TNPSC Current Affairs November 23-24, 2019

நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 23-24, 2019
சர்வதேச நிகழ்வுகள்
இந்திய-சீன உறவு 70-ஆவது ஆண்டு - நிகழ்வு தகவல்கள் 
  • இந்தியா, சீனா இடையே தூதரக ரீதியிலான உறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில், இரு நாடுகளும் இணைந்து 2020-ஆம் ஆண்டு 70 நிகழ்ச்சிகளை நடத்தஉள்ளன. அவற்றின் முக்கிய விவரங்கள்: 
  • தமிழ்நாடு-சீனாவின் ஃபியூஜியான் மாகாண வரலாற்று தொடா்புகள்: தமிழ்நாட்டிற்கும், சீனாவின் ஃபியூஜியான் மாகாணத்துக்கும் இடையிலான கடற்சாா் தொடா்புகளை ஆய்வு செய்வதற்கு ஒரு நிறுவனத்தை ஏற்படுத்த பரிசீலிக்கப்பட உள்ளது.
  • சா்வதேச யுவான்சுவாங் மாநாடு: 6-ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வருகை தந்த சீன புத்த துறவி யுவான்சுவாங்கின் நினைவாக, சா்வதேச யுவான்சுவாங் மாநாட்டை சீனா நடத்தவுள்ளது. 
  • சீனா - இந்தியா வா்த்தகம், முதலீடு ஒத்துழைப்பு மாநாடு, சீனா சாா்பில் இந்தியாவில் நடைபெறவுள்ளது. 
  • மருந்து தொழில்சாா் நிகழ்ச்சியை, சீனாவில் இந்தியா நடத்தவுள்ளது. இந்தியா-சீனா இடையிலான இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பு கடந்த ஆண்டு ரூ.6.8 லட்சம் கோடியாக இருந்தது. 
இந்தியா-உஸ்பெகிஸ்தான் - எல்லைப் பாதுகாப்பு, பேரிடா் மேலாண்மை ஒப்பந்தம் 
  • உஸ்பெகிஸ்தான் உள்துறை அமைச்சா் புலாத் போபோஜோனோவ் தலைமையிலான குழு, நவம்பர் 20-முதல் 23-வரை, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அக்குழு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியது. பயங்கரவாத எதிா்ப்பில் இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது, பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது உள்ளிட்டவை தொடா்பாக இரு நாட்டுத் தலைவா்களும் ஆலோசனை நடத்தினா். எல்லைப் பாதுகாப்பு, பேரிடா் மேலாண்மை ஆகியவற்றில் இந்தியா-உஸ்பெகிஸ்தான் நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
பூகேங்வில் தீவு தனிநாடு-பொதுவாக்கெடுப்பு
  • பசிபிக் பெருங்கடல் நாடான பப்புவா நியூ கினியாவைச் சோ்ந்த பூகேங்வில் தீவை தனி நாடாக அறிவிப்பதா, அல்லது தன்னாட்சிப் பிரதேசமாக அறிவிப்பதா என்பது குறித்த பொதுவாக்கெடுப்பு, அந்தத் தீவில் நவம்பர் 23-அன்று நடைபெற்றது. 
தேசிய நிகழ்வுகள்
சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டாக்‘ என்ற பிரிபெய்டு கட்டண முறை
  • சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்கள், ஆன்லைன் மூலம் சுங்க கட்டணம் செலுத்தும் ‘பாஸ்டாக்‘ என்ற பிரிபெய்டு கட்டண முறை, டிசம்பர் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது. ஆன்லைனில் சுங்க கட்டணம் செலுத்தியதற்கான அட்டையை ஒட்டிக்கொண்டு, சுங்க சாவடிகளில் ‘பாஸ்டாக்‘ பிரத்யேக வழியில் வேகமாக செல்லலாம். 
