March 2019 National and International Days - Theme and Notes


முக்கிய தினங்கள் - மார்ச் 2019
March 1st - National and International days
பூஜ்ய பாகுபாடு நாள் (Zero Discrimination Day) - மார்ச் 01 

  • பூஜ்ய பாகுபாடு நாள் (Zero Discrimination Day 2019) என்பது ஐநா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் கொண்டாடப்படும் நாளாகும். 
  • இந்நாள் அனைத்து நாடுகளிலும் சட்டம் மற்றும் நடைமுறையில் சமத்துவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
பொதுக் கணக்கு தினம் (Civil Accounts Day 2019)- மார்ச் 1 
  • மார்ச் 1, 1976 அன்று புது டெல்லியில் இந்திய சிவில் அக்கவுண்டஸ் சர்வீஸ் (ICAS) தொடங்கப்பட்டதின் நினைவாக ஆண்டுதோறும் மார்ச் 1 அன்று "பொதுக் கணக்கு தினம் (Civil Accounts Day)" கடைபிடிக்கப்படுகிறது. 
தியாகராஜ பாகவதர் பிறந்த தினம் - மார்ச் 1 
  • எம். கே. தியாகராஜ பாகவதர், மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக MKT என அழைக்கப்படுகிறார். 
  • தமிழ்த் திரையுலகின் முடிசூடா வேந்தர், ஏழிசை மன்னர் என்று போற்றப்பட்ட தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் மார்ச் 1 ஆகும். 
  • கர்நாடக சங்கீதத்துக்கு ஒரு தியாகராஜர் என்றால், திரை இசைக்கு ஒரு தியாகராஜ பாகவதர். தமிழ் தியாகராஜர் என்று அழைக்கப்பட்டவர். 
March 3rd - National and International days
உலக வனவிலங்கு நாள் (World Wildlife Day 2019) - மார்ச் 03
  • வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் "உலக வனவிலங்கு நாள் (World Wildlife Day 2019)" மார்ச் 03 அன்று கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2019 உலக வனவிலங்கு நாள் (World Wildlife Day 2019 Theme) மையக்கருத்து: 
    • நீருக்கு கீழே வாழ்க்கை: மக்கள் மற்றும் கிரகம் (Life Below Water: For people and planet) என்பதாகும். 
March 04th - National and International days
தேசிய பாதுகாப்பு தினம் (National Safety Day 2019) - மார்ச் 04 
  • ஆண்டுதோறும் மார்ச் 4 ஆம் தேதி, தேசிய பாதுகாப்பு தினம் (National Safety Day 2019) இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது. 
தேசிய பாதுகாப்பு வாரம் 2019 - மார்ச் 4-10, 2019 
  • தேசிய பாதுகாப்பு தினம் மார்ச் 4 முதல் 10 வரை (National Safety Week 4-10, March 2019) கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2019 தேசிய பாதுகாப்பு வாரம் மையக்கருத்து: 
    • நாட்டை கட்டமைப்பதற்கான நீடித்த அறுவடை பாதுகாப்புக்கான கலாச்சாரம் (Cultivate and Sustain a Safety Culture for Building). 
March 8th - National and International days
சர்வேதேச மகளிர் தினம் - மார்ச் 8 
  • சர்வேதேச மகளிர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக கொண்டாடப்படுகிறது. 
  • 2019 ஆம் ஆண்டிற்கான சர்வேதேச மகளிர் தின மையக்கருத்து: 
    • சமமாக சிந்தித்து, புத்திசாலித்தனமாக, மாற்றத்திற்கான புதுமையை உருவாக்குவோம் (Think equal, build smart, innovate for change) என்பதாகும். 
Important National and International Days in March month - Theme and Notes 
March 12th - National and International days
தண்டியாத்திரை தொடங்கிய நாள் - மார்ச் 12


