World AIDS Day 2018 - December 1
- World AIDS Day, designated on 1 December every year since 1988, is an international day dedicated to raising awareness of the AIDS pandemic caused by the spread of HIV infection and mourning those who have died of the disease.
World AIDS Day 2018 Theme: "Know your HIV status"
உலக எய்ட்ஸ் தினம் (World AIDS Day) - டிசம்பர் 1
- எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக (World AIDS Day) கடைப்பிடிக்கப்படுகிறது.
30 ஆவது உலக எய்ட்ஸ் தினம்
- 2018 ஆம் ஆண்டின் உலக எய்ட்ஸ் தினம் "30 ஆவது உலக எய்ட்ஸ் தினம்" ஆகும்.
மையக்கருத்து
- 2018 ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்தின் மையக்கருத்து: "Know your HIV Status" என்பதாகும்.
எய்ட்ஸ் நோய் (HIV-AIDS)
- எய்ட்ஸ் நோய் (HIV-AIDS) முதன் முதலில் 1981-ம் ஆண்டில் (டிசம்பர்) கண்டறியப்பட்டது.
- 1983-ல் பாரிஸ் நாட்டை சேர்ந்த லுக் மாண்டேக்னியர் என்ற ஆய்வாளரும் மற்றும் அமெரிக்காவில் உள்ள ராபர்ட் கேலோ என்ற ஆய்வாளரும் எய்ட்ஸ் நோய்க்குரிய வைரசினை தனித்தனியாகக் கண்டறிந்தனர்.
- 1986-ல் இந்த வைரசுக்கு மனிதன் முயன்று பெற்ற நோய் என்றும் எதிர்ப்பாற்றல் தேய்வு என்றும் பெயரிட்டனர்.
- எய்ட்ஸ் தொற்றினை எலிசா என்ற நுட்பமான முதல் நிலை ரத்தச் சோதனை, அதன் ஆண்டிபாடிகளை கண்டறிய பயன்படுகிறது. தொற்றினை உறுதி செய்ய ‘வெஸ்டர்ன் பிளாட்‘ என்ற சோதனை உதவுகிறது.
- உலகில் 2016 கணக்கின் படி, 3.70 கோடி பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் 2017 கணக்கின் படி, இந்தியாவில் 21 லட்சம் பேர் எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
HIV: Human immunodeficiency virus.
AIDS: Acquired Immunodeficiency Syndrome.
World AIDS Day 2018 - December 1, 2018 - Theme and Notes |