TNPSC Current Affairs November 18, 2019

நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 18, 2019
தேசிய நிகழ்வுகள்
T.N.சேஷன் நினைவாக 'தேர்தல் ஆய்வுகளுக்கான இருக்கை'
  • முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என். சேஷன் நினைவைப்போற்றுகிற விதமாக, 2020-2025 முதல் புதுதில்லியில் உள்ள, இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவன மேம்பாட்டு மையத்தில், பாடத்திட்ட மேம்பாட்டு மையத்தில் (IIIDEM) 'தேர்தல் ஆய்வுகளுக்கான இருக்கை' (Interdisciplinary Approach to Electoral Studies) ஒன்றை அமைக்கப்போவதாக தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
  • என் கோபாலசாமி: இந்த இருக்கைக்கு, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என் கோபாலசாமி வழிகாட்டியாக செயல்படுவார்.
  • டெல்லியில், ஜூன் 2011-இல்  இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனம் அமைக்கப்பட்டது.
  • IIIDEM: India International Institute of Democracy and Election Management.
‘ஒரே நாடு, ஒரே சம்பள நாள்’ திட்டம்
  • நாட்டில் உள்ள அமைப்பு ரீதியிலான பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிற ஊழியர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் ஒரே நாளில் சம்பளம் வழங்கச்செய்வதற்கான ‘ஒரே நாடு, ஒரே சம்பள நாள்’ திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டுவர உள்ளது.
சென்னையில் வருமான வரி தொடர்பான 'இ-நீதிமன்றம்' திறப்பு 
  • சென்னை பெசன்ட் நகா் ராஜாஜி பவனில், வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தில் வழக்குகளை விசாரிக்கும் வகையில் இ-நீதிமன்றம் (ITAT-e-court) நவம்பர் 15-அன்று தொடங்கப்பட்டது.
  • வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் 2012-ஆம் ஆண்டு முதல், தில்லி, நாகபுரி, மும்பை, ஆமதாபாத் ஆகிய பகுதிகளில் இ-நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. 
  • ITAT: Income Tax Appellate Tribunal.
நியமனங்கள்
"தி மெட்" அருங்காட்சியகத்தின் கௌரவ அறங்காவலராக 'நிதா அம்பானி' தேர்வு
  • நியூயார்க் நகரத்தின் "தி மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்" (The Metropolitan Museum of Art) அருங்காட்சியகத்தின் கௌரவ அறங்காவலராக நிதா அம்பானி (Nita Ambani) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
  • கலை உலகிற்கு தனது ஆதரவைத் தொடர்ந்து அளித்துவருவதால், இந்த சிறப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • "தி மெட்", அழைக்கப்படும் இந்த அருங்காட்சியக அமெரிக்காவின் மிகப்பெரிய கலை அருங்காட்சியகமாகும்
  • நிதா அம்பானி, கொடையாளர், கல்வியாளர் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். இந்த அருங்காட்சியகக் குழுவில் இடம்பெற்ற முதல் இந்திய அறங்காவலர் நிதா அம்பானி ஆவார்.
இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழக தலைவர் - கமல வர்தன ராவ்
  • இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் (ITDC) புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக 'கமல வர்தன ராவ்' (Kamala Vardhana Rao) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ITDC: India Tourism Development Corporation.
இலங்கையின் புதிய அதிபர் - கோத்தபய ராஜபக்ச
  • நவம்பர் 16-அன்று நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச (வயது 70) வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் தம்பியான கோத்தபய, இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளராக போட்டியிட்டார்.
  • கோத்தபய ராஜபக்ச அனுராதபுரத்தில் நவம்பர் 18-அன்று நடைபெறும் விழாவில் இலங்கையின் எட்டாவது அதிபராக பதவி ஏற்கிறார், தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
  • கோத்தபய ராஜபக்ச 52.25% வாக்குகள் பெற்றார். ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா (41.99 %), வாக்குகள் பெற்றார், 
  • இலங்கை அதிபராக இருக்கும் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைந்தது.
மாநாடுகள் 
ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டம்-பிளஸ் 2019
  • ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டம்-பிளஸ் 2019 (ADMM-Plus 2019), தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் நவம்பர் 16-19 தேதிகளில், நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் இந்தியா சார்பில் பங்கேற்கிறார்.
  • ADMM-Plus: ASEAN Defence Ministers’ Meeting-Plus.
சா்வதேச விவசாய புள்ளிவிவரங்கள் மாநாடு 2019 (டெல்லி)
  • டெல்லியில் சா்வதேச விவசாய புள்ளிவிவரங்கள் மாநாடு நவம்பர் 18 முதல் 21 வரை 4 நாள்கள் நடைபெறவுள்ளது. 
  • ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் இணைந்து மத்திய வேளாண் துறை அமைச்சகம் இந்த சா்வதேச மாநாட்டைஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில் மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் அவரது மனைவி மெலிந்தா கேட்ஸ் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
  • முதலாவது விவசாய புள்ளிவிவர மாநாடு அமெரிக்காவின் வாஷிங்டனில் 1998-ஆம் ஆண்டு நடைபெற்றது. கடைசியாக பிரேஸிலில் 2016-ஆம் ஆண்டு நடைபெற்றது.
பொருளாதார நிகழ்வுகள் 
இந்திய மரபுசாரா எரிசக்தித் துறையில் AIIB ரூ.717 கோடி முதலீடு
  • இந்தியாவில் மரபுசாரா எரிசக்தித் துறையில் ஆண்டுதோறும் ரூ.717 கோடி (100 மில்லியன் அமெரிக்க டாலா்) முதலீடு செய்ய ஆசிய உள்கட்டமைப்பு வளா்ச்சி வங்கி (AIIB) முடிவு செய்துள்ளது.  
  • இந்தியாவில் மும்பை நகா்ப்புற போக்குவரத்து மேம்பாட்டில் ரூ.3,585 கோடி, ஆந்திர மாநில ஊரக போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டங்களில் ரூ.3,262 கோடி மற்றும் ஆந்திர நகா்ப்புற குடிநீா் விநியோகத் திட்டத்தில் ரூ.3,226 கோடியை ஏஐஐபி முதலீடு செய்துள்ளது.
ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலிய நிறுவனங்கள் விற்பனை
  •  இந்தியாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில், ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலிய நிறுவனங்களை விற்று ரூ.1 லட்சம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது, என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 2019 செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (பொருளாதார வளர்ச்சிவீதம்) 5 சதவீதத்துக்கும் கீழாக உள்ளது.
முக்கிய நபர்கள் 
'லாரன்ட் சைமன்ஸ்' - உலகின் இளம் பட்டதாரி 
  • பெல்ஜியத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் லாரன்ட் சைமன்ஸ். தனது 8 வயதிலேயே உயர்கல்வியை முடித்ததற்காக 2018 ஜூன் மாதம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற்றார். 
  • 9 வயதில் என்ஜினீயரிங் பட்டம்: ஆலந்து நாட்டின் ஐந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் 2019 டிசம்பர் பட்டம் பெற இருக்கும் லாரன்ட், உலகிலேயே இளம் வயது பட்டதாரி என்ற சிறப்பை பெற உள்ளார். இவரது நுண்ணறிவு திறன் அளவு (IQ) 145 அளவுக்கு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
குத்துச்சண்டை