  • உப்பு சத்தியாகிரகம் அல்லது தண்டி யாத்திரை (Salt March/Dandi March 1930), காலனிய இந்தியாவில் ஆங்கிலேயர் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை அறவழியில் காந்தியடிகள் தலைமையில் நடந்த போராட்டமாகும். 
  • மார்ச் 12, 1930 ஆம் நாள், குஜராத் மாநிலத்திலுள்ள தண்டியில் தடையை மீறி உப்பெடுக்கும் நடைப்பயணமாகத் துவங்கியது. 23 நாள்கள் 240 மைல் தூரத்திலுள்ள, தண்டியை ஏப்ரல் 6, 1930 அடைந்து, காந்தியடிகள் குழுவினர் உப்பு எடுத்தனர். 
  • இது சட்ட மறுப்பு இயக்கமாக இலட்சக்கணக்கான இந்தியர்களை ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடத் தூண்டியது. 
March 14th - National and International days
உலக சிறுநீரக தினம்-மார்ச் 14, 2019 (மார்ச் இரண்டாவது வியாழக்கிழமை) 
  • சிறுநீரக நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை (மார்ச் 14. 2019) உலக சிறுநீரக தினம் (World Kidney Day) கடைப்பிடிக்கப்படுகிறது. 
  • 2019 உலக சிறுநீரக தின மையக்கருத்து: 
    • எங்கும் அனைவருக்கும் சிறுநீரக சுகாதாரம்" (Kidney Health for Everyone Everywhere) என்பதாகும். 
காரல் மார்க்ஸ் நினைவு தினம் - மார்ச் 14 
  • காரல் மார்க்ஸ் 1818-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி ஜெர்மனியில் ஒரு வழக்கறிஞர் குடும்பத்தில் பிறந்தவர். 
  • “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்; உங்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை; பெறுவதற்கு ஒரு புதிய பொன்னுலகம் காத்துக் கொண்டிருக்கிறது” என்று முழங்கினார். 
  • 1500-க்கும் மேற்பட்ட நூல்களைப் படித்துக் குறிப்பெடுத்து அதிலிருந்து தன் உயிர்ப் படைப்பான “மூலதனம்” என்ற நூலை வெளியிட்டார். 
  • மார்க்சிய சிந்தனையை உலகிற்கு அளித்த காரல்மார்க்ஸ் 1883-ம் ஆண்டு மார்ச்14-ந்தேதி காலமானார். 
உலக பை (π) தினம் - மார்ச் 14 
  • கணிதத்தில் பை (π) யின் மதிப்பு ஏறத்தாழ 3.14 ஆகும். மார்ச் 14 ஆம் தேதி உலக பை (π) நாளாக கணிதவியளாலர்களால் உலகம் முழுக்க கடைபிடிக்கப்படுகிறது. 
March 15th - National and International days 
  • உலக நுகர்வோர் உரிமைகள் தினம் - மார்ச் 15 
  • உலக நுகர்வோர் உரிமைகள் தினம் (World Consumer Rights Day) ஆண்டுதோறும் மார்ச் 15 ஆம் தேதி, நுகர்வோர்களின் அடிப்படை உரிமைகளை ஊக்குவிப்பதற்காக கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2019 ஆம் வருட உலக நுகர்வோர் உரிமைகள் தின மையக்கருத்து: 
    • நம்பகமான திறன்மிகு உற்பத்திகள்" (Trusted Smart Products) என்பதாகும். 
  • இந்தியாவில் டிசம்பர் 24 ம் தேதி, "தேசிய நுகர்வோர் தினம்" கடைபிடிக்கப்படுகிறது. 
March 16th - National and International days 
தேசிய தடுப்பூசி தினம் - மார்ச் 16 
  • முதன்முதலாக 1995-ம் ஆண்டு மார்ச் 16-ந் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. ஆண்டுதோறும் மார்ச் 16 ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினமாக (National Vaccination Day) கடைபிடிக்கப்படுகிறது. 