இந்தியாவில் மருத்துவர்கள் எண்ணிக்கை பட்டியல் 2019
  • இந்தியாவில் மருத்துவர்கள் எண்ணிக்கை குறித்த பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், நாட்டிலேயே அதிக டாக்டர்களை கொண்ட மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதலிடமும் தமிழ்நாடு இரண்டாம் இடமும் பிடித்துள்ளன. நாட்டிலேயே குறைவான டாக்டர்களை கொண்ட மாநிலமாக மிசோரம் இடம் பெற்றுள்ளது. மிசோரமில் வெறும் 74 டாக்டர்களே உள்ளனர்.
  • மாநிலம் - டாக்டர்கள் எண்ணிக்கை 
    1. மஹாராஷ்டிரா - 1,73,384
    2. தமிழ்நாடு - 1,35,456
    3. கர்நாடகா - 1,22,875
    4. குஜராத் - 66,944
    5. ராஜஸ்தான் - 43,388
தூய்மை கங்கை திட்டம் 
  • தூய்மை கங்கை திட்டம் 2015-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் அரசு மேற்கொண்ட பல்வேறு மாசு குறைப்பு முயற்சிகள் காரணமாக, கங்கை நீரின் தரம் 2014-ஆம் ஆண்டில் இருந்ததை விட தற்போது மேம்பட்டுள்ளது. 
  • நீரில் ஆக்ஸிஜன் அளவு 32 இடங்களில் மேம்பட்டுள்ளது. நீரின் தரத்தை அறிந்து கொள்ள உதவும் வேதியியல் சோதனையான உயிரியல் ஆக்ஸிஜன் தேவை (BOD) சோதனைகளை 39 இடங்களில் மேற்கொண்டதில் 18 இடங்களில் நீரின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளன, என நீா்ப்பாசனத்துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் மக்களவையில் நவம்பர் 22-அன்று தெரிவித்தாா்.
  • BOD:Biochemical oxygen demand.
நாடு முழுமைக்கும் 'தேசிய குடிமக்கள் பதிவேடு'
  • தேசிய குடிமக்கள் பதிவேடு: நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவையில் உள்துறை மந்திரி அமித் ஷா அறிவித்துள்ளார். நாட்டின் உண்மையான குடிமக்களின் பெயர்களை கொண்ட பதிவேடு என்று கூறப்படுவது NRC என்று அழைக்கப்படுகிற தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகும். இந்த பதிவேடு, முதன்முதலாக அசாம் மாநிலத்தில் 1951-ம் ஆண்டு, தயாரித்து வெளியிடப்பட்டது.
  • அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு 2019: அசாம் மாநிலத்தின் இறுதி தேசிய குடிமக்கள் பதிவேடு, 2019 ஆகஸ்ட் 31-அன்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில், 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பேர் பெயர்கள் விடுபட்டுருந்தன.
  • NRC: National Register of Citizens.
அய்யப்பன் கோவிலுக்கு தனி சட்டம் - உச்சநீதிமன்றம் உத்தரவு 
  • கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தனி சட்டத்தை, 2020 ஜனவரி 3-வது வாரத்துக்குள் உருவாக்குமாறு கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
  • சபரிமலை அய்யப்பன் கோவில் வழக்குகள்: சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல நீண்ட காலமாக தடை இருந்து வந்த நிலையில், அங்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று 2019 செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது.இந்த தீர்ப்பின் மறுஆய்வு வழக்கில் உச்சநீதிமன்றம், 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி 2019 நவம்பர் 14-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.
