TNPSC General Knowledge: Agni 5 Missile Successfully Launched - Notes in Tamil

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி: முக்கிய குறிப்புகள்  

Agni 5, India's Longest Range Nuclear Capable Missile - Agni -5 missile Successfully Launched - Agni-5 can deliver a nuclear bomb anywhere in China

அக்னி-5 ஏவுகணை சோதனை

அக்னி-5 ஏவுகணை சோதனையை விஞ்ஞானிகள் 26.12.2016, திங்கள்கிழமை வெற்றிகரமாக நடத்தினர். இந்த ஏவுகணை, 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கும் அதிகமான தொலைவில் இருக்கும் எதிரிகளின் இலக்கைத் தாக்கும் வல்லமையுடையது. இந்திய ராணுவத்துக்குத் தேவையான ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்து சோதனை நடத்தி வருகிறது. 

DRDO தயாரித்து அளித்துள்ள  இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள  அக்னி ரக  ஏவுகணைகள், அவற்றின் தாக்கும் தொலைவுகளும் 
  1.  அக்னி-1 (700 கிலோ மீட்டர் தூரம்), 
  2. அக்னி-2 (2,000 கிலோ மீட்டர்), 
  3. அக்னி-3 (2,500 கிலோ மீட்டர் தூரம்), 
  4. அக்னி-4 (3,500 கிலோ மீட்டர்) 

அக்னி-5 ஏவுகணை: திறன்கள்

அக்னி-5 ஏவுகணையானது, 17.5 மீட்டர் நீளமும், 50 டன் எடையும் கொண்டது. தரையில் இருந்து பாய்ந்து சென்று மற்றொரு இடத்தில் இருக்கும் இலக்கைத் தாக்கும் வகையில் ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏவுகணையில் துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்க வகை செய்யும் நவீன மேம்படுத்தப்பட்ட மைக்ரோ நேவிகேஷன் கருவி, ஏவுகணை செல்லும் திசையை தீர்மானிக்கக்கூடிய நவீன கணினி உள்ளிட்டவையும் பொருத்தப்பட்டுள்ளன என்று இந்திய பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன. அக்னி-5 ஏவுகணையால், சீனாவின் எந்தப் பகுதியையும் தாக்கி அழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்; இதன் மூலம், இந்திய ராணுவத்தையும், அதன் தாக்குதல் திறன்களையும் அதிகரித்துள்ளது.

அக்னி-5 ஏவுகணை: அதிநவீன தொழில்நுட்பம்

அக்னி–5 ஏவுகணை 17 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலம், 50 டன் எடையும் கொண்டது. இதில் சுமார் ஒரு டன் அளவிற்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல முடியும். இது தரையில் இருந்து கிளம்பிச் சென்று தரைவழி இலக்கைத் தாக்கும் ஏவுகணை ஆகும். 

இந்த ஏவுகணையில் தேவைக்கு அதிகமான வழிகாட்டுதல் அமைப்பு, சக்திவாய்ந்த என்ஜின்கள், மிகத் துல்லியமாக இலக்கைத் தாக்கி அழிக்கும் முறை, விரைந்து செல்லும்போது கோளாறு ஏற்பட்டால் அதை கம்ப்யூட்டர் உதவியுடன் கண்டுபிடித்து தானாகவே சரி செய்து கொள்ளுதல் ஆகிய அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ளன. 

நவீன ஏவுகணை தொழில் நுட்ப வரிசை - 4–வது நாடு இந்தியா

நவீன தொழில் நுட்பம் மற்றும் 5 ஆயிரம் கி.மீ. தூர இலக்கை தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளிடம் தான் உள்ளன. 3–வது கட்ட பரிசோதனையின் போதே இந்த நாடுகளின் வரிசையில் இந்தியா 4–வது நாடாக இணைந்து விட்டாலும் தற்போது இன்னும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தை அக்னி–5 ஏவுகணை கூடுதலாக பெற்றிருப்பது சிறப்பம்சம் ஆகும். அக்னி–5 ஏவுகணையின் மூலம் சீனாவின் வடமேற்கு எல்லைப் பகுதியையும், ஐரோப்பா கண்டத்தின் பெரும்பகுதியையும் தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 


Agni -5 missile: Notes

Scientists on Monday successfully launched Agni -5 missile test. The missile, with more than 5 thousand kilometers away to hit a target at a distance the enemy's powerful.

Indian Army has modern weapons including the missiles, Defense Research and Development Institute (DRDO) preparing a test is being conducted. In this case, which have been prepared DRDO Agni-1 (700 km), Agni-2 (2,000 km), Agni-3 (2,500 km), Agni-4 (3,500 km) and the missiles have been added to the Indian Army. In this case, run to the intercontinental 5 thousand km Agni-5 missile for attacking and destroying the enemy's target organization prepared DRDO. This missile, in the year 2012 on April 19 was tested for the first time launched. Then, once in 2013 and the September 2nd, 2015-January 3rd and tested method.
Agni -5 missile

The Agni -5 missile was tested again on Monday 4th time. Odisha State, Abdul Kalam on Monday morning at 11.05 am from the island of Agni -5 missile launched by mobile Launcher. The pace of the missile, including precision guided missile destroyer ships stopped on the way to fly scientists monitored by the installed equipment. Accordingly, the precise target Agni -5 missile attack destroyed her. Agni missile -5, 17.5 meters long and weighs 50 tons. To flow from the ground up to be another place where the missile is designed to hit a target. To destroy the missile accurately hit the target, the latest updated micro-navigation equipment, including computers equipped with modern missile capable of determining the direction of the sources said that the Indian security forces. Agni -5 missiles, China is able to destroy any part of the attack. Scientists have successfully tested the Agni missile -5 greeting am; Thus, the Indian army,its offensive has increased capabilities.

Post a Comment (0)
Previous Post Next Post