இந்திய குத்துச்சண்டை வீராங்கனை: மேரிகோம் உலக சாதனை
உலக குத்துச்சண்டை (பெண்கள்) 2018, டெல்லி
- டெல்லியில் நடந்து வரும் உலக குத்துச்சண்டை போட்டியில் 6 வது முறையாக சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் மேரிகோம் வென்றுள்ளார்.
மேரிகோம் உலக சாதனை: 6-வது முறையாக சாம்பியன் பட்டம்
- 48 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை எதிர் கொண்டார். இதில் அபாரமாக ஆடிய மேரி கோம் 5-0 என்ற கணக்கில் உக்ரைன் வீரர் ஹன்னா ஒகோட்டோவை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
உலக குத்துச்சண்டை போட்டிகளில் அதிக பதக்கங்களை (07) குவித்தவர் - மேரிகோம்
- 35 வயதான மேரிகோம் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 6 தங்கமும், ஒரு வெள்ளியும் வென்றுள்ளார். ஆகமொத்தம் 07 பதக்கங்கள் வென்றுள்ளார்.