சிட்பண்ட் திருத்த மசோதா-2019 மக்களவையில் நிறைவேற்றம் 
  • சிட்பண்ட் முறைகேடுகளை தடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய மசோதா ஒன்றை உருவாக்கி உள்ளது. ‘சிட்பண்ட் (திருத்தம்) மசோதா 2019’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த மசோதா நவம்பர் 20-அன்று மக்களவையில் நிறைவேறியது
டாமன்-டையூ, தாத்ரா-நாகா் ஹவேலி - இணைப்புத் திட்டம்
  • இரு ஒன்றியப்பிரதேசங்கள் இணைப்பு: இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள, டாமன் மற்றும் டையூ, தாத்ரா மற்றும் நாகா் ஹவேலி ஆகிய இரு ஒன்றியப்பிரதேசங்களையும் நிா்வாகத்தை சிறப்பாக மேற்கொள்ளும் நோக்கில், இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டாமன் மற்றும் டையூ, தாத்ரா மற்றும் நாகா் ஹவேலி (யூனியன் பிரதேசங்கள் இணைப்பு) மசோதா-2019’ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 
  • தாத்ரா, நாகா் ஹவேலி, டாமன் மற்றும் டையூ: இணைப்பு பிறகு உருவாகும் யூனியன் பிரதேசம் ‘தாத்ரா, நாகா் ஹவேலி, டாமன் மற்றும் டையூ’ என்று பெயரிடப்படும். இவ்விரு யூனியன் பிரதேசங்களுக்கும் தற்போது தனித்தனி செயலகங்கள் உள்ளன. தாத்ரா மற்றும் நாகா்ஹவேலியில் ஒரு மாவட்டமும், டாமன் மற்றும் டையூவில் இரு மாவட்டங்களும் உள்ளன. 
  • தலைமை அலுவலகம்-டாமன்-டையூ:இதன் தலைமை அலுவலகம் டாமன்-டையூவில் அமைய உள்ளது. மக்களவையில் மத்திய நாடாளுமன்றங்கள் விவகார இணை அமைச்சா் அா்ஜுன் மேக்வால் இந்த தகவல்களை தெரிவித்தாா்.
பிரதமரின் வெளிநாட்டுப்பயண தனி விமானசெலவு - ரூ.255 கோடி .
  • பிரதமா் மோடி கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் போது அவரது தனி விமானத்துக்காக ரூ.255 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2016-17 காலகட்டத்தில் ரூ.76.27 கோடியும், 2017-18 காலகட்டத்தில் ரூ.99.32 கோடியும், 2018-19 காலகட்டத்தில் ரூ.79.91 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. 
மத்திய அரசில் சுமாா் 7 லட்சம் காலிப்பணியிடங்கள் - விவரம் 
  • 2019 மாா்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 6 லட்சத்து 83 ஆயிரத்து 823 பதவிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதில், 5 லட்சத்து 74 ஆயிரத்து 289 பதவிகள் குரூப் C வகையைச் சோ்ந்தது. இதுதவிர, குரூப் B மற்றும் குரூப் A பிரிவில் முறையே 89,638 மற்றும் 19,896 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. அதேபோன்று, மத்திய புலனாய்வு துறையிலும் (CBI) 1,000 பதவிகள் காலியாக உள்ளன, என மத்திய பணியாளா்கள் நல அமைச்சக இணை அமைச்சா் ஜிதேந்திர சிங் மக்களவையில் தெரிவித்தார். 
இந்தியா டுடே-மாநிலங்களில் சிறந்த மாநிலம்’ விருதுகள் 2019
  • ‘இந்தியா டுடே’ பத்திரிகையின் சாா்பில் 18-வது‘மாநிலங்களில் சிறந்த மாநிலம்’ விருதுகள் 2019 (India Today State of the States awards 2019) வழங்கும் விழா டெல்லியில் நவம்பர் 22-அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழக அரசுக்கு மூன்று விருதுகள் வழங்கப்பட்டன. 
தமிநாடு பெற்ற மூன்று விருதுகள் விவரம்:
  • இந்தியாவில் பெரிய மாநிலங்களில் அனைத்துத் துறைகளின் செயல்பாட்டில் மிகச் சிறந்த மாநிலம் (Best performing big state Overall)
  • சட்டம் ஒழுங்கைச் சிறப்பாகப் பராமரிப்பதில் மிகச் சிறந்த மாநிலம் (Best performing and Most improved Big state in law and order) 
  • சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் மிகச்சிறந்த முன்னேற்றம் அடைந்த மாநிலம்.
