சர்வதேச புலிகள் தினம் - ஜூலை 29


International Tiger Day 2019 

International Tiger Day-July 29
  • அரிய வகை இனமாக மாறியுள்ள புலிகள் இனத்தைக் காக்க, 2010-முதல், ஆண்டுதோறும், ஜூலை 29-ஆம் தேதி சர்வதேச புலிகள் தினம்) கொண்டாடப்படுகிறது.
2019 புலிகள் தின மையக்கருத்து (2019 Theme)
  • ‘புலிகள் உயிர்வாழ்வது நம் கையில்’ என்பது 2019-ம் ஆண்டு புலிகள் தினத்தின் மையக்கருத்து ஆகும்.
புலிகள் - சில தகவல் குறிப்புகள்
  • முப்பது மைல் சுற்றளவை தனது எல்லையாக கொண்டு வாழும் புலிகள் தனிமையை விரும்புபவை.
  • 15 முதல் 25 வருடங்கள் வரை வாழும் புலிகள், 60 கி.மீ. வேகத்தில் ஓடும், பத்து மீ. வரை தாண்டும் திறன் படைத்தவை.
  • பெண் புலி இரண்டு முதல் ஆறு குட்டிகள்வரை போடும், இதன் கர்ப்ப காலம் 105 நாட்கள் ஆகும்.
  • இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உட்பட 13 ஆசிய நாடுகளில் மட்டுமே புலிகள் உயிர் வாழ்கின்றன.
  • இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளின் தேசிய விலங்கும் புலி ஆகும்.
  • புலிகளின் மீதான கோடுகள் ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தவை, அவற்றின் எலும்பு, பற்கள், நகம், தோல் என அனைத்து உறுப்புகளும் விலை மதிப்பற்ற மருத்துவக்குணம் கொண்டவை ஆகும்.
  • பொதுவாக புலிகள் மனிதனை வேட்டையாடுவதில்லை. மனிதனை கண்டால் ஒதுங்கி போய்விடும்.
  • வயதான புலிகள் வேட்டையாட முடியாத பட்சத்தில், மனிதனுக்கு தீங்கு விளைவிக்கிறது.
உலகில் ஒன்பது வகை புலிகள்

  • உலகில் ஒன்பது வகையான புலிகள் இருந்தன. இதில் துருக்கியிலுள்ள காஸ்பியன் புலி, ரஷியாவில் உள்ள அமுர் புலி, தென் கிழக்கு ஆசியாவிலுள்ள புலிகளும் அடங்கும். 
  • ஜாவா மற்றும் பாலி புலி இனங்கள் முழுவதும் அழிந்து போய்விட்டன.
உலக அளவில் 3,890 புலிகள்
  • தற்போது, உலக அளவில் தற்போது மொத்தமாக சுமார் 3,890 புலிகள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையில் புலிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
  • இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 40 ஆயிரமாக இருந்தது.
  • அது வெகுவாக சுருங்கி 1973-ம் ஆண்டு 1,220-ஆக குறைந்து போய் விட்டது.
புலிகள் பாதுகாப்புத் திட்டம் (1973)
  • இந்தியாவில் வாழும் புலிகளைப் பாதுகாத்து அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க புலிகள் பாதுகாப்புத் திட்டம் 1973-ல் தொடங்கப்பட்டது.
  • அப்போது 1,220 புலிகள் தான் இருந்தன.
  • இந்தியாவில் 18 மாநிலங்களில் புலிகள் காணப்படுகின்றன. அவற்றின் பாதுகாப்புக்காக கடந்த 46 ஆண்டுகளில் நாடெங்கும் 50 புலிகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் 2226 புலிகள்
  • அரசு எடுத்த பல்வேறு சீரிய பாதுகாப்பு நடவடிக்கைகளால் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து இந்தியாவில் தற்போது 2226-ஐ எட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் 'நான்கு புலிகள் காப்பகங்கள்'
  • தமிழ்நாட்டில் 4 புலிகள் காப்பகங்கள் உள்ளன. அவை:
  1. களக்காடு முண்டந்துறை, நெல்லை மாவட்டம்.
  2. முதுமலை, நீலகிரி மாவட்டம்.
  3. ஆனைமலை, கோவை மாவட்டம்.
  4. சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம்.
தமிழ்நாட்டில் 226 புலிகள்

  • தமிழ்நாட்டில் மேற்குறிப்பிட்ட காப்பகங்களில், 226 புலிகள் உள்ளன.
சங்க காலத்தில் புலிகள்
  • சங்க இலக்கியங்களான புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, மலைபடுகடாம் ஆகிய நூல்கள் புலியின் தோற்றத்தையும் வண்ணத்தையும் வெகுவாக வியந்து போற்றுகின்றன.
  • சங்க காலத்தில் புலிக்கு உழுவை, வேங்கை, வயம், வல்லியம், பல்வரி என பல்வேறு காரணப்பெயர்கள் உண்டு.
  • விரல் நகங்களால் தனது இரையை உழுதலால் உழுவை என்று பெயர்.
  • விரைந்து ஓடுவதால் வல்லியம் எனவும், வேங்கை மரத்தின் மலர்களைப் போன்ற நிறத்தை ஒத்ததால் வேங்கை என்றும் பல பெயர்களில் புலிகள் சங்க காலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
காப்பாற்ற வேண்டிய இனம்-புலிகள்
  • உலகம் முழுவதும் மனிதர்களின் சட்டவிரோத வேட்டையாடல்களால், புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
  • புலிகளின் தற்போது, காப்பாற்ற வேண்டிய இனமாக மாறியுய்ள்ளது.
  • புலிகள் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்த இலக்கு
  • 2022-ஆம் ஆண்டுக்குள் புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்த ஆசிய நாடுகள் முடிவெடுத்துள்ளன. அதாவது, ஆண்டிற்கு 27 சதவீதம் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • வேட்டையாடல்களைத் தடுத்து, வனத்தை இயற்கைச்சூழலிலேயே விட்டால் இது சாத்தியமனது ஆகும்.
இயற்கைச் சூழல் சமன்பாடு
  • புலிகள் நல்ல எண்ணிக்கையில் இருக்கும்படி பராமரிக்கப்பட்டால் அவற்றிற்கு உணவாகும் மான், காட்டெருமை போன்ற தாவர உண்ணி களும் உணவாகப் பயன்படும் காட்டுப் பயிர் பச்சைகளும் நல்ல நிலையில் இருக்க ஏதுவாகும்.
  • நமது இயற்கைச் சூழல் சமன்பாட்டிற்கு புலிகளை நாம் செவ்வனே பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது.
Post a Comment (0)
Previous Post Next Post