TNPSC Current Affairs October 1, 2019


நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 1, 2019 
Current Affairs October 1, 2019 free download
TNPSC Current Affairs October 1, 2019
சர்வதேச நிகழ்வுகள் 
கர்தார்பூர் வழித்தடம் (Kartarpur Corridor) - நவம்பர் 9-ஆம் தேதி திறப்பு 
  • சீக்கிய மதத்தை நிறுவியவரும் அதன் முதல் குருவுமான குருநானக்கின் பிறந்த தினத்தையொட்டி, இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சீக்கிய யாத்ரீகர்கள் பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாராவுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 
  • கர்தார்பூர் வழித்தடம் (குருதாஸ்பூர், இந்தியா - கர்தார்பூர், பாகிஸ்தான்)
    • இந்த யாத்திரை மேற்கொள்வதற்கு எளிதாக இருக்கும் வகையில், பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் (Dera Baba Nanak Sahib) இருந்து பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா (Gurdwara Darbar Sahib Kartarpur) வரை சாலை வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டது. .
    • இச்சாலை வழியாகச் செல்லும் யாத்ரீகர்கள் விசா இல்லாமல் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள முடியும்.
  • நவம்பர் 9-ஆம் தேதி திறப்பு 
    • குருதாஸ்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை இந்தியாவும், மறுபுறம் கர்தார்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை பாகிஸ்தானும் அமைத்து வருகின்றன. 
    • குருநானக்கின் (Guru Nanak)550-ஆவது பிறந்த தினம், வரும் நவம்பரில் கொண்டாடப்பட உள்ளது. 
    • இந்த வழித்தடம் வரும் நவம்பர் மாதம் 9-ஆம் தேதி திறக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
தேசிய நிகழ்வுகள் 
தேசிய பள்ளிக்கல்வித் தரவரிசைப் பட்டியல் 2019 (SEQI Rankings 2019)
  • நிதி ஆயோக் அமைப்பு 2016-2017 -ஆம் கல்வியாண்டுக்கான, மாநிலங்களின் பள்ளி கல்வி தரம் பற்றிய அறிக்கையை (Niti Aayog's School Education Quality Index in List) அண்மையில், வெளியிட்டது.
  • இதற்காக பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என 3 வகையாக பிரித்து வரிசைப்படுத்தி உள்ளது. 
  • ஒட்டுமொத்த செயல்பாடு & வகை வாரி தரவரிசை 
  • பெரிய மாநிலங்களில் ஒட்டுமொத்த செயல்பாடு மற்றும் வகை வாரி தரவரிசை (overall performance and Category wise), பட்டியலில், கேரளா (76.6%) முதலிடத்தில் உள்ளது. 
  • உத்தரப்பிரதேசம் 36.4% மதிப்பெண்களுடன் கடைசி இடத்தில் உள்ளது. 
  • தமிழ்நாடு 7-வது இடம்
  • இராஜஸ்தான் 72.8 சதவீதம், கர்நாடகம் 69.5 சதவீதம், குஜராத் 61.9 சதவீதம், அசாம் 60.29 சதவீதம், மராட்டியம் 57.43 சதவீதம், தமிழ்நாடு 56.37 சதவீதம் என உள்ளன. 
  • இதில் தமிழ்நாடு 7-வது இடத்தில் உள்ளது. 
  • ஒட்டுமொத்த செயல்திறன் & தரவரிசை
  • 2016-17 ஆகிய கல்வியாண்டில் ஒட்டுமொத்த செயல்திறன் தரவரிசை (overall performance and rank) பெரிய மாநிலங்கள் பட்டியலில், கேரள மாநிலம் முதலிடத்தையும் (82.2% மதிப்பெண்), தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும் (73.4% மதிப்பெண்) பிடித்துள்ளன.
  • சிறிய மாநிலங்கள் தரவரிசை 
  • மொத்தம் உள்ள 8 சிறிய மாநிலங்களில் மணிப்பூர், திரிபுரா, கோவா ஆகியவை முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. 7 யூனியன் பிரதேசங்களில் சண்டிகார், டாட்ரா-நாகர் ஹவேலி, டெல்லி முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. புதுச்சேரி 4-வது இடத்தில் உள்ளது.
