Argentina Won Their First Davis Cup Title 2016 (105th Edition Davis Cup, Croatia)

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி 2016: ஆர்ஜென்டீனா சாம்பியன்

2016 Davis Cup was the 105th edition of the Davis Cup
  • The 2016 Davis Cup was the 105th edition of the Davis Cup, a tournament between national teams in men's tennis. 
  • It was sponsored by BNP Paribas. From this season's tournament the deciding set of each match would be settled by a tiebreak at 6 games all rather than playing an advantage set until a player or a team were two games clear. 
  • Argentina won their first Davis Cup title, defeating Croatia in the final. Federico Delbonis defeated Ivo Karlović in the final match to give Argentina its first Davis Cup title,after a huge comeback from Juan Martín del Potro against Marin Čilić in the fourth match
  • Argentina wins the Davis Cup 2016 edition by defeating Croatia. Argentina is currently #1 on the Davis Cup ranking by the ITF. 
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி 2016
  • டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆர்ஜென்டீனா அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
  • இதற்கு முன்னர் 1981, 2006, 2008, 2011 ஆகிய ஆண்டுகளில் இறுதிச்சுற்றில் தோற்றிருந்த ஆர்ஜென்டீனா, இப்போது கடும் போராட்டத்துக்குப் பிறகு குரோஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. 
  • இதன்மூலம் 116 ஆண்டுகால டேவிஸ் கோப்பை வரலாற்றில் டேவிஸ் கோப்பையை வென்ற 15-ஆவது அணி என்ற பெருமையை ஆர்ஜென்டீனா பெற்றுள்ளது. 
  • குரோஷிய தலைநகர் ஜாக்ரெப் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இரு ஒற்றையர் ஆட்டம், இரட்டையர் ஆட்டம் ஆகியவற்றின் முடிவில் குரோஷியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
  • 27.11.2016, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் உலகின் 6-ஆம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச்சை எதிர்கொண்டார்.
  • ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இந்த முதல் இரு செட்களை முறையே 6-7 (4), 2-6 என்ற கணக்கில் இழந்த டெல் போட்ரோ, அதன்பிறகு அபாரமாக ஆடி 7-5, 6-4, 6-3 என்ற கணக்கில் அடுத்த 3 செட்களை கைப்பற்றி சிலிச்சை தோற்கடித்தார். இதனால் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டின.
  • அதைத் தொடர்ந்து நடைபெற்ற 2-ஆவது மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவின் ஃபெடெரிக்கோ டெல்போனிஸ் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் இவோ கார்லோவிச்சை வீழ்த்த, ஆர்ஜென்டீனா சாம்பியன் ஆனது.
Post a Comment (0)
Previous Post Next Post