TNPSC Current Affairs 19-20th February 2019 - Download PDF


Daily Current Affairs Quiz 2019-2018
Daily Current Affairs Notes 2019-2018  
14500 Model Questions Answers
TNPSC Current Affairs February 19-20, 2019, Daily Current Affairs February 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
உலக, இந்திய நிகழ்வுகள்/ International and National Affairs
இந்தியா-சவுதி அரேபியா இடையே "5 ஒப்பந்தங்கள்" கையெழுத்து
  • சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (வயது 33), 19.2.2019 அன்று டெல்லி வந்தார். பிரதமர் நரேந்திர மோடி, மரபை மீறி விமான நிலையத்துக்கு சென்று வரவேற்றார்.
  • இந்தியாவில் சவுதி அரேபியா 100 பில்லியன் அமெரிக்க டாலர் ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. 
  • 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து
  • இரு தரப்பிலும் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவை;
    • தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதிய முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம், 
    • சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பு, 
    • வீட்டு வசதித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம், 
    • இரு தரப்பு முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும் விதத்தில் ஒத்துழைப்பு 
    • ஒலிபரப்பு துறையில் பிரசார்பாரதிக்கும், சவுதி ஒலிபரப்பு கார்ப்பரேசனுக்கும் இடையே ஒப்பந்தம்.
பாகிஸ்தான் அரசு கட்டுப்பாட்டில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் 
  • காஷ்மீர் புலவாமா தாக்குதலுக்கு காரணமான, ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammed) இயக்க தலைமையக நிர்வாகத்தை பாகிஸ்தான் அரசு கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. 
ரிசர்வ் வங்கியின் இடைக்கால ஈவுத்தொகை - ரூ.28,000 கோடி 
  • மத்திய அரசுக்கு ரூ.28,000 கோடியை இடைக்கால ஈவுத்தொகையாக (dividend) வழங்க, 18.2.2019 அன்று நடைபெற்ற பாரத ரிசர்வ் வங்கியின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
  • RBI interim dividend to the government ₹28,000 crore 
  • ரிசர்வ் வங்கி, ஏற்கனவே மத்திய அரசுக்கு ரூ.40,000 கோடி இடைக்கால ஈவுத்தொகை வழங்கி உள்ள நிலையில், மீண்டும் ஈவுத்தொகை வழங்குகிறது. ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள மொத்த ஈவுத்தொகை ரூ.68,000 கோடியாக உயருகிறது. 
  • சென்ற நிதி ஆண்டில் இவ்வங்கி மத்திய அரசுக்கு வழங்கிய இடைக்கால ஈவுத்தொகை ரூ.10,000 கோடியாகும்.
  • 2019-20 இடைக்கால மத்திய பட்ஜெட்டில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், 2018-19-ஆம் ஆண்டிற்கான நிதிப்பற்றாக்குறை இலக்கை, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3.4 சதவீதமாக உயர்த்தினார். முதலில் நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கு 3.3 சதவீதமாகும்.
மாநாடுகள்/ Conferences
சர்வதேச வருடாந்திர பாலைவன விழா 2019, ராஜஸ்தான் 
  • 40 வது சர்வதேச வருடாந்திர பாலைவன விழா 2019 (International Annual Desert Festival 2019), ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சல்மேர் நகரில், பிப்ரவரி 17 ம் தேதி தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள் (Tamil Nadu Affairs)
மெட்ரோ ரெயில்-வாடகை ‘ஸ்கூட்டர்’ திட்டம் - அறிமுகம் 
  • சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாடகை ஸ்கூட்டர் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘வோகோ’ என்ற நிறுவனத்துடன் இணைந்து வாடகை ஸ்கூட்டர் திட்டத்தை செயல்படுத்த மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
  • மெட்ரோ ரெயில் வாடகை ஸ்கூட்டர் திட்டத்தின் தொடக்க விழா சென்னையில் 18.2.2019 அன்று நடந்தது.
  • பயணிகளின் வசதிக்காக சென்னை கிண்டி, ஆலந்தூர், வடபழனி, அண்ணாநகர் டவர் ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாடகை ஸ்கூட்டர் திட்டம் ஓரிரு நாளில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. 
