்ரவரி 10 முதல் 12 வரை, ஏழாவது உலக அரசாங்க உச்சி மாநாடு, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் , நடைபெற்றது, (WGS-2019, World Government Summit 2019, Madinat Jumeirah, Dubai, UAE).
சூரிய சக்தி திட்டங்கள் குறித்த செயலாக்க கூட்டம் 2019, சென்னை
  • ‘இந்திய கடன் நெறிமுறை மற்றும் சூரிய சக்தித் திட்டங்கள்’ தொடர்பான வர்த்தக செயலாக்க கூட்டம் சென்னையில் பிப்ரவரி 13 அன்று நடந்தது.
  • மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பொருளாதார செயலாட்சி மற்றும் மாநிலங்களின் பிரிவு, இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வங்கியுடன் இணைந்து இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் தலைமை இயக்குனர் உபேந்திரா திரிபாதி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் சூரிய சக்தி நிறுவனங்கள், வர்த்தக சபைகள், மாநில மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
விருதுகள்/ Awards and Honors
2019 டான் டேவிட் பரிசு வென்ற "சஞ்சய் சுப்ரமணியம்"
  • 2019 ஆம் ஆண்டிற்கான இஸ்ரேல் நாட்டின், டான் டேவிட் பரிசை (Dan David Prize 2019) இந்திய வரலாற்றாசிரியர் சஞ்சய் சுப்ரமணியம் (Sanjay Subrahmanyam) பெற்றுள்ளார். 
  • நவீன கால ஐரோப்பிய, வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்காவிற்கும் இடையேயான பண்பாட்டு பங்களிப்பிற்காக இந்த பரிசு வழங்கப்பட்டது.
கனடிய சினிமா & தொலைக்காட்சி அகாடமி விருது பெற்ற "தீபா மேத்தா"
  • கனடிய சினிமா மற்றும் தொலைக்காட்சி அகாடமியின் வாழ்நாள் சாதனையாளர் விருதை (Lifetime Achievement Award) பெற்றுள்ள இந்திய திரைப்பட இயக்குனர்? தீபா மேத்தா (Deepa Mehta) பெற்றுள்ளார். 
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்/ Environmental Affairs
பருவநிலை மாற்றமும் வங்கப் புலிகளும் 
  • பருவநிலை மாற்றத்தின் விளைவால் இந்தியாவின் தேசிய விலங்கான வங்கப் புலிகள் முற்றிலும் அழிந்து போகும் நிலை ஏற்படலாம் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியல் விஞ்ஞானி பில் லாரென்ஸ் தெரிவித்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. 
  • பருவநிலை மாற்றத்தால் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள 10, 000 ச.கி.மீ பரப்பளவிலான சுந்தரவன சதுப்பு நிலக்காடுகள் அழியும் நிலை ஏற்படலாம். பருவநிலை மாற்றம் மட்டுமன்றி, கடல் மட்ட உயர்வு, சுந்தரவனக்காடுகளைச் சுற்றி அதிகரித்து வரும் தொழிற்சாலைகள், சாலைகள், விலங்குகளை வேட்டுயாடுவது, மக்களின் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களாலும் சுந்தரவனக்காடுகள் அழிந்து கொண்டிருக்கின்றன. 
  • உலகின் மிகப்பெரிய புலி இனமான வங்கப் புலிகள் தற்போது வெறும் 4,000 என்ற எண்ணிக்கையிலேயே உள்ளன. இதேநிலை தொடர்ந்தால், சுந்தரவன சதுப்பு நிலக் காடுகளில் வசிக்கும் வங்கப் புலிகள் அழியும் நிலை ஏற்படலாம். ஏனெனில் அதிகரித்து வரும் பருவநிலை மாற்றத்தின் விளைவால், சுந்தரவன காடுகள் அதன் தன்மையை இழக்க நேரிடும். அதில் வசிக்கும் வங்கப் புலிகள் அதன் வாழ்விடத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழப்பதால் புலிகளும் அழியும் நிலை ஏற்படும்.
  • சுந்தரவனக் காடுகளை நாம் எவ்வளவு காலம் பாதுகாக்கிறோமோ, அதுவரை எவ்வித பிரச்னையும் இல்லை. ஆராய்ச்சிகளின்படி, 2070-ஆம் ஆண்டுக்குள் சுந்தரவனக் காடுகளில் புலிகளின் வாழ்விடம் முழுவதுமாக அழியக் கூடும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 
தமிழ்நாட்டு நிகழ்வுகள்/Tamil Nadu Affairs
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: ரூ.1 லட்சம் அபராதம்
  • தமிழகத்தில் 2019 ஜனவரி 1-ந்தேதி முதல் குறிப்பிட்ட வகை பிளாஸ் டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
  • தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிப்பதற்கான சட்ட மசோதா சட்டசபையில் பிப்ரவரி 13 அன்று தாக்கல் செய்யப்பட்டது.
  • தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், விற்பனை செய்தல், கொண்டு செல்லுதல், பகிர்ந்து அளித்தல் ஆகிய குற்றங்களுக்காக வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு முதல் முறை 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 2-வது முறை தவறு செய்தால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை பிடிபட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அதன்பின்னரும் தவறு செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.
தளி எத்தலப்பருக்கு மணிமண்டபம்
  • இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று தியாகங்கள் பல புரிந்த தியாகிகளை பெருமைப்படுத்தும் வகையில் 69 நினைவகங்கள், 4 அரங்கங்கள், 5 நினைவுத்தூண்கள், ஒரு நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறையால் முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
  • தளி எத்தலப்பர், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தளி முதல் தழிஞ்சி மலைப்பகுதி வரை மக்களை ஆட்சி செய்த அரசர். இந்தியாவுக்கு வணிகம் செய்ய வந்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, மண்ணாசை கொண்டு ஆற்காடு நவாப்பையும், திப்புசுல்தானையும் தந்திரத்தால் வென்று, சமூகத்தை துண்டாடி பாளையங்களின் குடியாட்சியை குலைத்து ஊடுருவிய நேரத்தில், மண்ணின் மானத்தை காக்க கம்பெனி ஆட்சி அதிகாரத்துக்கு எதிராக வெகுண்டு எழுந்து போரிட்டு மடிந்த மாவீரர்களில் எத்தலப்பரும் ஒருவர் ஆவார்.
  • சுதந்திரத்துக்கு போராடிய எத்தலப்பருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல் தெரிவித்துள்ளார். 
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs
தடகளம்

