TNPSC Current Affairs February 6-7, 2019 - Download PDF


Daily Current Affairs Quiz 2019-2018
Daily Current Affairs Notes 2019-2018  
14500 Model Questions Answers
TNPSC Current Affairs February 6-7, 2019, Daily Current Affairs February 2019 in Readable and PDF Format in Tamil Language, for the year 2019, TNPSC/ UPSC/ RRB/ TRB/ Banking Exams TN Govt and Central Govt Competitive Examinations 2019.
இந்திய நிகழ்வுகள்/ National Affairs 
"GSAT-31" செயற்கைகோள் - குறிப்புகள் 
  • தகவல் தொடர்பு வசதிக்காக ‘ஜிசாட்-31’ செயற்கை கோள் (GSAT-31), பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூவ்வில் இருந்து கனரக ஐரோப்பிய ராக்கெட்டான ‘ஏரியன்-5’ (Ariane-5, VA247) மூலம் பிப்ரவரி 6-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
  • ஜிசாட்-31 செயற்கைகோளை பூமத்திய ரேகைக்கு 36 ஆயிரம் கி.மீ. மேலே ‘ஜியோஸ்டேஷனரி’ சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.
  • 40-வது தகவல் தொடர்பு செயற்கைகோளாக (GSAT-31 is the country’s 40th communication satellite),‘ஜிசாட்-31’ என்ற செயற்கை கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (Indian Space Research Organisation)‘ISRO’ உருவாக்கி உள்ளது.
  • ‘ஜிசாட்-31’ செயற்கைகோள் 2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்டது, ஆயுள் காலம் 15 ஆண்டுகள் ஆகும். இது ‘இஸ்ரோ’வின் ‘1-2கே பஸ்’ (I-2K Bus) வகையின் மேம்படுத்தப்பட்ட செயற்கை கோள் ஆகும்.
தேசிய மாதிரி ஆய்வு 2019
  • தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு, 2019 ஆம் ஆண்டு 77-வது சுற்று ஆய்வு நடத்த உள்ளது. 
  • 2019 தேசிய மாதிரி ஆய்வில் விவசாயிகளின் வருமானம், செலவு, கடன் ஆகியவை பற்றி இதில் கணக்கு எடுக்கப்படும்.
  • 2012-2013-ம் சாகுபடி ஆண்டில்தான் இதுபோன்ற ஆய்வு நடத்தப்பட்டது. அதன் பிறகு இத்தகைய ஆய்வு நடத்தப்படாததால், விவசாயிகளின் வருமான அதிகரிப்பு பற்றிய தகவல் இல்லை.
  • குடும்பங்களின் நுகர்வோர் செலவு, வேலைவாய்ப்பு-வேலைவாய்ப்பின்மை ஆகியவை பற்றி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தப்படுகிறது.
கேரள அரசின் விலைமதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி அலகு (PMRU) 
  • அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் விலைகளை கண்காணிக்கும் "விலைமதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி அலகை" (PMRU, Price Monitoring and Research Unit), கேரள மணிலா அரசு, இந்தியாவின் முதல் மாநிலமாக கேரளா உருவாக்கியுள்ளது.
தெஹ்ரீக்- உல்-முஜாகிதீன் அமைப்புக்கு தடை
  • காஷ்மீரில் செயல்படும் தெஹ்ரீக்- உல்-முஜாகிதீன் (Tehreek-ul-Mujahideen) தீவிரவாத அமைப்புக்கு மத்திய அரசு (7.2.2019) தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
Vande Bharat Express" ரெயில், பிப்ரவரி 15-இல் தொடக்கம் 
  • இந்தியாவின் முதல் (Engineless Train) என்ஜின் இல்லாத "Vande Bharat Express" ரெயிலை, 2019 பிப்ரவரி  15-ம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து டெல்லியில் துவக்கி வைக்கிறார். 
  • இந்தியாவின் முதல் முறையாக ‘ரெயில்-18’ என்ற பெயரில் என்ஜின் இல்லாத ரெயில் தயாரிக்கப்பட்டுள்ளது. 16 பெட்டிகள் கொண்ட இந்த ரெயில், சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 
நியமனங்கள்/ Appointments
தமிழ்நாடு வன்னியர் சொத்து வாரிய தலைவராக "ஜி.சந்தானம்" நியமனம்