  • தமிழ்நாடு மாணவர் சேர்க்கை, உயர் கல்விக்கு செல்வோர் விகிதம், பள்ளிக்கு செல்லாத குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்த்தல் ஆகிய பிரிவுகளில் முதலிடத்தில் உள்ளது.
  • Complete SEQI Rankings List 2019-Click Here
ஆந்திராவில் 1,26,728 பேர் பணி நியமனம் 
  • ஆந்திர மாநில அரசு, புதிய நிர்வாக நடைமுறையாக, கிராமங்களில் கிராம செயலகத்தையும், நகர்ப்புறங்களில் வார்டு செயலகத்தையும் உருவாக்குகிறது.
  • இங்கு பணியாற்றுவதற்காக, ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 728 பேருக்கும் பணிநியமன ஆணைகள் செப்டம்பர் 30-ஆம் தேதி விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, நியமன ஆணைகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
  • இவர்களில் நகர்ப்புறங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் 31 ஆயிரத்து 640 பேர் ஆவர்.
  • இந்த செயலகங்களில் 500 வகையான பொது சேவைகள் வழங்கப்படும். 
  • ஒரே நேரத்தில் இத்தனை பேருக்கு நிரந்தர அரசு வேலை வழங்கப்பட்டது, இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை ஆகும்.
  • ஆந்திரா முழுவதும் 11 ஆயிரத்து 158 கிராம செயலகங்களும், 3 ஆயிரத்து 786 வார்டு செயலகங்களும் திறக்கப்படுகின்றன. டிசம்பர் மாதம் முதலாவது வாரத்தில் இருந்து இவை செயல்பட தொடங்கும்.
“சத்திய சோதனை” புத்தகம் - மலையாள மொழியில் அதிகம் விற்பனை
  • மகாத்மா காந்தியின் சுயசரிதை புத்தகமான ‘சத்திய சோதனை’ பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் குஜராத்தி மொழியில் 1927-ம் ஆண்டே வெளியிடப்பட்டுள்ளது. 
  • இந்த புத்தகம் ஆங்கில மொழிக்கு அடுத்தபடியாக மலையாள மொழியில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி உள்ளது. அதாவது, மொத்தம் 8 லட்சத்து 24 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகி இருக்கிறது. 
  • மலையாள மொழிக்கு அடுத்தபடியாக தமிழில் 7 லட்சத்து 35 ஆயிரம் பிரதிகளும், இந்தி மொழியில் 6 லட்சத்து 63 ஆயிரம் பிரதிகள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.
  • மகாத்மா காந்தியின் தாய்மொழியான குஜராத்தி மொழியில் 6 லட்சத்து 71 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகி இருக்கிறது.
பாதுகாப்பு/விண்வெளி 
தரை இலக்கை தாக்கும் 'பிரமோஸ் ஏவுகணை சோதனை' - வெற்றி
  • இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), ரஷியாவுடன் இணைந்து பிரமோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. 
  • ஒலியை விட வேகமாக செல்லும் இந்த ஏவுகணைகள் தரை, வான், கடல் என 3 விதமான பகுதிகளிலும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 
  • DRDO BrahMos Land Attack Version
    • இதில் தரை இலக்கை தாக்கவல்ல பிரமோஸ் ஏவுகணை ஒன்று செப்டம்பர் 30-அன்று ஒடிசாவின் பாலாசோரில் சோதித்து பார்க்கப்பட்டது. இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. .
    • தரையில் இருந்து 290 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கும் இந்த ஏவுகணைகளை கடலில் இருந்தும் செலுத்த முடியும்.