தேசிய இளையோர் தடகள போட்டி 2019

  • 16-வது தேசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் வருகிற 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது. 
  • 16th National Youth Athletics Championships, Under-18 years, Raipur, Chhattisgarh, February 19-21, 2019.
கிரிக்கெட்

ஜான்டி ரோட்ஸ்-ன் "உலகின் சிறந்த பீல்டர்கள் பட்டியல் 2019"
  • கிரிக்கெட் உலகில் தலைச்சிறந்த பீல்டர்களில் ஒருவராக திகழ்ந்த தென்ஆப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ், தன்னை கவர்ந்த சிறந்த 5 பீல்டர்களின் பெயர் விவரத்தை வெளியிட்டுள்ளார். அதில் இடம் பிடித்துள்ள ஒரே இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா (Suresh Raina) ஆவார்.  
  • உலகின் சிறந்த பீல்டர்களில் சுரேஷ் ரெய்னாவுக்கு முதலிடம் வழங்கியுள்ளார். Jonty Rhodes list of top fielders of the cricket world 2019. 
  • Jonty Rhodes Top five fielders of world.
  • உலகின் சிறந்த பீல்டர்கள் பட்டியல் 2019
    1. சுரேஷ் ரெய்னா (இந்தியா) 
    2. சைமன்ட்ஸ் (ஆஸ்திரேலியா)
    3. பால் காலிங்வுட் (இங்கிலாந்து)
    4. டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா) 
    5. கிப்ஸ் (தென்ஆப்பிரிக்கா).
கார் பந்தயம்

2019 MRF Challenge சாம்பியன்: "ஜேமி சட்விக்" 
  • சென்னையில் நடைபெற்ற 2019 MRF Challenge கார் பந்தய சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் டிரைவர் "ஜேமி சட்விக்" (Jamie Chadwick) வென்றுள்ளார். 2019 MRF Challenge கார் பந்தய சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற சிறப்பை "ஜேமி சட்விக்" பெற்றுள்ளார்.
TNPSC Current Affairs 14th February 2019 PDF
TNPSC Link File Size 1 MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.
Post a Comment (0)
Previous Post Next Post