நாட்டில் ஊட்டமளிக்கும் உணவு பெறுவோர் - 9% 
  • நிதி ஆயோக்கின் புள்ளி விவரப்பட்டியல் மூலமாக, நாட்டின் மக்கள் தொகையில் 9 சதவீதம் போ் மட்டுமே சரியான ஊட்டமளிக்கும் உணவைப் பெற்று வருகிறாா்கள் என்று மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி மக்களவையில் தெரிவித்தாா்.
நியமனங்கள்
ஜப்பானில் நீண்ட காலம் பிரதமா் பொறுப்பை வகித்தவா்-ஷின்ஸோ அபே
  • ஜப்பான் பிரதமராக ஷின்ஸோ அபே பொறுப்பேற்று, நவம்பர் 20-அன்றுடன் 2,887 நாள்கள் நிறைவடைகிறது. இதன் மூலம், ஜப்பான் நாட்டில் மிக நீண்ட காலத்துக்கு பிரதமா் பொறுப்பை வகித்தவா் என்ற சாதனையை ஷின்ஸோ படைத்தாா். ஷின்ஸோ அபேயின் தற்போதைய பதவிக் காலம் 2021-ஆம் ஆண்டு நிறைவடைகிறது. 
  • G7 நாடுகளில் மிக நீண்ட காலம் பிரதமா் பொறுப்பை வகித்த 2-ஆவது தலைவா் என்ற பெருமையையும் ஷின்ஸோ அபே பெற்றுள்ளாா். இந்த வரிசையில் 2005-ஆம் ஆண்டு முதல் ஜொ்மன் பிரதமராகப் பொறுப்பு வகித்து வரும் ஏஞ்சலா மொ்கெல் முதலிடத்தில் உள்ளாா்.
பள்ளிக்கல்வி துறை ஆணையர் - சிஜி தாமஸ் வைத்யன்
  • தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பள்ளிக்கல்வி துறை ஆணையர் பதவியில் சிஜி தாமஸ் வைத்யன் IAS பொறுப்பு ஏற்றார்.
கனடாவில் அமைச்சராக பதவியேற்றுள்ள தமிழ்ப்பெண் 'அனிதா ஆனந்த்'
  • கனடா நாட்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் லிபரல் கட்சி சார்பில் பிரதமர் பதவி ஏற்றுள்ளார். இந்த அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 பேருக்கு ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சர் பதவி அளித்துள்ளார். இவர்களில் 3 பேர் சீக்கியர்கள் ஒருவர் தமிழர் ஆவார். அவர்கள் விவரம்:
    • ஹர்ஜித் சிங் சாஜன் - ராணுவ அமைச்சர் 
    • நவ்தீப் பெயின்ஸ் - கண்டுபிடிப்பு, அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் 
    • பர்தீஷ் சாக்கர் - பன்முகம், உள்ளடக்கம், இளைஞர் துறை அமைச்சர் 
    • அனிதா ஆனந்த் - பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சர் 
      • அனிதா ஆனந்த் என்ற தமிழ்பெண், இவர் அங்குள்ள ஆன்டாரியா மாகாணத்தில், ஓக்வில்லே தொகுதியில் இருந்து கனடா நாடாளுமன்றத்துக்கு லிபரல் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
      • முதல் முறை எம்.பி.யாகி உள்ள அனிதா, தமிழ்நாட்டின் வேலூர் பகுதியை சேர்ந்தவர். 