  • தமிழ்நாடு வன்னியகுல சத்திரிய பொது அறக்கட்டளை மற்றும் சொத்து வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி.சந்தானம் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக எம்.எல்.ஏ.க்கள் ஜி.வெங்கடாசலம் (சேலம் மேற்கு), கே.ஏ.பாண்டியன் (சிதம்பரம்) நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழ்நாடு வன்னியகுல சத்திரிய பொது அறக்கட்டளை மற்றும் சொத்து (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம்-2018 உருவாக்கப்பட்டது.
மாநாடுகள்/ Conference
மாநில சுகாதார அமைச்சர்கள் மாநாடு 2019, புது டில்லி
  • 2019 மாநில சுகாதார அமைச்சர்கள் மாநாடு (State AYUSH/Health Ministers Conference 2019), புது டில்லியில், பிப்ரவரி 6 அன்று (06.02.2019), ‘ஆயுஷ்’ துறையின் மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் யெசோ நாயக் தொடங்கி வைத்தார். 
  • ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய பாரம்பரிய மருத்துவ முறைகள் அடங்கிய ‘ஆயுஷ்’ துறை ஆகும். 
  • நாடு முழுவதும் பாரம்பரிய மருத்துவ முறை (ஆயுஷ்) சிகிச்சையை மக்களுக்கு அளிப்பதற்காக, 12 ஆயிரத்து 500 சுகாதார, நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. 
 விருதுகள்/ Awards
ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா 2019 
  • 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா (91st Academy Awards, Oscar Awards 2019), 2019 பிப்ரவரி 24-ந் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது.
  • ஹாலிவுட் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. 
  • 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கீத நாடக அகாதெமி விருது
  • இயல், இசை, நாடகம், நடனம் உள்ளிட்ட பிரிவுகளில் தலைசிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாதெமி விருது வழங்கப்பட்டு வருகிறது. 
  • 2017-ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாதெமி விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் 2019 பிப்ரவரி 6 அன்று நடைபெற்றது. 
  • மொத்தம் 42 பேருக்கு சங்கீத நாடக அகாதெமி விருதுகள் வழங்கப்பட்டன. 
  • இசைத்துறை
    • இசைத் துறையில் தலைசிறந்து விளங்கிய 9 பேருக்கு சங்கீத நாடக அகாதெமி விருது வழங்கப்பட்டது.
    • திருவாரூர் வைத்தியநாதன் (மிருதங்கம்), ராஜேந்திர பிரசன்னா (புல்லாங்குழல் மற்றும் ஷெனாய்), லலித் ஜே. ராவ்(ஹிந்துஸ்தானி இசை), எம்.எஸ். சுசீலா(கர்நாடக இசை) 
  • நடனத்துறை
    • நடனத்துறைக்கான சங்கீத நாடக அகாதெமி விருது வழங்கப்பட்டது. 
    • ரமா வைத்தியநாதன்(பரதநாட்டியம்), சோபா கோஷெர்(கதக்), தீபிகா ரெட்டி(குச்சிபுடி), மடம்பி சுப்ரமணியன் நம்பூதிரி(கதகளி), ஜென்மஜோய் சாய்பாபு
  • நாடகத்துறை
    • அபிராம் தாமோதர் (திரைக்கதை) உள்பட 9 பேருக்கு, திரைக்கதை, இயக்கம், நடிப்பு மற்றும் ஒளிப்பதிவு துறைகளில் சிறந்து விளங்கியதற்காக விருது வழங்கப்பட்டது.
  • பாரம்பரிய இசை
    • கிராமிய பாடல், இசை, நடனம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய 10 பேருக்கு இந்த பிரிவின் கீழ் சங்கீத நாடக அகாதெமி விருது வழங்கப்பட்டது. மேற்கு வங்க பாரம்பரிய இசை முதல்முறையாக சங்கீத நாடக அகாதெமி விருதை பெற்றது. 
தமிழ்நாடு நிகழ்வுகள்/ Tamil Nadu Affairs
தமிழ்நாட்டிற்கு தேசிய விருது 
  • குழந்தை பாலின விகிதத்தை மேம்படுத்தவும், பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற மத்திய அரசின் திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தி திட்ட இலக்கை அடைந்ததற்காக, இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இதற்காக, தேசிய பெண் குழந்தைகள் தினமான 2019 ஜனவரி 24-ந் தேதியன்று டெல்லியில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டிற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 
  • மேம்பட்ட சமூகப் பங்கேற்பு - திருவண்ணாமலை'க்கு விருது 
    • திருவண்ணாமலை மாவட்டத்திற்கு “மேம்பட்ட சமூகப் பங்கேற்பு” என்ற பிரிவின் கீழ் தேசிய விருது அந்த விழாவில் வழங்கப்பட்டது.
விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு மணிமண்டபம் - திறப்பு
  • கோவையை அடுத்த வையம்பாளையத்தில் மறைந்த விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த குறிப்புகள் சில; 
  • உணவுப்பூங்கா - சென்னை
    • சென்னை அருகே ரூ.2 ஆயிரம் கோடியில் உணவுப்பூங்கா அமைக்கப்படஉள்ளது ம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
  • கால்நடை ஆராய்ச்சி மையம்
    • ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி மையம் தமிழ்நாட்டில் அமையவிருக்கிறது.
தமிழ்நாடு புதிய கட்டிட விதிகள்-2019 - வெளியீடு
  • தமிழ்நாடு ஒருங்கிணைந்த மேம்பாடு மற்றும் கட்டிட விதிகள்-2019 வெளியிடப்பட்டுள்ளன. நிலப் பயன்பாட்டை மேலும் மேம்படுத்தும் விதத்தில் பல்வேறு சட்டங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் விதிகளை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் அமலாகும் வகையில் இந்த புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சென்னையில் ‘டிஜிகாப்’ செல்போன் செயலி - அறிமுகம் 
  • சென்னையில் செல்போன் திருட்டு மற்றும் வாகன திருட்டை குறைப்பதற்காக போலீசார் ‘டிஜிகாப்’ (DGCOP) எனப்படும் புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ‘டிஜிகாப்’ செல்போன் செயலி திட்டத்தை அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார்.
விளையாட்டு நிகழ்வுகள்/ Sports Affairs
டென்னிஸ்

