TNPSC Current Affairs February 27-28, 2019 - Download PDF


Daily Current Affairs Quiz 2019-2018
Daily Current Affairs Notes 2019-2018  
14500 Model Questions Answers
TNPSC Current Affairs February 27-28, 2019, Daily Current Affairs February 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
உலக, இந்திய நிகழ்வுகள்/ International and National Affairs
ஜிம்பாப்வேவின் புதிய நாணயம் "RTGS dollar"
  • ஜிம்பாப்வே (Zimbabwe) நாடு சமீபத்தில் RTGS டாலர் (Real Time Gross Settlement dollar) புதிய நாணயத்தை (new currency) அறிமுகப்படுத்தியுள்ளது. 
வடகொரியா-அமெரிக்கா இரண்டாவது உச்சி மாநாடு, வியட்நாம் 
  • 2018 ஜூன் மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இடையே சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடைபெற்றது. 
  • இந்த உச்சி மாநாட்டுக்கு பின்னர், இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவான போதும், அணு ஆயுத ஒழிப்பில் போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை.
  • கிம் ஜாங் அன்-டிரம்ப் இடையே 2-வது முறையாக வியட்நாமின் தலைநகர் ஹனோயில் பிப்ரவரி 27, 28 தேதிகளில் நடைபெற்றது. 
ஜெய்ஷ் இ முகமது பயிற்சி முகாம்கள் அழிப்பு 
  • காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் பிப்ரவரி 14-ந் தேதி பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். அதில் வீரமிக்க 40 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர். 
  • பிப்ரவரி 26 அன்று 3.30 மணிக்கு, இந்திய விமானப்படையின் அதிநவீனமான ‘மிராஜ்-2000’ போர் விமானங்கள் 12, குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்து, நடத்தப்பட்ட தாக்குதலில், பாகிஸ்தானில் பாலகோட், முசாபராபாத், சகோதி பகுதிகளில் செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயிற்சி முகாம் தளங்கள் அழிக்கப்பட்டன. 21 நிமிடங்கள் இந்த தாக்குதல் நடந்தது.
எதிர்கால இயற்கை விருது 2019: டாக்டர் திவ்யா கர்னாட்
  • 2019 ஆம் ஆண்டிற்கான எதிர்கால இயற்கை விருது (Future for Nature 2019 Award) டாக்டர் திவ்யா கர்னாட் (Dr Divya Karnad) பெற்றுள்ளார். Future for Nature Award வென்ற முதல் இந்திய பெண் என்ற சிறப்பை டாக்டர் திவ்யா கர்னாட் பெற்றுள்ளார்.
“India in Distress” புத்தகம் வெளியீடு 
  • மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி(Mamata Banerjee), “India in Distress” என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். 
தமிழ்நாட்டு நிகழ்வுகள்/ Tamil Nadu Affairs 
வாக்களிப்பை உறுதி செய்யும் "எந்திரம்" அறிமுகம்
  • தமிழ்நாட்டில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில், ‘வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு அளித்தார்கள்’ என்பதை உறுதி செய்து கொள்வதற்கான "VVPAT" (Voter Verifiable Paper Audit Trail) எந்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சூலூரில், அமையும் போர் விமான பயிற்சி மையம்
  • இந்தியாவில் விமானப்படையில் சேருபவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளித்த பின்னர் அவர்களுக்கு போர் விமானங்களை செலுத்துவதற்கான பயற்சி கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் அளிக்கப்படுகிறது. அங்கு போர் விமானம் போன்று பயிற்சி அளிக்கும் மாதிரி கருவிகளுடன் கூடிய மையம் (சிமுலேட்டர்) உள்ளது. 
  • அதுபோன்ற பயிற்சி மையம் சூலூர் விமானப்படை தளத்தில் அடுத்த ஆண்டுக்குள் ரூ.211 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. அந்த மையம் அமைக்கப்பட்ட பின்னர் பெங்களூருவில் பயிற்சி பெறுபவர்கள் இங்கு மாற்றப்படுவார்கள். உள்நாட்டில் தயாரிக்கப்படும் இலகு ரக 231 தேஜஸ் போர் விமானங்கள் கூடுதலாக தயாரிக்கப்படும். 
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs
துப்பாக்கி சுடுதல்

உலக துப்பாக்கி சுடுதல் 2019: இந்தியா, ஹங்கேரி முதலிடம் 

  • உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்றது நடந்து வந்தது. 
  • 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் இந்தியாவின் மானு பாகெர், சவுரப் சவுத்ரி ஜோடி 483.4 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றது. 
  • இந்த தொடரில் பதக்கப்பட்டியலில் இந்தியா, ஹங்கேரி தலா 3 தங்கப்பதக்கத்துடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டது. சீனா ஒரு தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என்று 10 பதக்கத்துடன் 3-வது இடத்தை பெற்றது.
செஸ்

2019 கேன்ஸ் சர்வதேச செஸ் கோப்பை: அபிஜித் குப்தா
  • 2019 கேன்ஸ் சர்வதேச செஸ் கோப்பையை (2019 Cannes International Open trophy) இந்திய கிராண்ட்மாஸ்டர் "அபிஜித் குப்தா" (Indian Grandmaster Abhijeet Gupta) வென்றுள்ளார்.
முக்கிய தினங்கள்/ Important Days
தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28
  • இந்திய விஞ்ஞானி சர் சி. வி. ராமன் என்று அழைக்கப்படும் சர். சந்திரசேகர் வெங்கட்ராமன், 1928-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி ராமன் விளைவை கண்டுபிடித்தார். இந்த நாளே “தேசிய அறிவியல் தினம் (National Science Day)” என்று கொண்டாடப்பட்டு வருகிறது.
  • இந்த கண்டுபிடிப்பிற்காக 1930-ம் ஆண்டு சர் சி. வி. ராமன் அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 
  • 2019 தேசிய அறிவியல் தினம் (Theme of National Science Day 2019) மையக்கருத்து: 
    • மக்களுக்கான அறிவியல் மற்றும் அறிவியலுக்கான மக்கள் (Science for people and people for science) என்பதாகும். 
    • 2018 ஆம் ஆண்டின் தேசிய அறிவியல் தின மையக்கருத்தாக "ஒரு நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்" (Science and Technology for a sustainable future) என்பதாக இருந்தது.
TNPSC Current Affairs 27-28th February 2019 PDF
TNPSC Link File Size 1 MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.
Post a Comment (0)
Previous Post Next Post