இந்தியாவின் இளைய நீதிபதி 'மயங்க் பிரதாப் சிங்'
  • இந்தியாவிலேயே மிக இள வயதில் நீதிபதி பொறுப்பை ஏற்கும் இளைஞர் என்ற சிறப்பை, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மயங்க் பிரதாப் சிங் ( (வயது 21) பெறவுள்ளார். ராஜஸ்தான் நீதித்துறை சேவைகள் தேர்வின் நீதிபதிகளுக்கான தகுதி மயங்க் பிரதாப் சிங் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
புதிய தலைமை தகவல் ஆணையராக 'ஆா். ராஜகோபால்' பதவியேற்பு 
  • தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக ஆா்.ராஜகோபால் நவம்பர் 22-அன்று பொறுப்பேற்றாா், ஆளுநா் பன்வாரிலால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக இருந்த ஷீலா ப்ரியா சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றாா்.  
  • பணியில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவா் மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக பொறுப்பேற்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும். 
இலங்கை பிரதமர் 'மகிந்த ராஜபட்ச'
  • இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபட்ச கொழும்பு நகரில், நவம்பர் 22-அன்று பதவியேற்றார். அவரது இளைய சகோதரரும், இலங்கையின் புதிய அதிபருமான கோத்தபய ராஜபட்ச அவருக்கு கொழும்பில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
சியாச்சினில் சுற்றுலா மேம்பாட்டு திட்டம் 
  • லடாக் யூனியன் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் ஷியோக் நதியின் குறுக்கே 1,400 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ள கா்னல் சேவாங் ரிஞ்சேன் பாலத்தைத் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். உலகின் மிக உயரமான போா்க்களமான சியாச்சினில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என தெரிவித்தார்.
பாதுகாப்பு/விண்வெளி  
இந்திய விமானப் படையிடம் 3 ரஃபேல் விமானங்கள் ஒப்படைப்பு 
  • 2016-ஆம் ஆண்டில் ரூ.59,000 கோடியில் 36 ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்ய, மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்ததின்படி, பிரான்ஸின் 'டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம்' தயாரித்த, முதல் ரஃபேல் விமானம், பிரான்ஸில் உள்ள ஒரு விமானப் படைத் தளத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கிடம் 2019அக்டோபா் 8-ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது. 
  • இந்திய விமானப் படையிடம் 3 ரஃபேல் போா் விமானங்களை பிரான்ஸ் அரசு ஒப்படைத்துள்ளது, பிரான்ஸில் அந்தப் போா் விமானங்களில் இந்திய விமானப் படை வீரா்கள் மற்றும் பொறியாளா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்று, பாதுகாப்புத் துறை இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக் மக்களவையில் நவம்பர் 20-அந்தியூர் தெரிவித்தார்.
எம்ஓடி-4 ரக கடற்படை பீரங்கிகள் - இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்
  • அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு, 1 பில்லியன் அமெரிக்க டாலா்கள் (சுமாா் ரூ.7000 கோடி) மதிப்பிலான எம்ஓடி-4 ரகத்தைச் சோ்ந்த 13 கடற்படை பீரங்கிகள் மற்றும் அதுசாா்ந்த தளவாடங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிருத்வி-2’ ஏவுகணை இரவுச் சோதனை 
  • ஒடிஸா மாநிலம், சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை தளத்தில் நவம்பர் 20-அன்று இரவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு ‘பிருத்வி-2’ ஏவுகணைகள் வெற்றிகரமாக ராணுவத்தால் பரிசோதிக்கப்பட்டன. இந்த ஏவுகணை 500 கிலோ முதல் 1,000 கிலோ எடையுள்ள அணு ஆயுதத்தை தாங்கிச் சென்று நிலத்தில் 350 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும்.
பொருளாதார நிகழ்வுகள்
புளூம்பெர்க் உலக மகா கோடீஸ்வரர்கள் பட்டியல்: பில் கேட்ஸ் முதலிடம்
  • புளூம்பெர்க் உலக மகா கோடீஸ்வரர்களின் பட்டியலில் 11,000 கோடி டாலர் நிகர சொத்து மதிப்புடன் பில் கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார். ஜெப் பெசோஸ் (10,900 கோடி டாலர்) இரண்டாவது இடத்திலும், பெர்னார்டு அர்னால்ட் (10,100 கோடி டாலர்) மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர். வாரென் பபெட் (4), மார்க் ஜூகர்பெர்க் (5) ஆகியோரின் சொத்து மதிப்பு முறையே 8,640 கோடி டாலர் மற்றும் 7,410 கோடி டாலராக உள்ளது.
