NEET 2019 - Admit Card Modification Information - School Education Announcement 2019


NEET நுழைவுத்தேர்வு 2019: ஹால் டிக்கெட்டில் திருத்தம் செய்யலாம் - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
  • நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ பொது நுழைவுத்தேர்வு 2019 மே மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. 
  • இந்த தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் உள்பட நாடு முழுவதிலும் 15 லட்சத்து 19 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
  • ‘நீட்’ தேர்வுக்கான ஹால் டிக்கெட் (நுழைவுச்சீட்டு) கடந்த 15-ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்தது. அதன்படி மாணவர்கள் பதிவிறக்கம் செய்தனர். 
NEET 2019  - Admit Card Modification Information - School Education Announcement 2019

விவரங்கள் தவறாக இருந்தால் திருத்தம் செய்யலாம்
  • ஹால் டிக்கெட்டில் தேர்வு மைய எண், முகவரியில் குழப்பம் இருந்தாலோ, விவரங்கள் தவறாக இருந்தாலோ முதன்மை கல்வி அலுவலகங்களில் ஒப்படைத்து திருத்தம் செய்து கொள்ளலாம் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
  • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் இருந்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருக்கும் விவரங்கள்:
  • மாணவர்களின் ‘நீட்’ நுழைவுச்சீட்டில் விவரங்கள் சரியாக இல்லை என்றால், அதனை பெற்று உரிய முகப்பு கடிதத்துடன் திருத்தங்கள் செய்வதற்கு ஏதுவாக இந்த அலுவலகத்தில் (முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள்) ஒப்படைக்குமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • Source: தினத்தந்தி 26.4.2019.
Post a Comment (0)
Previous Post Next Post