March 20th - National and International days
உலக சிட்டுக்குருவிகள் தினம் - மார்ச் 20 
  • "சிட்டுக்குருவிகளைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகை"யில் ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் தேதி உலக சிட்டுக்குருவி தினம் (World Sparrow Day 2019) கடைப்பிடிக்கப்படுகிறது. 
  • 2019 உலக சிட்டுக்குருவிகள் தினம மையக்கருத்து: 
    • நான் விரும்பும் சிட்டுக்குருவி" (I Love Sparrow) என்பதாகும். 
சர்வதேச மகிழ்ச்சி தினம் - மார்ச் 20
  • உலகளாவிய அளவில், சர்வதேச மகிழ்ச்சி தினம் (International Day of Happiness) ஆண்டுதோறும், மார்ச் 20 அன்று கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2019 சர்வதேச மகிழ்ச்சி தின மையக்கருத்து: 
    • மகிச்சியாக சேர்ந்திருப்போம்" (Happier Together), என்பதாகும். 
பிரெஞ்சு மொழி தினம் - மார்ச் 20
  • ஆண்டுதோறும் பிரெஞ்சு மொழி தினம் (French Language Day 2019) மார்ச் 20 அன்று, ஐக்கிய நாடுகள் அவையால் அனுசரிக்கப்படுகிறது. 
சர்வதே கதை சொல்லல் தினம் - மார்ச் 20
  • ஆண்டுதோறும் மார்ச் 20 சர்வதேச கதை சொல்லல் தினம் (World Day of Story Telling 2019 ) கடைபிடிக்கப்படுகிறது. 
March 21st - National and International days
சர்வதேச காடுகள் தினம் - மார்ச் 21
  • ஆண்டுதோறும் ஐக்கிய நாடுகள் அவையால் "சர்வதேச காடுகள் தினம்" (International Day of Forests 2019) மார்ச் 21, அன்று, மக்களுக்கு காடுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2019 சர்வதேச காடுகள் தின மையக்கருத்து: 
    • காடுகள் மற்றும் கல்வி - காடுகளை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்" (Forests and Education – Learn to Love Forests) என்பதாகும். 
இனப்பாகுபாடு நீக்கும் சர்வதேச தினம் - மார்ச் 21
  • ஆண்டுதோறும் ஐக்கிய நாடுகள் அவையால் "இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான சர்வதேச தினம்" (International Day for the Elimination of Racial Discrimination 21 March) மார்ச் 21, அன்று கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2019 இனப்பாகுபாட்டை நீக்கும் சர்வதேச தின மையக்கருத்து: 
    • அதிகரிக்கும் தேசியவாத மக்கள்தொகை மற்றும் தீவிர மேலாதிக்க கருத்தாக்கங்களைக் குறைப்பது மற்றும் எதிர்ப்பது" (Mitigating and countering rising nationalist populism and extreme supremacist ideologies) என்பதாகும். 
உலக குறை நோய்க்குறி தினம் - மார்ச் 21
  • ஆண்டுதோறும் ஐக்கிய நாடுகள் அவையால் "உலக குறை நோய்க்குறி தினம்" (World Down Syndrome Day) மார்ச் 21, அன்று கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2019 உலக குறை நோய்க்குறி தின மையக்கருத்து: 
    • ஒருவரையும் விட்டுவிடக்கூடாது (Leave no one behind) என்பதாகும். 
உலக கவிதை தினம் - மார்ச் 21
  • ஆண்டுதோறும் ஐக்கிய நாடுகள் அவையால் "உலக கவிதை தினம்" (World Poetry Day) மார்ச் 21, அன்று உலகம் முழுவதிலும் கவிதைகளை வாசித்தல், எழுதுதல், வெளியீடு மற்றும் கற்பித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்க கடைபிடிக்கப்படுகிறது.

March 22nd - National and International days
உலக தண்ணீர் தினம் - மார்ச் 22

  • நன்னீரின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு, நன்னீர் வளங்களின் நீடித்த மேலாண்மைக்கு ஆதரவளிப்பதற்காக, ஆண்டுதோறும் மார்ச் 22 அன்று, உலக தண்ணீர் தினம் (World Water Day 2019) கடைபிடிக்கப்படுகிறது.

  • உலக தண்ணீர் தினம், ஐக்கிய நாடுகள் அவையால் 1993 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படும் ஒரு  சர்வதேச தினம் ஆகும். நீர் தொடர்பான சிக்கல்களைப் அறிய ஒரு வாய்ப்பாகவும் மற்றவரிகளுக்கு எடுத்துக்கூறவும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது
  • 2018 உலக தண்ணீர் தின மையக்கருத்து: "Leaving no one behind".
March 23rd- National and International days
உலக வானியல் தினம் - மார்ச் 23

  • ஆண்டுதோறும் மார்ச் 23 அன்று, உலக வானியல் தினம் (World Meteorological Day) கடைபிடிக்கப்படுகிறது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான உலக வானியல் தின மையக்கருத்து: (World Meteorological Day 2019 Theme): "சூரியன், பூமி மற்றும் வானிலை" (The Sun, the Earth and the Weather) என்பதாகும்.
பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம் - மார்ச் 23

  • பஞ்சாப் மாநிலத்தில் 1907-ம் ஆண்டு பிறந்த பகத்சிங். மராட்டியத்தில் பிறந்த ராஜகுரு, பஞ்சாப்பில் பிறந்த சுகதேவ் ஆகிய மூன்று பேரும் 1931-ம் ஆண்டு மார்ச் 23-ந்தேதி தூக்கிலிடப்பட்ட நாள் ஆகும்.

