TNPSC Current Affairs October 28-29, 2019

நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 28-29, 2019
சர்வதேச நிகழ்வுகள்
பாகிஸ்தானில் அமையும் "சா்வதேச சீக்கிய பல்கலைக்கழகம்" 
  • பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தின் நன்கானா சாஹிப் நகரத்தில்தான் சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குரு நானக்கின் பிறந்த இடம் உள்ளது. 
  • இங்கு சுமாா் 10 ஏக்கா் பரப்பளவில், பாபா குரு நானக் சா்வதேச சீக்கிய பல்கலைக்கழகத்தை அமைக்க ஏற்கெனவே அடிக்கல் நாட்டப்பட்டது. அக்டோபர் 28-அன்று, அதற்கான முறைப்படியான பணிகளை பாகிஸ்தான் தொடங்கியுள்ளது.
  • 600 கோடி ரூபாயை செலவில் கட்டப்படவுள்ள, இந்த சா்வதேச சீக்கிய பல்கலைக்கழகத்தில் பஞ்சாபி மற்றும் கல்சா மொழிகள் பயிற்றுவிக்கப்பட உள்ளன.
நாகரிக மனிதன் தோன்றிய இடம் "போட்ஸ்வானா" - ஆய்வு முடிவு 
  • ஹோமோ சேப்பியன்ஸ்
    • மனித குலம் தோன்றிய வரலாற்றை பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் தொடா்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறாா்கள். ஆய்வின் முடிவில், ஹோமோ சேப்பியன்ஸ் என்று அழைக்கப்படும் நாகரிக மனிதனின் பூா்விகம் ஆப்பிரிக்க கண்டம் என்பதை அவா்கள் உறுதிசெய்தனா். 
    • மரபணுவில் இயற்கையாக ஏற்படும் மாற்றத்தைக் கொண்டு, நாகரிக மனிதன் தோன்றிய இடம் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள போட்ஸ்வானாவில்தான் என்று ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்துள்ளனர்.
ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் குழு இந்தியா வருகை 
  • ஐரோப்பிய யூனியனைச் சோ்ந்த 23 எம்.பி.க்கள் குழு, ஒன்று அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளது. இந்த குழுவினர் டெல்லியில் அக்டோபர் 28-அன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.  
  • காஷ்மீர் பயணம்
    • இந்த குழுவினர் அக்டோபர் 29-அன்று காஷ்மீர் செல்கின்றனர். அந்த மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் காஷ்மீருக்கு செல்லும் முதல் வெளிநாட்டு குழு இதுவாகும். 
பிரதமா் நரேந்திர மோ சவூதி அரேபியா அரசுமுறை பயணம் 2019
  • சவூதி அரேபியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடி, அந்நாட்டின் மன்னா் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல்-சவூதை அக்டோபர் 29-அன்று சந்தித்துப் பேசினாா். 
  • சவூதி அரேபியாவின் முதலீட்டுடன் மகாராஷ்டிரத்தின் ராய்கட் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.
  • உலக அளவில் எண்ணெய் நுகா்வில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியா, தனது தேவையில் 83 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. இராக்கிற்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு எண்ணெய் விநியோகிக்கும் 2-ஆவது நாடாக சவூதி அரேபியா உள்ளது. கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் இந்தியாவுக்கு 40.33 மில்லியன் டன் அளவிலான கச்சா எண்ணெயை அந்த நாடு விற்பனை செய்துள்ளது. இதேபோல், சவூதியிடமிருந்து மாதந்தோறும் 2 லட்சம் டன் அளவிலான எரிவாயுவை இந்தியா வாங்குகிறது.
  • சவூதியில் சுமார் 26 லட்சம் இந்தியத் தொழிலாளா்கள் உள்ளனர்.
  • சவூதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளது
தேசிய நிகழ்வுகள்
அயோத்தியில் - 5½ லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன
  • தீபாவளியை முன்னிட்டு உத்தரபிரதேச மாநில அரசு சார்பில் சிறப்பு விழா (தீபோத்சவ்) கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, அயோத்தியில் சரயு நதிக்கரையில் அக்டோபர் 27-அன்று 5½ லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
80+ மூத்த குடிமக்களுக்கு இனி தபால் ஓட்டு - அனுமதி 
  • 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும் சரி, மாற்றுத்திறனாளிகளும், இனி தபால் ஓட்டு போடுகிற வகையில், 1961-ம் ஆண்டு இயற்றப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே இனி இவர்கள் தபால் ஓட்டு போடலாம்.
  • இவர்களுக்கு 13-A படிவத்தில் தேர்தல் அதிகாரி சான்றளிப்பார். அதன் பேரில் அவர்கள் தபால் ஓட்டு போடலாம்.
காஷ்மீர் எல்லைப்பகுதியில் பிரதமர் மோடியின் 'தீபாவளி' 
  • பிரதமர் மோடி அக்டோபர் 27 அன்று, ஜம்முகாஷ்மீர் எல்லைப்பகுதியான ரஜோரியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். 