  • தூத்துக்குடி ஸ்டெர்லைட் திறக்க தடை நீடிப்பு 
  • தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தமிழ்நாடு அரசு விதித்த தடை நீடிக்கிறது.
விருதுகள்/ Awards and Honors
கால்பந்து ரத்னா விருது 2019: சுனில் சேத்ரி
  • இந்திய கால்பந்தாட்ட வீரர் சுனில் சேத்ரி (Sunil Chhetri) அவர்களுக்கு, கால்பந்து டெல்லி (Football Delhi), கால்பந்து அமைப்பின் முதலாவது "கால்பந்து ரத்னா விருது" (Football Ratna) வழங்கப்பட்டது.
 சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகள் 2017-18
  • 2017-18-ம் ஆண்டில் பல்வேறு நோக்கில் பல துறை சார்ந்து தமிழுக்கு உழைத்து வரும் தமிழறிஞர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பெயரிலும், 2018-19ஆம் ஆண்டில் தனித்தமிழ் தந்தை மறைமலையடிகளார் பெயரிலும் தமிழ்த்திரு அயோத்திதாசப்பண்டிதர் பெயரிலும் புதியதாக விருதுகளை அறிவித்தார்.
  • விருது பெறுபவர்கள்
    • தமிழ்த்தாய் விருது - புவனேசுவர் தமிழ்ச் சங்கம், 
    • கபிலர் விருது - புலவர் மி.காசுமான்
    • உ.வே.சா. விருது - நடன காசிநாதன்
    • கம்பர் விருது - க.முருகேசன்
    • சொல்லின் செல்வர் விருது - ஆவடிக்குமார்
    • ஜி.யு.போப் விருது - கு.கோ.சந்திரசேகரன் நாயர்
    • உமறுப்புலவர் விருது - பேராசிரியர் சா.நசீமாபானு
    • இளங்கோவடிகள் விருது - சிலம்பொலி சு.செல்லப்பன்
    • அம்மா இலக்கிய விருது - உலகநாயகிபழனி
    • சிங்காரவேலர் விருது - பா.வீரமணி
    • 2017-ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது - வை.மதன்கார்க்கி 
    • தமிழ்த்தாய் விருது பெறும் புவனேசுவர் தமிழ்ச் சங்கத்திற்கு ரூ.5 லட்சம் விருதுத் தொகையுடன் பாராட்டுக் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மற்ற விருதுகள் பெறுவோருக்கு ரூ.1 லட்சம் விருதுத் தொகையும் ஒரு சவரன் தங்கப்பதக்கமும் பொன்னாடை மற்றும் தகுதியுரையும் வழங்கப்படும். 
  • 2018-ம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள் 
    • யூமா வாசுகி, லட்சுமண ராமசாமி, மு.சீனிவாசன், ஜி.குப்புசாமி, மருத்துவர் சே.அக்பர்கவுசர், ராஜலட்சுமி சீனிவாசன், செ.செந்தில் குமார், பழனி, அரங்கசாமி, எஸ். சங்கரநாராயணன், ச.நிலா ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளன. 
    • சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் விருதுத் தொகை தகுதியுரை மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்.
  • 2018-ம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் 
    • இலக்கிய விருது - டென்மார்க் நாட்டைச் சேர்ந்த வி.ஜீவகுமாரன்
    • இலக்கண விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த கி.பாரதிதாசன்
    • மொழியியல் விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த ச.சச்சிதானந்தம்
    • விருதுகளை பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் விருதுத் தொகையும் தகுதியுரை மற்றும் பொன்னாடை வழங்கப்படும். 
  • தமிழ்ச் செம்மல் விருது
    • 32 மாவட்டங்களில் தமிழ்ப்பணி ஆற்றி அருந்தொண்டாற்றி வருபவர்களுக்கு தமிழ்ச் செம்மல் விருதுகள் வழங்கப்படுகிறது. 
    • தமிழ்ச் செம்மல் விருது பெறும் ஒவ்வொரு விருதாளர்களுக்கும் ரூ.25 ஆயிரம் விருதுத்தொகையுடன் தகுதியுரை வழங்கியும் மற்றும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்படுவர்.