மாநாடு/விழா 
சென்னை IIT 56-ஆவது பட்டமளிப்பு விழா - பிரதமர் பங்கேற்பு
  • சென்னை IIT கல்வி நிறுவனத்தின், 56-ஆவது பட்டமளிப்பு விழா (56th annual convocation of IIT Madras) மற்றும் சிங்கப்பூர்-இந்தியா ‘ஹேக்கத்தான்’ போட்டியில் (Singapore-India Hackathon 2019) வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னையில் செப்டம்பர் 30-அன்று நடைபெற்றது. 
  • இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கினார். 
  • விழாவில் பிரதமர் தெரிவித்த குறிப்புகள் சில:
  • உலகின் மூத்த மொழி-தமிழ்
    • நாம் இன்றைக்கு உலகின் மூத்த மொழியான தமிழ் பேசக் கூடிய மாநிலத்தில் நின்று பேசிக்கொண்டிருக்கிறோம். 
    • சென்னை-IIT இந்தியாவின் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. 
    • அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் உலக அளவில் இந்தியர்கள்தான் முன்னிலையில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் IIT-யில் படித்தவர்கள். 
    • இந்தியா 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதார நாடாக ஆவதற்கு முனைப்புடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது. 
    • 21-ஆம் நூற்றாண்டின் தேவையை அறிந்து, அதற்கேற்ப மாணவர்களுக்கு கற்பிக்கும் பணியை முதலில் தொடங்கியது சென்னை ஐஐடி தான். செயற்கை நுண்ணறிவு, தானியங்கி தொழில்நுட்பம் போன்றவை பல ஆண்டுகளுக்கு முன்பே இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
  • சிங்கப்பூர்-இந்தியா ஹாக்கத்தான் 2019, சென்னை IIT 
    • சிங்கப்பூர்-இந்தியா ஹாக்கத்தான் 2019 போட்டிகள் சென்னை IIT கல்வி நிறுவனத்தில் செப்டம்பர் 28 3முதல் 0 வரை நடைபெற்றது.
    • ஹாக்கத்தான் போட்டிகள், வேகமான கணினி மென்பொருள் தொடர்பான வடிவமைப்பு போட்டிநிகழ்வு ஆகும்.
ஆரோக்கிய மந்தன் தேசிய பயிற்சி பட்டறை 2019 
  • Arogya Manthan 2019
    • தேசிய சுகாதார ஆணையம் (NHA-National Health Authority), சார்பில் 2019 அக்டோபர் 1 ஆம் தேதி புதுதில்லியில் ஆரோக்ய மந்தன் என்ற இது இரண்டு நாள் தேசிய பயிற்சி பட்டறை செயல்பாட்டை, பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். 
  • Ayushman Bharat Start-Up Grand Challenge
    • இந்த நிகழ்வில் ஆயுஷ்மான் பாரத் மற்றும் ‘ஆயுஷ்மான் பாரத் ஸ்டார்ட்-அப் கிராண்ட் சேலஞ்ச்’ புதிய மொபைல் பயன்பாட்டை பிரதமர் அறிமுகப்படுத்தினார்.
காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு 2019, உகாண்டா
  • 64 வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு (2019 Commonwealth Parliamentary Conference 2019, Kampala, Uganda), செப்டம்பர் 22 முதல் 29 வரை, உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் நடைபெற்றது.
  • இந்திய நாடாளுமன்றக் குழுக்கு மக்களவைத் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமை தாங்கினார். 
நேபாளத்தின் மிகப்பெரிய திருவிழா "படா தஷைன்"
  • நேபாளத்தின் மிகப்பெரிய திருவிழா "படா தஷைன்" (Nepal 'Bada Dashain') ஆகும். 
  • காட்மண்டுவில் உள்ள பிரபலமான ஹனுமந்தோகா தஷைன் காரில் வேத சடங்குகளுடன் அக்டோபர் 29-அன்று தொடங்கியுள்ளது.
  • 15 நாள் திருவிழா நவராத்திரியின் முதல் நாளில் காட்ஸ்தபனா (பாரம்பரிய சடங்கு) உடன் தொடங்குகிறது. 
