TNPSC Group 4 Examination (CCSE-IV) 2019 - 6491 Posts Vacancy

Tamil Nadu Public Service Commission
TNPSC Road,V.O.C.Nagar,Park Town,
Chennai-600003.

Advertisement No. 549

Notification No. 19/2019 Dated 07.06.2019

Name of the Post: CCSE-IV (Combined Civil Service Examination)

Number of Vacancy: 6491 Posts
  1. Village Administrative Officer (VAO) - 397
  2. Junior Assistant (Non - Security) - 2688 
  3. Junior Assistant (Security) - 104
  4. Bill Collector, Grade-I - 34
  5. Field Surveyor - 509
  6. Draftsman - 84
  7. Typist - 1901
  8. Steno-Typist (Grade–III) - 784
Total Vacancy - 6491 Posts

Important Dates
  • Online Application Available Date: 14.06.2019
  • Last Date for Submission of Online Application: 14.07.2019
  • Written Examination Date: 01.09.2019
For More Details about TNPSC Group 4/CCSE-IV (Combined Civil Service Examination) Exam Qualification, Age Limit, Reservation, Scheme of Examination, One Time Registration Fee and other details, refer to detailed notification, to be uploaded in the commission's website on 14.06.2019.

TNPSC G4 Notification (Tamil) - Click Here

TNPSC G4 Notification (English) - Click Here

TNPSC Group 4 CCSE-IV Notification 07.06.2019

TNPSC குரூப்-4 தேர்வு 2019
  • தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC), 2018-19 மற்றும் 2019-20-ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அமைச்சுப்பணி, நீதி அமைச்சுப்பணி, நில அளவை, நில பதிவேடுகள் சார் நிலைப்பணி, தலைமை செயலகப்பணி மற்றும் சட்டமன்ற பேரவை செயலக பணிகளில் அடங்கிய ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-4 (குரூப்-4 தேர்வு) அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 6,491 காலி பணியிடங்கள்

  • 6 ஆயிரத்து 491 காலி பணியிடங்களுக்கான GROUP 4 (CCSE IV) தேர்வு 2019 செப்டம்பர் மாதம் 1-ந்தேதி நடக்கிறது என்று TNPSC அறிவித்துள்ளது.

காலிப்பணியிடங்கள் விவரம்:
  • கிராம நிர்வாக அலுவலர் - 397
  • இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) - 2,688
  • இளநிலை உதவியாளர் (பிணையம்) - 104
  • வரித்தண்டலர் (நிலை-1) - 34
  • நில அளவர் - 509
  • வரைவாளர் - 74  
  • தட்டச்சர் - 1,901 
  • சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை-3) - 784

முக்கிய தினங்கள் 
  • 2019  ஜூன் 14 முதல் ஜூலை 14 வரை விண்ணப்பிக்கலாம்.
  • 2019 ஜூலை 16-ந்தேதிக்குள் தேர்வு கட்டணங்கள் செலுத்த வேண்டும். 
  • எழுத்து தேர்வு - செப்டம்பர் மாதம் 1, 2019 அன்று நடைபெறவுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி 

  • விண்ணப்பதாரர்கள் பதிவு கட்டணமாக ரூ.150 செலுத்தி தங்களுடைய அடிப்படை விவரங்களை நிரந்தரபதிவு மூலமாக (ஓ.டி.ஆர்.) கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். 
  • நிரந்தர பதிவு முறையில் பதிவு செய்த விண்ணப்பங்கள் பதிவு செய்த நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது ஆகும். அதன்பிறகு உரிய கட்டணத்தை செலுத்தி புதுப்பித்து கொள்ள வேண்டும்.
  • தேர்வுக்கான கட்டணமான ரூ.100-ஐ இணைய வழியில் செலுத்த வேண்டும் அல்லது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய இணையவழி விண்ணப்பத்தில் தேர்வு செய்தவாறு விண்ணப்பம் சமர்ப்பித்த 2 நாட்களுக்குள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி. வங்கி, அஞ்சல் அலுவலகம் மூலம் செலுத்த வேண்டும்.
  • வங்கி அல்லது அஞ்சல் அலுவலகம் மூலம் கட்டணம் செலுத்தும்போது, அம்முகமைகளுக்கு உரிய சேவை கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
  • இந்த தேர்வுக்கு இணைய வழியில் விண்ணப்பம் அனுப்பும்போது, எந்த வித ஆவணமும் அனுப்ப தேவையில்லை. தேர்வாணையம் கேட்கும்போது, கண்டிப்பாக உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். 

எழுத்து தேர்வு - 200 வினாக்கள்

  • 14.6.2019 நாளிட்ட அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் போதுமான தமிழ் அறிவு பெற்று இருக்க வேண்டும். பொது அறிவு 75 வினாக்கள், திறனறிவு 25 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 100 வினாக்கள் என மொத்தம் எழுத்து தேர்வு 200 வினாக்கள் கொண்டதாக இருக்கும்.
  • 200 வினாக்களுக்கு 300 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. 
  • காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 3 மணி நேரம் இந்த தேர்வு நடைபெற உள்ளது. 

தேர்வுக்கூட அனுமதி சீட்டு 
  • தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டினை (HALL TICKET) TNPSC இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அஞ்சல் மூலம் அனுப்பப்படமாட்டாது.

For More Details follow TNPSC Website: Click Here
Post a Comment (0)
Previous Post Next Post