    • யு.எஸ்.எஸ்ஆர். கோ.நடராசன் (சென்னை மாவட்டம்)
    • அமுதா பாலகிருஷ்ணன் (திருவள்ளூர் மாவட்டம்)
    • அ.ராமானுஜம் (காஞ்சீபுரம் மாவட்டம்)
    • ப.சிவராஜி (வேலூர் மாவட்டம்)
    • ஆ.கவிரிஷி மகேஷ் (கிருஷ்ணகிரி மாவட்டம்)
    • க.சம்பந்தம் (திருவண்ணாமலை மாவட்டம்)
    • செ.வ.மதிவாணன் (விழுப்புரம் மாவட்டம்)
    • இரா.சஞ்சீவிராயர் (கடலூர் மாவட்டம்)
    • பெ.ஆறுமுகம் (பெரம்பலூர் மாவட்டம்)
    • அ.ஆறுமுகம் (அரியலூர் மாவட்டம்)
    • ஆ.கணபதி (சேலம் மாவட்டம்)
    • பொ.பொன்னுரங்கன் (தர்மபுரி மாவட்டம்)
    • சி.தியாகராஜன் (நாமக்கல் மாவட்டம்)
    • வெ. திருமூர்த்தி (ஈரோடு மாவட்டம்)
    • வெ.கருவைவேணு (கரூர் மாவட்டம்)
    • மா.நடராசன் (கோவை மாவட்டம்).
    • மு.தண்டபாணிசிவம் (திருப்பூர் மாவட்டம்)
    • சோ.கந்தசாமி (நீலகிரி மாவட்டம்)
    • வீ.கோவிந்தசாமி (திருச்சி மாவட்டம்)
    • மு.முத்து சீனிவாசன் (புதுக்கோட்டை மாவட்டம்
    • சே.குமரப்பன் (சிவகங்கை மாவட்டம்)
    • த.உடையார்கோவில் குணா (தஞ்சாவூர் மாவட்டம்)
    • கவிஞர் நா. சக்திமைந்தன் (திருவாரூர் மாவட்டம்)
    • புலவர் மு.மணிமேகலை (நாகப்பட்டினம் மாவட்டம்)
    • க.சுப்பையா (ராமநாதபுரம் மாவட்டம்).
    • சு.லக்குமணசுவாமி (மதுரை மாவட்டம்)
    • வதிலை பிரபா (திண்டுக்கல் மாவட்டம்)
    • சு.குப்புசாமி (தேனி மாவட்டம்)
    • க.அழகர் (விருதுநகர் மாவட்டம்)
    • கவிஞர் பே.ராஜேந்திரன் (நெல்லை மாவட்டம்)
    • ப.ஜான்கணேஷ் (தூத்துக்குடி மாவட்டம்)
    • கா.ஆபத்துக்காத்தபிள்ளை (கன்னியாகுமரி மாவட்டம்) 
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs
ஆக்கி
2019 தேசிய சீனியர் பெண்கள் ஆக்கி (ஏ டிவிசன்) - "ரெயில்வே அணி" சாம்பியன்
  • 2019 தேசிய சீனியர் பெண்கள் ஆக்கி (ஏ டிவிசன்) போட்டியில் ரெயில்வே அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
  • இறுதிப்போட்டியில் ரெயில்வே அணி 5-0 என்ற கோல் கணக்கில் மத்திய பிரதேசத்தை தோற்கடித்து தொடர்ச்சியாக 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 
  • 9-வது தேசிய சீனியர் பெண்கள் ஆக்கி (ஏ டிவிசன்) சாம்பியன்ஷிப் போட்டி அரியானா மாநிலத்தில் உள்ள ஹிசாரில் நடந்தது. 
  • 9th Senior National Hockey Championship 2019 (Women), A Division, Hisar, Haryana, 8 to 18 February 2019
  • 2019 தேசிய சீனியர் பெண்கள் ஆக்கி (ஏ டிவிசன்) - முதல் 3 இடங்கள் 
    1. ரெயில்வே அணி - சாம்பியன் 
    2. மத்திய பிரதேசம் 
    3. மகாராஷ்டிரா அணி
கிரிக்கெட்

ICC பெண்கள் ஒருநாள் தரவரிசை: ஸ்மிருதி மந்தானா முதலிடம் 

  • ICC பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தானா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். கேப்டன் மிதாலி ராஜ் 5-ஆவது இடத்தில் நீடித்து வருகிறார். 