  • பக்தர்கள் காட்ஸ்தபனாவை நிகழ்த்தி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நல்ல ஜமாரா (பார்லி தளிர்கள்) முளைப்பதற்காக மக்காச்சோளம் மற்றும் பார்லி விதைகளை விதைத்தனர்.
  • தஷைனின் போது, மக்கள் துர்கா தேவியை ஒன்பது நாட்கள் வணங்குகிறார்கள்.
தெலுங்கானாவில் "பதுக்கம்மா திருவிழா" தொடக்கம்
  • தெலுங்கானா மாநிலத்தில் 9 நாட்கள் நடைபெறும் "பதுக்கம்மா திருவிழா" (Bathukamma Festival) செப்டம்பர் 18-அன்று தொடங்கியுள்ளது. 
  • இந்த விழாவை முன்னிட்டு தெலுங்கானாவின் பண்பாட்டு அடையாள சின்னமாக கருதப்படுகிறது. 
விருதுகள்/பரிசுகள்
எம் பி பிர்லா நினைவு விருது 2019 - தாணு பத்மநாபன்

  • புகழ்பெற்ற இயற்பியலாளர் தாணு பத்மநாபன் (Thanu Padmanabhan), புனேவில் உள்ள வானியல் மற்றும் வானியற்பியல் இடை பல்கலைக்கழக மையத்தின் பேராசிரியர் ஆவார்.
  • இவரின், அண்டவியல் உலகிற்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக, 2019-ஆண்டிற்கான எம் பி பிர்லா நினைவு விருது (M P Birla Memorial Award 2019) வென்றுள்ளார். 
  • இது கோப்பை மற்றும் ரூ .2,51,000 காசோலை ஆகியவற்றைக் கொண்டது.
சரஸ்வதி சம்மான் விருது 2019 - கவிஞர் கே.சிவா ரெட்டி
  • கே.கே.பிர்லா அமைப்பு சார்பில் 28-ஆவது "சரஸ்வதி சம்மான்' (Saraswati Samman) விருது வழங்கும் விழா டெல்லியில் செப்டம்பர் 28-அன்று நடைபெற்றது.
  • பக்ககி ஒத்திகிலிதே புத்தகம் (கவிஞர், கே.சிவா ரெட்டி)
    • இதில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பங்கேற்று, சரஸ்வதி சம்மான் விருதை "பக்ககி ஒத்திகிலிதே' (Pakkaki Ottigilite) என்ற கவிதை புத்தகத்துக்காக கவிஞர் கே.சிவா ரெட்டிக்கு வழங்கி கௌரவித்தார்.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள் 
அசாமில் 'பிளாஸ்டிக் பிரச்சாரத்திற்கான தாவரங்கள் திட்டம்' தொடக்கம் 

  • அசாமில், சுற்றுச்சூழல் அமைப்பிலிருந்து தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்குகளை படிப்படியாக சேகரித்து அகற்றும் முயற்சியில் போங்கைகான் (Bongaigaon) மாவட்ட நிர்வாகத்தால் ‘பிளாஸ்டிக்கிற்கான தாவரங்கள்’ பிரச்சாரம் (Plants for Plastic campaign) தொடங்கப்பட்டுள்ளது.
  • வீடுகளின், வணிக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்து பிளாஸ்டிக் சேகரித்து அகற்ற மக்களை ஊக்குவிப்பதே பிரச்சாரத்தின் நோக்கம் ஆகும்.
  • இந்த தனித்துவமான முயற்சியின் கீழ், எந்தவொரு நபரும் 1 கிலோ பிளாஸ்டிக்கை நகராட்சி அலுவலகத்தில் டெபாசிட் செய்து ஒரு மதிப்புமிக்க மரக்கன்றுகளை இலவசமாகப் பெறலாம்.
இயல்பு நிலைக்கு மேல் பெய்த 'தென்மேற்கு பருவமழை'
  • தென்மேற்கு பருவமழை காலம் - ஜூன் முதல் செப்டம்பர் வரை
    • இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலம் (2019 Southwest Monsoon Season) ஆகும். 