  • முகேஷ் அம்பானி 12-வது இடம்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பங்குகளின் மதிப்பு ரூ.10 லட்சம் கோடியை நெருங்கி இருக்கும் நிலையில், புளூம்பெர்க் பட்டியலில் RIL அதிபர் முகேஷ் அம்பானி 12-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். நடப்பு ஆண்டில் இதுவரை அவருடைய சொத்து மதிப்பு 1,370 கோடி டாலர் உயர்ந்து 5,800 கோடி டாலரை எட்டி உள்ளது. இந்திய பணக்காரர்களில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது இடத்தில் அசிம் பிரேம்ஜியும் (1,910 கோடி டாலர்), மூன்றாவது இடத்தில் ஷிவ் நாடாரும் (1,560 கோடி டாலர்) உள்ளனர். உதய் கோட்டக் மற்றும் லட்சுமி மிட்டல் முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் இருக்கின்றனர்.
பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை
  • பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம், டெல்லியில் நவம்பர் 20-ஆண்டு நடைபெற்றது. பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • நிறுவனம் - விற்பனை பங்குகள் 
    • பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் (BPCL) - 53.29%
    • இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் (SCI) - 53.75%
    • இந்திய சரக்குப் பெட்டக கழகத்தில் (CONCOR) - 30.9%
      • மேலும் வடகிழக்கு மின்சார கழகம், தெக்ரி ஹைட்ரோ கழகம் ஆகியவற்றின் பங்குகளும் விற்பனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள் 
கேரளாவில் பிளாஸ்டிக்கிற்கு தடை
  • 2020 ஜனவரி 1ம் தேதி முதல் கேரளாவில் பிளாஸ்டிக்கிற்கு முழுவதுமாக தடை விதிக்கப்படுகிறது. ம் என்று அம்மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு நிகழ்வுகள் 
தென்காசி மாவட்டம் தொடக்கம் 
  • தமிழ்நாட்டின் 33-ஆவது மாவட்டம்: திருநெல்வேலியில் இருந்து புதியதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி நவம்பர் 22-அன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் 33-ஆவது மாவட்டம் தென்காசி ஆகும். தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட 8 தாலுக்காக்கள், 2 கோட்டங்கள் அடங்கிய புதிய மாவட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு அடைந்துள்ள நகரங்கள் பட்டியல்: திருச்சி, தூத்துக்குடி இடம்பிடிப்பு 
  • மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், 2018 - ஆம் ஆண்டு, தேசிய அளவில் காற்று மாசு அதிகம் நிறைந்த நகரங்களின் பட்டியலை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இந்திய அளவில் காற்று மாசு அடைந்துள்ள நகரங்களின் பட்டியலில் திருச்சி, தூத்துக்குடி ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. தேசிய அளவில் 122 நகரங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மாநில சுற்றுலா தரவரிசை பட்டியல் 2019 - வெளியீடு
  • அதிக சுற்றுலா பயணிகள் வருகை தந்த மாவட்டங்கள் குறித்து, தமிழ்நாடு மாநில சுற்றுலாத்துறை தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது. தமிழக அளவில், அதிக சுற்றுலா பயணிகள் வந்து சென்ற மாவட்டங்களாக சென்னை , காஞ்சிபுரம் மாவட்டங்கள் தொடர்ந்து முதலிரண்டு இடங்களை தக்க வைத்துள்ளன.
  • உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை (முதல் 5 மாவட்டங்கள்)
    1. சென்னை, 2. காஞ்சிபுரம், 3.ராமநாதபுரம், 4. திண்டுக்கல், 5. தஞ்சாவூர்,
  • வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை (முதல் 5 மாவட்டங்கள்)
    1. சென்னை, 2. காஞ்சிபுரம், 3. தஞ்சாவூர், 4. மதுரை, 5. திருச்சி 
தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (5-வது திருத்தம்) அவசர சட்டம்-2019
  • மறைமுக தேர்தல்: தமிழ்நாட்டில் உள்ள, மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை நேரடியாக தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, மறைமுகமாக தேர்ந்தெடுக்க வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு நவம்பர் 20-அன்று பிறப்பித்துள்ளது. மக்கள் நேரடியாக ஓட்டுப் போட்டு தேர்ந்து எடுப்பதற்கு பதிலாக, கவுன்சிலர்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்து எடுப்படவுள்ளனர்.
  • இந்த அவசர சட்டம், ‘தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (5-வது திருத்தம்) அவசர சட்டம்-2019’ என்று அழைக் கப்படும். அதன்படி, மாநகராட்சி மேயரை, சாதாரண முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள், முதல் கூட்டத்தில் தேர்ந்தெடுப்பார்கள். அப்படி தேர்வு செய்யப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு மேயர் பதவி வகிப்பார். அவர் கவுன்சிலர் பதவியிலும் நீடிக்க முடியும்.
ஹூமாயூன் மகால் சீரமைப்பு பணிகள் தொடக்கம் 
  • சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ‘ஹூமாயூன் மகால்’, சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மூடியே கிடக்கிறது. 1770-ம் ஆண்டு ‘இந்தோசரசெனிக்’ கட்டமைப்பில் கட்டப்பட்ட ‘ஹூமாயூன் மகால்’ 81 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது பாரம்பரிய முறையில் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
விருதுகள் 

கோவா சர்வதேச திரைப்பட விழா 2019 - விருதுகள்
  • இந்திய சர்வதேச திரைப்பட விழா, இந்திய அரசின் திரைப்படத்துறையால் 1952-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 
  • 50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவா மாநில தலைநகர் பனாஜியில் நவம்பர் 20-அன்று தொடங்கியது. வருகிற 28-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் 76 நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பல்வேறு மொழி திரைப்படங்களும், இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை சேர்ந்த 41 திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன.
  • இந்த விழாவில் வழங்கப்பட்ட விருதுகள் விவரம்:
    1. வாழ்நாள் சாதனையாளர் விருது - நடிகை இசபெல்லா ஹப்பர்ட் (பிரான்ஸ்)
    2. தாதா சாகேப் பால்கே விருது 2018 - அமிதாப்பச்சன் 
    3. ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ சிறப்பு விருது - ரஜினிகாந்த் 
பீட்டா அமைப்பின் சிறந்த மனிதர் விருது 2019 - விராட் கோலி 
  • பீட்டா அமைப்பின் சார்பில் 2019-ம் ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
விளையாட்டு நிகழ்வுகள் 
துப்பாக்கிச்சுடுதல் 

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் 2019 
  • ISSF உலகக் கோப்பைப் போட்டி, சீனாவின் புடியனில் நவம்பர் 17-ல் தொடங்கி நவம்பர் 23 வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர்/வீராங்கனைகள் விவரம்:
  • மனு பாக்கர் - தங்கப்பதக்கம் (பெண்கள்10 மீட்டர் பிஸ்டல் பிரிவு)
  • இளவேனில் வாலறிவன் - தங்கப்பதக்கம் (பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு )
  • திவ்யான்ஷ் சிங் பன்வார் - தங்கப்பதக்கம் (ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு)
    • இளவேனில் வாலறிவன், கடலூர் மாவட்டம் காராமணி குப்பத்தை சேர்ந்த இளவேனில் தற்போது குஜராத்தில் வசித்து வருகிறார். இளவேனில் இதேபிரிவில் கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த உலக கோப்பை போட்டியில் தங்கப்பதக்கமும், 2018 ஜூனியர் உலக கோப்பை போட்டியில் தங்கப்பதக்கமும் வென்றவர்.