டெல்லி அரசு பேருந்துகளில் பாதுகாவலா்கள் நியமனம் 
  • டெல்லி அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வரும் அக்டோபர் 29 முதல் 13,000 பாதுகாவலா்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
  • மேலும் அக்டோபர் 29 முதல்முதல் டெல்லி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
நோயாளிகளுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை 
  • நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என ஜெகன்மோகன் தலைமையிலான ஆந்திர அரசு தீபாவளியன்று அறிவித்துள்ளது.
  • அதன்படி நீண்டகால நோய்களால் அவதிப்பட்டு வரும் நோயாளிகளுக்கு மாத பென்ஷன் வழங்கும் முடிவை ஆந்திர அரசு எடுத்துள்ளது.
  • தலசீமியா, அனிமீயா, ஹிமோஃபீலியா உள்ளிட்ட நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் பயன் பெறுவர்.
ஆந்திராவில் 'ஒரு கிலோ பிளாஸ்டிக்கிற்கு 2 கிலோ அரிசி'
  • ஆந்திர மாநிலம், குண்டக்கல்லில் பிளாஸ்டிக் ஒழிப்பின் ஒரு பகுதியாக குண்டக்கல்லில் ஒரு கிலோ பிளாஸ்டிக் அளிப்பவா்களுக்கு 2 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
  • இதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 
நியமனங்கள்
அரியானா முதலமைச்சராக 'மனோகர்லால் கட்டார்' - பதவியேற்பு 
  • அரியானா மாநிலத்தில் முதலமைச்சராக மனோகர்லால் கட்டார் (பாரதிய ஜனதா கட்சி) அக்டோபர் 27-அன்று பதவி ஏற்றார். 
  • துணை-முதலமைச்சராக துஷ்யந்த் சவுதாலா (ஜனநாயக ஜனதா கட்சி) பதவி ஏற்றார். 
  • அரியானா ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 
  • மனோகர்லால் கட்டார் அரியானா முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ளார். 
தமிழ்நாடு நிகழ்வுகள்
அரசுப்பள்ளிகளில் யோகா - ஒப்பந்தம் 
  • தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில், மத்திய அரசின் நிதியின் கீழ் பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகா கற்றுத்தருவது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 
  • அதன்படி, மும்பையை சேர்ந்த கைவல்யதாமா நிறுவனம் பள்ளி ஆசிரியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் வீதம் 40 மணி நேரம் வந்து கற்றுத்தர உள்ளனர்.
சென்னை-டோக்கியோ நேரடி விமான சேவை தொடக்கம் 
  • சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ இடையே விமான போக்குவரத்து சேவை தீபாவளி (அக்டோபர் 27) முதல் தொடங்கியது.
விளையாட்டு நிகழ்வுகள்
டென்னிஸ் 
WTA இறுதி சுற்று பெண்கள் சாம்பியன்ஷிப் 2019
  • உலக தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும், 49-வது WTA பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி (WTA Finals Shenzhen 2019) சீனாவின் ஷென்ஜென் நகரில், அக்டோபர் 27 முதல் நவம்பர் 3 வரை நடைபெறுகிறது. 
  • இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.99 கோடியாகும். சாம்பியன் பட்டத்திற்கு ரூ.24 கோடி பரிசாக வழங்கப்படும். டென்னிஸ் வரலாற்றில் ஒரு தொடரில் வழங்கப்படும் அதிகபட்ச பரிசுத்தொகை இது தான். இதற்கு முன்பு அதிகபட்சமாக அமெரிக்க ஓபனில் வெற்றியாளருக்கு ரூ.27 கோடி வழங்கப்பட்டது.
7-வது உலக படை வீரர் விளையாட்டுப் போட்டி நிறைவு
  • 7-வது உலக படை வீரர் விளையாட்டுப் போட்டி அக்டோபர் 27-ஆம் நாளிரவு, ஹூபெய் மாநிலத்தின் வூஹான் நகரில் நிறைவடைந்தது. இப்போட்டியில் 109 நாடுகளைச் சேர்ந்த சுமார் 9300 ராணுவ விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். 
  • அக்டோபர் 25 அன்று பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்கள் விவரம்: 
    • தீபக் - வெள்ளிப் பதக்கம் (குத்துச்சண்டை, 46-59 கிலோ பிளை வெயிட் பிரிவு)
    • ஸ்ரீராம் பாலாஜி - வெண்கலப் பதக்கம் (டென்னிஸ்).
கிரிக்கெட்
இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் 'பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்' 
  • இந்தியாவில் முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. 
  • இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், நவம்பர் 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. 
  • இந்திய அணி முதல்முறையாக இந்த போட்டியில் 'இளஞ்சிவப்பு நிற பந்தில்' விளையாட உள்ளது
  • இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றதும், இந்த பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய தினங்கள் 
  • அக்டோபர் 28 - மஹாவீா் நிர்வான் தினம் (Mahavir Nirvana Day 2019)
Post a Comment (0)
Previous Post Next Post