    • இந்த ஆண்டு சுமார் ஒரு வாரம் தாமதமாக, ஜூன் 8-ந்தேதி கேரளாவில் தொடங்கியது.
    • தென்மேற்கு பருவமழையின் அதிகாரப்பூர்வ காலம் செப்டம்பர் 30-தேதியுடன் முடிவடைந்தது. 
  • இயல்பு நிலைக்கு மேல்
    • இந்த தென்மேற்கு பருவ காலத்தில் ஒட்டுமொத்தமாக அதிக அளவு மழை பெய்துள்ளது. 
    • இந்த மழையை ‘இயல்பு நிலைக்கு மேல்’ என வானிலை ஆய்வு மையம் வகைப்படுத்தி உள்ளது.
    • 1994-ம் ஆண்டுக்குப்பின், கடந்த 25 ஆண்டுகளில் முதல் முறையாக அதிக அளவு மழை பதிவாகி உள்ளது. 
தைவான் நாட்டில்  சூறாவளி ‘மிடாக்’
  • விரைவாக நகரும் சூறாவளி ‘மிடாக்’ (Typhoon Mitag), தைவான் நாட்டின்  வடக்கு பகுதியில் அக்டோபர் 1-அன்று நிலை கொண்டிருக்கிறது.
  • தைவானின் வானிலை பணியகம் ‘மிடாக்’ சூறாவளியை இரண்டாம் கட்ட வலுவான சூறாவளி (Second-Strongest Typhoon Level) என வகைப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு நிகழ்வுகள் 
கீழடியில் ரூ.15 கோடியில் 'தொல்பொருள் அருங்காட்சியகம்'
  • சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழாய்வில் கிடைத்த தொல்பொருள்களை அடையாளப்படுத்துவதற்கு ரூ.15 கோடியில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் வளா்ச்சி, பண்பாடு மற்றும் தொல்பொருள் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் அக்டோபர் 1, அன்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்
  • நாடு முழுவதும் புதிதாக துவங்க உள்ள 31 மருத்துவ கல்லூரிகளின் பட்டியல் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு, 6 கல்லூரிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 
  • இதன்படி, தமிழ்நாட்டில் திருப்பூா், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் விருதுநகா் மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைய உள்ளன.
பரமக்குடியில் 04 சுடுமண் உறை கிணறுகள் கண்டுபிடிப்பு 
  • தமிழ்நாட்டில் 17 ஆற்றங்கரைகளில் பழங்கால நாகரிகம் இருந்துள்ளது.
  • மூலவைகை துவங்கி ராமநாதபுரம் மாவட்டம் வைகை கரையில் பழங்கால நாகரிகத்துக்கான சான்றுகள் உள்ளன.
  • ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றங்கரையை ஒட்டிய, பரமக்குடி அருகே பாம்புவிழுத்தான் கிராமம் ராக்கப்பெருமாள் கோயில் திடலில் 04 சுடுமண் உறை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன.
விளையாட்டு நிகழ்வுகள் 
டென்னிஸ்
ATP சேலஞ்சா் டென்னிஸ் 2019 - 'சுமித் நாகல்' சாம்பியன் 
  • அர்ஜென்டீனாவின் பியுனோஸ் அயா்ஸ் நகரில் நடைபெற்ற, ATP சேலஞ்சா் டென்னிஸ் போட்டியில், இந்திய வீரா் சுமித் நாகல் (Sumit Nagal) சாம்பியன் கோப்பையை வென்றார்.
  • இறுதி ஆட்டத்தில், சுமித் நாகல் 6-4, 6-3 என்ற நோ் செட்களில் அர்ஜென்டீனாவின் ஃபகுன்டோ பாக்னிஸை வீழ்த்தி பட்டம் வென்றாா்.
  • இது சுமித் நாகல் இரண்டாவது ATP பட்டமாகும். 2017-இல் பெங்களூரு சேலஞ்சா் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தாா்.
  • தற்போது சுமித் நாகல், தரவரிசையில் 161ஆம் இடத்தில் இருந்து 135-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 
  • தென் அமெரிக்க களிமண் கோர்ட்டில் வென்ற முதல் இந்திய டென்னிஸ் வீரர் என்ற சிறப்பை பெற்றார். 