உலகக் கோப்பை கிரிக்கெட் 2019
    • சர்வேதேச கிரிக்கெட் கவுன்சிலின் ICC ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள், 1975 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 
    • 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பிரிட்டன் (UK) நாட்டின் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில், 2019 மே 30 முதல் ஜூலை 14 வரை (ICC Cricket World Cup, England & Wales-2019) நடைபெறுகிறது. 
  • பங்கேற்கும் 10 அணிகள்
    • ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகள்
    • 11 இடங்களில் மொத்தம் 48 ஆட்டங்கள் நடக்கின்றன
    • 50 ஓவர்கள் அடிப்படையில் போட்டிகள் நடைபெறவுள்ளது
  • ரவுண்ட் ராபின் ஆட்டங்கள் 
    • இதில் மொத்தம் 10 அணிகள் குரூப் பிரிவில் ரவுண்ட் ராபின் முறை ஆட்டங்களில் பங்கேற்கும். 
    • முதல் நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். ஜூலை 14-இல் இறுதி ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.
  • ஹாட்ரிக் வெற்றி படைத்த ஆஸ்திரேலியா
    • 1999, 2003, 2007-ஆம் ஆண்டுகள் என தொடர்ச்சியாக சாம்பியன் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தது ஆஸ்திரேலியா. 
    • இந்திய அணி 1983 மற்றும் 2011 ஆகிய வருடங்களில் கோப்பையை வென்றுளள்து. 
உலக கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டம் வென்ற நாடுகள் 


உலக கோப்பை கிரிக்கெட் சாம்பியன்கள் (1975-2015)
ஆண்டு
சாம்பியன்
நடத்திய நாடு
1975
மேற்கு இந்திய தீவுகள்
இங்கிலாந்து
1979
மேற்கு இந்திய தீவுகள்
இங்கிலாந்து
1983
இந்தியா
இங்கிலாந்து
1987
ஆஸ்திரேலியா
இந்தியா
பாக்கிஸ்தான்
1992
பாக்கிஸ்தான்
ஆஸ்திரேலியா
நியூசிலாந்து
1996  
இலங்கை
பாக்கிஸ்தான்
இந்தியா
இலங்கை
1999
ஆஸ்திரேலியா
இங்கிலாந்து
வேல்ஸ்
2003
ஆஸ்திரேலியா
தென்னாப்பிரிக்கா
2007
ஆஸ்திரேலியா
வெஸ்ட் இண்டீஸ்
2011
இந்தியா
இந்தியா
இலங்கை
வங்காளம்
2015
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா
நியூசிலாந்து

அதிக சிக்சர்கள் அடுத்து "கிறிஸ் கெய்ல்" உலக சாதனை
  • வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல், ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (20 ஓவர், ஒரு நாள் மற்றும் டெஸ்ட்) அதிக சிக்சர் அடித்தவர் (477 சிக்சர்) என்ற சாதனையை படைத்துள்ளார். 
  • சாதனை பட்டியலில் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தானின் அப்ரிடியை (476 சிக்சர்) அவர் முந்தினார்.
  • இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் (20.2.2019) அன்று இந்த சாதனையை படைத்தார். 
சிங்காரவேலர் 160-வது பிறந்த நாள் - 18.2.2019 
  • "சிந்தனைச்சிற்பி" ம.சிங்காரவேலர் 160-வது பிறந்த நாள் 18.2.2019 அன்று கடைபிடிக்கப்பட்டது.
நீதிக்கட்சி நிறுவனர் டாக்டர் நடேசனார் 82-வது நினைவு நாள் - 18.2.2019
  • நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவரான டாக்டர் நடேச முதலியாரின் 82-வது நினைவு நாள் 18.2.2019 அட்னரு கடைபிடிக்கப்பட்டது.
TNPSC Current Affairs 19-20th February 2019 PDF
TNPSC Link File Size 1 MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.
Post a Comment (0)
Previous Post Next Post