Edappadi K Palanisamy and his Ministers List and New TN Government Formed

TN New Ministers List 

TNPSC Current Affairs: Tamil Nadu Ministers List 21.08.2017 (Tamil) Download PDF

31 அமைச்சர்களின் பட்டியல் 16.02.2017
  1. எடப்பாடி க. பழனிசாமி - முதல்வர் - பொதுநிர்வாகம், காவல், நிதி, பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை
  2. திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை அமைச்சர்
  3. செங்கோட்டையன் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
  4. செல்லூர் ராஜூ - கூட்டுறவுத்துறை அமைச்சர்
  5. தங்கமணி - மின்சாரத்துறை அமைச்சர்
  6. வேலுமணி - ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர்
  7. ஓ.எஸ்.மணியன் - கைத்தறித்துறை அமைச்சர்
  8. அன்பழகன் - உயர் கல்வித்துறை அமைச்சர்
  9. சரோஜா - சமூக நலத்துறை அமைச்சர்
  10. சி. விஜயபாஸ்கர் - சுகாதாரத்துறை அமைச்சர்
  11. ஜெயக்குமார் - மீன்வளத்துறை அமைச்சர்
  12. எம்.ஆர். விஜயபாஸ்கர் - போக்குவரத்துத் துறை அமைச்சர்
  13. நிலோபர் கபில் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
  14. சி.வி.சண்முகம் - சட்டம், சிறைத்துறை அமைச்சர்
  15. கருப்பண்ணன் - சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
  16. காமராஜ் - உணவுத்துறை அமைச்சர்
  17. ஆர்.பி. உதயகுமார் - வருவாய்த்துறை அமைச்சர்
  18. எம்.சி.சம்பத் - தொழில்துறை அமைச்சர்
  19. உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதித்துறை அமைச்சர்
  20. பாலகிருஷ்ண ரெட்டி - கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்
  21. எஸ்.வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர்
  22. பாஸ்கரன் - கதர் மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சர்
  23. சேவூர் எஸ் ராமச்சந்திரன் - இந்து சமய, தமிழ் ஆட்சி மொழி அமைச்சர்
  24. கே.சி.வீரமணி - வணிக வரித்துறை அமைச்சர்
  25. துரைகண்ணு - வேளாண் துறை அமைச்சர்
  26. வெல்லமண்டி நடராஜன் - சுற்றுலாத்துறை அமைச்சர்
  27. பெஞ்சமின் - ஊரக தொழில் துறை அமைச்சர்
  28. ராதாகிருஷ்ணன் - வீடு, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
  29. ராஜேந்திர பாலாஜி - பால்வளத்துறை அமைச்சர்
  30. கடம்பூர் ராஜூ - தகவல் செய்தித் தொடர்புத் துறை அமைச்சர்
  31. மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்

அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி க. பழனிசாமியை தமிழக முதல்வராக நியமித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் தமிழகத்தின் 21-வது முதல்வராக (16.02.2017) எடப்பாடி க. பழனிசாமி பதவியேற்கிறார்.  சட்டப்பேரவையில் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் அவகாசம் வழங்கியிருக்கிறார்.

21-வது முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி

சென்னை மாகாணம் 1967-ம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதற்குப் பிறகு 1968-ம் ஆண்டு முதல் 2017-ம் வரை அண்ணாத்துரை, நெடுஞ்செழியன், கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் என ஏழு பேர் முதல்வராக பொறுப்பேற்றுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தின் 21-வது முதல்வராக எடப்பாடி க. பழனிசாமி பதவியேற்கிறார்.

தமிழகத்தில் கடந்த 2016-ல் நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, தமிழக முதல்வராக 6-வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றார். கடந்த செப்டம்பர் 22-ம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். இதையடுத்து, ஜெயலலிதா கவனித்து வந்த உள்துறை உள்ளிட்ட துறைகள் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா காலமானார். இதையடுத்து, அன்று இரவே முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அவருடன் ஜெயலலிதா அமைச் சரவையில் இருந்த அமைச்சர்களும் பதவியேற்றனர். டிசம்பர் 29-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில், சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

பிப்ரவரி 5-ம் தேதி சசிகலா சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் 40 நிமிட தியானம் செய்த பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிராக போர்கொடி தூக்கினார்.இதைத் தொடர்ந்து சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என அதிமுகவில் இரு அணிகள் உருவானது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் பிப்.14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. உடனடியாக பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடையவும் உத்தரவிட்டது. சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலாவுக்கு பதில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், 16.02.2017 அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக நியமித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டிருக்கிறார்.

எடப்பாடி க.பழனிச்சாமி வாழ்க்கை குறிப்பு: தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்க உள்ள எடப்பாடி க.பழனிச்சாமி (வயது 64) சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் கருப்பா கவுண்டர், தாயார் பெயர் தவசியம்மாள். எடப்பாடி கே.பழனிச்சாமியின் மனைவி பெயர் ராதா. இந்த தம்பதிக்கு மிதுன்குமார் என்ற ஒரு மகன் உள்ளார். 1989-ம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991 முதல் 1996 வரை எடப்பாடி சட்ட மன்ற உறுப்பினர். 1998 முதல் 1996 வரை திருச்செங்கோடு தொகுதி எம்.பி.யாக இருந்தார். சேலம் மாவட்ட திருக்கோவில்களின் வாரிய தலைவராகவும், சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவராகவும், தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேசன் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். பின்னர் 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளிலும் எம்.எல்.ஏ.வாக அவர் தேர்வு செய்யப்பட்டார். இதில் 2011-ம் ஆண்டு முதல் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் புதிதாக பொறுப்பேற்ற அமைச்சரவையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பதவியேற்ற அவர் தற்போது வரை அந்த பதவியில் நீடித்து வந்தார்.

எடப்பாடி க. பழனிசாமி தலைமையிலான 31 பேர் கொண்ட தமிழக புதிய அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post