  • சுமித் நாகல் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்.
தடகளம் 
உலக தடகள போட்டி - 12 தங்கங்கள் - 'அலிஸன் பெலிக்ஸ்' சாதனை 
  • கத்தாரின் தோஹாவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன் போட்டியில், அமெரிக்காவின் ஓட்டப்பந்தய வீராங்கனை அலிஸன் பெலிக்ஸ் (Allyson Felix), 4*400 மீ கலப்பு தொடா் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.
  • இதன் மூலம் உலகப் போட்டியில் 12 தங்கம் வென்ற சாதனையை அலிஸன் பெலிக்ஸ் படைத்தார்.
  • உசேன் போல்ட் சாதனை முறியடிப்பு 
    • ஜமைக்கா வீரா் உசேன் போல்ட், 11 தங்கப் பதக்கங்கள் வென்றதே சாதனையாக இருந்தது. இதனை அலிஸன் பெலிக்ஸ் தற்போது முறியடித்தார்..
    • அலிஸன் பெலிக்ஸ், குழந்தை பிறந்த பின் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார்.
    • 33 வயது அலிஸன், ஒலிம்பிக்கில் 6 தங்கப் பதக்கம் உட்பட மொத்தமாக 26 பதக்கங்களை வென்றுள்ளார். 
  • 4*400 மீ கலப்பு தொடா் ஓட்டம்
    • அமெரிக்கா - தங்கப்பதக்கம் (, 3:09:34 நிமிடம், அலிஸன் பெலிக்ஸ், கோா்ட்னி ஓகோலோ, வில்பா்ட் லண்டன், மைக்கேல் சொ்ரி).
ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி தகுதி 
  • உலக தடகள சாம்பியன் போட்டியில், 4*400 மீ கலப்பு தொடா் ஓட்ட போட்டியில் பந்தய துாரத்தை 3 நிமிடம், 15.77 வினாடியில் கடந்த இந்திய அணி (Indian 4x400 metres mixed relay team) 7-வது இடம் பிடித்தது.
  • இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, அடுத்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.
உலகின் அதிவேக வீராங்கனை - ஷெல்லி அன் பிரேஸா்
  • ஷெல்லி அன் பிரேஸா் (ஜமைக்கா) - தங்கப்பதக்கம் (10.71 விநாடி)
    • பெண்கள் 100 மீ. ஓட்ட த்தில் இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியனான ஜமைக்காவை சேர்ந்த 32 வயதான ஷெல்லி அன் பிராசெர் பிரைஸ் (Shelly-Ann Fraser-Pryce), 10.71 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். அத்துடன் உலகின் அதிவேக வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
  • ஒரு குழந்தைக்கு தாயான பிறகு தங்கம்
    • ஒரு குழந்தைக்கு தாயான பிரைஸ் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அதிவேக வீராங்கனை பட்டத்தை வெல்வது இது 4-வது முறையாகும். 2009, 2013, 2015-ம் ஆண்டுகளிலும் அவர் இந்த மகுடத்தை வென்று இருந்தார்.
  • பெண்கள் 20 கி.மீ நடை ஓட்டம்
  • லியு ஹோங் (சீனா) - தங்கப்பதக்கம்
    • லியு ஹோங், குழந்தை பிறந்த பின் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார்.
  • மும்முறை தாண்டுதல் 
    • கிறிஸ்டியன் டெய்லா் (அமெரிக்கா) - தங்கப்பதக்கம் (17.92 மீ)
  • பெண்கள் போல்வால்ட்
    • அன்ஸெலிகா சிடோா்வா (ரஷ்யா) - தங்கப்பதக்கம் (4.95 மீ உயரம்)
    • ஊக்க மருந்து தடை புகாா் எதிரொலியாக ரஷிய அணியில் பங்கேற்காமல் அந்நாட்டினா் நடுநிலை அணியாக பங்கேற்றுள்ளனா்.