பெட் கோப்பை டென்னிஸ் 2019
  • பெட் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா சுற்று (Fed Cup 2019 Asia-Oceania Group-1 challenge, Kazakhstan) ஆட்டம் கஜகஸ்தானில் பிப்ரவரி 7 அன்று தொடங்கி 9-ந் தேதி வரை நடைபெறுகிறது. 
  • இந்த போட்டியில் இந்திய அணி 7 அணிகள் கலந்து கொள்கின்றன. 
  • இந்திய அணியில் அங்கிதா ரெய்னா, கர்மான் கவுர், விஷால் உப்பல், பிரார்த்தனா தோம்பரே, மஹாக் ஜெயின், ரியா பாட்டியா ஆகியோர் பங்கேற்கின்றனர். 
  • இந்த போட்டியில் முதலிடத்தை பிடிக்கும் அணி உலக குரூப் 2 ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டத்துக்கு தகுதி பெறும்.
கிரிக்கெட் 

இந்திய-நியூசிலாந்து T20 ஓவர் தொடர் 2019
  • நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய ஆண்கள் கிரிக்கெட்அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
  • இந்தியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையே 20 ஓவர் போட்டித் தொடரில் முதலாவது போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. 
பாடி பில்டிங்

தேசிய சீனியர் ஆடவர், மகளிர் பாடி பில்டிங் போட்டி 2019
  • சென்னையில் 12ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் மாதம் 29 ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை, பழைய மகாபலிபுரம் சாலையில் (OMR) உள்ள மறைந்த கர்ணல் ஜேப்பியார் அரங்கில் நடைபெறவுள்ளது.
முக்கிய தினங்கள்/ Important Days February 2019
பெண்கள் பிறப்புறுப்பு சிதைத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் - பிப்ரவரி 6
  • பெண்கள் பிறப்புறுப்பு சிதைத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் (International Day of Zero Tolerance for Female Genital Mutilation, February 6th), பிப்ரவரி 6 அன்று கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2019 பெண்கள் பிறப்புறுப்பு சிதைத்தலுக்கு எதிரான சர்வதேச தின மையக்கருத்து: "பெண்கள் பிறப்புறுப்பு சிதைத்தலை முடிவு கட்டுவோம்" (End FGM) என்பதாகும்.  
  • பெண்கள் பிறப்புறுப்பு சிதைத்தல் (FGM) நடைமுறை, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள 29 நாடுகளில் நடைபெறுகிறது.
TNPSC Current Affairs 6-7th February 2019 PDF
TNPSC Link File Size 1 MB
If it's not downloaded automatically, please click Re-download. And if the broken link please report via the Contact Form page of this blog.
Post a Comment (0)
Previous Post Next Post