  • 1919-ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை, பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட மாபெரும் தலைவர் லாலாலஜபதிராயை தாக்கி கொன்றது இவற்றால் உந்தப்பட்ட பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய சுதந்திரப்போராட்ட வீரர்கள் ஸான்டர்ஸ் என்ற ஆங்கில போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்றனர்.
  • இளைஞர் அதிகாரமளித்தல் தினம் - மார்ச் 23
    • பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோரின் நினைவு தினத்தை (மார்ச் 23) பஞ்சாப் அரசாங்கம் சார்பில் "இளைஞர் இளைஞர் அதிகாரமளித்தல் தினம் (Youth Empowerment Day 2019)" என்ற பெயரில் கொண்டாடபடுகிறது.  
March 24th - National and International days
உலக காசநோய் தினம் - மார்ச் 24

  • ஆண்டுதோறும் மார்ச் 24 அன்று, உலக காசநோய் தினம் (World Tuberculosis Day 2019) கடைபிடிக்கப்படுகிறது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான உலக காசநோய் தின கருப்பொருள் (World Tuberculosis Day 2019 Theme): இதுதான் நேரம்-தேவை-காசநோய் இல்லா ஓர் உலகிற்கான தலைவர்கள் (‘It’s time’ Wanted: Leaders for a TB-free world)" என்பதாகும்.
மனித உரிமை மீறல்களால் உரிமை & கண்ணியத்திற்கான சர்வதேச தினம் - மார்ச் 24

  • ஆண்டுதோறும் மார்ச் 24 அன்று, மொத்த மனித உரிமை மீறல்களின் உண்மைக்கான உரிமை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்களின் கண்ணியத்திற்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • International Day for the Right to the Truth concerning Gross Human Rights Violations and for the Dignity of Victims - March 24 2019, This annual observance pays tribute to the memory of  El Salvador human right activist Monsignor Óscar Arnulfo Romero, who was murdered on 24 March 1980.
March 25th - National and International days
கைதுசெய்யப்பட்ட & காணாமல்போன ஊழியர்களின் சர்வதேச ஒற்றுமை  நாள் - மார்ச் 25


  • ஆண்டுதோறும் மார்ச் 25 ஐ. நா. அவையால் "கைதுசெய்யப்பட்ட & காணாமல்போன ஊழியர்களின் சர்வதேச ஒற்றுமை  நாள்"  (International Day of Solidarity with Detained and Missing Staff Members) கடைபிடிக்கப்படுகிறது.

  • ஐ.நா. அவையின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண அமைப்பின் ஊழியர் "அலேக் கெல்லட்" (Alec Collett) என்பவர் கடத்திக்கொல்லப்பட்டதின் நினைவாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
March 27th - National and International days

சர்வதேச நாடக்ககலை நாள் - மார்ச் 27

  • ஆண்டுதோறும் மார்ச் 27 அன்று சர்வதேச நாடக்ககலை நாள் (World Theatre Day) ஐ.நா. அவையின் யுனெஸ்கோ அமைப்பால் நடத்தப்படுகிறது.
  • 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச நாடக்ககலை நிறுவனம் (ITI), பல்வேறு நாடக நிகழ்வுகளை நடத்திவருகிறது.
March 30th - National and International days

உலக இட்லி தினம் - மார்ச் 30

  • உலக இட்லி தினம் மார்ச் 30 அன்று கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் அறியப்பட்ட இந்திய உணவு வகைகளில் முதலிடம் பெறுவது இட்லி.
  • இட்லி தோன்றிய இடம் தமிழ்நாடு என்பது ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 700 ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கியத்தில் இட்லி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

Post a Comment (0)
Previous Post Next Post