TNPSC Current Affairs 11th January 2019 | Download PDF


Daily Current Affairs Quiz 2019-2018
Daily Current Affairs Notes 2019-2018  
14500 Model Questions Answers
TNPSC Current Affairs January 11th, 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
இந்திய நிகழ்வுகள் / National Affairs
ஜனநாயகக் குறியீடு பட்டியல் 2018: இந்தியா 41-வது இடம் 
  • பொருளியல் புலனாய்வு அமைப்பின் (Economist Intelligence Unit, EIU), 2018 ஜனநாயகக் குறியீட்டு (EIU Democracy Index 2018) பட்டியலில், இந்தியா 41-வது இடம் பெற்றுள்ளது. 
  • நார்வே, ஐஸ்லாந்து, சுவீடன், நியூசிலாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் முறையே முதல் 5 இடங்களை (Norway, followed by Iceland, Sweden, New Zealand and Denmark) பிடித்துள்ளது. 
GST கவுன்சிலின் 32-வது கூட்டம்: ஜனவரி 10, 2019-குறிப்புகள்

  • GST கவுன்சிலின் 32-வது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் டெல்லியில் (GST Council Meeting January 10, 2019) நடந்தது.
  • ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை விற்று முதல் கொண்ட சிறு வணிகத்தை பாதுகாப்பதற்காக அவற்றின் ஜி.எஸ்.டி.க்கான விலக்கு (Exemption limit for GST) வரம்பை ரூ.40 லட்சமாக உயர்த்துவது என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது வருகிற நிதியாண்டு 2019 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.
  • வடகிழக்கு மாநிலங்களில் ரூ.10 லட்சமாக இருந்த இந்த விலக்கு வரம்பு, இனிமேல் ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
  • மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் மாநிலங்களுக்கு இடையேயான விற்பனைக்கு 2 ஆண்டுகள் வரை 1 சதவீத பேரிடர் வரி வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
உலக வங்கியின் இந்திய மொத்த உள்நாட்டு (GDP) உற்பத்தி கணிப்பு -7.3%

  • உலக வங்கியின், 2019 உலகளாவிய பொருளாதார முன்னேற்ற (World Bank’s 2019 Global Economic Prospects report) அறிக்கையின் படி, 2019 நிதியாண்டுக்கான (FY19), இந்தியாவின் மொத்த உள்நாட்டு (GDP) உற்பத்தியின் (Darkening Skies) கணிப்பு 7.3%-மாக உள்ளது. 
"WWW": Web-WonderWomen" இணையதள பிரச்சார இயக்கம் 

  • 2019 ஜனவரி 9 ம் தேதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சசகம் (WCD) இணையத்தள பிரச்சாரத்தை "WWW": Web-WonderWomen' என்ற ஒரு இணையதள பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Breakthrough India என்ற மனித உரிமைகள் அமைப்புடன் இணைந்து இந்த பிரச்சாரம் மேற்கோள்ளப்படுகிறது. 
  • "WWW" பிரச்சாரதின் நோக்கம், ஊடகங்கள் மூலம் சமூக மாற்றத்திரகு பாடுபடும் பெண்களை ன் விதிவிலக்கான சாதனைகளை கண்டுபிடித்து கொண்டாடுவது ஆகும். 
"Gangajal Project" என்ற திட்டம் - தொடக்கம் 

  • 2019 ஜனவரி மாதம் 9 அன்று, பிரதமர் நரேந்திர மோடி "Gangajal Project" என்ற திட்டத்தை ஆக்ரா நகரில் தொடங்கி வைத்தார். 2900 கோடி ரூபாய் மதிப்பிலானா இந்த "Gangajal Project" திட்டம் ஆக்ரா நகருக்கு தண்ணீர் வழங்கும் திட்டம் ஆகும். 
நியமனங்கள்/ Appointments
உலக சூரியக் குழு (GSC) தலைவராக "பிரணவ் ஆர்.மேத்தா" தேர்வு
  • உலக சூரியக் குழு அமைப்பின் (GSC, Global Solar Council) தலைவராக பிரணவ் ஆர்.மேத்தா (Pranav R. Mehta) தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக சூரியக் குழு அமைப்பின் தலைவராகியுள்ள முதலாவது இந்தியர் பிரணவ் ஆர்.மேத்தா ஆவார்.
ஊடக சுதந்திர கூட்டணி தலைவராக ‘இந்து’ என். ராம் நியமனம்

  • ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் (AFMF) தலைவராக ‘இந்து’ என்.ராம் (N. Ram appointed as president of Alliance for Media Freedom) நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
தமிழ்நாட்டு நிகழ்வுகள்/ Tamil Nadu Affairs
நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டம்: தொடக்கம் 
  • கிராமப்புறங்களில் பெண் தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (10.1.2019) தொடங்கி வைத்தார்.
  • கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், ரூ.50 கோடி மதிப்பீட்டில், 77 ஆயிரம் கிராமப்புற பெண் பயனாளிகளுக்கு, தலா ஒருவருக்கு 50 விலையில்லா நான்கு வார வயதுடைய "அசில் இன நாட்டுக்கோழிகள்" மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக கூண்டு இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. 
முக்கிய தினங்கள்/ Important Days
தேசிய இளைஞர் தினம் - ஜனவரி 12
  • சுவாமி விவேகானந்தர் பிறந்த நாநாளான ஜனவரி 12, தேசிய இளைஞர் தினமாக (National Youth Day) கடைபிடிக்கப்படுகிறது. (National Youth Day in India, 12 January, Birthday of Swami Vivekananda).
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs
கைப்பந்து

தேசிய சீனியர் கைப்பந்து 2019:சாம்பியன்கள் விவரம் 
  • 67-வது தேசிய சீனியர் கைப்பந்து போட்டிகள் (Senior National Volleyball Championship 2019, Chennai) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 
  • சாம்பியன்கள் பட்டம் மற்றும் முதல் 3 இடங்களில் வென்ற அணிகள் விவரம்;
  • ஆண்கள் பிரிவு: 
  • கர்நாடக அணி (சாம்பியன்)
  • ரெயில்வே அணி (2-ஆம் இடம்)
  • மகாராஷ்டிரா அணி (3-ஆம் இடம்).
  • பெண்கள் பிரிவு: 
  • கேரள அணி (சாம்பியன்)
  • தமிழ்நாடு (2-ஆம் இடம்)
  • கேரள அணி (3-ஆம் இடம்).
குத்துச்சண்டை
  • குத்துச்சண்டை தரவரிசை 2019: மேரிகோம் முதலிடம்
  • சர்வதேச குத்தச்சண்டை (International Boxing Association, AIBA) சம்மேளனம் (10.1.2019) வெளியிட்ட தரவரிசையில், இந்திய வீராங்கனை மேரிகோம் 48 கிலோ உடல் எடைப்பிரிவில் (1,700 புள்ளிகள்) முதலிடத்தை பிடித்துள்ளார்.
  • உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 6 முறை தங்கப்பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை என்ற சாதனையை படைத்தவர் மேரிகோம்.
  • டெல்லியில் 2018 நவம்பர் மாதம் நடந்த உலக குத்துச்சண்டை போட்டியில், 48 கிலோ எடைப்பிரிவில் வாகை சூடியவர் மேரிகோம் ஆவார். 
டென்னிஸ்
  • 2019 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் (2019 Australian Open) தொடர் ஜனவரி 14 முதல் 27 வரை, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நாரில் நடைபெறுகிறது.
கால்பந்து

ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து 2019, எகிப்து

  • 2019 ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டி, எகிப்து நாட்டில், 2019 ஜூன் 15 முதல் ஜூலை 13 வரை நடைபெறுகிறது. (2019 Africa Cup of Nations, Egypt between 15th June and 13th July, 2019). Download this file as PDF format in below the button;
TNPSC Current Affairs 11th January 2019 PDF
TNPSC Link File Size 1MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.
Post a Comment (0)
Previous Post Next Post