ஈட்டி எறிதல் போட்டியில் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர்-அன்னு ராணி
  • உலக தடகள சாம்பியன்ஷிப்  போட்டியில், பெண்கள் ஈட்டி எறிதல் இந்தியா சார்பில் அன்னு ராணி (Annu Rani), 62.43 மீ., துாரம் எறிந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
  • உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டியில் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற சிறப்பை இந்தியாவின் அன்னு ராணி பெற்றுள்ளார். 
கிரிக்கெட் 
ஒருநாள் போட்டி- குறைந்த இன்னிங்ஸில் 11 சதங்களை அடித்த வீரர்-பாபர் அஸாம்
  • ஒருநாள் போட்டியில் குறைந்த இன்னிங்ஸில் 11 சதங்களை அடித்த வீரர் என்ற சிறப்பை பாகிஸ்தான் மட்டை வீச்சாளர் பாபர் அஸாம் படைத்துள்ளார்.
  • பாபர் அஸாம் மொத்தம் 71-வது இன்னிங்ஸில் 11 சதங்களை எடுத்துள்ளார்.
  • பாகிஸ்தானில் நடைபெற்ற, இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் பாபர் அஸாம் இந்த சாதனையை படைத்துள்ளார். 
  • இதன்மூலம், குறைந்த இன்னிங்ஸில் 11 சதத்தை அடித்த வீரர்கள் வரிசையில் கோலியை பின்னுக்குத் தள்ளி 3-வது இடத்தை பாபர் அஸாம் பிடித்துள்ளார். 
  • விராட் கோலி தனது 11-வது சதத்தை 82-வது இன்னிங்ஸில் அடித்துள்ளார். 
  • குறைந்த இன்னிங்ஸில் 11 சதங்களை அடித்த வீரர்கள்:
    1. பாபர் அஸாம் - 71 இன்னிங்ஸ்
    2. ஹசிம் ஆம்லா - 64 இன்னிங்ஸ்
    3. குயின்டன் டி காக் - 65 இன்னிங்ஸ்
    4. விராட் கோலி - 82 இன்னிங்ஸ்
முக்கிய நபர்கள் 
மராத்தி திரைப்பட நாடக நடிகரான 'விஜு கோட்' காலமானார் 
  • மூத்த இந்தி மற்றும் மராத்தி திரைப்பட நாடக நடிகரான விஜு கோட் (77) மகாராஷ்டிராவின் மும்பையில் காலமானார். 
  • விஜு கோட் (Viju Khote) 300 க்கும் மேற்பட்ட இந்தி மற்றும் மராத்தி படங்களில் நடித்துள்ளார். 
  • ஷோலே என்ற பிளாக்பஸ்டர் படத்தில் கலியா என்ற கதாபாத்திரத்திற்கு புகழ் பெற்றார். 
  • ‘ஆண்டாஸ் அப்னா அப்னா’, ‘கயாமத் சே கயாமத் தக்’ உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களுக்காக கோட் பிரபலமாக இருந்தார். டிவி சீரியலான ‘ஜபன் சம்பல் கே’ படத்தில் அவரது பாத்திரமும் புகழ் பெற்றது.
முக்கிய தினங்கள் 
அக்டோபர் 1 - தேசிய தன்னார்வ ரத்ததான தினம் (National Voluntary Blood Donation Day October 1).

அக்டோபர் 1 - உலக முதியோர் நாள் (International Day of Older Persons 1 October)
  • 2019 உலக முதியோர் நாள் மையக்கருத்து: 
    • "வயது சமத்துவத்திற்கான பயணம்" (The Journey to Age Equality).
அக்டோபர் 1 - இராணுவ நர்சிங் சேவை தினம் 
  • 94-வது இராணுவ நர்சிங் சேவை தினம் அக்டோபர் 1, 2019 அன்று (94th Raising Day of Military Nursing Service) கொண்டாடப்பட்டது.
அக்டோபர் 1 - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் (92-வது பிறந்த நாள்).
Post a Comment (0)
Previous Post Next Post