கிரிக்கெட்

மே.இ.தீவுகள்-இந்தியா T20 தொடர் 
  • மேற்கிந்தியத் தீவுகள்-இந்திய மகளிர் அணி நடைபெற்ற T20 கிரிக்கெட் தொடரை 4-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. தொடரின் சிறந்த ஆட்டக்காரர் விருது இந்திய வீராங்கனை சுஷ்மா வெர்மாவுக்கு வழங்கப்பட்டது. 
இந்தியா-வங்காளதேசம் பங்கேற்கும் 'முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டி'
  • இந்தியா-வங்காளதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் நவம்பர் 22-அன்று தொடங்கியது. இந்தியா முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
  • பகல்-இரவு டெஸ்டுக்கு மினுமினுப்பான இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க் பால்) பயன்படுத்தப்படுகிறது. பிங்க் பந்து அதிகமாக ‘ஸ்விங்’ ஆகும் தன்மை கொண்டது. வங்காளதேச அணிக்கும் இது முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டி ஆகும். 
  • பகல்-இரவு டெஸ்ட் சில தகவல்கள்
    • 2015-ம் ஆண்டில் இருந்து இதுவரை 11 பகல்-இரவு டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. அனைத்து போட்டியிலும் முடிவு கிடைத்துள்ளது. ஒரு டெஸ்டும் ‘டிரா’ ஆகவில்லை.
    • பகல்-இரவு டெஸ்ட் அரங்கேறும் 7-வது நாடு இந்தியாவாகும். அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் நடத்தப்பட்டு அவை அனைத்திலும் அந்த அணியே வாகை சூடியிருக்கிறது.
    • இந்தியா, வங்காளதேசம் இன்று களம் காணும் போது, பகல்-இரவு டெஸ்டில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயரும். அதன் பிறகு டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளில் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் மட்டுமே மிஞ்சி நிற்கும்.
    • இந்தியாவுக்கு இது 540-வது டெஸ்ட் போட்டியாகும். வங்காளதேசத்துக்கு 117-வது போட்டியாகும்.
செஸ்

கிராண்ட் செஸ் டூர் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் போட்டி 2019
  • கிராண்ட் செஸ் டூர் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி 2019, கொல்கத்தாவில் நவம்பர் 22 முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 5 முறை உலக சாம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், நடப்பு உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), ஹிகாரு நகமுரா (ஜப்பான்) உள்பட 10 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.  ரவுண்ட் ராபின் லீக் முறையில் இந்த போட்டி நடைபெறுகிறது.
முக்கிய தினங்கள்
நவம்பர் 23 

பூஞ்ச் இணைப்பு தினம் - நவம்பர் 23 

  • இந்திய ராணுவம் நவம்பர் 23 ஆம் தேதி, ‘பூஞ்ச் இணைப்பு தினத்தை’ (Poonch Link Up Day) கொண்டாடியது.  பாகிஸ்தான் படையெடுப்பில் இருந்து  பூஞ்ச் மாவட்டத்தை பாதுகாக்க 1948 ஆம் ஆண்டில் நடத்திய ஆபரேஷன் ஈஸி என்பதைக் குறிக்கும் நவம்பர் 23 ஆம் தேதி, வரலாற்று சிறப்புமிக்க பூஞ்ச் இணைப்பு நாள் கொண்டாடப்பட்டது. 

நவம்பர் 24

தேசிய மாணவா் படை தினவிழா - நவம்பர் 24, 2019
  • NCC என்று அழைக்கப்படும் தேசிய மாணவா் படை தனது 71 வது நிறுவன தினத்தை (NCC 71st Raising Day 2019) நவம்பர் 24, 2019 (November Last  Day) அன்று கொண்டாடுகிறது. 
Post a Comment (0)
Previous Post Next Post