ஆசிய யூத் குத்துச்சண்டை 2019: இந்திய அணி 12 பதக்கங்கள் 
  • மங்கோலிய தலைநகா் உலன்பட்டாரில் நடைபெற்ற ஆசிய யூத் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய பெண்கள் 5 தங்கப் பதக்கமும், ஆண்கள்  2 வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனா். இப்போட்டியில் இந்திய அணி மொத்தம் 12 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. 
  • பெண்கள் பிரிவு - தங்கப் பதக்கம்: நரோம் சானு (51 கிலோ), வின்கா (46 கிலோ), சனம்சா சானு (75 கிலோ), பூனம் (54 கிலோ), சுஷ்மா (81 கிலோ)  
  • ஆண்கள் பிரிவு - வெள்ளிப் பதக்கம்: செலே சோய் (49 கிலோ), அங்கித் நா்வால் (60 கிலோ), 
  • பெண்கள் பிரிவு - வெண்கலப் பதக்கம்: அருந்ததி சௌதரி (69 கிலோ), கோமல்ப்ரீத் கௌா் (81 கிலோ), ஜாஸ்மின் (57 கிலோ) 
  • ஆண்கள் பிரிவு - வெண்கலப் பதக்கம்; சதேந்தா் சிங் (91 கிலோ), அமான் (91 கிலோ+).      
கபடி

கபடி உலக கோப்பை 2019 (பஞ்சாப்) 
  • 2019-ஆம் ஆண்டுக்கான கபடி உலக கோப்பை போட்டியை நடத்த பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்தப்போட்டிகள், 2019 டிசம்பர் 1 முதல் 9 வரை நடைபெறுகிறது.
முக்கிய தினங்கள் 
வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு  தினம் - நவம்பர்  18
  • துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் என்ற ஊரில், உலகநாத பிள்ளை - பரமாயி அம்மாள் தம்பதிக்கு மகனாக, 1872 செப்டம்பர் 5-அன்று வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்தார். சட்டம் படித்த அவர், 1895-ல் ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலை துவக்கினார். ஆங்கிலேயர்களின் வணிகத்தை கடுமையாக எதிர்த்தார். இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கியது, பிரிட்டிஷ் அரசு. ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. 
  • இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனத்தை துவக்கினார், வ.உ.சி., அவரால் துவக்கப்பட்ட சுதேசி நீராவி கப்பல் நிறுவனம், தூத்துக்குடிக்கும், கொழும்புக்கும் இடையே கடல்வழி போக்குவரத்தை மேற்கொண்டது. வணிகர்கள் தங்கள் சரக்குகளை அதில் அனுப்பினர். 
  • பிரிட்டிஷ் அரசு, தேச துரோகி எனகுற்றஞ்சாட்டி, வ.உ.சி.,க்கு ஆயுள் தண்டனை விதித்தது. .வ.உ.சி. 1936 நவம்பர்  18-அன்று காலமானார், 
Post a Comment (0)
Previous Post Next Post